Friday 12 November 2010

குமரியின் கண்டம் - பிணை எடுத்த முத்தங்கள்


வானம் எல்லையல்ல

நிலவை மிதித்தாயிற்று

செவ்வாயைப் பார்த்தாயிற்று

பிரபஞ்ச ஓரத்தை நோட்டம் விட்டாயிற்று

வானம் எல்லையல்ல


அறிஞர்கள்

உனக்கு தெரிந்த ஓன்றை

தெரியாதது போல் குழப்பிவிடுபவன்

தத்துவஞானி

உன்னால் புரியக்கூடிய ஒன்றை

புரியாதபடி விளக்குபவன்

புத்திஜீவி

உனக்குத் தேவையில்லாததை

தேவையானதாக்குபவன்

விஞ்ஞானி


அலைகிறேன்

அலைகடல் நடுவினிலே

திசையறி கருவியில்லா மாலுமி

சங்கீத கதிரைப் போட்டியில்

காதற்ற போட்டியாளன்

பட்டிமன்றத்தில்

ஊமைப் பேச்சாளன்


குமரியின் கண்டம்

குமரிக் கண்டத்தை

கடல் கொண்டதாம்

என் குமரியின்

கண்டத்தை

எது கொள்ளும்.


பிணை எடுத்த முத்தங்கள்

கைது செய்தன பார்வைகள்

சிறைவத்தன நினைப்புக்கள்

பிணை எடுத்தன முத்தங்கள்

1 comment:

Anonymous said...

உன்னால் புரியக்கூடிய ஒன்றை

புரியாதபடி விளக்குபவன்

புத்திஜீவி

உனக்குத் தேவையில்லாததை

தேவையானதாக்குபவன்

விஞ்ஞானி

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...