Friday 29 October 2010

அற்புதக் காட்சி.: ஆபிரிக்க யானைக்கு அபயமளிக்காத திருமால்!!!!


கஜேந்திரன் என்ற யானையின் கால் முதலையின் வாயில் அகப்பட்ட போது திருமால் வந்து காப்பாற்றினாராம். இதை இப்படிக் கூறுவார்கள்:
  • விசிஷ்டாதவைத்தின் மைய கருத்தே பூரண சரணாகதிதான் அந்த சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம். ஜீவாதமாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் "ஆதி மூலமே" என்று அலறிய அடுத்த கணமே வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்து கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்த பகதவத்சலன். ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இந்த கஜேந்திர மோக்ஷம்.
ஆபிரிக்காவில் ஒரு யானைக் குட்டி தண்ணீர் குடிக்கப் போன இடத்தில் அதன் துதிக்கையை ஒரு முதலை கவ்விக் கொண்டது. யானைக் குட்டி தனது நாலு கால்களையும் நன்கு பரப்பி போராடி தனது துதிக்கையை இழுத்தது. முதலையும் தனது பசிக்கு நல்ல காத்திரமான உணவு கிடைத்தது என்று நன்கு கவ்வி இழுத்தது. இரண்டுக்கும் இடையில் ஒரு கயிறு இழுத்தல் போட்டியே நடந்தது. துதிக்கையும் நீண்டு கொண்டு போனது. தென் ஆபிரிக்கவில் உள்ள Kruger National Park இல் நடந்தது. இதை Johhan Opperman தனது ஒளிப்பதிவுக் கருவியில் பதிந்து கொண்டார். யானைக் குட்டி ஆதி மூலமே என்று குரல் கொடுக்காததால் திருமால் சக்கர ஆயுதத்துடன் வரவில்லை. யானைக் குட்டியின் அலறல் கேட்டு மற்ற யானைகள் அங்கு வந்து தமது உரத்த பிளிறல்கள் மூலமும் கால்களால் நிலத்தில் உதைத்து எழுப்பிய அதிர்வின் மூலமும் முதலையை பயங்காட்டி விரட்டி விட்டன. பின்னர் யானைக் குட்டியை சூழ்ந்து அதன் உடல் நிலையை சரியென்று உறுதி செய்த பின் அங்கிருந்து பத்திரமாக அந்தக் குட்டியை அழைத்துச் சென்றன.

கஜேந்திரன் ஆயிரம் ஆண்டுகள் முதலையுடன் போராடினானாம். இந்திய யானைகள் கூட ஒன்றுக்கு ஒன்று உதவ மாட்டாதன போலும்.

1 comment:

Anonymous said...

ஆபிரிக்க யானை சாதியில் குறைந்த யானை. ஆபிரிக்க யானைக்கு சமஸ்கிருதம் தெரியாது. திருமால் எப்படி அதற்கு உதவுவார். அபலைகளுக்கு உதவுவதாயின் உயிருடன் ஈழத்தில் கொடியோர்களால் புதைக்கப்பட அப்பாவிகளுக்கு உதவி இருக்க வேண்டும். சிங்களவர்களின் அத்தனை கொடுஞ்செயல்களுக்கும் நாராயணனும் சிவசங்கரனும் உதவினார்களே!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...