Monday, 13 December 2010

கலைஞர் ஐயா ஒரு கவிதையாவது எழுதுங்கள்.


இலங்கையில் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிரான போரில் அப்பவித் தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்கள் இழைக்கப் பட்டதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் சனல்-4 தொலைக்காட்சி தொடர்ந்து பல ஆதாரங்களை வெளிவிட்டு வருகிறது. தமிழினத்தின் தலைவனாக உங்களை நீங்களே கருதிக்கொள்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்கள் குடும்பத்திற்கு சொந்தமான தொலைக்காட்சிகளில் இந்த போர்குற்றம் என்ற வார்த்தையையே பாவிப்பதில்லையே. இது உங்கள் டில்லி எசமானி அம்மாவிற்கு பிடிக்கது என்று நீங்கள் இலங்கையில் நடந்த போர்குற்றம் பற்றி வாயே திறப்பதில்லையா? அல்லது அந்த எசமானி அம்மாவே போர் குற்றவாளியா?

தமிழ்ப் பெண்கள் எவ்வளவு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று உலகமே ஆத்திரம் கொள்கிறது. கலைஞர் ஐயா நீங்கள் ராசாவின் பிரச்சனையில் மூழ்கி இருக்கிறீர்களா?

இலங்கையின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப் படமாட்டாது என்ற செய்தி வந்த சில மணித்தியாலங்களுக்குள் அதை நீங்கள் கண்டித்தீர்கள். இலங்கையின் தேசிய கீதத்தையோ தேசியக் கொடியையோ அரசியல் அமைப்பையோ தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது எந்த மொழியில் பாடப்பட்டாலும் நாங்கள் கவலைப்படவில்லை. அதை மதிக்கப் போவதுமில்லை. சனல் - 4 தொலைக்காட்சி காணொளி ஒளிபரப்பியதையும் விக்கிலீக் இணையத் தளம் இலங்கையில் நடந்த போர்குற்றத்திற்கு இலங்கை ஆட்சியாளர்கள் பொறுப்பு என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அறிக்கை சமர்ப்பித்ததையும் தொடர்ந்து 17 அமெரிக்க மூதவை உறுப்பினர்கள் இலங்கயில் நடந்த போர்குற்றம் தொடர்பாக ஒரு சுயாதீன பன்னாட்டு விசாரணை தேவை என்று ஹிலரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். உங்கள் கட்சியிலும் எத்தனையோ சட்ட சபை உறுப்பினர்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் மந்திரி சபை உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்களில் யாராவது இப்படி ஒரு கடிதத்தை யாருக்காவது எழுதினார்களா? அல்லது உங்களுக்குத்தான் கடிதம் எழுதுவது சிறந்த பொழுது போக்கு தானே! நீங்களாவது ஒரு கடிதம் எழுதலாமே.

இலங்கை சென்று வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தான் இலங்கையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியதாக உங்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால் சிவசங்கர மேனன் இனப்பிரச்சனை தொடர்பாக எந்த அழுத்தமும் இலங்கைமீது பிரயோகிக்கப் படமாட்டாது என்று சொல்கிறார் இருவருமாகச் சேர்ந்து உங்களை ஏமாற்றுகிறார்களா? அல்லது அவர்களுடன் நீங்களும் சேர்ந்து எங்கள் எல்லோரையும் ஏமாற்றுகிறீர்களா?

இலங்கியின் போர்குற்றம் தொடர்பாக உங்கள் டில்லி எசமானர்கள் நிறை ஆதாரங்களை வைத்திருக்கிறார்களாம்.அவற்றை வைத்து அவர்கள் இலங்கையை மிரட்டினார்களாம். அதற்குப் பதிலாக கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் போர்குற்றத்தில் இந்தியாவிற்கு உள்ள பங்கு தொடர்பான தொலைபேசி உரையாடல்களை தான வெளியிடுவதாக பதிலுக்கு மிரட்டினார்களாம்.

உங்கள் நாட்டிலேயே இப்படி எழுதுகிறார்கள்:
  • போர் உக்கிரமாக நடைபெற்ற போது ஏற்பட்ட உண்மையான இழப்புக்களை உறுப்படுத்தும் வான்வழியே எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை எடுக்கும் அருமையான வாய்ப்பு இந்திய உளவு அமைப்பான “றோ”வுக்குக் கிடைத்தது. தமிழ் ஆயுதக் குழுக்களின் மறைவுக்குப் பின்னானதொரு சூழலில் கொழும்பு மீது காத்திரமான அழுத்தத்தினைப் பிரயோகித்து அதனை அடிபணிய வைப்பதற்கான ஓர் ஆயுதமாகவே புதுடில்லியும் “றோ”வும் போர்க்குற்ற ஆதாரங்களைப் பார்த்தன.
  • ஆனால், பாவம் இந்தியா கொழும்பு இதுபோன்ற அழுத்தங்களுக்கு அடிபணியாது நேரெதிர் மாறான நிலைப்பாட்டினை எடுத்துச் செயற்பட்டது. புதுடில்லியின் இந்தக் குற்றச்சாட்டினால் கோபமடைந்த கோத்தபாய, கொழும்பு போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால் அதற்கு புதுடில்லியின் தென்தொகுதியும்(South Bloc) உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தான் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆள்களுடனான தொடர்பாடல் பதிவுகளைக் கையிலெடுத்தார். நீ உனது ஆதாரங்களை வெளியிட்டால் நான் இந்த உரையாடல் பதிவை வெளியிட்டு போர்குற்றத்தில் உனது பங்கை வெளிவிடுவேன் என்று பதில் மிரட்டல் கொழும்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இது டில்லியின் வாயை முழுமையாக அடைத்தது. இதனால் குழப்பமடைந்த புதுடில்லி துரிதமாகவும் நிதானமாகவும் செயற்பட்டது. மே 2009இல் ஐ.நாவினது மனித உரிமைச் சபையில் இலங்கை மீது குற்றஞ்சாட்டிக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.
நீங்கள் பங்காளராக இருந்த சோனியாவின் ஆட்சியே இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்க உடந்தையா? தோழர் சீமான் வெளியில் வந்துவிட்டார் இனி அவர் இதை வைத்து உங்களை வாங்கு வாங்கென்று வாங்கப்போகிறார்.

எல்லாவற்றையும் விடுங்கள் உங்கள் தமிழ்நாட்டு மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் கடற்படையின் 60-ம் ஆண்டு விழாவில் உங்கள் மைய அரசின் கடற்படைக் கப்பல்களும் பங்குபற்றினவே.

தேர்தலும் வரப்போகிறது யாரோடு கூட்டணி என்ற நிச்சயமும் இல்லை. கொடூரமாகக் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒரு கவிதையாவது எழுதித் தப்பித்துக் கொள்ளுங்கள்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...