Monday 25 January 2010

இலங்கையில் பெரும் பதற்றம். அச்சத்தில் மக்கள்.


இலங்கையில் 26-ம் திகதி நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி பெரும் கலவரங்கள் வரலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. கலவரமும் அதை ஒட்டி ஊரடங்குச் சட்டமும் வரலாம் என்பதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைக்கின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் சீருடைக் காடையர்கள்
கொழும்பு நகருக்குள் கனரக ஆயுதங்கள் சகிதம் இராணுவ அணிகள் நகர்த்தப் பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களை இந்த படைஅணிகள் வீட்டுக்குள் முடக்கிவிடும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். இலங்கை படைத்துறையில் சில படையணிகள் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவாக செயற்படலாம் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் உண்டு. அது ஒரு இராணுவ மோதலுக்கு வழிவகுகலாம் என்ற வதந்தி மக்களுக்கு அச்சமூட்டுகின்றது.

விமானத் தளம் - தப்பி ஓடவா ஒடுவதைத் தடுக்கவா?
தேர்தல் முடிவுகள் வரும் வேளையில் கட்டுநாயக்கா விமாnத் தளத்தையும் விமானப் படையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திட்டம் ஆளும் தரப்பால் செய்யப் பட்டுள்ளதாக சரத் பொன்சேகா அணியைச் சேர்ந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரச் தொலைக்காட்சி மஹிந்த கையில்?
அரச தொலைக்காட்சி சேவையில் தேர்தலை ஒட்டி சில ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. பலர் விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். இவை எல்லாம் ஏதோ ஒரு சதிக்கான முன்னேற்பாடு என மக்கள் அஞ்சுகின்றனர்.

பரவும் வதந்திகள்.
தேர்தலை ஒட்டி வந்தந்திகளும் பரவ ஆரம்பித்துள்ளன. தேர்தல் முடிவுகள் தனக்குச் சாதகமாக இல்லாவிடில் மஹிந்த இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப் போகிறார் என்று வதந்திகள் பரவியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள முகத்துவாரம் இராணுவ முகாமில் பயங்கர அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய 15 கவச வாகங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்ததுள்ளார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...