Wednesday 9 June 2010

தமிழர்கள் மீண்டும் ஆயுதமேந்திப் போராடுவார்களாம் - பிபிசியின் சதியா?


இலங்கை தொடர்பாக மேலெழுந்தவாரியாகவும் இலங்கை அரசு கூறியவற்றையும் செய்திகளாக வெளியிட்டு வந்த பிபிசி இப்போது தனது நிருபர் Stephen Sackur ஐ இலங்கைக்கு அனுப்பி சற்று ஆழமாக இலங்கை இனப்பிரச்சனையை அணுகுகிறது. பிரித்தானிய சனல் -4 தொலைக் காட்சியின் செய்திச் சேவை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்கள் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் விருதையும் பெற்றது. இது பிபிசியை சிந்திக்க வைத்ததால் இப்படி நடக்கிறதா?

கொக்கரித்த கோத்தபாய ராஜபக்ச
பிபிசீயின் Stephen Sackurஇற்கு வழங்கிய செவ்வியில் போர்குற்றம் தொடர்பாக சர்வ தேச அரங்கில் சாட்சியளித்தால் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா கொல்லப் படுவார் என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
கோத்தபாயவின் கூறியவை:
  • He can’t do that. He was the commander. He’s responsible — that’s a treason! We will hang him if he do that! I’m telling you, that’s a treason! How can he lie that? How can he betray the country? How can he, by such lies — if he says that, he is a liar. He is a liar!

இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பேட்டியை இந்த இணைப்பில் காணலாம்: கோத்தபாயவின் கொக்கரிப்பு


பிபிசீயின் Stephen Sackur இற்கு வழங்கிய இரகசிய தொலைபேசிச் செவ்வியில் சரத் பொன்சேக்கா தான் எந்த சுதந்திரமான விசாரணையிலும் நடந்த போர் குற்றம் தொடர்பாக எதையும் மறைக்காமல் வெளிப்படுத்துவேன் என்றார்.
அவர் கூறியது:
  • General Fonseka told me, in a clandestine telephone interview, that he would be prepared to testify before any independent investigation of alleged abuses during the Tamil war. “I will not hide anything,” he said.

மீண்டும் ஆயுதப் போர் தொடங்கும் என்றார்
ஒரு விடுதலைப் புலிப் போராளி

பிபிசீயின் Stephen Sackurஇற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளி ஒருவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவார்கள் என்றார். அந்தப் போராளி இறுதிப் போரில் தப்பி இப்போது மறைந்திருப்பவர் என்ற பிபிசி அவர் பற்றி எந்தத் தகவல்களையும் வெளிவிடவில்லை. இன்னும் சில வருடங்களில் மீண்டும் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவது தவிர்க்க முடியாதது. விடுதலைப் புலிப் போராளிகள் பலர் தப்பி இருப்பதை நம்பலாம். ஆனால் அவர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று வந்த ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்குப் பேட்டி கொடுக்கக் கூடிய சூழ்நிலை இன்னும் இலங்கையில் உருவாக வில்லை. பிபிசீயின் Stephen Sackur அவர்களை இலங்கை உளவுத் துறை நிச்சயமாக கழுகு போல் கண்காணித்துக் கொண்டு இருந்திருக்கும். இலங்கை அரசிற்கு தெரியாமல் அவர் எந்த ஒரு பகுதிக்கும் சென்றிருக்க முடியாது. இலங்கை அரசு போர் அழிவுகள் தொடர்பான செய்திகள் வெளியில் வராமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகளை மேற் கொள்கிறது. அப்படியிருக்கையில் பிபிசீயின் Stephen Sackur எப்படி ஒரு விடுதலைப் புலி அமைப்பின் போராளியை நேரடியாக தனது ஒளிப்பதிவுக் குழுவுடன் சென்று பேட்டி எடுத்தார்? இந்தச் செய்தியை வேறு இரண்டு செய்திகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்:

செய்தி-1. விடுதலைப் புலிகள் மீண்டும் அணிதிரள்கின்றன என்றார் இலங்கைப் பிரதமர்:
The Sri Lankan government was aware of attempts by former Tamil Tiger rebels to regroup locally with the backing of international sympathizers, Sri Lankan Prime Minister D. M. Jayaratne told parliament on Tuesday.

"The international groups of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) have not given up their dream for a separate state," Jayaratne said.

"They are in the process of stepping up their local activities in order to regroup," said Jayaratne, adding that some 77 LTTE suspects had been nabbed during May alone.
விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பையும் அவர் தன் விவாதத்திற்கு இழுக்கிறார்.

செய்தி-2. இலங்கை தனது பாதுகாப்புச் செலவீனங்களை தொடர்ந்து பேணுகிறது
Sri Lanka's government on Tuesday proposed maintaining defence spending at nearly the same level as in the final year of its massive military offensive against the Tamil Tiger separatists.
Figures presented to parliament showed that the government had allocated 201 billion rupees (1.8 billion dollars) on defence for 2010, down marginally from an estimated 210 billion spent in 2009.
Defence spending in 2008 was 204 billion rupees.

பிபிசி ஆயுத முகவர்களுடன் இணைந்து செயற்படுகிறதா?
சென்ற ஆண்டு பிபிசி இலங்கையில் நடந்த அட்டூழியங்களைப் பொருட்படுத்தாமல் இருந்ததும் அதையொட்டி தமிழர்கள் பல போராட்டங்களைச் பிபிசிக்கு எதிராகச் செய்ததும் நாம் மறக்கக் கூடாதவை. இதுவரை காலமும் இலங்கை தொடர்பாக மேலெழுந்தவாரியாக செய்தி வெளியிட்ட பிபிசி இப்போது ஆழமாக பேட்டிகளைக் கண்டு செய்தி வெளிவிடுவது இலங்கையில் ஒரு போர் மீண்டும் ஆரம்பிக்கும் என்ற பீதியை கிளப்பவா என்ற சந்தேகம் மேலுள்ள இரண்டு செய்திகளையும் விடுதலைப் புலிப்போராளி எனக் கூறப்படுபவர் வழங்கைய பேட்டி என்று பிபிசி கூறுவதையும் சேர்த்துப் பார்க்கும் போது எழுகிறது.
இலங்கையில் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப் போகிறார்கள் என்ற செய்தி பரப்பப்பட்டால் அதனால் பயனடைபவர்கள் ஆயுத விற்பனையாளர்களே.
இந்த ஆயுதக் கொள்வனவு மூலம் இலங்கை ஆட்சியாளர்களும் பயன் பெறுவர்.
பிபிசீயின் Stephen Sackur முயற்ச்சி இலங்கைக்கு ஆயுத விற்பனை செய்பவர்களின் நலன்கள் சார்ந்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...