Wednesday 31 March 2010

ஈழத்திற்கு எதிராக இந்தியா என்ன விலையும் கொடுக்கும்.


ஆரியர்களைப் பொறுத்தவரை தமிழன் சூத்திரன் அவன் ஆளப்படவேண்டியவன்; அவன் ஆளக்கூடாது. இந்த அடிப்படையில்தான் இந்தியா தமிழ் ஈழத்தை அன்றிலிருந்து இன்றுவரை எதிர்த்து வருகிறது.

ராஜீவ் காந்தியின் அமைதிப் படையில் என்று வந்த ஆரியப் பிணந்தின்னிப் பேய்களை இலங்கையில் இருந்து அடித்து விரட்டிய பின் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தமிழர்களின் தேசிய போராட்டத்தை தம்மால மட்டும் முறியடிக்க முடியாது இதில் சீனாவையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். இதன் விளைவாக சீனா தனது முத்து மாலைத் திட்டம் எனப் படும் இந்தியாவிற்கு எதிரான சுருக்குக் கயிறுத் திட்டத்தில் இலங்கையின் தென் கோடியில் இருக்கும் அம்பாந்தோட்டையையும் இணைத்து அங்கு ஒரு பாரிய துறைமுகத்தைக் கட்டி வருகிறது. இந்தத் துறைமுகம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான் செலவுடன் நிர்மாணிக்கப் படுகிறது. 33 கப்பல்கள் அங்கு தங்கலாம்.இது பற்றிக் கருத்துத் தெரிவித்த இந்திய கடற்படை தமக்கு அம்பாந்தோட்டையில் சீனாவின் துறை முகத்தால் எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளது. துறைமுகம் கட்டிமுடித்த பின்னரும் சீனர்கள் அங்கு இருப்பார்களா என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியக் கடற்படையின் மேற்படி செய்தியை கொழும்பின் இருந்து வெளிவரும் டெய்லி மிறர் பத்திரிகை வெளியியிட்டபோது அதற்கு இலங்கையர்கள் தெரிவித்த கருத்துக்கள் கவனிக்கப் படவேண்டியவை.

  • அம்பாந்தோட்டை இந்தியாவின் WATERLOO (நெப்போலியன் தோற்ற இடம்) என்றார் ஒருவர்.
  • இந்தியாவிற்கு சீனாவின் துறைமுக நிர்மாணத்தை எதிர்க்கும் திராணி இல்லை அதனால் தான் பயப்படவில்லை என்கிறது இந்தியா என்றார் ஒருவர்.
  • இந்தியாவைப் பற்றி எமக்குக் கவலை இல்லை. சீனா அம்பாந்தோட்டையில் என்றும் தங்கி இருக்கும். அம்பாந்தோட்டை எமது சீன நகரம் 'China-Town' of Sri Lanka என்றார் இன்னொருவர்.
  • சேது சமூத்திரத் திட்டத்திற்கு என்ன ஆச்சு என்று கிண்டலடித்தார் இன்னொருவர்.
  • உலகின் அடுத்த பெரும் வல்லரசான சீனாவைத் நண்பனாகத் தெரிவு செய்தமை புத்திசாலித்தனமானது என்றார் இன்னொருவர்.
  • அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி முதலில் இந்தியாவிடம் தான் வேண்டு கோள் விடுக்கப்பட்டது. ஆனால் இந்தியா நிராகரித்தது. அதனால் சீனாவிடம் சென்றோம் என்றார் இன்னொருவர்.
  • இந்தியா ஏற்கனவே சீனாவால் உதைபட்டது அதனால் இப்படித்தான் சொல்லமுடியும் என்றார் இன்னொருவர்.

மேற்படி பின்னூட்டங்கள் இந்தியா தொடர்பாக சிங்களவர்கள் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஒரு கருத்துக் கணிப்பாக எடுத்துக் கொள்ளலாம். எந்த ஒரு சிங்களவனும் இந்தியா எமக்கு விடுதலைப் புலிகளை ஒழிக்க உதவியது அதற்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
சிங்களவர்கள் இந்தியாவைப் பயன் படுத்துகிறார்கள். இந்தியா சிங்களவர்களின் கூலிப் படையாகச் செயற்படுகிறது. ஆனால் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களோ ஆட்சியாளர்களோ தங்கள் குடும்ப நலனையும் சாதிய மேலாண்மையையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஆளப்படவேண்டிய தமிழன் ஆட்சி செய்யக் கூடாது.

சீனா அம்பாந்தோட்டையில் மட்டுமா கால்வைத்தது. கச்சதீவுவரை நீள்கிறது அதன் திட்டம். வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா யாழ்ப்பாணத்தில் காலூன்றி விட்டது. இலங்கையின் கரையோரக் கண்காணிப்பு கோபுரம் என்ற போர்வையில் இந்தியாவை தனது கண்காணிப்புக்குள் வைத்திருக்கும் திட்டமும் சீனாவிடம் உண்டு

பாக்கிஸ்த்தானியத் தீவிரவாதிகள் இலங்கையூடாக இந்தியாவை ஊருடுவப்போகிறார்கள். இதனால்தான இந்தியா இலங்கையில் இருந்து எந்த அகதிகளும் படகில் வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. பாக்கிஸ்தானிய திவிரவாதிகள் இலங்கையின் அனுசரணையுடன் இந்தியாவில் இலங்கையூடாக இந்தியாவைத் தாக்கும் திட்டமும் உண்டு என்று கூறப் படுகிறது.

ஈரானுடனான இந்திய உறவில் விரிசல்
பன்னாட்டு அணுசக்தி முகவரகத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது ஈரானுக்கு கடும் கோபத்தை இந்தியாமேல் ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணாவின் ஈரானியப் பயணத்தை ஈரான் இரத்து செய்ததுடன் இந்தியப் பிரதமரின் பயணத்தையும் ஒத்திவைத்துள்ளது.
ஈரானின் ஆத்திரம் அவற்றுடன் நிற்கவில்லை. இந்தியாவிற்கு வழங்கிய ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தையும் இரத்துச் செய்து விட்டது. சீனா ஈரானுடன் நல்ல உறவுகளைப் பேணி வளர்த்து வருகிறது. ஈரானிய உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆப்கானிஸ்த்தானிலும் இந்தியாவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆக மொத்தத்தில் இன்றைய இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் தமிழன் ஆளக்கூடாது என்பதில் தான் கரிசனை கொண்டுள்ளார்கள். இதைத் தடுக்க அவர்கள் என்ன விலையும் கொடுக்கத் தயாராகியுள்ளார்கள்.

2 comments:

Anonymous said...

ஏங்க என்ன பேசிறிய.. அதான் கலைஞர் தெளிவா முடிவு எடுத்துட்டார்ல.. இந்திய பிரஜை நளினியையே வெளியில விட முடியாதுன்னு சொல்லியாச்சு...அப்பறம் ஆரியம் வீரியம்னு பேசுனா என்ன பண்றது..?

Anonymous said...

கலைஞரும் ஆரியப் பாதங்களைப் பூசித்து பிழைப்பு நடத்துபவர்தான்.
அவரிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...