Wednesday 1 December 2010

விக்கிலீக் - ராஜபக்ச போர் குற்றப் பொறுப்பாளி


விக்கிலீக் இணையத்தளம் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச போர்குற்றப் பொறுப்பாளிஎன்று கொழும்பிற்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிஷியா பியூட்டீனிஸ் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

It is "unsurprising" that Sri Lanka's government has not investigated the issue, noting "there are no examples we know of a regime undertaking wholesale investigations of its own troops or senior officials for war crimes while that regime or government remained in power."

அதிகாரத்தில் இருக்கும் அரசு தனது உயர் அதிகாரிகளையோ துருப்புக்களையோ பூரணமான போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்திய உதாரணங்கள் எதுவும் இல்லை என்பதை கருத்தில் கொள்ளுமிடத்து இலங்கை அரசு பிரச்சனைய(போர்குற்றத்தை) விசாரிக்கவில்லை என்பது ஆச்சரியப் படத்தக்க ஒன்றல்ல.

In Sri Lanka, this is further complicated by the fact that responsibility for many of the alleged crimes rests with the country's senior civilian and military leadership, including President Rajapakse and his brothers and opposition candidate General Fonseka.

இலங்கையில் இந்த நடந்ததாகக் கருதப்படும் போர்குற்றத்திற்கான பொறுப்பு அந்த நாட்டின் அதிபர் ராஜபக்கவும் அவரது சகோதரர்களும் எதிர்கட்சி வேட்பாளர் ஜெனரல் பொன்சேக்காவும் உட்பட பல உயர் இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் மீதும் இருப்பது மேலும் இதைச் சிக்கலாக்கியுள்ளது.

விக்கீலீக் இணையத்தளம் இப்போது தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அங்கு சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பிரித்தானிய சனல் -4 தொலைக்காட்சி இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிஷியா பியூட்டீனிஸ் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல் குறிப்பைப்பெற்று பகிரங்கப் படுத்தியுள்ளது. இதை இந்த இணைப்பில் காணலாம்: சனல்-4

அடி மேல் அடி வாங்கும் மஹிந்த
சனல்-4 இரண்டாவது நாளாக இலங்கை அரசின் கொடூரங்களை அம்பலப்படுத்தியுள்ளது. இன்று மஹிந்த ராஜபக்சவிற்கு இரு பெரும் இடிகள் பிரித்தானியாவில் விழுந்துள்ளது. அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்து மாணவர் ஒன்றியத்தில் நிகழ்த்த இருந்த உரை பிரித்தானியா வாழ் தமிழர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி இரத்து செய்யப்பட்டது. இந்த செய்தி வந்த சில நேரங்களின் பின் விக்கிலீக் இணையத் தளத்தின் தகவலை சனல்-4 வெளியிட்டுள்ளது. இது போதாது என்று பன்னாட்டு மன்னிப்புச் சபை பிரித்தானியா பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய மஹிந்த மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென்றது. இது மட்டுமா ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்டொப் ஹேன்ஸ் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட ஏனைய யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் - 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள ஆதாரங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் சேர்ந்து
என்கெங்கோ அடிவாங்குறாய்
ராஜபக்சனே

பொய்யே உரைத்திருப்பான்
பொய்யிலே வாழ்ந்திருப்பான்
தமிழர்க்குப் பகையாவான்
ராஜபக்சனே



மஹிதவை கௌரவப்படுத்தி தன்னைக் கேவலப் படுத்திய இந்தியா.
இந்தியப் பன்னாடைப் பாரளமன்ற உறுப்பினர்களால் பொன்னாடை போர்க்கப் பட்டு இந்தியப் பல்கலைக் கழகத்தால் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் மஹிந்த ராஜபக்ச. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கு சோனியாவின் இந்தியா அவரை சிறப்பு விருந்தினராக செங்கம்பளம் விரித்து அழைத்து தனது சொந்த நாடல்லாத இந்தியாவை கேவலப்படுத்தினார்.

2 comments:

Bibiliobibuli said...

Good Job brother. Thanks for your post. Keep up your good work for Eezham Tamils.

RAZEED said...

நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்தவற்றைவிட வேறு ஒன்றும் பெரிதாக ராஜபக்ச செய்துவிடவில்லை , நான் வாழ்வில் மிகமகிழ்த்த தருனங்களில் ஒன்று பிரபாகரனின் சடலத்தை கண்ட பொது...
இந்த அளவுக்கு கொடூரமும் வஞ்சமும் வரக்காரணம் உங்கள் விடுதலை போராட்டம் என்ற பேரில் உங்கள் விடுதலைக்காக, முஸ்லிம்களை உறவுகளாய் நண்பர்களாய் பழகி இருந்தும் இரவோடு இரவாக உடுத்த உடையை மட்டும் சொத்தாக சீர் செய்து அனுப்பிய தமிழ் பேசும் ஹிந்து சமுகம் ராஜபக்சையை தமிழனின் பகைவனாக கருதாமல் நீங்கள் முஸ்லிம்களுக்கு புரிந்த பாவத்திற்கு உங்கள் சமுகத்திற்கு பாவ விமோசனம் அளிக்க வந்தவனாய் கருதுங்கோல்... அனாலும் முஸ்லிம்களைப் போல் நீங்கள் முட்டாள்கள் அல்ல,
நீங்கள் அகதி என்றாலும் பணக்கார அகதிகள் என்று முதல் நாள் வங்கிக்கணக்கு சொல்லிவிட்டது,
ராஜபக்ச அழித்தது ஆயுதம் எந்தியவனைத்தான், அனால் நீங்கள் விரட்டியதோ அமைதியாய் வாழ்ந்த அப்பாவி குடும்பங்களையும், வாப்பா தொழுதுவிட்டு வீடு வருவார் ஒன்றாய் உணவு உண்ணலாம் என்று எதிர்பாத்திருந்த குழந்தைக்குத் தெரியாது நீங்கள் முதிகில் சுட்டு முற்சை ஆகிவிட்டார்கள் என்று.
என்றோ ஒரு பெண் இந்த ஆங்கிலயரிடம் இருந்து சிங்கள கொணைக்காக்க தன் குடியை அழித்து தானும் அழிந்தால் அவளுக்காக இன்றும் எம்மை மதிக்கும் சிங்களவனுக்கு முன்னால் கூடஇருந்து ஒரு மொழி பேசி ஒன்றாய் வாழ்ந்து எம் குடி கெடுத்து விடுதலை தேடிய தமிழ் பேசும் ஹிந்து தமிழர்களை ஆதரிக்க இந்த கல் நெஞ்சம் தயாரில்லை.....
மன்னியும்....மன்னியும்....மன்னியும்....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...