Sunday 19 December 2010

விக்கிலீக் ஜுலியான் அசங்கேமீது வழக்குத் தாக்கல் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா.




குழலூதி
விக்கிலீக் இணையத்தளம் மீது சுமத்தப்படும் முதற்பழி Whistleblower - குழலூதி என்பதாகும். சில சொற்கள் முதலில் ஒரு கருத்துடன் உருவாகி பின்னர் பல மாற்றங்களை அடையும். குழலூதுதல் முதலில் பிரித்தானியக் காவற்துறையில் முதலில் உருவானது. பிரித்தானியக் காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் எங்காவது ஒரு குற்றச் செயல் நடந்தால் தனது ஊதுகுழலை உரக்க ஊதி அங்கு பொதுமக்களையும் மற்றக் காவல் துறையினரையும் கூடச் செய்து குற்றச் செயலை தடுக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவார். இதனால் குழலூதுதல் என்பது குற்றத்தை பகிரங்கப்படுத்தல் என்று முதலில் பொருள்பட்டது. பின்னர் பாடசாலைகளில் யாராவது மாணவர்கள் குளப்படி செய்யும் போது ஆசிரியர்களை அந்த இடத்துக்கு அழைப்பவர்களை குழலூதிகள் என்பர். பின்னர் பணிமனைகளில் யாராவது பிழை விடும்போது அவர்களை மேலிடத்திற்கு காட்டிக் கொடுப்பவர்களை குழலூதிகள் என்று அழைக்கத் தொடங்கினர். பிறகு நாட்டில் வரி ஏய்ப்பு செய்பவர்களை காட்டிக் கொடுப்பவர்களையும் குழலூதிகள் என்பர். அமெரிக்காவில் குழலூதிக்ளைப் பாதுகாக்க சட்டங்களும் இயற்றப்பட்டன. இபோது குழலூதி என்றால் போட்டுக் கொடுப்பவர் என்று அர்த்தம். எல்லப்பத்திரிகைகளும் விக்கிலீக்கையும் அதன் நிறுவனரையும் குழலூதி என்றே குறிப்பிடுகின்றன.

பின் லாடன்
விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கேயை சில அமெரிக்கர்கள் பின் லாடனுக்கு ஒப்பிட்டனர்.

பெண்களைக் கீழ்த்தரமாக எண்ணுபவர்
ஜுலியான் அசங்கே சுவீடனில் இரு பெண்களுடன் மேற்கொண்ட உடலுறவை அமெரிக்கவிலோ அல்லது பிரித்தானியாவிலோ ஒரு கற்பழிப்புக் குற்றமாகக் கருதமுடியாது. அதனால் ஜுலியான் அசங்கேயை ஒரு கற்பழிப்புக் காரர் என குற்றச் சுமத்த முடியாமையால் அவரை ஒரு பெண்களைக் கீழ்த்தரமாக எண்ணுபவர் எனச் சித்தரிக்க முயன்றனர். அதில் வெற்றி கிடைக்கவில்லை. அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகை நடாத்திய 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதருக்கான கருத்துக் கணிப்பில் விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கே மற்ற எல்லாரையும்விட அதிக வாக்குக்களைப் பெற்றார். ஆனால் அமெரிக்க ரைம்ஸ் சஞ்சிகை fஏஸ்புக் நிறுவனரை 2010-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்தது.

மரண தண்டனை வழங்க வேண்டும்
விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கேயிற்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று சில அமெரிக்க அரசியல் வாதிகள் கூச்சலிட்டனர்.

அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர்
அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடன் அவர்கள் விக்கிலீக் நிறுவனர் ஜுலியான் அசங்கேயை இப்படிக் குறிப்பிடுகிறார்:- "I would argue that it's closer to being high-tech terrorist. அவரை கிட்டத்தட்ட ஒரு உயர் தொழில் நுட்ப பயங்கரவாதி என வாதிடுவேன் என்கிறார் அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடன்.

குற்றம் சாட்ட முடியாமல் அமெரிக்க திணறுகிறது.
விக்கிலீக்கினால் வெளிவிடப்படும் தகவல்கள் அமெரிக்கப் படைத்துறையைச் சேர்ந்த பிரட்லி மன்னிங் (Bradley Manning) என்பவரால்தான் பெறப்பட்டு விக்கிலீக்கிற்கு வழங்கப்பட்டது. இதில் பிரட்லி மன்னிங் (Bradley Manning)தான் தகவல் திருடியவராகக் கருதப்படவேண்டியவர். அவற்றை பிரசுரித்த குற்றம் தான் விக்கிலீக்கிற்க்கும் அதன் நிறுவனர் ஜுலியான் அசங்கே புரிந்ததாகக் குற்றம் சாட்டப்படமுடியும். அமெரிக்க அரச அல்லது படைத்துறை இரகசியங்களை திருடியவர்மீது குற்றம் சுமத்தப் பட்டு தண்டிப்பது அமெரிக்காவில் நடந்துள்ளது. அந்த இரகசியங்களை பிரசுரித்தவர் மீது எப்படி குற்றம் சாட்டுவது என்று அமெரிக்க இதுவரை தேடிக்கொண்டிருந்தது. கடைசியில் அமெரிக்க மக்களவை ஆய்வாளர்கள் ஒற்றாடல் சட்டத்தின் கீழ் ஜுலியான் அசங்கேயை மாட்டக்கூடிய ஒரு சட்டப் பிரிவை கண்டு பிடித்துள்ளனர். ஆனால் ஒரு பிரசுரிப்பாளரை அந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் இதற்கும் முன் நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை. இதனால் அமெரிக்க சட்டவாளர்கள் திணறுகின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...