Friday, 12 February 2010

தமிழர்கள் கொஞ்சம் மாற்றி யோசிப்பார்களா?

இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் நடந்த உண்மைக் கதை இது. ஒரு சிறுவன் ஒரு வயோதிபருக்கு சொந்தமான காணியில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் பிடுங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். காணியில் யாரும் குடி இருப்பதில்லை. அந்த வயோதிபர் குடி இருப்பது தொலைவில். அது அந்தச் சிறுவனுக்கு வசதியாகப் போய்விட்டது. பொறுக்க முடியாத வயோதிபர் ஒருநாள் காணியில் மறைந்திருந்து சிறுவனைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டார்.
'உனக்குத் தண்டனை இங்குள்ள தேங்காய்களை எல்லாம் மரத்தில் இருந்து இறக்கி எனது வீட்டிற்கு கொண்டு போய்ச் சேர்ப்பது' என்று கூறி அச் சிறுவனின் தலையில் தேங்காய்களை சுமந்து கொண்டு தன் வீடு வரை நடக்கச் சொன்னார். சுமந்து கொண்டு போகும் வழியில் வயோதிபர் ஓரிடத்தில் களைப்பாற சற்று உட்கார்ந்தார். சிறுவன் தலையில் தேங்காயுடன் திரு திரு என விழித்துக் கொண்டு நின்றான். வயோதிபர் சிறுவனைப் பார்த்துச் சொன்னார் 'நீ முழிக்கிற முழியைப் பார்த்தால் இவ்வளவு தேங்காயையும் எனக்கு மேல் போட்டு விட்டு ஓடப் போகிறாய் போல் இருக்கிறது' என்றார். அப்போது தான் சிறுவனுக்கு அதுவும் ஒரு நல்ல யோசனையாகப் பட்டது. அப்படியே செய்தான். இத்தால் சகலரும் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் எமது எதிரிகளே எமக்குச் சிலசமயங்களில் நல்ல ஆலோசனையை வழங்குவார்கள்.இதைத் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வாழும் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள நாய்களுடன் ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள் இணைந்து கொண்டு இனக்கொலை செய்தமைக்கு பல காரணங்கள் உண்டு. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் சாதி மேலாதிக்கம், தமிழர்களுக்கு எதிரான மலையாளிகள் எனப் பல சொல்லிக் கொண்டே போகலாம். முதலில் இந்தியாவின் கொள்கை தமிழர்களுக்கு எதிராக மோசமாகத் திரும்பியது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதுதான். அப்போது வெளியுறவுச் செயலராக இருந்த பார்த்தசாரதியை பதவி நீக்கம் செய்து இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜே ஆர் ஜெயவர்தனவைத் திருப்திப்படுத்தினார் ராஜீவ் காந்தி. உலக அரச தந்திர வரலாற்றில் தன்னோடு முரண்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டைத் திருப்திப்படுத்த தனது நாட்டின் அனுபவமும் திறமையும் மிக்க ஒரு அதிகாரியைப் பதவி நீக்கம் செய்த முதலும் கடைசியுமான "அறிவாளி" ராஜீவ் காந்தி. அதன் பின் ஆசியாவின் மோசாமான குள்ளநரி என்று வர்ணிக்கப் பட்ட ஜே ஆர் ஜெயவர்த்தனவின் கைப்பொம்மையாகவே மாறிவிட்டார். இத்தனைக்கும் ஜே ஆர் செய்தது ஒன்றுதான். "இலங்கையில் தமிழர்கள் தமக்கென்று ஒரு தனி நாடு அமைத்தால் இந்தியாவிலும் தமிழர்கள் தமக்கென்று ஒரு நாடு அமைத்து விடுவார்கள்" என்று அரசியல் அறிவில்லாத ராஜீவ் காந்தியை நம்ப வைத்தார். இதற்காக ஜே ஆர் ஜெயவர்த்தன ராஜிவின் ஆலோசகர்களை நன்கு கவனித்துக் கொண்டாராம். இன்றுவரை இலங்கை இந்திய ஆலோசகர்களை நன்கு கவனித்துக் கொள்கிறது. அவர்களும் தங்கள் "எஜமானர்களுக்கு விசுவாசமாக" நடந்து கொள்கிறார்கள்.

எதிரியின் அச்சத்தையே உலகெங்கும் வாழும் தமிழர்கள் நல்ல ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழர்களைச் சுற்றி வல்லரசுகளின் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் கடலைத் தாண்டித்தான் உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி செல்கிறது. இதை ஒட்டியே தமிழர்கள் வாழும் பிரதேசத்தைச் சுற்றி ஒரு வல்லரசுகளின் போட்டியே நடக்கிறது. இதன் ஒரு அம்சமாகவே பலநாடுகள் ஒன்று கூடி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்தன. தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் சுட்டுக் கொல்லப் படும்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. இன்று கடலில் நடந்தது நாளை தரையிலும் நடக்கலாம். தனது பிராந்தியத்தின் முக்கியத்துவமே தமிழனுக்கு எதிரியாக மாறியது ஏன்? தமிழன் பிராந்தியத்தின் ஆட்சி அதிகாரம் ஆரிய சிங்களப் பேய்கள் கையில் இருப்பதால்தான். பாக்கு நீரிணையின் இரு புறமும் வாழும் தமிழர்கள் கொஞ்சம் மாத்தி யோசிக்க வேண்டும். எங்கோ இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள் தமிழர்களைக் கொள்ளை அடித்து கோடிக்கணக்கில் பணம் குவித்து தங்கள் குடும்பத்தின் ஒரு சொத்தாக தமிழ்நாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா உலகம் அடிகடி செய்யும் பாராட்டு விழாவைக் கண்டு களித்துக் கொண்டிருக்காமல் உண்மையில் என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர்களை யார் இப்போது ஆள்கிறார்கள் ஒரு இலட்சம் தமிழர்கள் இறக்கும் போது ஆறரைக் கோடி தமிழர்களால் ஏதும் செய்யமுடியாமல் போனது ஏன்? தமிழனால் தன் உறவுகளின் மோசமான நிலை கண்டு தீக்குளிக்க மட்டும்தான் முடியுமா? உண்ணாவிரதம் இருந்தது கொட்டும் மழையில் கைகோத்து நின்றது ஊர்வலம் போனது குரல் கொடுத்தது எல்லாம் பயனளிக்காமல் போனது ஏன்? தமிழன் கையில் அதிகாரம் இருக்கிறதா?
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...