Thursday 11 February 2010

பாக்கு நீரிணை மேலால் தமிழர்கள் கைகள் இணையட்டும்


தமிழர்களுக்கு ஒரு மூச்சு விடும் இடைவெளி தேவை.
தமது அப்பாவி மகன், தானும் தன்பாடுமாக இருப்பவன், ஒருவர்க்கும் தீங்கு செய்யாதவன் எங்காவது ஒரு வெளிநாட்டிற்குப் போய் தப்பிப் பிழைக்கட்டும் என்று தம் சொத்துக்களை விற்று அவன் கையில் பணத்தை கொடுத்து கொழும்புக்கு அனுப்பினால் பின்னார் அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
அவன் காணாமற் போனோர் பட்டியலில். இப்படி எத்தனை பெற்றோர்கள்? குண்டு வீச்சில் இறந்த குழந்தைகள் எத்தன? கருவிலேயே குண்டுவீச்சால் அழிந்த குழந்தைகள் எத்தனை? கப்பம் கேட்டுக் கடத்திச் சென்ற 5வயதுச் சிறுமியை வன்புணர்ச்சிக்கு உள்ளாககிக் கொல்லும் கவர்களால் பாதிக்க்ப பட்டவர்கள் எத்தனைபேர்? ஒருவரும் இல்லாமல் அழிந்த குடும்பங்கள் எத்தனை? சகல பிள்ளைகளையும் மாவிரர்களாய் கண்ட குடும்பங்கள் எத்தனை? அமைதிப் படையில் அட்டூழியங்களால் பாதிக்கப் பட்ட குடும்பங்கள் எத்தனை? ஈழத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு விதமான கண்ணீர்கதை உண்டு. 1972இல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் இன்றுவரை இடையின்றித் தொடர்கிறது. பலநாடுகள் ஒன்று கூடி உள்வீட்டுத் துரோகிகள் உதவியுடன் கேள்விக் குறியாக்கப்பட்ட தமது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக் கூட பயப்படும் நிலையில் தமிழர்கள் இப்போது.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் இருந்து தெற்கு நோக்குச் செல்லும் தொடரூந்தில் இடையில் ஏறும் சிங்களவர்கள் தமிழர்களை பலவந்தமாக எழுப்பிவிட்டு தாம் அமரும் நிலையில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம் துரோகிகளால் இன்று தமிழர்கள் வீடு புகுந்து சிங்களவர்கள் அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றி விட்டு தாம் குடியேறும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது.

பல துன்பங்களை நீண்டகாலமாக அனுபவித்து வந்த தமிழர்களுக்கு இப்போது ஒரு மூச்சு விடும் இடைவெளிதேவை. விழ விழ எழுபவனுக்கு தன்னைத் தானே சுதாகரிக்க ஒரு கால அவகாசம் தேவை. இந்தக் கால அவகாசத்தை உள்ளூர் அரசியல்வாதிகளால் மட்டுமே வழங்க முடியும். கோயில் புனர் நிர்மாணத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாக்களைக் கொடுத்து விட்டு பத்து இலட்சம் ரூபாக்கள் கொடுத்ததாக பற்றுச் சீட்டு வாங்கிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் இனித் திருந்தவேண்டும் அல்லது அரசியலில் இருந்து விலகவேண்டும். தமிழ்ப் பாராளமன்ற அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவதால் மட்டுமே திணறி நிற்கும் தமிழர்களுக்கான மூச்சு விடும் இடைவெளியைக் கொடுக்க முடியும்.

ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் அடுத்த சதி.
தமிழர்களின் ஆயுத போராட்டத்தை மழுங்கடித்த ஆரிய சிங்களக் கூட்டமைப்பு இப்போது தமிழர்களை இனித் தலையெடுக்காதபடி நிரந்தர அடிமைகளாக்கும் திட்டத்தை செயற்படுத்த முனைகிறது. வில்லங்கமான வில்லன் நம்பியாரான சதிஸ் நம்பியார் என்னும் இந்தியன் வரையறைத்துக் கொடுத்த பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழர்களைன் நிலங்கள் பல ஏற்கனவே அபகரிக்கப் பட்டன. மேலும் பல நிலங்களை தமிழர்களிடம் இருந்து அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு அபகரிக்கப் போகிறது. இதனால் தமிழர்களை ஒரு நிரந்தர சுற்றி வளைப்புக்குள் வைத்திருக்க அது முயல்கிறது. பாக்கு நீரிணையின் இரு புறமும் இருக்கும் தமிழர்களை அடக்கும் திட்டமும் இதில் அடங்கும். பாக்கு நீரிணையின் இரு புறமும் வாழும் தமிழர்கள் இதை உணர்ந்து செயற்பட வேண்டும். பாக்கு நீரிணை மேல் தமிழர்கரங்கள் இணையட்டும்.

2 comments:

Unknown said...

என்னக பண்ணுறது விதி

Yoga said...

என்ன பண்ணுறது விதி என்று விட்டு விட்டு இருந்து விட முடியுமா?கைகள்(காங்கிரஸ் கை அல்ல)இணைந்தால் எல்லாமும் சாத்தியமே! நெடுமாறன் அய்யா,தமிழக உறவுகள் உணர்வை தட்டியெளுப்பினால் விடிவுக்கு வழி கிடைக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...