Friday 30 July 2010

இந்தச் செய்திக்கும் படத்திற்கும் சம்பந்தமுண்டா????


இன்று பலமாக அடிபடும் செய்திகள்:

நாய் ஒன்றுடன் பலாத்காரமாக உடலுறவு கொண்டார் என்று குற்றஞ்சாட்டி சிங்களவர் ஒருவருக்கு எதிராக கனடாவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் வாழ்ந்து வரும் அஞ்சலோ அபேவிக்கிரம(வயது 51) என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் ஆவார். இவர் இரண்டு வயதுடைய Labrador-cross Tyson நாய் ஒன்றின் ஆண் உறுப்பில் ஆணுறை ஒன்றை பலவந்தமாக அணிவித்து இறுக்கி இருக்கின்றார். இதனால் நாய் நோய்வாய்ப்பட்டது. நடக்க முடியாமல் அவதிப்பட்டது. வலியால் துடித்தது. மிருக வைத்தியர்கள் இதைக் காப்பாற்ற பகீரத முயற்சிகள் எடுத்தனர். ஆயினும் நாயின் துன்பத்தைப் போக்க முடியவில்லை.

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் நாயைக் கருணைக் கொலை செய்தனர். கைவிரல் அடையாளங்களை வைத்து அஞ்சலோ விக்கிரமவே நாய்க்கு ஆணுறையை பலாத்காரமாக அணிவித்திருக்கின்றார் என்பதை கனேடிய பொலிஸார் கண்டு பிடித்தனர். இதையடுத்து இச்சிங்களவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணைகளின்போது அந்த நாயுடன் இவர் பலாத்காரமாக உடலுறவு கொண்டிருக்கின்றார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மிருகம் ஒன்றை கொடுமைப்படுத்தியமை, பாலியல் பலாத்காரம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சத்தீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசியாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு விடுத்துள்ள கோரிக்கை…

இலங்கையின் வட கிழக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை, உலக வல்லரசுகளின் உதவியோடு, ஆயுதம் பலம் கொண்டு நசுக்கிய கொடுங்கோலன் ராஜபக்சேவின் குடும்பத்தினரோடு கூடி, களித்து, கும்மாளமடித்து திரியும் அசின் என்ற திமிர் பிடித்த நடிகையின் படத்தை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று மலேசிய தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.

பிரான்சில் ஒரு கங்கா தேவி

கங்கா தேவி பாண்டவர்களின் முதாதையாரான சந்தனுவை தான் என்ன செய்தாலும் தலையிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் திருமணம் செய்து கொண்டாராம். அவர்மீது மையல் கொண்ட சந்தனு கங்காதேவியின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாராம். கங்காதேவி தனக்குப் பிறந்த பிள்ளைகளை பிறந்தவுடன் கொண்டுபோய் கங்கை ஆற்றில் எறிந்து கொன்று விட்டுச் சிரித்துக் கொண்டே வீடுதிரும்புவாராம். கேட்டால் நிபந்தனையை எடுத்துச் சொல்லி தான் என்ன செய்தாலும் கேட்க வேண்டாம் என்று சொல்வாராம். இப்படி ஏழு குழந்தகளை கொன்ற கங்கா தேவியார் எட்டாவது குழந்தையையும் கொல்ல எடுத்துச் சென்ற போது சந்தனு தடுத்து நிறுத்தினார். ஒப்பந்தம் மீறப்பட்டதால் கங்காதேவி சந்தனுவை விட்டுச் சென்று விட்டார். எட்டாவது குழந்தைதான் பின்னர் பீஷ்மாச்சாரியார் ஆனார். ஹம்சனும் ஏழு மருமக்களைப் பிறந்தவுடன் கொன்றானாம் . எட்டாவது குழந்தை கண்ணனாக வந்தது.

பிரான்சிலும் கங்கா தேவியார் போல் ஒரு பெண்மணி டொமினிக் கொற்றெஸ் என்பவர் 1989இற்கும் 2005இற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தனக்குப் பிறந்த குழந்தைகளை பிறந்தவுடன் கொன்று விட்டாராம். இவரது வீட்டை வாங்கியவர் அங்கிருந்த சிறு குளத்தை துப்பரவு செய்தபோது அதில் இரு பிளாஸ்டிக் பைகளில் இரு இறந்த சிசுக்களக் கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். காவல் துறையினர் அவர்களது புது வீட்டில் சோதனையிட்டபோது மேலும் ஆறு சிசுக்களின் உடல்களைக் கண்டுபிடித்தனர். தனது முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட வேதனையால்தான் தான் இப்படிச் செய்ததாக டொமினிக் கூறியுள்ளார். முதல் பிரசவத்தில் மருத்துவ மனையில் ஏற்பட்ட வேதனையால் பிறகு தனக்கு பிரசவத்திற்கு மருத்துவ மனைக்குப் போக விருப்பம் இல்லையாம்.

டொமினிக்கின் கணவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார். கணவருக்கு இது எதுவும் தெரியாதாம். மனைவி மிகப் பருமனான உடல் கொண்டவராதலால் (133KG தாஜ்மஹால்) அவர் கருத்தரித்திருப்பதை தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கணவன் கூறியுள்ளார். (அந்த மூன்று நாட்கள் என்ன நடந்திருக்குக்கும்?) இத்தனைக்கும் ஒரு நல்ல பெண்மணியாக இருந்ததாக அயலவர்கள் கூறுகிறார்கள். அது மட்டுமா அவர் ஒரு மருத்துவத் தாதி.

Thursday 29 July 2010

ஹைக்கூ கவிதைகள் - மாடு மிதித்த தமிழன் மேல் பனையாய் விழுந்த இந்தியா...


புற்றொன்று புனிதத் தலமானது
பாம்பொன்று வந்ததனல்
அந்நிய முதலீடு








விபச்சார ஊடகங்கள்


இனக்கொலை அரசுகளிடம் பணம் வாங்கி
போராளிகளைக் கொச்சைப் படுத்தும் விபச்சாரிகளே
"அம்ச"மாய் பணம் சம்பாதிக்கும் பச்சோந்திகளே
சிங்களரத்னா பட்டமும் பெறும் தேவடியாப்பசங்களே
பக்சராஜன் அடிவருடி பிழைக்கும் நாய்க்கூட்டமே
சனியாளின் பாவாடைக்குள் நாறும் சனியன்களே
அடங்குங்கடா மலம் தின்னிப் பன்றிக்கூட்டமே

Wednesday 28 July 2010

ஹைக்கூ கவிதைகள் - ஒரு மனைவி ஏழு கணவன்கள்..








ஆட்டம் காணும் பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டக் கனவு.


2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலராகப் பதவியேற்ற தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூனின் பதவிக்காலம் 2011-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியுடன் முடிவடைகிறது. ஐநா வின் பொதுச் செயலாளராக ஒருவர் இரண்டு தடவை பதவி வகிக்க முடியும். பான் கீ மூனின் இரண்டாவது பதவிக் காலத்திற்கு எதிரான கருத்துக்கள் சென்ற ஆண்டில் இருந்தே ஆரம்பித்துவிட்டன. இதன் முக்கிய் ஆரம்பமாக நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் அவர்களால் சமர்பிக்கப் பட்ட இரகசிய அறிக்கை வெளிக்கசிந்தது அமைந்தது.

உலக நெருக்கடிகளிற்கு ஐநாவின் செயற்பாடுகள் தேவைப் படும் நேரங்களில் பான் கீ மூன் அமைதியாக இருப்பதாகவும், உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட வேளையில் தனது தலைமைத்துவத்தை வெளிக்காட்டவில்லை என்றும் நோர்வேயின் ஐநாவிற்கான நிரந்தரப் பிரதிநிதி மோனா ஜூல் குற்றம் சுமத்தியிருந்தார். ஒரு அமெரிக்க ஊடகம் இவரை உலகின் மிக ஆபத்தான கொரியநாட்டவர் என்று வர்ணித்தது.


கவர்ச்சியற்ற பான் கீ மூன்

பான் கீ முனிற்கு முன்னர் இருந்த கோபி அனன் அவர்கள் சிறந்த தோற்றமும் தெளிவான பேச்சுத் திறனும் கொண்டவர். அவரைத் தொடர்ந்து வந்த பான் கீ மூன் ஒரு தெரியாத நகரத்தில் பணப்பையைத் தொலைத்த பயணி போல் எப்போது காட்சியளிப்பார். புன்னகைக்கவே மாட்டார். பான் கீ மூனின் பேச்சு தம்மை நித்திரை கொள்ளச் செய்வதாகப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மீண்டும் சூடு பிடிக்கிறது

பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில வாரங்களாக மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பிரித்தானியக் கார்டியன் பத்திரிகை "பான் கீ மூனின் செயற்பாடுகளிற்கு எதிராக கலையும் அமைதி" என்ற தலைப்பிட்டு 22-07-2010இல் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் பான் கீ மூனின் மோசமான ஆங்கில அறிவும் அவரது தொடர்பாடல் திறமையின்மையும் அவரது முதற் பேச்சிலேயா வெளிப்பட்டு விட்டதாம். இதன் பின்னர் அவருக்கு ஆங்கிலப் பயிற்ச்சியும் தொடர்பாடல் பயிற்ச்சியும் வழ்ங்கியும் போதிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்க்குமாறு இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.


இன்னும் ஒரு செய்திக் கசிவு

பான் கீ மூனின் திறமையின்மை தொடர்பாக இன்னும் ஒரு செய்திக் கசிவு ஏற்பட்டுள்ளது. இது பான் கீ மூனிற்கு சுவீடனைச் சேர்ந்த உதவிப் பொதுச் செயலாளர் இங்கா பிரித் ஆலெனியஸ் (under-secretary general Inga-Britt Ahlenius) அவர்கள் எழுதிய இரகசிய உள்ளகக் கடிதம் இப்போது வெளிவந்துள்ளது. அப்பெண்மணி ஐநா பொதுச் செயலகம் "அழுகத்" தொடங்கிவிட்டது துண்டுகளாக் விழப் போகிறது, ஐநா தேவையற்ற ஒன்றாகப் போகிறது என்று தான் மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் என்றார். Ahlenius accuses her boss(பான் கீ மூன்) of trying to undermine the independence of her office by refusing to allow her to hire a highly regarded and pugnacious investigator and by seeking to set up an in-house investigative body, presumably in rivalry with her own. Ban has marketed himself as a hard-headed Korean reformer, but Ahlenius angrily asserts that in his administration there is "no transparency," a "lack of accountability," and, overall, "[no] signs of reform."


கொப்பெனகனில் கோட்டை விட்ட பான் கீ மூன்

2009 டிசம்பரில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும் பான் கீ மூனின் தலைமைத்துவத் திறமையின்னமை நன்கு வெளிப்பட்டது. பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த சிலர் இந்த மாநாட்டின் பின்னர் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.


இந்தியர் இருவர் நடுவில் பான் கீ மூன்

பான் கீ மூனின் பிரத ஆலோசகராக விஜய் நம்பியார் என்பவர் இருக்கிறார். அவரது மகளின் கணவரான சித்தார்த சட்டர்ஜீக்கு பதவி உயர்வு வழங்கியது பான் கீ மூனின் நேர்மையை சந்தேகத்திற்குள்ளாக்கியது. விஜய் நம்பியார் இலங்கையின் போர்த்துறை ஆலோசகர் சதீஸ் நம்பியாரின் சகோதரர். விஜய் நம்பியார் 2009 மே மாதம் இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை சென்று விட்டு வந்து பாதுகாப்புச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து அடாவடித்தனம் செய்தவர். சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றதில் விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்டிருந்தன. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சகல செயறபாடுகளிலும் இந்தியாவைன் கை சம்பந்தப் பட்டிருக்கும் என்பதற்கு இவர்கள் இருவரும் சாட்சியங்களா?


சரித்திரத்தில் மோசமான இடம் பிடித்த பான் கீ மூன்

ஐநாவைப்பற்றி பல புத்தகங்கள் எழுதிய நியூ யோர்க் பல்கலைக் கழக அரசியற் துறைப் பேராசிரியர் தோமஸ் வைஸ் அவர்கள் இதுவரை இருந்த ஐநா பொதுச் செயலர்களுள் பான் கீ முன் மிக மோச மானவர் என்று குறிப்பிடுகிறார். அவர் மேலும் தெரிவிப்பது:

"While it is perhaps unfair to compare the current secretary-general with his telegenic and charismatic predecessor, Ban Ki-moon has set a new standard for being invisible," Weiss said, adding: "I think he feels comfortable with blending into the background."


இதே வேளை பான் கீ மூனின் உதவியாளர்கள் சிலர் அவரை புகழும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஜப்பானியர் அவரை யோகிக்கு ஒப்பிட்டார். யோகி எப்படிக் கதைக்கிறார் என்பதல்ல முக்கியம் அவர் எதைப் போதிக்கிறார், எப்படிச் செயற்படுகிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் அவர்.


சென்று வாருங்கள் என்கிறார் ஜேம்ஸ் ரவுப்

பிரபல அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஜேம்ஸ் ரவுப் அவர்கள் Good night, Ban Ki moon என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையை 22-07-2010இலன்று எழுதியுள்ளார். பொதுச் செயலாளர்கள் அவர்களின் திறமையின்மைக்காகவே தெரிவு செய்யப்படுகிறார்கள் என்று அவர் கிண்டலடித்துள்ளார். பான் கீ மூனிற்கு எதிராக அவர் வைக்கும் குற்றச் சாட்டுக்களில் இலங்கை உள்நாட்டுப் போரை அவர் கையாண்ட விதம் முக்கிய இடம் பெறுகிறது. முன்னாள் கோபி அனனின் திறமை அமெரிக்காவிற்கு பாதகமாக அமைந்ததால் திறமையற்ற பான்கீ மூன் தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஐநாவை எப்போதும் ஒரு தடையாகப் பார்க்கும் சீனா அதன் பெருமையைக் குறைக்கவே பான் கீ மூனை பொதுச் செயலராக்க அனுமதித்தது என்கிறார் ஜேம்ஸ் ரவுப்.

Ban Ki-moon, a colorless South Korean bureaucrat and the favored candidate of U.S. Ambassador John Bolton, was the cure for Annan's dangerous charisma. China, which exercised effective veto rights over the choice of an "Asian candidate," was equally pleased with a figure who would lower the U.N.'s profile.


இலங்கை பிரச்சனையைக் கையிலெடுத்த பான் கீ மூன்

தனது செயற்பாடுகளுக்கு எதிரான குற்றச் சாட்டுகளில் இலங்கைப் பிரச்சனை மிக முக்கிய இடம் வகிப்பதால் தனது இரண்டாவது பதவிக்கால நீடிப்பிற்கு இலங்கைப் பிரச்சனையை பான் கீ மூன் கையிலெடுத்தார். ஒரு ஆலோசனை சபையை நியமித்து அதை அடுத்த ஆண்டின் இறுதி வரை நீடித்தால் தனது பதவி நீடிப்பிற்கு சாதகமாக இருக்கலாம் என்று பான் கீ மூன் கருதுகிறார். சென்ற முறை பான் கீ மூன் தேர்வு செய்யப் பட்டபோது அவர் தேர்வு செய்யப்பட தனது வேட்பாளரை போட்டியில் இருந்து விலகச் செய்து பான் கீ மூனை வெல்லச் செய்தது இலங்கை. அவரை இந்த முறை வெற்றியடையச் செய்வதில்லை என்று இலங்கை கங்கணம் கட்டி நிற்கிறது.


அமெரிக்க சார்பாளரை அமெரிக்க கைவிடுமா?

இது வரை இருந்த எட்டு பொதுச் செயலாளர்களுள் பான் கீ மூன் தான் மிகத்திவீரமான அமெரிக்க ஆதரவாளர். முன்னாள் பொதுச் செயலர் கோபி அனன் அமெரிக்கா ஈராக்கில் செய்தவற்றை பகிரங்கமாக கண்டித்தவர். ஐரோப்பியாவில் நல்ல பெயரெடுத்தவர். இவரைப் பிடிக்காத்தால் ஜோர்ஜ் புஷ் பான் கீ மூனை பொதுச் செயலராக்கினார். இபோது ஒபாமா நிர்வாகம் இலங்கைப் போர் குற்ற விசாரணையை காரணம் காட்டி அவரை பதவியில் நீடிக்கச் செய்யுமா? இலங்கையுடன் ஏதாவது திரை மறைவு உடன்பாடு ஏற்படுமா? சீனா பான் கீ மூனின் இரண்டாம் ஆட்டத்தை ஆதரிக்குமா?

Monday 26 July 2010

ஹைக்கூ கவிதைகள்: இரவு அது நடந்ததோ?







எங்கிருந்தாலும் வாழ்க
அவள் அழகாய் இருக்கிறாள்
அவளது திருமணப்படத்தில்
என் காதலி

Sunday 25 July 2010

இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா?


இந்தக் கவிதை வடிவத்தை பராரி என்ற அன்பர் எதிர்ச் சொல் அலங்காரம் என்று முன்னர் பின்னூட்டமிட்டார். இரு வேறு பட்ட கேள்விகளுக்கு ஒரு சொல்லில் பதில். பதில் சிலேடையாக அமைந்து இரு கேள்விகளுக்கும் விடையாகும்.

ஊடகங்கள் தேடித்தருவதெது
பாடகர்கள் பாடித்தருவதெது

சங்கதிகள்



கண்ணில் நீர் வரவைப்பதெது

கண்ணை மூட வைப்பதெது
அதிகாரம்
 

பெருமழையால் பெருக்கெடுப்ப தெது
கோடிகளைப் பெருக்க வருவதெது
வெள்ளம்

மாட்டின் திமிர் அடக்குவதெப்படி
நெல்லின் கதிர் பிரிப்பதெப்படி
சூடடித்து

நீதிமன்றில் வெல்வதெப்படி
சேகுவேராவை அழைப்பதெப்படி
வாதாடி

காதலி தவிப்பதெப்போ
அரசியல்வாதி மகிழ்வதெப்போ
மாலை வருகையில்

இல்லற சுகம் பெறுவதெங்கே
நாட்டின் வளம் பெருகுவதெங்கே
கூட்டுறவில்


முடி நரை மறைப்பதெது

முதலாள் செய்வதெது

தலைமையேற்றல்


பசித்தவன் பந்தியில் விடுவதென்ன

புசித்தவன் வாயில் போடுவதென்ன

வெற்றிலை


தளபாடம் செய்வதெப்படி

ஒற்றுமை வளர்வதெப்படி

பலகைகள் இணத்து


தமிழர் வேண்டுவதெது

துயர் கண்டு உருகுவதெது

தாயகம்


பாரி தேரில் படர்ந்ததெது

ராஜபக்ச மனமெது

கொடியது



இறைவனார் நிலையெது
மாவிரர்தம் புகழெது
காயமிலையென்பதே

(பொருள்: கடவுளுக்கு உடலில்லை வீரர்க்கு காயம் இல்லை)

பாட்டனார்க்கு விழுவதெது
மாமனாரிடம் கறப்பதெது
சொத்தை

விவசாயியின் வெற்றியெது
போராளியின் தொடக்கமெது
பொங்கல்

செம்முத்துக்கள் தரும் கனியெது
அவளில்லா இதயத்தில் வருவதெது
மாதுளை

எழ எழ விழுத்தும் இந்தியா - ஹைக்கூ கவிதைகள்







நிரந்தரம்

விழ விழ எழும் தமிழர்
எழ எழ விழுத்தும் இந்தியா
என்னாளும் இழவு

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...