Tuesday 2 February 2010

சண்டை பார்க்கக் காத்திருக்கும் தமிழர்கள்

தமிழர்கள் மீதான சிங்களக் காடையர்களின் தாக்குதல் 1950களின் பிற்பகுதியில் ஆரம்பித்தது. அப்போது இருந்த காவற்துறையினர் சற்று தொழில் நியாயம் பார்ப்பவர்களாக இருந்தனர். காவல்துறை உயர்பதவிகளில் தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கி இனத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இதனால் பண்டாரநாயக்காவின் தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து இலங்கைப் பாராளமன்றத்தின் முன் காலிமுகத் திடலில் தமிழர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் ஈடுபட்டபோது அவர்களைத் தாக்குவதற்கு சிறைகளில் இருந்த சிங்களக் காடையர்கள் கொண்டு வந்து இறக்கப் பட்டனர். இ. மு. வி. நாகநாதன் என்னும் பாராளமன்ற உறுப்பினர் கடுமையாகத் தாக்கப் பட்டு வேட்டியும் சட்டையும் கழன்றநிலையில் உள்ளாடையுடன் மட்டும் பாராளமன்றத்துக்குள் புகுந்து உரையாற்றினார். இன்னோரு பாராளமன்ற உறுப்பினர் தலையில் இரத்தம் வடிய வடிய பாராளமன்றத்தில் உரையாற்றினார். பாராளமன்றத்துக்குள் கூட தமிழர்கள் தாக்கப் பட்டனர்.

பின்னர் காவல்துறையில் காடைத்தனம் புகுத்தப் பட்டது. தமிழர்களைத் தேவையான நேரமெல்லாம் அவர்கள் தாக்கத் தொடங்கினர்.

1971இல் ரோஹண விஜயவீராவின் ஜேவிபி இயக்கம் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது சிங்களவர்களும் சிங்களக் காவல்துறையும் கடுமையாக மோதிக்கொண்டன. சிங்களக் காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை தங்களுக்குத் தெரிந்த தமிழர்களிடம் ஒப்படைத்து பாதுகாத்தனர். ஜேவிபி கிளர்ச்சி அடக்கப் பட்ட நிலையில் பல சிங்களப் பெற்றோர்கள் ஜேவிபி உடன் தொடர்பு வைத்திருந்த தங்கள் பிள்ளைகளை வடக்குக் கிழக்கில் உள்ள தங்கள் தமிழ் நண்பர்களிடம் அனுப்பி வைத்தனர். இந்தக் கிளர்ச்சியில் சிங்களமக்கள் மோதிக் கொண்டதை தமிழரசுக் கட்சியின் அதிகார பூர்வ ஏடான சுதந்திரன் பத்திரிகை தன்வினை தன்னைச் சுடுகிறது என்று ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டது.

இப்போது பாராளமன்றத்துள் தமிழர்களைக் தாக்குவதாயின் காடையர்களை வெளியில் இருந்து கொண்டுவரத் தேவையில்லை. பாராளமன்றத்துக்குள்ளேயே தமிழர்கள் சக பாராளமன்ற உறுப்பினர்களைத் தாக்குவார்கள்.

1956இல் இருந்து சண்டைகளில் அப்பாவிகளாக பார்வையாளர்களாக பங்காளர்களாக தாக்கப் பட்ட தமிழர்கள் இன்று சண்டை பார்க்கக் காத்திருக்கிறார்கள்.

எதிர்க் கட்சிக்கு எதிரான ஆளும் கட்சியின் அடக்கு முறை என்று வன்முறையாக வெடிக்கும் என்று தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...