Tuesday, 23 March 2010

பிரபா-பொட்டு - கடிதப் புலிப் புரளி


  • சிங்கள அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை விடுதலைப்புலி தலைவர்கள் கொடுத்துள்ளனர். நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரனும், பொட்டு அம்மானும் கடிதம் எழுதி உலகம் முழுக்க வாழும் தங்கள் ஆதரவாளர்களுக்கு அனுப்பி உள்ளனர். இப்படி ஒரு செய்தியை விகடன் பத்திரிகை பிரசுரித்தது.

மேலும் விகடன் தெரிவிப்பது:

  • தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்... அதில், ''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்'' என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ''போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா? பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் ரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம். இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்கு வந்து போவார்'' என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
  • ''புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா?'' என்று இவர்களிடம் கேட்டால்... ''எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்... இயக்கத்துக்கு புதிய தலைமை வரவேண்டிய அவசியமில்லை!'' என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்.
சில துரோகக் குழுக்களைச் சேர்ந்தவர்களோ பொட்டு பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்துவிட்டார்கள் இதை மறைக்க புலிப் "பாசிசவாதிகள்" பிரபாகரன் உயிருடன் இருப்பதைப் போன்ற மாயையை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்தப் பேரினவாதிகளின் அடிவருடிகளான துரோகக் குழுக்களைச் சேர்ந்தோரும் இபோது சற்றுத் திணறுகிறார்கள்.

விகடன் இந்தச் செய்தியை வெளிவிடமுன்னரே கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத் தளம் ஒன்று விகடனில் இப்படி ஒரு செய்தி வெளிவந்ததாகக் கூறிவிட்டு அதை திடீரென நீக்கிவிட்டது. இது யார் கிளப்பிவிட்ட புரளி?

விடுதலைப் புலிகளின் தலைமை எப்போதும் மிக நவீன தொடர்பாடல் கருவிகளைப் பாவிப்பது. இப்படி இருக்கையில் ஏன் அவர்கள் கடிதமூலம் தமது இருப்பை உறுதி செய்யவேண்டும்? தமிழகத் தலைவர்களுக்கு ஏற்கனவே விடுதலைப் புலிகளின் இருப்பு உறுதி செய்யப் பட்டுவிட்டது. வெளிநாடுகளில் எவருக்கும் இப்படி ஒரு கடிதம் வந்ததாகத் தகவல் இல்லை.

இந்தக் கடிதப் புலிப் புரளியை இப்போது கிளற வேண்டிய அவசியம் என்ன? இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தை தமக்கு தேவையான திசையில் திருப்ப சில சக்திகள் முயற்ச்சி செய்கின்றன எனபதுதான் உண்மை.

அந்திக் கடலில் மறைந்த கதிரவன் மறுநாள் உதிப்பான்

நந்திக் கடலில் மறைந்த தலைவன் நாளை வருவான்
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...