Tuesday 26 October 2010

காலை உணவைத் தவிர்த்தால் பல நோய்கள்.


சேமிப்பது நல்ல பழக்கம் என்பது எமது உடலுக்கும் தெரியும். சேமித்து வைத்து பற்றாக்குறை ஏற்படும் போது அதை உபயோகிக்க எமது உடலும் பழகிக் கொள்கிறது. காலை உணவை நாம் அடிக்கடி தவிர்த்தால் எமது உடல் உணவு சேமித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. எமது உடல் உணவை கொழுப்பாகவே சேமித்து வைக்கிறது.

அடிக்கடி காலை உணவைத் தவிர்த்தால் உயிராபத்து விளைவிக்கக் கூடிய இருதய நோய்களுக்கு வழிவகுக்கும் என Clinical Journal என்னும் அமெரிக்க சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவைத் தவிர்த்தால் உடலின் கொழுப்புச் சேமிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறதாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ரஸ்மேனியாப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானிகள் கடந்த இருபது வருடங்களாக 2184 பேரில் நடாத்திய ஆய்விலிருந்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

கால உணவைத் தவிர்த்தலால் ஏற்படுபவை:

  • உடல் பருமன் அதிகரித்தல்.ட
  • வயிற்றைச் சுற்றிவர கொழுப்புச் சேமித்து வைக்கப்படல்.
  • இரத்தத்தில் கொலஸ்ட்ரல் அதிகரிப்பு.
  • இரத்தத்தில் இன்சுலீன் அதிகரிப்பு.
இவையாவும் இருதய நோய்களையும் சர்க்கரை வியாதியையும் கொண்டு வரும்.

1 comment:

Anonymous said...

very good information... bez.sometime people don't take morning food..particularly wen they are at home on holidays...this infn. definitely will help them to be aware of it.
even i once used to avoid taking anything in the morning..

thank you

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...