Tuesday 26 January 2010

இந்திய சிங்களக் கூட்டமைப்பால் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு -




மஹிந்த திடீரென்று இந்தியா சென்றார்.
இன்னொரு இந்தியப் படையெடுப்பு?

இந்தியாவில் பிரார்த்தனை என்ரு சொல்லிக் கொண்டு மஹிந்த இன்று திடீரென இந்தியா சென்றுள்ளார். அவர் பயணத்தின் பின்னணியில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. தேர்தலில் தான் தோல்வியடைந்தால் இராணுவ ஆட்சி அமைப்பதற்கு இந்திய உதவியைக் கோரவே மஹிந்த இந்தியா சென்றாரா? மஹிந்த தோல்வியடைந்து அவர் பதவி விலக மறுத்தால் இலங்கை இராணுவம் இரு பிரிவாகப் பிரிந்து மோதலாம். இதற்கு இந்திய இராணுவ உதவி வேண்டியே மஹிந்த இந்தியா சென்றாரா? இன்னொரு இந்தியப் படை எடுப்பா?
இலங்கை இராணுவ மயப்படுத்தப் பட்டுவிட்டது. மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இராணுவச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. மக்களாட்சி முறையில் நடக்கும் தேர்தல் என்று சொல்லப் படுவது இராணுவ நலன்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப் படுகிறது.

வாக்களிக்க முடியாத சரத் பொன்சேக்கா.
இன்று நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் வேட்பாளர்களில் ஒருவரான சரத் பொன்சேக்கா வாக்களிக்கவில்லை. 2008-ம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் தனது பெயரைப் பதிவுசெய்ததாக அவர் கூறினார். ஆனாலும் அவர் பெயர் வாக்காளர் பதிவேட்டில் இடம் பெற்றிருக்கவில்லை. அன்று அறுப்பது அரசனா? தெய்வமா? சரத் பொன்சேக்கா கனடாவில் கூறியது:"I strongly believe, that this country belongs to the Sinhalese, but there are minority communities and we treat them like our people...We being the majority of the country, 75%, we will never give in and we have the right to protect this country...We are also a strong nation ... They (the minorities) can live in this country with us. “
ஐயா பொன்சேக்கா அவர்களே நீங்கள் ஸ்ரீலங்காவில் வாழலாம் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் வாக்களிக்க முடியாது.
இராணுவமயமான வாழ்வு
தமிழர்கள்மீது இன்னொடு படை எடுப்பு நடத்தப் படுகிறது. வன்னிப் பிரதேசம் எங்கும் சிங்களவர்கள் தேர்தலை ஒட்டி பேரூந்துகளில் கொண்டுவந்து இறக்கப் பட்டனர். இராணுவ அதிகாரிகள் பலர் திடீரென ஏன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப் பட்டனர்? யாழ்ப்பாணத்தில் நடமாடும் சிங்களவர்கள் தொகை திடீரென அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் எந்த சுதந்திரமும் இன்றி மக்கள் வாழ்கின்றனர். மட்டக்களப்பில் தமிழ் இளைஞர்களின் கொலைகள் அதிகரித்துள்ளன. அண்மைய காலப்பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இளைஞர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மன்னாரில் கடத்தல்கள் கொலைகள். யாழ்ப்பாணத்தில் தொடர் குண்டு வெடிப்புக்கள் நடக்கின்றன. மக்கள் இதை இன்னொரு ஆக்கிரமிப்பாகவே கருதுகின்றனர்.

2 comments:

Anonymous said...

A candidate could not vote for himself. A world record man..

Anonymous said...

Wage of sin,Sarath Fonseka,

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...