Saturday 25 December 2010

சிலரின் மரண அறிவித்தல் படிக்க விரும்புகிறேன்



முகத்திற்கு அழகூட்டும்
இதயத்தின் இருப்பை வெளிக்காட்டும்
புன்னகை

கொலைகள் செய்ய
எனக்கு விருப்பமில்லை
சிலரின் மரண அறிவித்தல்
படிக்க விரும்புகிறேன்

நல்ல போருமில்லை
கூடாத அமைதியுமில்லை
என்றான் ஒரு அறிஞன்
மூர்க்கமான போரையும் கண்டோம்
மோசமான அமைதியும் காண்கிறோம்


எல்லோரும் இறப்பது நிச்சயம்
எல்லோரும் வாழ்வது நிச்சயமல்ல
வாழ்வாங்கு வாழ்வது யார்

கண்ணியத்தை அதிகாரம்
விவாகரத்துச் செய்ய
உலகம் அநாதையாகிறது

Thursday 23 December 2010

திருமணத்தின் பின் உடலுறவு கொள்ளும் தம்பதிகள் அதிக ஒற்றுமையாக இருக்கிறார்கள்.


மேலை நாடுகளில் உடலுறவு வேறு திருமணம் வேறு என்பது போல் ஆண் பெண் உறவுகள் மாறி வருகிறது. பலர் திருமண பந்தத்தை வெறுக்கிறார்கள்.பெட்ரண்ட் ரஸல் என்னும் அறிஞர் கலாச்சாரம் என்பது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது தந்தையையாரென்று அறிந்து கொள்ளும்படி பார்த்துக் கொள்வது தான் என்றார். ஆனால் இப்போது சில நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒன்றிற்கு தனது தந்தை யாரென்று தெரியாத நிலைமை காணப்படுகிறது.

School of Family Life at Brigham Young University, in Utah வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தம்பதிகளிடை செய்த ஆய்விகளின் படி தங்கள் உடலுறவை திருமணத்திற்கு பின்வரை தள்ளி வைத்த தம்பதிகள் அப்படித் தள்ளி வைக்காமல் திருமணத்தின் முன் உடலுறவு கொள்ளும் தம்பதிகளிலும் பார்க்க் சிறந்த தம்பதிகளாக காணப்படுகின்றனர்.

உடலுறவை திருமணத்திற்கு பின்வரை தள்ளி வைத்த தம்பதிகள் மற்றவர்களிலும் பார்க்க 22% மேம்பட்ட உறவு உடையவர்களாகவும், உறவில் 20% அதிக திருப்தி உள்ளவர்களாகவும், உடலுறவுத் திருப்தி 15% அதிகம் பெறுபவர்களாகவும், தம்பதிகளிடையான தொடர்பாலில் 12% சிறந்தவர்களாகவும் காணப்படுகின்றனராம்.

திருமணத்தின் முன் உடல் உறவு வைத்துக் கொள்பவர்கள் உடல் உறவை ஏற்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் வைத்துக் கொள்வதால் மற்ற புரிந்துணர்வுகளை வளர்பதிலும் ஒருவருக்கேற்ப மற்றவர் தம்மை மாற்றிக் கொள்வதிலும் கவனம் செலுத்துவதைக் கோட்டை விட்டு விடுகின்றனர்.

திருமணத்தின் முன் சிறந்த தொடர்பாடல், புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல், ஒருவருக்கு ஒருவர் இணங்க மாறுதல் போன்றவைகளை வளர்த்தால் தாம்பத்தியம் சிறப்பாக நீடிக்கும்.


ராகுல் காந்தி(கான்) என்னும் பேமானி பிதற்றுகிறான்‏



சென்னைக்கு வந்த ராகுல் காந்தி இப்படிக் கூறினான் என்கின்றன செய்தி:
  • இலங்கைப் பிரச்னையில் தான் மிக விரைவில் நேரடியாகத் தலையிடவுள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்த ராகுல் காந்தி, இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி இந்தியா ஏராளமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

உன் பரம்பரை இலங்கையில் தமிழர்களுக்கு செய்த அழிவுகள் போதாது என்று நீ இப்போது தலையிடப் போகிறாயா?. ராகுல் கான் என்ற பேமானியே உனது இந்தியா வழங்கிய பங்களிப்புக்கள் இதுதாண்டா!!!:
  • உன் பாட்டன் பேரினவாதி ஜவகர்லால் நேரு இலங்கையில் மலையகத் தமிழர் என்றும் இலங்கைத் தமிழர் என்றும் தமிழர்களைப் பிரித்து வைத்தான்.
  • உன் கட்சியைச் சேர்ந்த லால் பகதூர் சாஸ்த்திரி இலட்சக்கணக்கான தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கினான்.
  • உன் பேத்தி இந்திரா காந்தி தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து சிங்களவர்களுடன் சண்டையிட வைத்தாள்.
  • அப்பன் பெயரை மாற்றிய உன் அயோக்கிய அப்பன் ராஜீவ் காந்தி தமிழர்களை அழிக்க முற்பட்டான்.
  • உன் ஆத்தாள் கையில் அதிகாரம் வந்த பின்னர் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இலங்கையில் கொன்று குவிக்க ஆயுதம் கொடுத்து உதவினான்.

2009இல் சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த உன் ஆத்தா சோனியா அங்கு சொன்னாள் இலங்கையில் தமிழர்கள் கௌரமாகவும் சுதந்திரமாகவும் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்று!!!!

31-03-2009 இலன்று சோனியா கலைஞர் கருணாநிதிக்கு எழுதியகடிதத்தில் கூறியது:
As you are aware, the Congress Party has for nearly three decades espoused the cause of the Tamils in Sri Lanka and has urged successive Sri Lankan governments to ensure that all communities, particularly, the Tamil speaking people, are guaranteed and enjoy equal rights within the framework of a united Sri Lanka.

ராகுல் கான் சொன்னானாம்: இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

உனது நாட்டு
வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் போருக்குப் பின்னர் இலங்கையில் எல்லாம் ஒழுங்காக நடப்பதாகக் கூறினாள். அவளைப் பதவி விலக்கி உன்னால் வீட்டிற்கு அனுப்ப முடியுமா?

இலங்கையில் தமிழர்களை அழிப்பதில் உனது நாட்டு அதிகாரமையமான West Block தான் சிங்களவர்களிலும் பார்க்க மும்மரமாக நின்றது. அதை உன்னால் என்ன செய்ய முடியும்.

இலங்கையில் தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித் தருவோம் என்று இந்தியா பிதற்றிக் கொண்டு திரிந்தது. இப்போது அதை ஐயாயிரம் வீடாகக் குறைத்து விட்டது. இதற்கு உன்னால் என்ன செய்ய முடியும்.

நீ அமெரிக்க ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் என்ன கிழித்தாய் என்பதை நியூஸ்விக் சஞ்சிகை கிழி கிழி என்று 2006இல் கிழித்ததை மறந்து விட்டாயாடா?

இரண்டு இலட்சம் டொலர்களுடன் உன்னுடன் வந்த உனது ஸ்பானியக் காதலி வெரோணிக்கா 21-09-2001இல் அமெரிக்க பொஸ்டன் விமான நிலையத்தில் பிடிபட்டதை மறந்து விட்டாயாடா?

சுவிற்சலாந்து சஞ்சிகை Schweizer Illustrierte உனது பெயரில் இரண்டு பில்லியன் டொலர்கள் இருக்கிறது என்று 11 November 1991இல் சொன்னது அதை பராமரிக்க இப்படியெல்லாம் பிதற்றி வாக்குகள் பெற்று தேர்தலில் வெல்ல வேண்டுமாடா? நீ பதவிக்கு வந்த பின் எத்தனை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படப் போகிறார்கள்?

Wednesday 22 December 2010

பெண்களைக் கொன்று தின்ற குற்றவியல் மாணவன்




குற்றவியலில் கலாநிதிப்பட்டம் பயின்று வந்தவனுக்கு தானும் ஒரு தொடர் கொலையாளியாக மாற வேண்டும் என்ற விபரீத ஆசை வந்துவிட்டது. ஸ்றீfன் கிறிfஇத் (Stephen Griffiths) என்னும் கொலையாளி குற்றவியப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் போது பிரித்தானியாவில் பிரபலமடைந்த இன்னொரு தொடர் கொலையாளியான Yorkshire Ripper Peter Sutcliffe ஐப்போல தானும் செயற்பட வேண்டும் என்ற விபரீத ஆசை வந்துவிட்டது.

Stephen Griffiths எத்தனை பேரைக் கொன்றான் என்ற விபரம் இதுவரை கிடைக்கவில்லை. மூன்று பெண்களைக் கொன்றதற்கான ஆதாரங்களைப் பிரித்தானியக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதில் இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி சிலதுண்டுகளை சமைத்து உண்டுள்ளான். ஏனையவற்றை அண்மையில் உள்ள அயிர் ஆற்றில் வீசியுள்ளான். தான் ஆறு பெண்களைக் கொன்றாதாக அவன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

Stephen Griffiths கொல்லப் பாவித்த ஆயுதமும் விபரீதமானது. வில்லும் அம்பும் (Crossbar) அவன் பாவித்த ஆயுதங்கள். பிரித்தானியப் பத்திரிகைகள் இப்படிப்பட்ட பயங்கரக் குற்றவாளிகளுக்கு ஒரு பட்டம் வைப்பது வழக்கம். இந்தக் கொலையாளிக்கு வைத்த பட்டம் "Crossbow Cannibal" - "வில்லேந்திய மாமிச பட்சணி" என்று தமிழில் சொல்லலாம்!!!

Stephen Griffithsஇன் இறுதிக் கொலை கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில் (CCTV) பதிவாகியுள்ளது. அவனது வீட்டிலிருந்து தப்பி ஓடிய சூசன் என்னும் பெண்ணை அவன் இழுத்துக் கொண்டு வந்து அம்பு எய்து கொன்றான். அது ஒளிப்பதிவு செய்யப்படுவதையும் அவன் அறிவான். தான் செய்து முடித்ததை வெற்றி குறியாக இரு விரல்களை ஒளிப்பதிவுக் கருவிக்கு காட்டியுமுள்ளான். பின்னர் மதுக் கிண்ணத்தையும் கொண்டு வந்து ஒளிப்பதிவுக் கருவிமுன் வெற்றி எனக்காட்டியுள்ளான். அதைத் தொடர்ந்து அவன் விட்டிலிருந்து பைகளுடன் அடிக்கடி வெளியே சென்று வருவதும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரைக் காவல்துறையினர் கைது செய்தபோது தான் ஒசமா பின்லாடன் என்றாராம் இவர்.

இவரால் கொல்லப்பட்ட மூன்று பெண்கள் சிவப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இவருக்கு இன்று ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

Tuesday 21 December 2010

வித்தியாசமான இடத்தில் மடோனா செய்த யோகாசனம் தலைப்புச் செய்தியாகியது


திருமூலரும் பதஞ்சலி முனிவரும் செய்த யோகா கலை உலகெங்கும் பரவியுள்ளது. உலகெங்கும் பலரும் இதைச் செய்கிறார்க்ள். இலங்கையில் அரச படைத்துறையினருக்கு இப்போது யோகா பயிற்ச்சி வழங்கப்படுகிறது. செய்த அநியாயங்களினால ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து நீங்குவதற்காகவா?

உலகெங்கும் பரவியுள்ள யோகா கலையை எந்தப் பிரமுகராவது செய்தால் அது தலைப்புச் செய்தியாகாது. ஆனால் செய்த இடம் வித்தியாசமானதாக இருந்தால் அது தலைப்புச் செய்தியாகும்.

யோகாசனத்தில் அமர்ந்தவர் பிரபல பாப் பாடகி மடோனா. யோகாசனம் செய்த இடம் ஒரு விமானம். நியூயோர்க்கில் இருந்து வந்த விமானம் இலண்டன் ஸ்ரான்ஸ்ரெட் விமான நிலையத்தில் சில மணித்தியாலங்கள் தரித்து நிற்க வேண்டி ஏற்பட்டது. அதில் ஒரு பயணியான மடோனா திடீரென்று நடைபாதையில் யோகாசனத்தில் அமர்ந்து விட்டார். மடோனாவை யோகாசனத்தில் பார்த்த மற்றப் பயணிகளுக்கும் நல்ல மகிழ்ச்சியாம். ஒரு பயணி காத்திருந்தால் பயன் உண்டு என்றாராம். விமானப் பயணத்திற்கு கொடுத்த கட்டணத்திற்கு கைமேல் பயன் என்றாராம் இன்னோரு பயணி. இன்று பல பத்திரிகைகளில் மடோனா யோகா செய்தது தலைப்புச் செய்தியாகிவிட்டது.

Monday 20 December 2010

ஹரி பொட்டர் நடிகை தாக்குதல் - இந்து - முஸ்லிம் குரோதம்.





ஹரி பொட்டர் திரைப்படங்களில் பத்மா பட்டீலாக நடித்த அfஜான் அசாத் என்னும் நடிகை அவரது சகோதராலும் தந்தையாலும் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் விபசாரி எனவும் விமர்சிக்கப்பட்டார். இதற்குக் காரணம் அவர் ஒரு இந்து இளைஞனுடன் காதல் கொண்டமையே.

இந்திய திரைப்பட நடிகைபோல் தோற்றமளிக்கும் 22 வயதான ஹரி பொட்டர் திரைப்படங்களில் பத்மா பட்டீலாக நடித்த அfஜான் அசாதை தாக்கியதாக அவரது 53வயது தந்தை அப்துல் அசாத்தும் 28வயதான அண்ணன் அஷ்ரப் அசாத்தும் மான்செஸ்டர் நீதிமன்றில் கொலைப் பயமுறுத்தல் குற்றச் சாட்டில் நிறுத்தப்பட்டனர். விசாரணைக்கு அfஜான் அசாத் சமூகமளிக்காமல் விட்டுவிட்டார். இதனால் அவரது தந்தை விடுதலை செய்யப்பட்டார். அவரது சகோதரன் மீதான தீர்ப்பை அடுத்த மாதம் நீதிமன்றம் அறிவிக்கும்.

விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தீங்காகலாம்


பிரித்தானியாவில் Which? என்னும் சஞ்சிகை பாவனையாளர் நலன்கள் தொடர்பான பல ஆய்வுகள் செய்து அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்கி வருகிறது. எந்தப் பொருள் கொடுக்கும் விலைக்கு உகந்தது என்று அது அறிக்கைகள் சமர்ப்பிக்கும். விட்டமின் மாத்திரைகளைப் பற்றி அது மேற்க் கொண்ட ஆய்வுகளின் படி மருந்துக் கடைகளில் விற்கப்படும் பல மாத்திரைகள் அவற்றின் கொள்கலன்களில் குறிப்பிட்டுள்ளபடி உகந்தவையோ அல்லது சிறந்தவையோ அல்ல என்று கண்டறிந்துள்ளது.

பல விட்டமின் மாத்திரைகளை வாங்கி உண்பது ஒரு பணவிரயமே ஒழிய எந்த நன்மையும் அவற்றில் இல்லை என Which? சஞ்சிகை தெரிவிக்கிறது. இதுபற்றிய் பத்திரிகைக்கு றிப்பு இப்படித் தெரிவிக்கிறது:
  • A survey by Which? found two-thirds of us have taken supplements in the past year.
  • But on closer study many products were found labeled with misleading or insufficient information.
  • Researchers who visited supermarkets, chemists and smaller health shops in London in October found numerous examples of unsubstantiated claims on supplements.

Which? chief executive Peter Vicary-Smith said the worst culprits were those that claimed to maintain healthy bones and joints
பல மருந்துக் கடைகளுக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாவனையாளர்களிடையும் செய்த ஆய்வுகளின் அடிப்படையில்
Which? சஞ்சிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஊட்டச் சத்து மிக்க உணவுகளை உண்பதே சிறந்த வழி என தெரிவித்துள்ளது Which? சஞ்சிகை.

Sunday 19 December 2010

விக்கிலீக் ஜுலியான் அசங்கேமீது வழக்குத் தாக்கல் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா.




குழலூதி
விக்கிலீக் இணையத்தளம் மீது சுமத்தப்படும் முதற்பழி Whistleblower - குழலூதி என்பதாகும். சில சொற்கள் முதலில் ஒரு கருத்துடன் உருவாகி பின்னர் பல மாற்றங்களை அடையும். குழலூதுதல் முதலில் பிரித்தானியக் காவற்துறையில் முதலில் உருவானது. பிரித்தானியக் காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் எங்காவது ஒரு குற்றச் செயல் நடந்தால் தனது ஊதுகுழலை உரக்க ஊதி அங்கு பொதுமக்களையும் மற்றக் காவல் துறையினரையும் கூடச் செய்து குற்றச் செயலை தடுக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவார். இதனால் குழலூதுதல் என்பது குற்றத்தை பகிரங்கப்படுத்தல் என்று முதலில் பொருள்பட்டது. பின்னர் பாடசாலைகளில் யாராவது மாணவர்கள் குளப்படி செய்யும் போது ஆசிரியர்களை அந்த இடத்துக்கு அழைப்பவர்களை குழலூதிகள் என்பர். பின்னர் பணிமனைகளில் யாராவது பிழை விடும்போது அவர்களை மேலிடத்திற்கு காட்டிக் கொடுப்பவர்களை குழலூதிகள் என்று அழைக்கத் தொடங்கினர். பிறகு நாட்டில் வரி ஏய்ப்பு செய்பவர்களை காட்டிக் கொடுப்பவர்களையும் குழலூதிகள் என்பர். அமெரிக்காவில் குழலூதிக்ளைப் பாதுகாக்க சட்டங்களும் இயற்றப்பட்டன. இபோது குழலூதி என்றால் போட்டுக் கொடுப்பவர் என்று அர்த்தம். எல்லப்பத்திரிகைகளும் விக்கிலீக்கையும் அதன் நிறுவனரையும் குழலூதி என்றே குறிப்பிடுகின்றன.

பின் லாடன்
விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கேயை சில அமெரிக்கர்கள் பின் லாடனுக்கு ஒப்பிட்டனர்.

பெண்களைக் கீழ்த்தரமாக எண்ணுபவர்
ஜுலியான் அசங்கே சுவீடனில் இரு பெண்களுடன் மேற்கொண்ட உடலுறவை அமெரிக்கவிலோ அல்லது பிரித்தானியாவிலோ ஒரு கற்பழிப்புக் குற்றமாகக் கருதமுடியாது. அதனால் ஜுலியான் அசங்கேயை ஒரு கற்பழிப்புக் காரர் என குற்றச் சுமத்த முடியாமையால் அவரை ஒரு பெண்களைக் கீழ்த்தரமாக எண்ணுபவர் எனச் சித்தரிக்க முயன்றனர். அதில் வெற்றி கிடைக்கவில்லை. அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகை நடாத்திய 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதருக்கான கருத்துக் கணிப்பில் விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கே மற்ற எல்லாரையும்விட அதிக வாக்குக்களைப் பெற்றார். ஆனால் அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகை fஏஸ்புக் நிறுவனரை 2010-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்தது.

மரண தண்டனை வழங்க வேண்டும்
விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கேயிற்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று சில அமெரிக்க அரசியல் வாதிகள் கூச்சலிட்டனர்.

அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர்
அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடன் அவர்கள் விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கேயை இப்படிக் குறிப்பிடுகிறார்:- "I would argue that it's closer to being high-tech terrorist. அவரை கிட்டத்தட்ட ஒரு உயர் தொழில் நுட்ப பயங்கரவாதி என வாதிடுவேன் என்கிறார் அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடன்.

குற்றம் சாட்ட முடியாமல் அமெரிக்க திணறுகிறது.
விக்கிலீக்கினால் வெளிவிடப்படும் தகவல்கள் அமெரிக்கப் படைத்துறையைச் சேர்ந்த பிரட்லி மன்னிங் (Bradley Manning) என்பவரால்தான் பெறப்பட்டு விக்கிலீக்கிற்கு வழங்கப்பட்டது. இதில் பிரட்லி மன்னிங் (Bradley Manning)தான் தகவல் திருடியவராகக் கருதப்படவேண்டியவர். அவற்றை பிரசுரித்த குற்றம் தான் விக்கிலீக்கிற்க்கும் அதன் நிறுவனர் ஜுலியான் அசங்கே புரிந்ததாகக் குற்றம் சாட்டப்படமுடியும். அமெரிக்க அரச அல்லது படைத்துறை இரகசியங்களை திருடியவர்மீது குற்றம் சுமத்தப் பட்டு தண்டிப்பது அமெரிக்காவில் நடந்துள்ளது. அந்த இரகசியங்களை பிரசுரித்தவர் மீது எப்படி குற்றம் சாட்டுவது என்று அமெரிக்க இதுவரை தேடிக்கொண்டிருந்தது. கடைசியில் அமெரிக்க மக்களவை ஆய்வாளர்கள் ஒற்றாடல் சட்டத்தின் கீழ் ஜுலியான் அசங்கேயை மாட்டக்கூடிய ஒரு சட்டப் பிரிவை கண்டு பிடித்துள்ளனர். ஆனால் ஒரு பிரசுரிப்பாளரை அந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் இதற்கும் முன் நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை. இதனால் அமெரிக்க சட்டவாளர்கள் திணறுகின்றனர்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் SMS


Sometimes, in order to cheer up
it's nice to see there are others
who are worse off
or at least feel the same as you do.


You haven't lost your smile at all, it's right under your nose. You just forgot it was there.


Im sweet like suger, soft like suade, but unlike you I never get played.


Laugh and the world laughs with you. Cry and you,
cry with your girlfriends.


Love is what makes two people sit in the middle of a bench when there is plenty of room at both ends.

If it's wrong to love uthen my heart just wont let me be right.


If the person u are talking to doesn't appear to be listening, be patient.
It may simply be that he has a small piece of fluff in his ear..



It is a curious thought, but it is only when u see people looking ridiculous that u realize just how much u love them.



Laughter is the closest distance between 2 people.



Friendship iz da only cure 4 hatred, tda only guarantee of peace.



Life iz da flower 4 which love iz da honey...


We perceive wen love begins and wen it declines by our embarrassment when alone together.


The best proof of love iz trust.


Promise me u will never forget me becoz if I thought u would I'd nvr leave.


If I had a rose 4 every time I thought of u, I'd b picking roses for a lifetime.



Love is the irresistible desire 2 b irresistibly desired.



All that I love loses half its pleasure if u r not there to share it.



A lawful kiss iz never worth a stolen one.


This iz ur life and its ending one minute at a time.



Half our life iz spent trying 2 find something 2 do with the time we have rushed through life trying 2 save.



You tried ur best and u failed miserably. The lesson is never try.



Happiness iz not a goal, bt a way of life.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...