Thursday, 3 June 2010

செம்மொழி மாநாடு: பேராசிரியர் சிவத்தம்பியிடம் சில கேள்விகள்


இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதியை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது எங்களுடைய போராட்டம். இந்தப் போராட்டத்தை நாங்களே நாடி, நாங்களே வெல்ல வேண்டும் என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைமை வகிப்பவருமான கா.சிவத்தம்பி தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதற்காக அங்கு போகக் கூடாது எனச் சொல்வது தவறு. இன்னொருவர் எமக்கு உதவி செய்யவில்லை என்பது இங்கு பிரச்சினையல்ல. இதனை நான் தமிழகத்திலும் சொல்வேன் என அவர் மேலும் கூறினார்.

பேராசிரியர் அவர்களே
 • வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றும் போது அதற்கு ஆதரவாக பேசியவர்கள் என்ன கூறி தனிநாட்டிற்கு ஆதரவு கேரினார்கள் என்பதை அறிவீர்களா?
 • தந்தை செல்வா உட்பட பல தமிழ்த் தலைவர்கள் மூன்றரைக் கோடி தமிழர்கள் (அப்போதைய தமிழ்நாட்டு மக்கள் தொகை) எமக்கு உதவுவார்கள் என்று அடிக்கடி கூறியதை நீங்கள் அறிவீர்களா?
 • அந்தத் தமிழர்களின் தலைவர் ஈழத் தமிழர்களின் தலைவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கக் கூடாது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா?
 • ஒருகாலத்தில் நீங்கள் இடது சாரி முகமூடி அணிந்த சிங்களப் பேரினவாதிகளுடன் நல்ல உறவு வைத்திருந்தீரகள். 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படுவதை அப்போது இடது சாரி முகமூடி அணிந்திருந்த சிங்களப் பேரினவாதிகள் தமிழாராய்ச்சி மாநாடு கொழும்பில் நடத்த வேண்டும் என்று அடம் பிடித்தனர். உங்கள் இடதுசாரி "தமிழ் புத்தி ஜீவிகள்" பலர் தங்கள் சிங்களப் பேரினவாதிகளைத் திருப்திப் படுத்த யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராச்சி மாநட்டைப் புறக்கணித்ததை மறந்து விட்டீர்களா? அவர்களையும் மீறி மாநாடு நடந்த போது அப்போதைய உங்கள் சிங்கள இடது சாரி நண்பர்கள் இறுதி நாளில் செய்த சதியை மறந்து விட்டீர்களா? தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாளில் நடந்த் கொலைகளை மறந்து விட்டீர்களா?
 • சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் தமிழ்நாட்டில் இருந்து பத்திரிகைகள் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தியதை எதிர்த்து எழுதிய கொழும்புத் தமிழ்ப் பத்திரிகை வீரகேசரியயை அதன் விழாவிலேயே எதிர்த்து உரையாற்றிய உங்கள் வீரத்தை மறந்து விட்டீர்களா?
 • கருணாநிதியின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து பல நாட்களாகி விட்டன. அவர் தமிழ்நாட்டு முதல்வராக இருக்கும் வரை உலகத்தில் எங்கு தமிழர்களுக்கு எதிராக அடக்கு முறை நடந்தாலும் அவர் குரல் கொடுக்க வேண்டிக கடப்பாடு உடையவர் என்பதை மறுக்கிறீரகளா?
 • சென்ற ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதி நாட்களில் ஒரு சிறு இடத்தில் போர் நடந்ததால் இலங்கை படைகள் தொலை தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் பாவிக்கப் படமுடியாத நிலை ஏற்பட்ட போது தாம் கனரக ஆயுதங்கள் பாவிக்க முடியாது என்று அறிவித்தனர். அதை சாக்காக வைத்து முதல்வர் கருணாநிதி ஒரு உண்ணா விரத நாடகமாடி வாக்கு வேட்டையாடியதை நீங்கள் அறியவில்லையா?
 • முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்ற பொய் சென்ன பின்னரான 24 மணித்தியால நேரத்தில் இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டதை நீங்கள் அறியவில்லையா?
 • செம்மொழி மாநாடு முதல்வர் கருணாநிதி தனது தலைமையில் எந்த ஒரு தமிழாராய்ச்சி மாநாடும் நடக்க வில்லை என்ற ஆதங்கங்கத்தை தீர்க்க ஒழுங்கு செய்யப் பட்டது என்று கூறுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
 • ராஜபக்சே நல்லவர் அவர் கொடுப்பதை தமிழர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியதை நீங்கள் அறியவில்லையா?
 • தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் உங்களுடைய போராட்டம் என்கிறீர்களே "உங்களுடைய" போராட்டத்திற்கு நீங்கள் இதுவரை செய்த பங்களிப்பு என்ன?
குஷ்பு தமுளும் நமிதா ரமிலும் செம்மொழி மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...