Thursday, 17 June 2010

தமிழர் தாயகத்தை துண்டாட இந்தியா உதவுகிறது.


ராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தம் பல உயிர்ப்பலிகளுடன் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு சாதகமான எந்த அம்சமும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இந்த ஒப்பந்தம் செய்யப் படும்போதே அப்படிப்பட்ட ஒரு புரிந்துணர்வுடந்தான் செய்யப்பட்டது. வடக்குக் கிழக்கை இலங்கை பிரித்தபோது இந்தியா அதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

2002 விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப் பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருந்த உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இலங்கைப் படைகள் வெளியேறத் தயாராக இருந்த வேளையில் இந்தியா தனதுசதீஸ் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பி அதைத் தடுத்தது. இந்தியா தமிழர்களுக்கு செய்த கணக்கில்லத் துரோகங்களில் அதுவும் ஒன்று.

2009 மே மாதம் முடிவடைந்த போருக்குப் பின் இந்தியாவும் இலங்கையும் தமது தமிழர்களுக்கு எதிரான ஒரு மௌனப் போரை நடத்தி வருகின்றன. இதன் முக்கிய நோக்கம் தமிழ்த் தேசியப் போராட்டம் மீண்டும் தலை தூக்காமல் அடக்குவதாகும். இதற்காக தமிழர்கள் தங்கள் தாயகம் என்று சொல்லப் படும் பிரதேசங்களை துண்டாடும் விதமாக தமிழர் பிரதேசங்களுக்கு இடையில் சிங்களவர்களைக் குடியேற்றுவதாகும். அதற்கு உதவி செய்யும் விதத்திலேயே இலங்கையும் இந்தியாவும் இலங்கைக் குடியரசுத் தலைவர் சென்ற வாரம் செய்த இந்தியப் பயணத்தின் போது இரு நாடுகளும் ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சம்பூரின் இந்தியா மின் உற்பத்தி நிலையம் அமைக்கவென அங்கு வாழ்ந்த தமிழர்களை திரைமறைவில் இந்தியா உதவிசெய்ய்ய இலங்கைப் படையினர் அடித்து விரட்டினர். அவர்கள் நான்கு வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாக அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.

வன்னியில் வளம் மிக்க பிரதேசங்களைப் உயர் பாதுகாப்பு வலயம் என்று பெயரிட்டு அங்கு தமிழர்களை மீளக் குடியேற விடாமல் இலங்கை அரசு தடுத்துள்ளது.

`கிழக்கின் உதயம்' என்று பிரகடனப்படுத்திவிட்டு தென்னிலங்கை மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையூடாக கிழக்கிலுள்ள வளங்களை சூறையாடுவதற்கான வேலைத்திட்டமொன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பிரதான சிங்கள எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியே குற்றம் சாட்சியது.

மூதூர் கிழக்கு, சம்பூர் பிரதேசக்களை அண்மித்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முன்னோடி நடவடிக்கையாக புனித பூமி பிரதேசம் என்ற போர்வையில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் பலவற்றை புதிதுபுதிதாக நிர்மாணித்து வருகின்றது.

மூதூர் கிழக்கு, சம்பூர், சேனையூர், சீனன்வெளி, கட்டைபறிச்சான், மூதூர் மூன்றாம் கட்டை மலை போன்ற பகுதிகளில் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்பட்டு சுற்றிவர பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள பல தமிழ்க் கிராமங்கள் இன்று பெரும்பான்மையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிவிட்டனர்.

கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்கள் பலவற்றில் தொல்லியல் ஆய்வுகள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த திணிப்பு ஒன்றுக்கும் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் சிங்கள மக்களின் இந்திய விரோத மனோபாவத்தை அறிந்திருந்தும் அவர்களின் சாதி வெறி தமிழர்கள் ஆளக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக வைத்திருக்கிறது. நீண்ட கால அடிப்படையில் நோக்குமிடத்து இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவிக்குத்தான் ஆப்பு வைக்கிறார்கள் என்பது கண்கூடு.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...