Saturday 19 June 2010

பிரம்மா திருமால் மென்பொருள் போட்டி


பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் இடையில் ஒரு முறை யார் சிறந்த மென்பொருள் உருவாக்குபவர் என்று கடும் போட்டி நடந்தது . நடுவராகச் செயற்பட்ட சிவபெருமான் இருவருக்கும் மூன்று மணித்தியாலங்கள் கொடுத்து அதற்குள் சிறந்த மென் பொருளை உருவாக்கும்படி கட்டளையிட்டார்.

பிரம்மாவும் திருமாலும் தங்கள் மடிக் கணனிகளுடன் உட்கார்ந்து மென்பொருள்களை எழுதத்தொடங்கினர். பிரம்மாவின் நாவில் இருந்து கலைமகள் சிறந்த ஆலோசனைகளையும் செயலிகளையும்(applications) வழங்கிக்கொண்டுஇருந்ததால் அவர் வெற்றி பெறுவார் என்றும் பலரும் எதிர் பார்த்தனர். திருமகள் திருமாலுக்கு பின்புல ஆதரவுகளுடன்கூடிய சிறந்த வன்பொருள்களை வழங்கினார்(Harware with backup storage). அதனால் அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் சிலர் எதிர்வு கூறினர்.

ஊர்வசி தலைமையில் ஒரு தேவலோக நடன மங்கையர் குழுக்கள் தங்கள் கைகளில் பந்து போல் கட்டிய பூக்களை வைத்துக் கொண்டு திருமாலுக்கு ஆதரவாக நடனமாடினர்.

மேனகை தலைமையில் ஒரு நடன மங்கையர் குழுக்கள் தங்கள் கைகளில் பந்து போல் கட்டிய பூக்களை வைத்துக் கொண்டு பிரம்மாவுக்கு ஆதரவாக நடனமாடினர்.

பார்வதி வீட்டில் இருந்தபடியே நேரடி ஒளிபரப்பைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார்.

திருமாலும் பிரம்மாவும் தங்கள் முழுத் திறமையையும் காட்டி எழுதிக் கொண்டே இருந்தனர். யமனின் கணக்காளார் சித்திரபுத்திரன் நேரத்தை கணித்துக் கொண்டு இருந்தார். சகல தெய்வங்களும் தேவர்களும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.நேரம் சரி என்று சித்திர புத்திரனார் சிவபெருமானுக்கு சைகை கொடுக்கும் போது நாரதர் இந்திரனுக்கு தனது சைகையைக் கொடுத்தார். பாரிய மின்னல் வந்து மின்சாரத்தை துண்டித்து விட்டது.

சற்று நேரத்தில் மின்சாரம் மீண்டும் வந்தது. நேரம் முடிவடைந்துவிட்டதால் இருவரது கணனிகளையும் சிவபெருமான் பெற்றுக் கொண்டார். சிவபெருமான் பிரம்மனின் கணனியை முதலில் பார்த்தார். பாவம் பிரம்மா அவரது கணனியில் அவர் எழுதிய மென்பொருள் யாவும் மின்சாரக் கோளாறால அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது சிவபெருமான் திருமாலின் கணனியைப் பார்த்தார் அதில் அவர் எழுதிய மென்பொருள் பத்திரமாக இருந்தது. எல்லோரும் ஆச்சரியத்துடன் திருமாலைப்பார்த்தனர். திருமால் புன்முறுவலுடன் எனது தொழில் காப்பது(Save) என்றார். I saved everything then and there என்றார் பெருமையுடன்.

இதனால் சகலரும் அறிந்து கொள்ளவேண்டியது யாதெனில் உங்கள் வேலைகளை அடிக்கடி பாதுகாத்துக்(Save) கொள்ளுங்கள்.

Friday 18 June 2010

எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்


அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட திருடன் அங்கு நள்ளிரவில் திருடச் சென்றான். தான் கொண்டு சென்ற பைக்குள் முதற் பொருளை எடுத்து வைக்க முயன்றபோது "எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என்று ஒரு குரல் கேட்டது. முதலில் அதிர்ச்சியடைந்த திருடன் பின்னர் தன் மனப் பிரமையாக இருக்கலாம் என்று எண்ணி தனது வேலையைத் தொடர்ந்தான். மீண்டும் "எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்" என்று ஒரு குரல் கேட்டது. இப்போது திருடன் சற்று யோசித்துவிட்டு இருளில் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான். மீண்டும் அதே குரல். "எல்லாவற்றையும் சிவபெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறான்" அவன் காதில் விழுந்தது. இப்போது திருடன் மின்விளக்கை தட்டிவிட்டான். அந்தக் குரல் வந்த இடத்தில் ஒரு கிளி இருந்ததைப் பார்த்து ஆறுதல் அடைந்தான். அந்தக் கிளியை அன்போடு தடவி உன் பெயர் என்ன என்று வினவினான். கிளி அங்கயற்கண்ணி என்றது. ஒரு கிளிக்கு அங்கயற்கண்ணி என்று பெயரா என்று கிளியிடம் ஆச்சரியத்துடன் திருடன் வினவினான். எனக்கு அங்கயற்கண்ணி என்று பெயர் என்று ஆச்சரியப் படாதே. அங்கு பார். உன் குரல் வளையைக் கடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நாய்க்குப் பெயர் சிவபெருமான் என்றது கிளி.

Thursday 17 June 2010

தமிழர் தாயகத்தை துண்டாட இந்தியா உதவுகிறது.


ராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தம் பல உயிர்ப்பலிகளுடன் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு சாதகமான எந்த அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இந்த ஒப்பந்தம் செய்யப் படும்போதே அப்படிப்பட்ட ஒரு புரிந்துணர்வுடந்தான் செய்யப்பட்டது. வடக்குக் கிழக்கை இலங்கை பிரித்தபோது இந்தியா அதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

2002 விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப் பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருந்த உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இலங்கைப் படைகள் வெளியேறத் தயாராக இருந்த வேளையில் இந்தியா தனதுசதீஸ் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பி அதைத் தடுத்தது. இந்தியா தமிழர்களுக்கு செய்த கணக்கில்லத் துரோகங்களில் அதுவும் ஒன்று.

2009 மே மாதம் முடிவடைந்த போருக்குப் பின் இந்தியாவும் இலங்கையும் தமது தமிழர்களுக்கு எதிரான ஒரு மௌனப் போரை நடத்தி வருகின்றன. இதன் முக்கிய நோக்கம் தமிழ்த் தேசியப் போராட்டம் மீண்டும் தலை தூக்காமல் அடக்குவதாகும். இதற்காக தமிழர்கள் தங்கள் தாயகம் என்று சொல்லப் படும் பிரதேசங்களை துண்டாடும் விதமாக தமிழர் பிரதேசங்களுக்கு இடையில் சிங்களவர்களைக் குடியேற்றுவதாகும். அதற்கு உதவி செய்யும் விதத்திலேயே இலங்கையும் இந்தியாவும் இலங்கைக் குடியரசுத் தலைவர் சென்ற வாரம் செய்த இந்தியப் பயணத்தின் போது இரு நாடுகளும் ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சம்பூரின் இந்தியா மின் உற்பத்தி நிலையம் அமைக்கவென அங்கு வாழ்ந்த தமிழர்களை திரைமறைவில் இந்தியா உதவிசெய்ய்ய இலங்கைப் படையினர் அடித்து விரட்டினர். அவர்கள் நான்கு வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாக அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.

வன்னியில் வளம் மிக்க பிரதேசங்களைப் உயர் பாதுகாப்பு வலயம் என்று பெயரிட்டு அங்கு தமிழர்களை மீளக் குடியேற விடாமல் இலங்கை அரசு தடுத்துள்ளது.

`கிழக்கின் உதயம்' என்று பிரகடனப்படுத்திவிட்டு தென்னிலங்கை மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையூடாக கிழக்கிலுள்ள வளங்களை சூறையாடுவதற்கான வேலைத்திட்டமொன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பிரதான சிங்கள எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியே குற்றம் சாட்சியது.

மூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசக்களை அண்மித்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முன்னோடி நடவடிக்கையாக புனித பூமி பிரதேசம் என்ற போர்வையில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை புதிதுபுதிதாக நிர்மாணித்து வருகின்றது.

மூதூர் கிழக்கு, சம்பூர், சேனையூர், சீனன்வெளி, கட்டைபறிச்சான், மூதூர் மூன்றாம் கட்டை மலை போன்ற பகுதிகளில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்பட்டு சுற்றிவர பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள பல தமிழ்க் கிராமங்கள் இன்று பெரும்பான்மையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிவிட்டனர்.

கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்கள் பலவற்றில் தொல்லியல் ஆய்வுகள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த திணிப்பு ஒன்றுக்கும் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள மக்களின் இந்திய விரோத மனோபாவத்தை அறிந்திருந்தும் அவர்களின் சாதி வெறி தமிழர்கள் ஆளக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக வைத்திருக்கிறது. நீண்ட கால அடிப்படையில் நோக்குமிடத்து இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவிக்குத்தான் ஆப்பு வைக்கிறார்கள் என்பது கண்கூடு.

அரட்டை அடிக்கும் போது ஆண்கள் சொல்லும் பொய்கள்


  • நான் ஆறடி உயரம்... அழகிய உருவம்.
  • எனக்கு ஒரு அக்காதான். திருமணம் செய்து கனடாவில் வசிகிறாள்.
  • எனக்கு அரட்டை அடிக்க நேரமில்லை பலத்த வேலைப் பளுவுக்கு மத்தியில் உன்னோடு கதைக்கிறேன்.
  • நான் இப்போது .............. வேலை செய்கிறேன்.
  • ஆம் இதுதான் எனது உண்மையான பெயர்.
  • ஆம் எனக்கும் அவரது பாடல்கள் ரெம்பப் பிடிக்கும்.
  • உனது உருவத்தைப் பற்றிக் கவலையில்லை உனது உள்ளத்தைத்தான் விரும்புகிறேன்.
  • முதல் தடவையாக ஒரு பெண்ணுடன் அரட்டை அடிக்கிறேன்.
  • நான் இதற்கு முன்பு பலான அரட்டை அடித்ததில்லை.

பிரித்தானியப் பாராளமன்றத்தில் இலங்கைக்கு பேரிடி


பிரித்தானியப் பாராளமன்றில் நேற்று இலங்கை தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றது. அது இலங்கை அரசிற்கு பேரிடியாகவே அமைந்தது. தொழிற் கட்சி அரசு பதவி இழந்த பின் பிரித்தானிய நிலைப்பாடு தமக்கு சாதகமாகவே அமையும் என்று நம்பி இருந்த இலங்கைக்கு புதிய கூட்டணி அரசு தாம் இலங்கை தொடர்பாக தொழிற் கட்சியின் கொள்கையையே கடைப்பிடிக்கப் போவதாக புதிய அரசின் சார்பில் தெரிவித்தமை பேரிடியாகவே அமையும். இலங்கை அரசின் நண்பராகக் கருதப்படும் லியோம் பொக்ஸ் அவர்கள் இலங்கை தொடர்பாக கொள்கையைத் தீர்மானிக்கப் போவதில்லை என்றும் தானே தீர்மானிக்கப் போவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹெக் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். சிபோன் மக்டொனா(Siobhain McDonagh) அவர்களின் வேண்டுதலின் பேரில் நடந்த தனிநபர் விவாதத்தின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன.

போர் குற்றத்தை மறைக்க சீன நிறுவனம்.
இலங்கையில் நடந்த போரின்போது இழைக்கப் பட்ட போர் குற்றங்களுக்கான சாட்சியங்களை மறைப்பதற்கு சீன நிறுவனம் ஒன்றின் உதவியை இலங்கை அரசு பெற்றுக் கொள்ளவிருப்பதாக பாராளமன்ற உறுப்பினர் கீத் வாஸ் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையில் பொது நலவாய நாடுகளின் மாநாடு நடத்தப் படுவதை தாம் எதிர்ப்பதாகவும் ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை இலங்கைக்கு வழங்கப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் ஆளும் அரசு தெரிவித்தமை இலங்கைக்கு பேரிடியாக அமையும்.

நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்துடன் பேசப்படும்
வேறு ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் மக்களாட்சி முறைப்படி அமைக்கப் பட்ட நாடுகடந்த அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்தலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவும் நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் காட்ட முயலும் இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும்.

பிரித்தானிய அரசை தமிழ் மக்கள் தம்பக்கம் இழுக்க இன்னும் பல முயற்ச்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

Wednesday 16 June 2010

புதிய i-phone 4 இன் அம்சங்கள்



ஆப்பிள் நிறுவனம் தனது புதிய i-phone 4 மூலம் கைத்தொலைபேசி உலகைக் கலங்கடித்துள்ளது. முன்கூட்டியே வாங்குவதற்கு பதிவு செய்தவர்களின் தொகை ஆப்பிளின் கையிருப்பை மிஞ்சிவிட்டது. அதனால் முன்கூட்டி வாங்குபவர்களுக்கான விநியோகத் திகதி அடுத்த மாதத்திற்கு பின்போடப் பட்டுள்ளது.

கூகிளின் அன்ரோய்ட் கைத்தொலைபேசிகள் மிஞ்சவிடாதபடி ஆப்பிள் தனது i-phone 4 களை வடிவமைத்துள்ளது.

முன்புறமும் பின்புறமும் வன்மையான கண்ணாடிகளும் பக்கங்களில் அலுமினியமும் அலுமினிய அழுத்திகளும் கொண்டதாக புதிய i-phone 4 அமைந்துள்ளது. ஐ-பாட்டின் ஏ-4 இயக்கிகள்(Sharing the Apple A4 processor with the iPad, the latest chip should see super-speedy load times and data processing.) மூலம் மிக விரைவான செயற்பாட்டை இது கொண்டிருக்கிறது.

i-phone 4இன் மின்கலன்கள் - battery 7 மணித்தியாலங்கள் வரை கதைக்கக் கூடிய வலிமையுள்ளன.

ஐ-பாட்டில் செய்தது போலவே i-phone 4இல் தொடுதிரைத் தொழில்நுட்பத்தின் உச்சக் கட்டத்தை ஆப்பிள் தொட்டுள்ளது. ஆப்பிளின் 'RETINA DISPLAY தொழில் நுட்பம் மற்றக் கைத்தொலைபேசிகளில் இருந்து i-phone 4 வேறுபட்டதாக்கி மேன்மைப் படுத்துகிறது.

i-phone 4இன் திரை AMOLED screens. The 960 X 640 display packs 326 pixels per inch கொண்ட பெரிய திரையாக அமைகிறது.

ஆப்பிள் கைத்தொலைபேசிகளின் நீண்டகாலக் குறைபாடாக இருந்த ஒளிப்பதிவுக்கருவிகளின் பலவீனங்கள் i-phone 4இல் சீர் செய்யப் பட்டுள்ளது. ஆப்பிள் பிக்சல்களை கூட்டுவதற்கு பதிலாக குறைந்த ஒளியில் சிறந்த படங்களைப் பதிவு செய்யும் திறனை i-phone 4இல் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் சிறந்த காணொளிப் பதிவுக் கருவியும் இணைக்கப் பட்டுள்ளது. iMovie - After shooting in 720p, users will be able to edit and polish their efforts in iMovie before unleashing them on the world.

சிறட்ந்த அரட்டை வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன: While it's not exclusive to the iPhone 4, the newly-named iOS 4 will have exclusive features for Apple's latest gadget. Along with multitasking, folders, iAds and iBooks (all revealed earlier this year), the iPhone 4 will feature: FaceTime - Apple's name for their patented video-chat facility. Apparently without any set up, users will be able to chat using either camera on their shiny new iPhone 4's.

ஒரே நேரத்தில் பல செயலிகளை (APPLICATIONS)இயக்கும் திறன் i-phone 4இல் உள்ளடக்கப் பட்டுள்ளது.

i-phone 4இற்கு சவால் விடும் மற்ற கைத்தொலைபேசிகள்: Dell Streak, Palm Pre +, HTC Desire, Microsoft Kin 1 & 2, Samsung Galaxy S.

விடுதலைப் புலிகளின் திருமணப் பின்னணி


இலங்கை அரசிடம் அகப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளை என்ன செய்வது என்பது இலங்கை இந்திய அரசுகளுக்கு பெரும் தலையிடி கொடுக்கும் ஒன்றாக அமைந்து விட்டது. அகப்பட்டவர்கள் கொடூரமான முறையில் கொல்லப் பட்டமைக்கான புகைப்பட காணொளி ஆதாரங்கள் பல வெளிவந்த வண்ணமுள்ளன. எஞ்சி உள்ளவர்கள் பலர் முடமாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. இவர்கள் மீண்டும் ஆயுதங்கள் தூக்காமல் இருக்க இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது என்ற போர்வையில் இவர்களைத் திசை திருப்புவது இந்த அரசாங்கங்களிம் முக்கிய நோக்கம். அத்துடன் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் தம்மை கொடியவர்களாகக் காட்டாமல் மனிதாபிமானம் உள்ளவர்களாகக் காட்ட வேண்டிய கட்டாயமும் உண்டு.

புனர்வாழ்வு வழங்குவதில் முதலில் இளவயதினருக்கும் திருமணமானவர்களுக்கும் முன்னிடம் கொடுக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து சில காதலர்கள் தம்மை திருமணமானவர்களாகக் காட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சிலர் தம்மைக் காதலர்களாகவும் இலங்கை அரசிடம் காட்டிக் கொண்டனர். சிலர் வேண்டுமென்றே தம்மைக் காதலர்களாகவும் காட்டிக் கொண்டனர். ஒரு அகப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரை சந்திக்கச் சென்ற தாய்க்கு மகனுக்கு திருமணம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். ஏனென்றால அவருக்கு வெளியில் ஒர் உயிருக்கு உயிராக நேசிக்கும் காதலி இருக்கின்றார். தாய் அறிந்து கொண்ட விடயம் "இது ஒரு நாடகம்"

இலங்கை அரசிற்கு திருமணமாகாதவர்கள் திருமணம் செய்தோம் என்று சொன்னதும் காதலரல்லாதோர் கதலர்கள் என்று சொன்னதும் தெரியும். பொய் சொன்னவர்களுக்குத் தண்டனையாகவும் தனக்கு விளம்பரமாகவும் விவேக் ஒபரோயிடமிருந்து பணம் பிடுங்கவும் செய்யப் பட்ட நடவடிக்கையா?

Tuesday 15 June 2010

செம்மறி மாநாட்டுக் கீதம் - தமிழனை செம்மறியாக்கும் கள்ள நரி


கட்டிய மனைவியர்க்கும்
கட்டாத காரிகையர்க்கும்
யாதும் சொத்தே யாவர்க்கும் பதவியே
புகலிடம் என்பது தமிழ்நாடேன
கொள்ளையடித்து வாழ்ந்தோம்
கோடிகள் பல சேர்த்தோம்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகளான மொழி கனியாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்


சொத்தும் சுகமும் பிறர் தர வரா எனும்
நன் மொழியே என் தனி வழியாம்
தமிழரைப் புறந்தள்ளி
பொருள்கள் குவிக்கவே
டெல்லி வழிகாட்டும்
கொலை மெழியே
என் மகளான மொழி கனியாம்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்

வேங்கடம் முதல் கதிர்காமம் வரையிலே
ஏமாற்றிப் பெறும் பெரும் சொத்தை வகுத்துக் கொடுத்தும்
தீராச் சகோதர யுத்தமும்
குடும்பச் சண்டையில் குடுமி படும்பாடு
ஒலிக்கின்ற என் தொலைக்காட்சியும்
கணக்கற்று வளரும் கோடிகளும்
பேரப்பிள்ளைகளின் திரைப்படங்களும்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகளான மொழி கனியாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்

ஆள்காட்டானும் அழகன்பனும்
எல்லோரையும் ஏற்று ஏமாற்றி
என் மக்கள் பகிர்ந்து பதவி பெறுவர்
எத்தனையோ ஆயிரத்தை ஈழத்தின் கொன்ற
காந்தி குடும்பத்தின் கால் பிடித்து வாழ்வோம்
என் வாரிசான குசுட்டாலினாம்
என் மகளான மொழி கனியாம்
என் மகனான கிரிஅழகாம் - தமிழனை
செம்மறியாக்கும் கள்ள நரியாம்

Monday 14 June 2010

ஈழம்: காணாமல் போன இருவரில் ஒருவர் உயிருடன் கண்டு பிடிப்பு, மற்றவர் எங்கே?


இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று சொல்லி ஒரு இணைத் த(றுத)லை நாடுகள் என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. இதில் நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியன இடம்பெற்றன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவது போல் பாசாங்கு செய்து தமிழர்களை ஏமாற்றிக் கொண்டனர். இந்த இணைத் தறுதலை நாடுகளில் இந்தியா பங்குபற்றாமல் திரை மறைவில் அவற்றுடன்கள்ளத் தனமாக இணைந்து செயற்பட்டது. இவர்களின் முக்கிய சதி சமாதானப் பேச்சு வார்த்தை போர் நிறுத்த உடன் படிக்கை என்று தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதும் அவர்களுக்குள் பிணக்குகளை பிரிவுகளை ஏற்படுத்துவதுமாகும்.

இணைத்(தறு)தலை நாடுகளில் முக்கியமான இருவர்கள் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மும் ஜப்பானின் யசூசு அக்காசியும். இவர்கள் ஏதோ நல்லவர்கள் போல தம்மைக் காட்டிக் கொண்டனர். அதில் எரிக் சொல்ஹெய்ம் தன்னை ஒரு தமிழர்களின் நண்பன் என்று பொய்யாக அடையாளம் காட்டிக் கொண்டார். இவரைத் தாக்கி சிங்களப் பேரினவாதிகளும் சிங்கள் ஊடகங்களும் எழுதின. அவரை ஒரு வெள்ளைப் புலி என்றே அவர்கள் வர்ணித்தனர். உண்மையில் இவர்தான் தமிழர்களுக்கு எதிரான சதிநாடகத்தின் நாயகன்.

யசூசு அக்காசி எரிக் சொல்ஹெய்ம் ஆகிய இருவரும் இலங்கையின் சமாதனத் தேவதைகள் போல் தம்மைக் காட்டிக் கொண்டனர். ஆனால் இலட்சக் கணக்கான மக்கள் சிறு இடத்துக்குள் அடக்கப்பட்டு தடை செய்யப் பட்ட ஆயுதங்களால் கொல்லப் பட்ட போதோ உயிருடன் புதைக்கப் பட்ட போதோ இவர்கள் அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. மூன்று இலட்சம் மக்கள் வதை முகாம்களில் அடைக்கப் பட்ட போதும் இவர்கள் எதுவும் செய்யவில்லை. சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவினரை சுட்டுக் கொன்ற சதியில் எரிக் செல்ஹெய்மிற்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால் விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்தவுடன் இவர்கள் இருவரும் காணாமற் போய்விட்டனர்.

இந்த இருவரில் யசூசி அகாசி இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளார். இவர் 15-ம் திகதி செவ்வாய் கிழமை இலங்கை செல்கிறார். இவரின் இலங்கைப் பயணத்தின் நோக்கம்:
  • நீண்ட கால சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான தேசிய இணக்கப் பாட்டை உருவாக்குவதற்கான அரசியற் தீர்வை துரிதப் படுத்துதல்.
இலங்கையில் இப்போது பல நாடுகளும் அதிகாரப் பரவலாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. சிங்கள மக்களைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கம் என்பது ரெம்பக் கெட்ட வார்த்தை. அதனால் அவை புதிதாக ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றன அதுதான் தேசிய இணக்கப் பாடு.

சரி காணமற் போன யசூசி அகாசியை உயிருடன் கண்ட்டு பிடிக்கப் பட்டுள்ளார். எங்கே எரிக் சொல்ஹெய்ம்?

யசூசு அகாசியின் இலங்கைப் பயணம் இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தப்பட்டது என்று சொன்னாலும் அவருக்கு இலங்கை இனப் பிரச்சனையில் அக்கறை இல்லை. அவர் தமிழர்களைப் பற்றியோ அல்லது அவர்களுக்கு நடந்த பேரவலங்களைப்பற்றியோ கவலை கொண்டவரல்லர். கவலை கொள்ளப் போவதுமில்லை. இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை எப்படி சரி செய்வது என்பதுதான் அவரது கரிசனை. இலங்கைக்கு சீன உதவிப் பிரதமர் ஷாங் டிஜியாங் செய்த பயணமும் அவர் அங்கு செய்து கொண்ட ஒப்பந்தங்களுமே யசூசு அகாசியின் பயணத்திற்கு வழிவகுத்தது. இவரின் பயணத்திற்கு வலுச்சேர்க்கவே நேற்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் நடந்த போர்குற்றம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை தேவை என்று வலியுறுத்தியது.



இணைத் த(றுத)லை நாடுகள்

நோர்வே என்றொரு மாரீசன்
ஜப்பான் என்றொரு நயவஞ்சகன்
அமெரிக்கா என்றொரு அயோக்கியன்
ஐரோப்பிய ஒன்றியம் என்றொரு கயவன்
இத்தறுதலைகள் போதாதென்று
இந்தியா என்றொரு விபீஷணன்
இணைந்தாங்கள் தமிழரை ஏமாற்ற
கதையுங்கள் கதையுங்கள் எனச் சொல்லி
கழுத்தறுத்தாங்கள் ஈழத் தமிழரை
சமாதானம் சமாதானம் எனச் சொல்லி
ஆயுதங்கள் கொடுத்தாங்கள் சிங்களவனுக்கு
கொன்றொழித்தாங்கள் தமிழர்களை

பலான கூலி


அந்த ஐந்து நட்சத்திர விடுதி வாசலில் ஒரு மிடுக்கான வாலிபன் புதிய கவர்ச்சியான காருடன் நின்றான். அவனை அங்கு வந்த ஒரு கட்டழகி கண்டாள். இருவருக்கும் பார்த்தவுடன் காதல் வந்து விட்டது. சில நேரம் காதல் வழிய வழியக் கதைத்தனர். ஒருவருக்கு ஒருவரை மிகவும் பிடித்து விட்டது. தன்னை எங்காவது தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் படி அவள் வேண்டினாள். இருவரும் நாலு மைல் தொலைவில் உள்ள தன்னுடைய பாட்டியின் வெறுமையாகக் கிடந்த வீட்டிற்கு அவளை அவன் அழைத்துச் சென்றான். இருவரும் அங்கு உல்லாசமாக இருந்தனர். இறுதியில் அவள் சொன்னாள் நான் உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்லவேண்டும் நான் ஒரு விபச்சாரி. இன்றைய உனது கட்டணம் 50 டொலர்கள் அதைத் தந்துவிடு என்றாள். அவனும் வேண்டா வெறுப்பாக அதைக் கொடுத்து விட்டான். இப்போது அவள் அவனை மீண்டும் நகரத்தில் கொண்டு போய் தன்னை விடும்படி கேட்டாள். அவன் அவளை தன் வாகனத்தில் ஏற்றி நானும் உனக்கு ஒரு உண்மையைச் சொல்லவேண்டும் இது என் சொந்தக் கார் அல்ல. நான் ஒரு வாடகைக் கார் ஓட்டுபவன். இந்த சவாரிக்கான கட்டணம் 75டொலர்கள் என்றான்.

அமைச்சர் சிதம்பரம் தமிழர்களை வைத்துக் காமெடி பண்ணுகிறார்


சிவகங்கைத் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் உதவியால் வெற்றி பெற்ற சிதம்பரம் தமிழ் மக்களை வைத்துக் ரெம்பத்தான் காமெடி பண்ணுகிறார். காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில்தான் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பல காமெடிகள் உதிர்த்துள்ளார்.

காமெடி - 1 - இந்தியாவில் உள்ளது போல் இலங்கையிலும் சுயாட்சி உள்ள மாநிலங்கள் அமைக்கப்படும்.
எவன் சொன்னான் இந்தியாவில் சுயாட்சியுள்ள மாநிலங்கள் இருக்கின்றன என்று? அரசியலமைப்பு நிபுணர்கள் சொல்கிறார்கள் இந்திய மாநில அரசு என்பது ஒரு மினுக்கப் பட்ட நகரசபை என்று- A glorified Municipal Council. இந்தியாவில் மாநிலங்களுக்கு சுயாட்சி இருந்தால் ஏன் அறிஞர் அண்ணா மாநில சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்தார். 1987-ம் ஆண்டு ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தின் தமிழருக்குச் சாதகமான ஒரு அம்சத்தைக் கூட இதுவரை நிறைவேற்றாத இந்திய அரசு தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தரப் போகுதாம். ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் இந்த மாதிரியெல்லாம் காமெடி அடிக்கச் சொல்லிக் கொடுப்பார்களா?

காமெடி - 2 - இடம் பெயர்ந்த மக்கள் யாவரும் இவ்வருட இறுதிக்குள் மீள் குடியேற்றப் படுவார்கள்.
ஏற்கனவே முகாம்களில் இருந்து வெளியே வந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றித் தவிக்கிறார்கள். நீங்கள் சொன்னீர்கள் என்று ராஜபகசக்கள் முதல் வேலையாக தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யப்போகிறார்கள். இந்தக் காமெடியை இத்தாலிப் பாவாடைக்குள் இருந்து பெற்றீர்களா?

காமெடி - 3 - இலங்கையில் இனப்பிரச்சனை 1984இல் வெடித்தது.
இலங்கை சரித்திரம் என்பது சிங்கள தமிழ்ப் போர் மயமானது. பிரித்தானியாவிடமிருந்து இலங்கைசுதந்திர மடைந்த பின் 1956, 1958, 1962, 1972 1977, 1983, 2000, 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்தன. மகளிர் கல்லூரியில் ஆயிரக் கணக்கான இளம் பெண்களுக்கு முன் பேசும் போது இப்படி காமெடி விடுவது மன்னிக்கக்கூடியதே.

மகளிர் கல்லூரிக்குப் போனமா பிகர்களைப் பார்த்தமா என்றுஇல்லாமல் என் இந்தக் காமெடி எல்லாம்?

சித்தணித் தண்டவாளத் தகர்ப்பு கொழும்புத் திரைப்பட விழாத் தோல்வியின் எதிரொலி?


கொழும்பின் நடந்த இந்திய உலகத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்து அதை தோல்வியில் முடிவடையச் செய்தமை ஆரிய சக்திகளையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும்.
தமிழ்த் தேசியவாதத்திற்கு இந்தியாவில் ஆதரவு கூடி விடுமா என்ற கவலை இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும்.

சென்னை வழியாக மும்பை செல்லும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை ஜூன் 12ம் திகதி அதிகாலை 2.15 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி என்ற பகுதியில் ரயில் தண்டவாளம் தகர்கப்பட்டடது. இதனால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

பாய்ந்தெழுந்த பார்பன ஊடகங்கள்
தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க முன்னரே "விடுதலைப் புலிகள் கைவரிசை" என்று பார்பன ஊடகங்கங்கள் குரைக்கத் தொடங்கிவிட்டன. ஏன் இந்த அவசரம்? முன்கூட்டியே செய்தி எப்படி இருக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டதா?

தமது ஆயுதங்கள் மௌனிப்பதாக அறிவித்த பின்கடந்த ஒரு வருடமாக இலங்கையில் எந்த தாக்குதலும் நடத்தாத விடுதலைப் புலிகள் இந்தத் தண்டவாளத் தகர்ப்பை ஏன் செய்ய வேண்டும்?

தமிழினக் கொலையாளியாக தமிழர்கள் குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்சவிற்கு டில்லியில் செங்கம்பள வரவேற்புக் கொடுத்த பின் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டதா?



இந்தியத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்ததால் அது படுதோல்வியில் முடிவடைந்ததுடன் சிங்கள மக்களுக்கு இந்தியா மேல் இருக்கும் கசப்புணர்ச்சியையும் வளர்த்தது. தமிழர்கள் ஒன்றானால் பகைவர்கள் அழிவர் என்ற பாரதிதாசன் கூற்று உண்மையாகலாம் என்று இந்தியாவின் உளவுத் துறையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளும் நன்கு அறிவர். இதற்கு ஒரு தண்டவாளத் தகர்ப்பு நாடகம் பெருதும் உதவி செய்யுமா?

இத் தண்டவாளத் தகர்ப்பைத் தொடர்ந்து இத்தாலிச் சனியாளின் அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்தது ஏன்?

இந்திய உளவுத் துறை ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரிக்கும் போது இந்திய உளவுத் துறை இந்த மாதிரியான சதி நடவடிக்கைகளில் இப்படி முன்னரும் ஈடுபட்டது என தமிழின உணர்வாளர்கள் கருத்துத் தெர்விக்கின்றனர். இது மாதிரி சம்பவங்கள் இன்னும் நடக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...