Saturday 17 April 2010

அனுமானைத் தேடுகிறாள் சீதை‏



பொருத்தமென்றோர் பெருங்கடல்
குடும்பமென்றோர் ஆழ்கடல்
சீதனமென்றோர் கொடுங்கடல்
இக்கடலெல்லாம் தாண்டி
ராமனொடு சேர்த்து வைக்க
அனுமானைத் தேடுகிறாள் சீதை

Thursday 15 April 2010

இந்தியாவில் கழிப்பறை வசதிகளிலும் பார்க்க கைத்தொலைபேசி வசதிகள் அதிகம்


இந்தியாவில் மக்களுக்கு உள்ள கழிப்பறை வசதிகளிலும் பார்க்க கைத்தொலைபேசி வசதிகள் அதிகம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான University's Institute for Water Environment and Health (IWEH) தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியச் மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் கைத்தொலைபேசி வைத்திருக்கின்றனர் ஆனால் இந்திய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினரே நல்ல கழிப்பறை வசதிகள் பெறக்கூடியவர்களாக இருக்கின்றனராம்.

India has some 545 million cell phones, enough to serve about 45 per cent of the population, but only about 366 million people or 31 per cent of the population had access to improved sanitation in 2008.

The recommendations released today are meant to accelerate the pace towards reaching the Millennium Development Goal on halving the proportion of people without access to safe water and basic sanitation.

If current global trends continue, the World Health Organization and the United Nations Children’s Fund predict there will be a shortfall of 1 billion persons from that sanitation goal by the target date of 2015.

“Anyone who shirks the topic as repugnant, minimizes it as undignified, or considers unworthy those in need should let others take over for the sake of 1.5 million children and countless others killed each year by contaminated water and unhealthy sanitation,” said Mr. Adeel.

Included in the nine recommendations are the suggestions to adjust the MDG target from a 50 per cent improvement by 2015 to 100 per cent coverage by 2025; and to reassign official development assistance equal to 0.002 per cent of gross domestic product (GDP) to sanitation.

The UNU report cites a rough cost of $300 to build a toilet, including labour, materials and advice.

“The world can expect, however, a return of between $3 and $34 for every dollar spent on sanitation, realized through reduced poverty and health costs and higher productivity – an economic and humanitarian opportunity of historic proportions,” added Mr. Adeel.

வருகிறது மைக்ரோசொFறின் கைத் தொலை பேசிகள்


கணனி மென்பொருள் தாயாரிப்பு நிறுவனமான மைக்ரோசொFற் கைத்தொலைபேசித் தாயாரிபிலும் ஈடுபட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களுக்கு போட்டியாக மைக்ரோசொFற் களமிறங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

Kin 1, Kin 2 என்னும் இருவகை கைத் தொலைபேசிகள் Facebook போன்ற சமூக வலையமைப்புக்களைப் பாவிக்கும் இளவயதினர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டுள்ளது. இவை அமெரிக்காவில் இந்த மே மாதம் சந்தைக்கு வரவிருக்கிறது.
இந்த இரு கைத்தொலைபேசிகளும் slide-out QWERTY keyboards ஐக் கொண்டவை. அத்துடன் 5 megapixels ஒளிப்பதிவு வசதிகளும் உடையது. ஒளிப்படங்களை கைத்தொலைபேசியில் வைப்புச் செய்யாமல் ஒன்லைனில் வைப்புச் செய்யும் வசதிகள் அமைக்கப் பட்டுள்ளன.

ஐபோனிலும் கூகிளின் Androidஇலும் தேவையான சிறு மென்பொருள்கள் (applications) தரவிறக்கம் செய்ய வேண்டிய சிரமம் உண்டு. மைக்ரோசோFற்றின் Kin கைத்தொலைபேசிகள் சகல தேவையான சிறு மென்பொருள்களுடனும் உங்களுக்கு கிடைக்கும்.

Wednesday 14 April 2010

என்ன இந்தப் புத்தாண்டு?


அள்ளி வைக்கும் ஆரியப் பேய்கள்
கொள்ளி வைக்கும் சிங்கள நாய்கள்
அன்றும் அதே இனியும் அதே
புதிதாக இங்கொன்றும் இல்லை

வேதம் ஓதும் தமிழினக் கொலைக் கும்பல்
கூச்சலிடும் அரசியல் கூட்டம்
அன்றும் அதே இனியும் அதே
புதிதாக இங்கொன்றும் இல்லை

சர்வதேச கொலைவெறிப் பாவிகள்
ஐநாவின் பொய்நாக் கொண்ட நைனா
அன்றும் அதே இனியும் அதே
புதிதாக இங்கொன்றும் இல்லை

தமிழன் நிலமெங்கும் சிங்களக் குடிகள்
தமிழன் தெருவெங்கும் சிங்களக் கடைகள்
அன்றும் அதே இனியும் அதே
புதிதாக இங்கொன்றும் இல்லை

தமிழினக் கொலையாளி இந்தியாதான்
தமிழனுக்கு கதியெனும் கைகூலிகள்
அன்றும் அதே இனியும் அதே
புதிதாக இங்கொன்றும் இல்லை

Tuesday 13 April 2010

You cannot forgive. I cannot forget




I may be traitor

Or even a impostor

You cannot forgive me

I cannot forget you.


I may be a cheat

Or even damn cheap

You can’t forgive me

I can’t forget you


I may be a flirt

Or even a dirt

You can’t forgive me

I can’t forget you


I may be a sham

Or even fictitious

You can’t forgive me

I can’t forget you


I may be a pseudo

Or even an imitation

You can’t forgive me

I can’t forget you

இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான அடுத்த சதி


தமிழர்களுக்கு எதிராக சீனாவுடன் கைகோத்து நின்ற இந்தியா இப்போது தமிழர்களுக்கு எதிராகச் சதி செய்ய அமெரிக்காவுடன் கைகோக்கிறது. இலங்கையில் அமெரிக்கப் பிரசன்னம் தமிழர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பிலும் பார்க்க இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தமிழர்களுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்தியா கடந்த சில வருடங்களாக உணர்ந்து செயற்பட்டு வருகிறது. 1970களின் பிற்பகுதியில் அமெரிக்கா திருக்கோணமலையில் தனது கடற்படைக்கு எரிபொருள் நிரப்பு வசதிகளை ஏற்படுத்த முயன்றபோது அதைப் பலமாக எதிர்த்த இந்தியா அம்பாந்தோட்டையில் சீனா என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறது. இங்கு இந்தியா தமிழத் தேசியத்திற்கு எதிராக தனது பிராந்திய நலன்களைக் கூட பலியிடத் தயங்கவில்லை என்பதை பலமுறை எடுத்துக் கூறப்பட்டுவிட்டது.

இந்தியப் பேரினவாதிகள் இலங்கையில் தமிழன் ஆட்சி செய்யக் கூடாது என்பது மட்டுமல்ல சிறு அதிகாரம் கூட பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். 1980களின் ராஜீவ் காந்தி தான் இலங்கையில் இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவாலாக்கத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரப் பரவலாக்கத்தை விரும்பவில்லை என்று பகிரங்கமாகக் கூறியிருந்தார். இந்திய அரசியலமைப்பு எழுதப் பட்ட போது மாநிலங்களிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப் படுவதை பேரினவாதியான ஜவகர்லால் நேரு பலமாக எதிர்த்தார். அதனால் இந்திய மாநில அரசுகள் என்பது ஒரு பூசி மெழுகப்பட்ட நகரசபை என்றே அரசியல் அமைப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால்தான் தந்தை செல்வநாயகம் உதவி கேட்டுச் சென்றபோது தந்தை பெரியார் "நீங்கள் அங்கு அடிமையாக இருக்கிறீர்கள்; நாம் இங்கு அடிமைகளாக இருகிறோம், ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?" என்றார்.

இப்போது பன்னாட்டு ரீதியில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழர்களின் பிரச்சனையை பகிரங்கப் படுத்தி தமக்கு பன்னாட்டு ஆதரவைப் பெற பெரு முயற்ச்சிகள் செய்கின்றனர். இதற்கு ஆப்பு வைக்க இந்தியா பலவழிகளில் முயல்கிறது. அதில் ஒரு அம்சமாக இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் ஒரு தீர்வைக் காணலாம் என்ற மாயையை பன்னாட்டு அரங்கில் ஏற்படுத்த முயல்கிறது. இதற்காக தனது செயற்திட்டத்திற்கு அமெரிக்க ஆதரவைப் பெற முயல்கிறது. இதன் ஒரு அம்சமாக அணு சக்தி மாநாட்டிற்கு அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் பராக் ஒபமாவுடன் இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக உரையாடல்களை மேற்கொண்டார். அமெரிக்காவோ "அதிகாரப் பரவலாக்கம்", "நியாயமான தீர்வு", "இனங்களுக்கு இடையிலான இணக்கப் பாடு" என தன் பதங்களை அடிக்கடி மாற்றி வருகிறது. இதனால் இந்திய அமெரிக்கக் கூட்டு தமிழர்களுக்கு எதிரான அடுத்த இந்தியச் சதியே. அது பாதகமான விளைவுகளையே தமிழர்களுக்கு ஏற்படுத்தும்.

இந்தியா தனது தமிழ்க்கைக்கூலிகளை அதிகரிக்கப் பலமுயற்ச்சிகளை செய்கிறது. அதன் அடுத்த திட்டம் தனது கைக்கூலிகளை ஒன்று திரட்டி சிங்களவர்கள் கொடுப்பதை வாங்குவோம் என்று தமிழர்கள் கருதுகிறார்கள் என்ற மாயையை உருவாக்குவதுதான். அதற்காக விரைவில் தமிழ் அரசியல் வாதிகளை ஒன்று கூட்டி ஒரு மாநாடு நடத்தலாம். அதில் 13வது அரசியல் திருத்தற்கு குறைவான ஒன்றை தமிழர்கள் இடைக்காலத் தீர்வாக ஏற்றுக் கொள்வார்கள் என்று பகிரங்க அறிக்கையும் விடலாம்.

Monday 12 April 2010

இந்தியாவிற்கு இலங்கையூடாக சீனா போடும் வீதி


சீனாவின் கிராமப் புறங்களில் நடந்த ஆயுதக் கிளர்ச்சிகளை அடக்க சீனா வகுத்த உத்திகளில் முக்கியமானவை அங்கு பாரிய பெருந்தெரு வலையமைப்பை உருவாக்கியமையாகும். பாரிய பெருந்தெருக்கள் உள்ள இடங்கள் கரந்தடி (கொரில்லா) சண்டை செய்வோர்க்கு பாதகமான சூழலை சீனாவில் ஏற்படுத்தியது. அரச படைகள் தமது போக்கு வரத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். இதனால் கரந்தடிப் படைக்குழுக்கள் பரந்து செயற்படவேண்டிய சூழலை உருவாக்கும். அரச படைகளின் தொகையுடன் ஓப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலான ஆளணிகளைக் கொண்ட கரந்தடி படையினருக்கு இது மிகவும் சாதகமாக அமையும். இந்தியாவின் தெருவசதிகளற்ற கிராமப் புறங்களில் மாவோயிசத் தீவிரவாதிகள் பல தாக்குதல்களை வெற்றீகரமாக அண்மையில் செய்து முடித்ததும் கவனிக்கத் தக்கது.

சீனா தனது பெருந்தெருக் கட்டமைப்பு உத்தி ஆலோசனையை இலங்கைக்கு வழங்கி அதற்கான உதவிகளையும் செய்கிறது. சீனாவிற்கு இதற்கான பிரதி பலன் என்ன? வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஊழியர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குள் பல சீன உளவாளிகளும் படையினரும் ஊருடுவ முடியும். இது இலங்கையில் தெரு அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா இந்தியாவை நோக்கித் திறக்கும் ஒரு படைத்துறைப் பாதை என்பதைத் தவிர வேறு எதாக இருக்க முடியும்? சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் பலவீனத்தை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு செயற்படுகிறார்கள். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் பலவீனம் என்பது தமிழர்கள் ஆட்சி செய்யக் கூடாது என்பதுதான். அதற்காக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியப் பிராந்திய நலன்களையும் பலியிடத் தயாராக உள்ளனர். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் இப்போதைய முக்கிய செய்றதிட்டம் தமிழ்த் தேசிய போராட்டத்தை முற்றாக ஒழிப்பதும் அது மீண்டும் தலை தூக்க்காமல் செய்வதுமாகும். இந்தியாவை ஏமாற்ற சில வசதிகளை இந்தியாவிற்கு இலங்கையில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அதை வைத்துக் கொண்டு இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கை இந்தியாவையும் சீனாவையும் சமமாக நடத்துகிறது என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். இலங்கையில் சீனாவையும் அனுமதித்து இந்தியாவையும் அனுமதித்தால் அது சமமாக நடத்துவதாகத்தான் தெரிகிறது. இலங்கையில் இந்திய இருப்பால் சீனாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படப் போவதில்லை. ஆனால் இலங்கயில் சீனாவின் இருப்பு இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தல் என்பது உண்மை. அம்பாந்த்தேட்டைத் துறைமுகமும் அங்குள்ள சீன ஆயுதக் கிடங்கும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய "நிபுணர்கள்" பிதற்றுகின்றனர். வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சீனர்கள் இந்தியாவிற்கு மிக அண்மையில் வந்து விட்டனர்.

Sunday 11 April 2010

இலங்கைத் தேர்தல் தெரிவிப்பவை எவை?



இலங்கையின் ஏழாவது பாராளமன்றத் தேர்தல் இலங்கையைப் பொறுத்தவரை "அமைதியாக" நடந்துள்ளது. திருக்கோணாமலை கண்டி ஆகிய இடங்களின் தேர்தல் முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில் கட்சிகளின் நிலவரம் இப்படி இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -144
ஐக்கிய தேசியக் கட்சி ---------------------- 60
இலங்கைக் தமிழரசுக் கட்சி --------------- 15
சுதந்திர தேசிய கூட்டணி ------------------- 6

இம்முறைத் தேர்தல் பல செய்திகளைக் கூறி நிற்கிறது.

நியமங்களாகிய அநியாயங்கள்.

தேர்தலில் முறைகேடு என்பது இப்போது இலங்கையில் சாதாரணமாகி அது தேர்தலில் ஒரு அம்சம் என்றாகிவிட்டது. தன்னால் ஒழுங்காக தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையாளர் கூறினார். நாட்டின் நீதித்துறை சீர்குலைந்துள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். நியாயமான தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான சட்ட விதிகள் அமுல்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சரத் என் சில்வா பிரதம நீதியரசராக இருக்கும்போதே நீதித்துறை சீர் குலைந்து விட்டது.

கேலிக் கூத்தாகிய ஜே ஆரின் திட்டம்.
1977 இல் தெரிவு செய்யப்பட்ட ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அரசு இலங்கை அரசியல் அமைப்பைத் வரையும் போது அதில் இலங்கைப் பாராளமன்றத் தேர்தலில் விகிதாசாரப் பிரதி நித்துவ முறையை அறிமுகம் செய்தது. அதற்கு முந்திய தேர்தல்களின் படி. ஜே ஆரின் யூஎன்பி எனப்படும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்விகள் அடைந்த போதும் நாடாளவிய ரீதியில் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக இருந்தது. இதனால் விகிதாசாரப் பிரதிநித்துவ முறையை அறிமுகம் செய்தால் ஒருபோதும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி(ராஜபக்சவின் கட்சி) ஆட்சிக்கு வர முடியாது என்று ஜே ஆரும் அவரது யூஎன்பியும் நம்பியது. ஆனால் இந்தத் தேர்தல் முடிவு ஜே ஆரின் திட்டத்தை கேலிக் கூத்தாக்கி விட்டது. ஒரு கட்சியின் வேட்பாளர்களே தமக்குள் மோதிக்கொள்ளும் நிலையை விகிதாசாரத் தேர்வு முறை ஏற்படுத்தி "மக்களாட்சி" முறையையே அசிங்கப் படுத்திவிட்டது.

தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி மக்கள் பெரும்பாலான தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அவர்களை அப்படிச் செய்யும் படி யாரும் வேண்டவில்லை. வெளிநாடுகளில் இருந்தும் பல தமிழர் அமைப்புக்கள் தேர்தலில் பங்கேற்கும்படி வலியுறுத்தியிருந்தன. இலங்கை அரசியல் அமைப்பிலும் கொழும்புச் சிங்கள் ஆட்சியிலும் நம்பிக்கை இழந்தவர்களான தமிழ்த்தேசியத்தின் தமிழ்த் தேசியத்தின் உறுதியான ஆதரவாளர்களே தேர்தலைப் புறக்கணித்தனர். யாழ் மாவட்டத்தின் மொத்த வாக்காளர் தொகையின் 10%இற்கும் குறைவானவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தனர் எனபது கூர்ந்து கவனிக்கத் தக்கது. சென்ற முறை அதிக விருப்பு வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்ற செல்வராசா கஜேந்திரன் இம்முறை வெற்றி பெறவில்லை. ராஜபக்சவின் சால்வை சரணம் என்று சென்ற வன்னி மாவட்ட வேட்பாளர்களான சிவநாதன் கிஷோர், சதாசிவம் கனகரத்தினம் ஆகியோ ரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கேஸ்வரிம் தோல்வியடைந்துள்ளனர். பல புதிர்கள் இத்தேர்தலில் இருப்பது ஒரு மூன்றாம் நாடு ஒன்று இத்தேர்தலில் மறைமுகமாகச் செயற்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டுகிறது.

மூன்றாவது அரச குடும்பம் உருவாக்கம்
இலங்கையை ஆண்ட சேனநாயக்க குடும்பத்தை ஜே ஆர் ஜெயவர்த்தனவும் ஆர் பிரேமதாசவும் ஓரம் கட்டினர். பண்டாரநாயக்கா குடும்பத்தை ராஜபக்சே குடும்பத்தினர் செல்லாக் காசாக்கிவிட்டனர். இனி இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தப் போவது ராஜபக்ச குடும்பம். உலக நாடுகளிடையே மிக அதிக அதிகாரம் கொண்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரச பதவி இலங்கை குடியரசுத் தலைவர் பதவி.

தேர்ந்தெடுக்கப் பட்ட சர்வாதிகாரி

இலங்கை அரசத் தலைவர் பதவி என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்படும் சர்வாதிகாரிப் பதவி என்பது வெள்ளிடை மலை. ராஜபக்ச இப்போது அவரது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் பாராளமன்றத்தில் பெற்றால் ஒரு அசைக்க முடியாத சர்வாதிகாரியாகி விடுவார். அவரது கட்சி 225 ஆசனங்களைக் கொண்ட இலங்கைப் பாராளமன்றத்தில் 140 ஆசனங்களைப் பெறுவது உறுதி. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் 10 ஆசனங்களே தேவை. அவற்றை கட்சி தாவுபவர்கள் மூலமாகவோ அல்லது ஒரு கூட்டணி மூலமோ இலகுவாக ராஜபக்சவால பெறமுடியும். ராஜபக்சவிற்குத் தடையாக இருப்பது இலங்கை குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒருவர் இருமுறை மட்டுமே வரலாம் என்பதுதான். இந்தத் தடையை அவர் தனது பாராளமன்ற பலத்தின் மூலம் அரசியலமைப்பை திருத்தி நீக்கலாம்.

செல்லாக் காசாகிய இந்திய அடிவருடிகள்
பிரபாகரனுக்கு கடிதம் எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்ட ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலை கூட்டணி, ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியதாக கூறும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற இந்திய அடிவருடிக் கும்பல்களை மக்கள் நிராகரித்துள்ளனர். இந்தியச் வெளியுறவுத் துறை செயலரின் நிருபாமா ராவின் செல்லப் பிள்ளையானும் தோல்வி கண்டுள்ளார்.

மீண்டும் ஓரம் கட்டப்பட்ட தமிழர்கள்
தமிழர்கள் ஆதரவின்றி ஒரு சிங்களக் கட்சி பெரு வெற்றி ஈட்ட முடியும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழர் பிரச்சனை ஒரு பிரச்சனையாக சிங்களப் பகுதிகளில் தேர்தல் கூட்டங்களில் விவாதிக்கப்படவுமில்லை.

இந்திய எதிர்ப்பு தமிழர்களுக்குப் பரவியது.
வழமையாக இந்திய எதிர்ப்புப் பேச்சுக்கள் சிங்களப் பகுதிகளில் வாக்கு வேட்டைக்கு பெரிதும் உதவும். சகல கட்சிகளிலும் மத்திய நிலை அரசியல் வாதிகள் இந்திய எதிர்ப்பு உரைகளை நிறைய வழங்குவர். ஆனால் இம்முறைத் தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் அந்த மாதிரியான உரைகள் குறைந்து தமிழ்ப்பகுதிகளில் இந்தியாவிற்கு எதிரான நிறைய இடம்பெற்றன. சிங்கள மக்கள் நடாத்திய தமிழினக் கொலைக்கு இந்தியா கைகொடுத்து நின்றதன் விளைவு இது. தமிழர்களின் விரோதியான ராஜபக்சவின் கட்சி வென்றதற்கு இந்தியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

ஐயோ பாவம் ஜேவிபி
இடது சாரிச் சாயம் பூசிய இனவாதக் கட்சியான ஜேவிபி எனப்படும் ஜனதா விமுக்திப் பெரமுனை( மக்கள் விடுதலை முன்னணி) மோசமாக மண்கவ்வியுள்ளது. சென்ற தேர்தலில் தமிழர்கள் போராட்டத்தை ஒழிக்க ஒரு பலமிக்க பேரினவாதக் கூட்டணி சிங்களவர்கள் மத்தியில் உருவாக வேண்டும் என்பதற்காக சென்ற பாராளமன்றத் தேர்தலில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியையும் ஜேவிபியையும் அப்போது கொழும்பிற்கான இந்தியத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் இணைத்து வைத்ததாகக் கூறப் படுகிறது. அதனால் சென்ற தேர்தலில் ஜேவிபி கணிசமான் வெற்றியீட்டியது. பின்னர் ராஜபக்ச சகோதரர்களுடன் முரண்பட்டு வெளியேறிய ஜேவிபி இம்முறைத் தேர்தலில் சரத் பொன்சேக்காவுடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது.

பாராளமன்றத்தில் சரத் பொன்சேக்கா
தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியும் தற்போது சிறையில் இருப்பவருமன சரத் பொன்சேக்கா. இவர் பாராளமன்றம் செல்ல வாய்ப்புக் கிடைக்குமா என்பது கேள்விக் குறி!

மேலும் கேள்விக் குறியான தமிழர் எதிர்காலம்.
1970இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெரு வெற்றி பெறப் போவதை அறிந்த எஸ் ஜே வி செல்வநாயகம் இனிக் தமிழர்களைக் கடவுள்தான காப்பாற்ற வேண்டும் என்றார். மீண்டும் அக்கட்சி அதிக பலத்துடன் வந்திருப்பதைப் பார்த்தால் இனித் தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லியிருப்பாரோ? இனித் தமிழனை தமிழன் தான் காப்பாற்ற முடியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...