Monday 4 January 2010

சரத்துக்கு கூட்டமைப்பின் ஆதரவின் பின்னணி என்ன? பின் விளைவுகள் எவை?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடக்கவிருக்கும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பொன்சேக்காவை ஆதரிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சரத் பொன்சேக்காவின் பின்னால் மேற்கு நாடுகளும் மஹிந்தவின் பின்னால் இந்தியாவும் நிற்கின்றன. சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதாக அவர்கள் எடுத்த முடிவின் பின்னணிகள் என்னவாக இருக்கும்?
  • மஹிந்த இதுவரை காலமும் ததேகூ ஐ மதித்து நடக்கவில்லை. சர்வகட்சி மாநாட்ட்டிற்குக் கூட அழைக்கவில்லை.
  • ததேகூ இப்போது தமது பாதுகாபபிற்குவெளிநாடு ஒன்றில் இருந்து உத்தரவாதம் பெற்றுக் கொண்டே செயற்படுகின்றனர். அந்த வெளிநாடுகளின் வேண்டுகோள் சரத் சார்பானதாக இருக்கலாம்.
  • இபோது தமிழர்கள் நாடுகடந்த அரசு அமைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மேற்குலக நாடுகளின் வெறுப்பை சம்பாதிக்க முடியாது. மேற்குலகு சார்பான வேட்பாளரையே அவர்களால் ஆதரிக்க முடியும்.
  • இந்தியா ததேகூ அமைப்பை மஹிந்த ராஜபக்ச போலவே மதித்து நடக்கவில்லை. போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் இந்தியா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்திக்காமல் தட்டிக் கழித்தார். அதனால் அவர்கள் இந்தியாவை வெறுக்கிறார்கள்.
  • சகல தமிழர்களும் தங்கள் முதலாம் எதிரி இந்தியா என்பதை இப்போது உணர்ந்துவிட்டனர். இந்திய சார்பு வேட்பாளரை தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
  • ததேகூ தொடந்தும் அரசியலில் ஈடுபட ஆயுதக் குழுக்களிடமிருந்து பாதுகாப்பு அவர்களுக்குத் தேவை. அதற்காக அவர்களுக்கு ஒரு சிங்களக் கட்சியின் ஆதரவு அவசியம்.
  • இம்முறையும் தேர்தலைப் புறக்கணிக்கும் படி அவர்கள் மக்களை கேட்க முடியாது.
  • சரத் பொன்சேக்கா வழங்கிய வாக்குறுதிகள் மஹிந்த வழங்கிய வாக்குறுதிகளிலும் சிறந்தவையாக இருக்கலாம்.
  • இரு பிரதான வேட்பாளர்களில் மஹிந்தவின் பின்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் எதிரிகளான டக்ளஸ், கருணா பிள்ளையான் போன்றோர்கள் நிற்கின்றார்கள் அவர்களோடு ஓரணியில் ததேகூ வால் நிற்க முடியாது.

சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதன் பின் விளைவுகள் எவை?

  • மஹிந்த தரப்பினர் சரத் புலிகளுடனும் வெளிநாட்டு சக்திகளுடனும் இணைந்து நாட்டுக்கு எதிராக சதி செய்கிறார் என்று பிரச்சாரம் செய்வர்.
  • மஹிந்தவுடன இணைந்துள்ள சிங்கள இனவாதிகள் சரத் தமிழர்களுடன இணைந்து விட்டார் என்று பிரச்சாரம் செய்வர். 1965இல் டட்லி சேனநாயக்கா தந்தை செல்வநாயகத்துடன் இணைந்த போது டட்லியில் நல்லெண்ணை மணக்கிறது என்று இடது சாரிகள் முழங்கினர்.
  • தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம். தமிழ் ஒட்டுக் குழுக்கள் அவர்களைத் தாக்கலாம். கொலைகூடச் செய்யலாம்.
  • தமிழ்த் தேசிய விரோதிகளும் துரோகிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலை போய்விட்டது என்றும் கொலையாளி சரத்திற்கு ஆதரவு வழங்குகிறது என்றும் குற்றம் சாட்டலாம்.
  • கோபாலபுரத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைபின் முடிவை எதிர்த்து ஒரு அறிக்கை வெளிவரலாம்.
  • தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
மற்றைய பதிவுகள்:
கூத்தமைப்பு
தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்க முயலும் கூட்டமைப்பு

3 comments:

Anonymous said...

இத்தாலிச் சனியால்
இங்கிலாந்தில் படிக்கவில்லை, வேலை செய்யச் சென்றவர்.

Anonymous said...

India is the no.1 enemy of Tamils.

Vel Tharma said...

தகவலுக்கு நன்றி திருத்தப் பட்டுள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...