Wednesday 3 November 2010

அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி சலுகையையும் இலங்கை இழக்கும் அபாயம்.


அமெரிக்க தொழில் அமைப்பு(American labour organization) அமெரிக்க மூதவைக்கு இலங்கையில் தொழிலாளர்கள் உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அம் மனு ஏற்றுக் கொள்ளப் படுமானால் இலங்கைக்கான அமெரிக்க வரிச் சலுகை இரத்துச் செய்யப்படலாம் என்று நம்பப்பட்டது.

இலங்கை ஏற்கனவே பன்னாட்டு உடன் படிக்கைகளுக்கு ஏற்ப நடக்காத படியால் ஐரோப்பிய ஒன்றியம் தனது வர்த்தகச் சலுகையை இரத்துச் செய்தது. பன்னாட்டு உடன் படிக்கைகளில் 27இல் 3 ஐ இலங்கை மீறியதாக ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்து இலங்கைக்கான தனது வர்த்தகச் சலுகையை (GSP+) இரத்துச் செய்தது.

அமெரிக்க தொழில் அமைப்பு(American labour organization) அமெரிக்க மூதவைக்கு இலங்கையில் தொழிலாளர்கள் உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக பல வாதப் பிரதி வாதங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. இலங்கையின் அரசு சார்பு தொழிற் சங்கங்கள் இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் பேணப்படுவதாகவும் அரசு சார்பற்ற தொழிற் சங்கங்கள் இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதாகவும் மனுக்கள் தாக்கல் செய்தன.

இப்போது பேரிடி
The International Trade Union Confederation இப்போது ஒரு இலங்கையின் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. International Labour Organization இன் முக்கிய எட்டு உடன்படிக்கைகளில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள போதிலும் அது இலங்கையில் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை என்று The International Trade Union Confederation தனது ஒன்பது பக்க அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த அறிக்கை அமெரிக்க வர்த்தகச் சலுகை நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

இலங்கையில் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமைகள் இருகின்ற போதிலும் பல ஏற்றுமதி சார் தொழில்துறைகளில் தொழிற் சங்கங்கள் அமைக்க அனுமதிக்காமல் வெறும் தொழிலாளர்கள் சபைகள் மட்டும் அமைக்க அனுமதிக்கப் படுகிறது.

இலங்கயில் 27 வருடங்களாக செயற்பட்டு வந்த ஒரு நிறுவனம் அண்மையில் மூடப்பட்ட போது அதன் 2500 ஊழியர்களுக்கு எந்தவிதமான நட்ட ஈடுகளும் வழங்கப் படவில்லை என்பதை The International Trade Union Confederation தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வேலை நிறுத்த உரிமைகள் இருந்த போது இலங்கைக் குடியரசுத் தலைவர் ஒரு வர்த்தமானி அறிக்கை மூலம் குறிப்பிட்ட தொழிலை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்து எந்த வேலை நிறுத்தத்தையும் சட்ட விரோதமானதாக்க முடியும். இலங்கையில் அப்படி பிரகடனம் செய்யப்பட்ட பல தொழில்கள் International Labour Organization இன் வரைவிலக்கணப்படி அத்தியாவசிய சேவையாக கருதப்பட முடியாது என்றும் The International Trade Union Confederation தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரச சேவையில் ஆண் பெண் பாகுபாடு காட்ட முடியாத படி சட்டங்கள் இருந்த போதிலும் தனியார் சேவைகளில் அதற்குரிய சட்டங்கள் இல்லை.

இலங்கைக்கான அமெரிக்க வர்த்தகச் சலுகைக்கு The International Trade Union Confederationயின் அறிக்கை பேரிடியாக அமையும்.

2 comments:

YOGA.S.Fr said...

இதனால் ஒன்றும் குடி "முழுகிப்"போய் விடாது!சீனத் தொழிலாளர்களும்,சீன இயந்திர சாதனங்களும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்த அனுமதி உண்டு!ஆனால் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளில் இலங்கைத் தொழிலாளர்களும்,வளங்களும் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதிலிருந்தே இலங்கையின் இரட்டை முகம் தெரிய வேண்டும்!இலங்கைக்கு வழங்கப்படும் அமெரிக்க வரிச்சலுகையினால் சீனாவும் பயன் பெற முடியக்கூடும்!சீனா பயன் பெறுவது அமேரிக்காவுக்கு இனிப்பானதல்ல!!!!!!!!!!

ஜோதிஜி said...

முக்கியமான விசயத்தை இவ்வளவு அநியாயமாக சுருக்கி எழுதி இருக்கீங்களே?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...