Friday, 2 July 2010

போர்க்குற்றம்: ஐநா ஆலோசனை சபை ஒரு மோசடியா?


இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலர் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை பல இழுத்தடிப்பின் பின்னர் அமைத்துள்ளார். இதனால் இலங்கை அரசும் சிங்களப் பேரினவாதிகளும் கொதித்து எழுகிறார்கள் அல்லது இந்த ஆலோசனைச் சபையால் எந்தப் பயனும் இல்லை என்று அறிந்தும் கொதித்து எழுவது போல் நடிக்கிறார்கள். அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இந்த ஆலோசனைச் சபையை வரவேற்றன. ரஷ்யா இந்த ஆலோசனைச் சபையை எதிர்த்துள்ளது. ரஷ்ய எதிர்ப்பின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது.

இந்த குழு அமைப்பை சிங்களப் பேரினவாதியான விமல் வீரவன்ச என்னும் இலங்கை அரசின் அமைச்சர் கடுமையாக எதிர்த்ததுடன் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியகக் கட்டிடத்தை மக்கள் முற்றுகை செய்து அங்கு வேலை செய்பவர்களை ஐநா தனது ஆலோசனைச் சபையைக் கலைக்கும்வரை தடுத்து வைத்திருக்க வேண்டும் என்று முழங்கியுள்ளார். இதை இலங்கை அரசு பகிரங்கமாக இது வரை கண்டிக்கவில்லை. இந்தச் செய்தி கொழும்புப் பத்திரிகைகளில் வெளிவந்த போது அதற்கு பின்னூட்டம் எழுதியவர்களில் பெரும்பாலோனோர் விமல் விரவன்சவின் கூற்றைக் கண்டித்துள்ளனர். ஆனால் இது பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரிடம் இன்னர் சிற்றி பிரெஸ் என்னும் ஐநா ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது பத்திரிகைகளால் தவறாகப் பிரசுரித்திருக்களாம அல்லது ஒரு காந்தீய வழி ஒத்துழையாமையாக இருக்கலாம் என்றும் அதற்கு இலங்கையைப் பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். எனக்குத் தெரிந்தவரை காந்தீயம் என்பது ஒரு காந்தீய வழிப்போராளி தன்னைத் தானே இம்சைக்கு உள்ளாக்குவார் அவர் மற்றவர்களை ஒரு போதும் பணயக் கைதிகளாக்க மாட்டார். இந்த ஐநாவின் பேச்சாளர் ஒரு இலங்கை அரசின் பேச்சாளர் போன் ஏன் செயற்படுகிறார்.

ஐநா ஆலோசனை தொடர்பான சந்தேகங்கள்
பான் கீ மூன் ஒரு ஆலோசனைச் சபையைத் தான் அமைத்துள்ளார் விசாரனைச் சபையை அல்ல. அதற்கு வழங்கப் பட்டுள்ள நான்கு மாதங்கள் இலங்கைப் போர் குற்றம் தொடர்பாக செவ்வனவே உண்மைகளைக் கண்டறியப் போதுமானவை அல்ல என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆலோசனை சபை நாலு மாதங்களின் பின்னர் எந்த அறிக்கையும் சமர்பிக்காமல் விடலாம் என்று ஐநா தெரிவித்தது ஏன்? இது இறுதியில் ஒரு வெற்று வேட்டாக முடியுமா?

இந்த ஆலோசனைச் சபையைத் தொடர்ந்து எடுக்கப் படவிருக்கும் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்றுபற்றி இதுவரை எதுவும் கூறப்படவில்லை.

இந்த ஆலோசனை சபை தொடர்பாக தமிழர்களுக்கான மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய பிரான்ஸ்சை சேர்ந்த கிருபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து: இந்த ஆலோசனைச் சபை துருப்புச் சீட்டுக்கள் இருக்க மற்றச் சீட்டுக்கள் விளையாடி வெற்றி பெற்றது போல் அமையலாம் (புறக் கம்மாரிஸ்). அதாவது முடிவில் இலங்கை அரசிற்குப் பாராட்டுத் தெரிவித்து விட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்தார்கள் என்று தனது முடிவைத் தெரிவிக்கலாம்.

தமிழர்களுக்காக செயற்படும் பல அமைப்புக்கள் இலங்கையில் 1956 இல் இருந்து இனக் கொலை நடக்கிறது என்று குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கான ஆதாரங்களையும் அவை முன்வைக்கத் தயாராக இருக்கின்றன. ஆனால் இதற்கு பன்னாட்டு அமைப்புக்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. தமிழர்கள் தாமாக வே இலங்கை அரசின் மீது போர்குற்ற வழக்குத் தொடரும் சாத்தியம் உண்டு. அதிலிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் அதை திசை திருப்பவும் பன்னாட்டு மட்டத்தில் நடக்கும் சதிதான் போர் குற்றம் தொடர்பான சர்ச்சை என்று பல தமிழர்கள் கருதுகிறார்கள்.

பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டபோது தனது வேட்பாளரைப் போட்டியில் இருந்து விலகச்செய்து அவரது வெற்றிக்கு இலங்கை பெரும் பங்காற்றியது. பான் கீ மூன் எப்போதும் இலங்கை விவகாரத்தில் பக்கச் சார்பற்றாவராக நடந்து கொண்டதில்லை. அவரது நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான விஜய் நம்பியார் ஒரு தமிழின விரோதி. இந்நிலையில் பான் கீ மூனின் நிர்வாகத்தில் தமிழர்களுக்கு நியாயமான எதுவும் கிடைக்காது.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...