Sunday, 16 May 2010

இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சீனர்கள்


தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை தன்னால் அடக்கமுடியாது என்பதை தனது அமைதிப் படையின் தோல்விக்குப் பின் உணர்ந்த இந்தியா இலங்கையில் சீனாவுடன் இணைந்து செயற்பட முடிவு செய்தது. இது இந்தியா ஆட்சியாளர்களினது குடும்ப நலன்களையும் கொள்கை வகுப்பாளர்களின் சாதி நலன்களையும் கருத்தில் கொண்டு இந்தியப் பிராந்திய நலன்களைப் பலிகொடுத்து எடுக்கப் பட்ட ஒரு முடிவாகும்.

இதன் விளைவாக சீனா இலங்கையின் இனக்கொலைக்கு இந்தியாவுடன் மறை முகமாகக் கைகோத்துக் கொண்டு இந்தியாவை கால் வாரும் தந்திரத்தையும் அரங்கேற்றியது. தமிழன் ஆளக்கூடாது என்ற கருத்துக்கொண்ட இந்தியக் கொள்கை வகுப்பாளர் இந்தச் சீனாவின் இந்தியாவிற்கு எதிரான கால்வாரல் பற்றி அக்கறை கொள்ளவில்லை. சீனா தனது பிடியை இலங்கையில் மெல்ல மெல்ல இறுக்கி வருகிறது. இப்போது இலங்கையில் சீன செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சீனர்கள் இருப்பதாக லங்கா ஈ நியூஸ் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் செம்படை உறுப்பினர்களும் சிறைக்கைதிகளும் ஆவர்கள்.

2009-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு அதிக கடனுதவி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. வீதி அபிவிருத்திக்கு 1.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது. உதவித் தொகையாக 2.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது.
CHINA has emerged as Sri Lanka's biggest single lender in 2009, overtaking the World Bank and the Asian Development Bank, the treasury said on Wednesday. China lent US$1.2 billion to build roads, a coal power project and a port in the island's south last year, more than half the total of US$2.2 billion in foreign aid in 2009.
Project loans accounted for US$1.9 billion of the total, with another US$279.6 million in grants, the treasury said ahead of the 2010 budget.

உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு இந்து சமுத்திரத்தின் ஊடாக நடை பெறுகிறது என்பதை சீனா உணர்ந்து இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை வலுவாக்கிவருகிறது.

இந்தியா தொடர்ந்தும் இலங்கையில் சீன ஆதிக்க வளர்ச்சியை கண்டு கொள்ளாமல் இருக்க அமெரிக்கா இது தொடர்பாக கரிசனை கொண்டுள்ளது.

2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை இது பற்றிக் குறிப்பிடுகையில்:

  • Today, a shifting world order is bearing new fruits for Sri Lanka. Most notably, China’s quiet assertion in India’s backyard has put Sri Lanka’s government in a position not only to play China off against India, but also to ignore complaints from outside Asia about human rights violations in the war.

இத்தனைக்கும் மத்தியிலும் இந்திய அரசு சிங்களவர்களுடன் நட்பை அதிகரித்து வருகிறது. இது பற்றி தினமணி ஆசிரியத் தலையங்கம் இப்படிக் கூறுகிறது:
  • இத்தனைக்கும்பிறகு இந்திய அரசு இது அந்நிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது.
  • “விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே?

இந்தியா ஆட்சியாளர்களினது குடும்ப நலன்களையும் கொள்கை வகுப்பாளர்களின் சாதி நலன்களையும் கருத்தில் கொண்டு செயற்படுகிறார்கள் என்ற உண்மையை மறைக்க தினமணி முயல்கிறது. இதை ஒரு புரியாத புதிர் என்று சொல்லி தினமணி மூடி மறைக்கிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் இன்னும் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் மேற்கு நாடுகள் தொடர்ந்தும் இலங்கைக்கு மனித உரிமை மீறல் தொடர்பாக அழுத்தம் கொடுக்கும். இதிலிருந்து தப்புவதற்கு இலங்கைக்கு சீனா பக்கம் மேலும் மேலும் சார்வதைத் தவிர வேறு தெரிவு இல்லை. இந்தியாவை அதன் கொள்கை வகுப்பாளர்கள் என்னும் ஒரு கேவலமான கும்பலிடம் இருந்து யார் காப்பாற்றுவார்?
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...