Thursday 18 November 2010

இருதய நோய்களுக்கு புரட்சிகரமான புதிய மாத்திரை


இருதய நோய்களைக் குறைக்கக் கூடிய புதிய மாத்திரைகளை ஹாவார்ட் பல்கலைக்கழகத்தினர் உருவாக்கியுள்ளனர். இம்மாத்திரைகள் எமது இரத்தத்தில் உள்ள கூடாத கொழுப்பாகிய LDL cholesterolஐஅகற்றிவிடும்.
எமது இரத்தத்தில் கொழுப்புக்கள் அவசியமானவை. அது அளவோடு இருக்க வேண்டும். LDL cholesterol அதிகமானால் அது இரத்தக் குழாய்களை சிறுக்கச் செய்யும் அதனால் இரத்தத்தை உடல் முழுக்க கொண்டு செல்ல இருதயம் அதிக அழுத்தத்துடன் இரதத்தை செலுத்த வேண்டும். இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மிக அதிக LDL cholesterol இரத்தக் குழாய்களை முழுதாக அடைத்து விடுவதும் உண்டு. அப்போது மாரடைப்பு உண்டாகிறது.

புதிதாக உருவாக்கியுள்ள மாத்திரைகள் இரத்ததில் HDL cholesterol எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்து LDL cholesterol எனப்படும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பை ஈரலுக்கு எடுத்துச் சென்று அங்கு அதைக் கரைத்து உடலில் இருந்து வெளியேற்றி விடும். பல நாடுகளில் இருதய நோயால் இறப்பவர்கள் தொகை மற்றக் காரணிகளால் இறப்பவர்களிலும் பார்க்க மிக அதிகம். பிரித்தானியாவில் 26 இலட்சம் மக்கள் இருத நோயால் அவலப் படுகிறார்கள். இங்கு ஆண்டு தோறும் 94000 மக்கள் இருதய நோயால் இறக்கின்றனர். புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மாத்திரகள் கொழுப்பை அரை பங்கு குறைக்க வல்லவை என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...