Thursday 27 May 2010

பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து தலை தெறிக்க ஓடிய சிங்கள அமைச்சர்.


இலங்கையின் தத்துக்கிளி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கு தத்தித்தாவி விடுவார். இலங்கைக்கு வெளிநாட்டில் நன்மதிப்பைப் பெற்றுக் கொடுக்க என்று அவர் ராஜபக்சகளால் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார். அவர் மீது கொடுக்கப் பட்ட சுமை மிகப் பெரியது.
  • இலங்கை ஆட்சியாளர்கள் மீது சுமத்தப் படும் போர்குற்றத்தை சமாளிக்க வேண்டும்.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி என்னும் வரிச்சலுகையை இரத்துச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சர்வதேச நாணய சபையின் கடனுதவியை தாமதிக்காமல் பெற வேண்டும்.
  • இந்தியாவுடன் நட்புறவு போல் பாசாங்கு செய்து சீன நட்பை வளர்க்கவேண்டும்.
அவரது முதற் பணியாக அவர் அமெரிக்க சென்றார். அங்கு ஹிலரி கிளிண்டன் உட்பட பல அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்தார்.

வறுத்தெடுக்க வளம் பார்த்துக் கொண்டிருக்கும் இன்னர் சிற்றி பிரஸ்.
ஐநாவில் முதலில் ஒரு தெரிந்தெடுக்கப் பட்ட பத்திரிகையாளர்களைச் சிறப்பு அழைப்பு விடுத்துச் சந்தித்தார். அதில் இன்னர் சிற்றி பிரஸ் அனுமதிக்கப் படவில்லை. இலங்கை பற்றி நன்கு தெரிந்திருக்காத நிரூபர்களை அமைத்து விருந்து கொடுத்தனர். ஐநா வரும் வெளிநாட்டமைச்சர்கள் பொதுவாக ஒரு பகிரங்க பத்திரிகையாளர் சந்திப்பை மேற் கொள்வது வழக்கம். இன்னர் சிற்றி பிரஸ் இப்போது இலங்கை அரசைச் சேர்ந்த ஒருவரையாவது வறுத்தெடுக்க வளம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னர் சிற்றி பிரஸ் நிரூபர்களை சந்திப்பதை இலங்கையின் ஐநாவிற்கான பிரதிநிதிகளும் அதிகாரிகளும் தவிர்த்து வருகின்றனர். இன்னர் சிற்றி பிரஸ் பல மின்னஞ்சல் மூலம் ஐநாவின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதுக்கும் அவரது உதவியாளர்களுக்கும் பல கேள்விகளை அனுப்பியது. அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும். உதவி நிரந்தரப் பிரதிநிதியிடம் இருந்து மிரட்டல் பாணிக் பதில்கள் மட்டுமே வந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவிக்கிறது.

இன்று 27-05-2010 வியழக்கிழமை அமெரிக்க பத்திரிகைச் சபையில்(National Press Club) ஜீ எல் பீரிஸ் அவர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அமெரிக்க தேசிய பத்திரிகைச் சபை(National Press Club) நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயற்பட்டுவரும் ஒரு அமைப்பு. பலநாட்டு அரசத் தலைவர்கள் அமெரிக்க குடியரசுத் தலைவர்கள், கல்விமான்கள், கலைஞர்கள் போன்ற பல பிரபல்யங்கள் அமெரிக்க தேசிய பத்திரிகைச் சபையின்(National Press Club) நிகழ்வுகளில் பங்கேற்பதுண்டு. அமெரிக்க தேசிய பத்திரிகைச் சபையின்(National Press Club) இன்றைய நிகழ்வு புது யுகத்தில் இலங்கை என்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நிகழ்விற்கு சென்ற ஜீ எல் பீரிஸ் அங்கு இருந்து விட்டு அங்கு உரையாற்றாமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தான் வெளியேறப் போகிறேன் என்று யாருக்கும் சொல்லாமல் ஒரே தாவாக தாவி வெளியே பாய்ந்துவிட்டார் தத்துக்கிளி அமைச்சர். இதை இன்னர் சிற்றி பிரஸ் இப்படிக் கேலி செய்தது:
Sri Lanka Minister of External Affairs Gamini Lakshman Peiris has turned tail and run out of the National Press Club without speaking or offering any explanation, the world can see what Inner City Press has diagnosed since the Peiris visit began over last weekend: he is not ready for prime time.

தேசிய பத்திரிகைச் சபையின்(National Press Club) வாசிங்கடனில் உள்ள கட்டிடத்தின் ஜுங்கர் அறையில்(Zenger Room) சிங்கள அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் இலங்கயின் சமாதானும் இணக்கப் பாடும் நிறைந்த புது யுகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவதாக ஏற்பாடாகி இருந்தது. இங்கு நடத்தும் உரை பொதுவாக அமெரிக்க அரசினதும் மகக்ளினது அபிப்பிராயங்களில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அங்கு ஏதாவது தத்துப் பித்தென்று உளறி பத்திரிகையாளர்களிடம் வாங்கிக் கட்டி உள்ள மானத்தையும் கெடுப்பான் ஏன் என்று பீரிஸ் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் பாய்ந்திருக்கலாம்.

4 comments:

ttpian said...

why thambi spared this nuttu case?

Anonymous said...

இந்து ராம் போன்ற நாய்களுக்குப் போய் பேட்டி கொடுக்க வேண்டியதுதானே....

Anonymous said...

ஆம் சென்னையில் பல சிங்களக்கைக்கூலி ஊடகங்கள் உண்டு அங்கு போய் பத்திரிகையாளர்கள் மாநாட்டை நடத்தலாம்...

Anonymous said...

உண்மையை எதிர்கொள்ள அஞ்சும் போலிகள்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...