Tuesday 16 February 2010

தமிழர்கள்: இந்தியா கை கழுவி விட்டதா அல்லது கை நழுவ விட்டதா?


இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் நடந்து கொள்ளும் முறை குறித்து தாங்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இதை தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிருஸ்ணா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை முன்வைத்து அவர்கள் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கு மகிந்த ராஜபக்கச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுவது மிகவும் விசித்திரமானது. இலங்கைக்கு சகல உதவிகளும் வழங்கி இலங்கையுடன் மிகச் சிறந்த நட்புறவை பேணிவருவதாகக் கூறிவரும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஏன் இப்படி ஒரு விரக்தி கலந்து வசனம் பேசுகிறார்?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கை எதுவும் தமிழர்களுக்கு செய்கிறது இல்லை என்று கூறுவது ஒன்றில் இலங்கையில் இந்தியாவின் கையாலாகத் தனத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் அல்லது
இந்தியா இலங்கைத் தமிழர்களைக் கைகழுவி விட்டிருக்க வேண்டும்.
இலங்கையிலும் பார்க்கப் பல மடங்கு பலம் மிக்க இந்தியா சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் இருந்தே இலங்கை விவகாரத்தில் ஒரு பலவீனமான நாடாகவே செயற்படுகிறது. கச்சதீவுத் தாரை வார்ப்பும் ஒரு இந்தியப் பலவீனத்தின் வெளிப்பாடே. 1980களில் அமெரிக்கா இலங்கையில் காலூன்ற முயன்றபோது இந்தியாவால் அதை தன் படைபலத்தால் தடுக்க முடியாமற்போனது. அப்போது இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் தேவைப் பட்டனர். இதற்காக இந்தியா தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி தமிழ்-சிங்கள ஆயுத மோதலை உருவாக்கியது. தமிழர்கள் ஆயுத ரீதியாகப் பலம் பெற்ற நிலையில் இந்தியாவின் அமைதிப் படை வந்து தமிழர்களை அழித்தது. ராஜீவ் காந்தியின் அமைதிப் படை வந்திருக்காவிட்டால் ஆறு மாதத்தில் தமிழ் ஈழம் பிரிந்திருக்கும் என்று அப்போதைய இலங்கை நிதியமைச்சராக விருந்த ரொணி டீ மேல் தெரிவித்தார்.

அமைதிப் படை விரட்டியடிக்கப்பட்டு தமிழர்கள் மீண்டும் ஆயுத ரீதியாகப் பலம் பெற்ற நிலையில் இரு வாரத் தாக்குதலில் வடக்குக் கிழக்கில் உள்ள சிங்களப் படைகளை அழித்தொழிக்கக் கூடிய அளவிற்கு தமிழர்கள் ஆயுத பலம் பெற்றிருந்த நிலையில் தமக்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியாப் படைகள் மீண்டும் வராமல் இருக்கக்கூடிய ஒரு பன்னாட்டு ஆதரவுத் தளத்தை உருவாக்க தமிழர்கள் ஒரு சமாதான உடன்படிக்கையை இலங்கை அரசுடன் நோர்வேயின் அனுசரணையுடன் 22 பெப்ரவரி 2002 இல் கைச்சாத்திட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளில் இலங்க அரசு எந்தத் தீர்வையும் முன்வைக்கப் போவதில்லை என்பதை தமிழர்கள் தரப்பிற்கு முன் கூட்டியே தெரிந்து கொண்டுதான் அதில் பங்குபற்றியது. பேச்சு வார்த்தையின் முடிவில் தமிழர்களுக்கு தனிநாட்டைத் தவிர வேறு வழியில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவதே தமிழர் தரப்பின் நோக்கம். ஆனால் இந்தியச் சதி இலங்கயிலும் வெளிநாடுகளிலும்.வேறு விதமாக இருந்தது. பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த வேளை தமிழர்கள் போராட்டத்திற்கு இந்திய வற்புறுத்தலால் வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பயங்கரவாத முத்திரை குத்தின. தமிழர் ஆயுதபலம் இந்தியாவால் தூண்டப் பட்டது. துரோகிகளால் பலவீனப் படுத்தப் பட்டது. தொடர்ந்து இந்தியா சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களின் ஆயுத விநியோகங்களையும் அழித்தது. சிங்களவர்கள் தமிழர்கள்மீது போர் தொடுத்தபோது சிங்களவர்களுக்கு ஏற்பட்ட படைத்துறை ஆளணி இணைப்புக்களை ஈடு செய்ய ஆரியப் பேய்கள் பின்கதவால் இலங்கைக்குள் நுழைந்து தமிழர்களைக் கொன்று குவித்தன. ஆரிய சிங்களக் கூட்டுச் சதி முள்ளிவாய்க்கால்வரை சென்றது.

  • தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா ராணுவத்துக்குத் இந்தியா வழங்கி வரும் ஆதரவு மிக முக்கியமானது என சிறிலங்காவின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பேட்டியொன்றில் சென்ற ஆண்டு மே மாதம் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் ‘டைம்ஸ் நவ’ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சிறிலங்கப் பிரதமராகப் தாம் பதவி வகித்த காலத்தில் இந்தியாவும், அபிவிருத்தியடைந்த பல நாடுகளும் பாதுகாப்புத் துறையில் சிறிலங்காவுக்கு உதவியதாகக் கூறியுள்ளார். முன்னர் தடைகள் இருந்த போதிலும், சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பின்னர் ராணுவ ரீதியிலான உதவிகள் தாராளமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

தமிழர் போராட்டத்தை மழுங்கடித்த இந்தியா தமிழர்களை மிகப் பலவீனமான நிலையிலும் சிங்களவர்களை மிகப் பலமான நிலையிலும் நிறுத்திவிட்டது. இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ள கருத்து தம்மால் இனி ஒன்றும் செய்யமுடியாது தமது பணி முடிந்து விட்டது எனபது போல் இருக்கிறது. இது ஒரு கைகழுவல்தான். இலங்கை குடியரசுத் தலைவர் நினைத்தால் எந்தவித சட்டப் பிரச்சனையுமின்றி இலங்கைக் அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை அமூலாக்க முடியும். அது இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் உருவாக்கப்பட்ட மிகக் குறைந்த ஒரு அதிகாரப் பரவலாக்கம். அதைக்கூட வற்புறுத்த இந்தியா விரும்பவில்லை. இது இந்தியாவின் கையாலாகாத நிலை அல்ல தமிழர்களைக் கைகழுவிவிடும் நோக்கமே.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் நடந்து கொள்ளும் முறை குறித்து தாங்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாக தெரிவிதத இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தம் அதிருப்தியை எப்படி வெளிக்காட்டப் போகிறோம் என்று குறிப்பிடவில்லை அல்லது தாம் அடைந்துள்ள அதிருப்தியால் இலங்கைக்கு பாதகமான நிலை ஏற்படும் என்றோ அல்லது இலங்கை இந்திய உறவு பாதிக்கப் படும் என்றோ கோட்டிட்டுக்கூடக் காட்டவில்லை. இது கை கழுவல்தான்.

இந்திரா காந்திக்குப் பின் இலங்கை இந்தியப் பிடியிலிருந்து நழுவி விட்டது. அதன் பின் இலங்கையின் ஒரு கைப் பொம்மையாகவே இந்தியா செயற்படுகிறது. ஜே ஆர் ஜெயவர்த்தனே ராஜீவ் காந்தியை ஏமாற்றி இந்தியப் படைகளை தனது கூலிப்பட்டாளம் ஆக்கியதில் இருந்து நிலை மாறிவிட்டது.

4 comments:

Anonymous said...

இந்தியாவின் பிடியில் இலங்கை என்றும் இருந்ததில்லை. கேவலம் இந்தியாதான் இலங்கையின் பிடியில் இருக்கிறது.

Anonymous said...

தமிழர்கள் இனி மேலும் தங்கள் காலில் வந்து விழ மாட்டார்கள் என்பது அவர்களூக்குத் தெரிந்திருக்கிறது!ஆனால் வருந்தப் போவது நாமல்ல!அவர்களே!குட்டக் குட்ட குனிபவனும் மடையன்,குட்டுபவனும் மடையன் கதை இப்போது மாரி விட்டது!!!!

ப.கந்தசாமி said...

இலங்கைத்தமிழர்களைப்பற்றி இந்திய சாதாரண தமிழனுக்கு என்றுமே அக்கரை இருந்ததில்லை. இந்த மாதிரி சில பதிவுகளில்தான் அதைப்பற்றி செய்திகள் வருகின்றன.இதைப்பற்றியும் இங்கு யாரும் கவலைப்படுவதில்லை.

Anonymous said...

இன்றல்ல என்றும் இலங்கை இந்தியாவுக்கு சார்பாய் இருந்ததில்லை. ஒன்று பாக்கிஸ்தானுக்கு அல்லது சீனாவுக்கே சார்பாய் அது இருந்தது. ஒரு சாதரண சிங்கள குடிமகனை கேட்டல் அவன் இந்தியாவை கேவலமாக அசிங்கமவே விமர்சிப்பன். இருந்தும் இந்திய அரசியல்வாதிகள் சிங்கள அரக்கரின் காலடியில் கிடந்ததே வரலாறு. தமிழர் வரலாறு காலம் தொட்டு இந்தியாவை நம்பி வந்தர்கள். ஆனால் அவர்கள் முகங்களில் கரிபூசி இந்திய ஏமாற்றி அசிங்கப்படுதியாதே வரலாறு. இனியும் நாம் இந்தியாவை நம்பிக் கேட மாட்டோம். நாமும் பாக்கிஸ்தான் அல்லது சீனாவை.....!

ஜனா

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...