Sunday 26 December 2010

என்ன சமைப்பது என்று சொல்லும் உயர் தொழில் நுட்பக் குளீரூட்டி(High-tech Fridge


படத்தில் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.

தன்னுள் இருக்கும் உணவுப் பொருட்கள் முடிவடைந்தவுடன் புதிய உணவுகள் வாங்குவதற்கான கட்டளைகளை அனுப்பும். எஞ்சி இருக்கும் பொருட்களில் என்ன சமைகலாம என்றும் சொல்லும். இப்படி ஒரு நவீன உயர் தொழில் நுட்பக் குளிரூட்டை விரைவில் பயனுக்கு வரவிருக்கிறது.

அது எந்த நாட்டில் இருக்கிறதோ அதற்கு ஏற்ப சமையலுக்கான வழி முறைகளையும் (recipe) தரும்.

நாள்பட்ட உணவுப் பொருட்களை அது தானாகவே சிறுதுண்டுகளாக நறுக்கி வெளியேற்றி சுத்தப்படுத்தியும் விடும்.

'nano-articulated technology' இல் இது செயற்படுகிறது. Ultrasound-scanning technology built into the doorமூலம் அதனுள் வைக்கப்படும் பொருட்களையும் வெளியில் எடுக்கப் படும் பொருட்களயும் அது பதிவு செய்து வைத்திருக்கும்.

இத்துடன் இணைந்த உயர் தொழில் நுட்ப சமையலறை குப்பைத் தொட்டியுடன் இது தொடர்புகளை ஏற்படுத்தி எந்த எந்த உணவுகள் பிடிக்காமல் எறியப் படுகின்றன என்பதையும் பதிவு செய்து கொள்ளும். அதற்கேற்ப தன் கொள்வனவுக் கட்டளையும் மாற்றிக் கொள்ளும்.
University of Central Lancashire உம் supermarket Ocadoஉம் இணைந்து இந்தக் கருவிகளை உருவாக்கியுள்ளன.

சமையல் கலைப் புத்தகங்களின் படி சமைக்கத் தொடங்கினால் அதில் உள்ள பொருட்கள் வீட்டில் இருக்காது அல்லது அவை எவை என்று புரியாது. இந்த குளிரூட்டி தன்னுள் இருக்கும் பொருட்களுக்கு ஏற்ப சமையல் அறிவுரை தரும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...