Saturday 16 January 2010

கூட்டமைப்பு இந்திய வேண்டுகோளை ஏன் நிராகரித்தது?





இலங்கையில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு இந்தியா சென்று இந்திய அரசு தரப்பினரைச் சந்திக்க முயற்ச்சி எடுத்த போது அவர்கள் ஏறக்குறைய இந்திய அரசினால் அவமரியாத செய்யப்பட்டனர். ஒரு நாட்டில் இருந்து கணிசமான எண்ணிக்கையான மக்களைப் பிரதிநிதிப் படுத்துபவர்களைச் சந்திக்க வரலாம் என்று கூறிவிட்டு சந்திக்க மறுப்பது போன்ற கேவலமான வேலையை இந்தியாவால் மட்டுமே செய்ய முடியும். இலங்கைத் தமிழர்கள் அனைவருமே இதனால் மானபங்கப்படுத்தப் பட்டனர். வீட்டுக்கு வந்த மருமளை அரச சபையில் மாதவிடாய் காலத்தில் துகிலுரியும் வரலாறு கொண்ட நாட்டில் இது சாதாரணம்.

முன்பு சந்திக்க மறுத்த இந்தியா இப்போது இரண்டாம் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்தது. இந்தியா ஏன் அழைத்தது? தமிழர்களுக்கு வாழ்வளிக்கவா? தமிழர்களின் துயர் துடைக்கவா?



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏன் அழைத்தார்கள் என்று எவரும் பகிரங்கமாகக் கூறவில்லை.

சந்தித்தபின் மாவை சேனாதிராசா "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கைத் தமிழ் மக்க ளின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங் களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமப்பு யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கதைக்கத்தான் இந்தியா அழைத்தது என்று மாவை அவர்களின் கூற்றில் இருந்து தெரிகிறது.


தமிழத் தேசியக் கூட்டமைப்பை மூன்றாகப் பிரிக்க முயன்றது யார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சிவாஜிலிங்கத்தை தனிவேட்பாளராக போட்டியிட இந்தியாவே சதி செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டது. அது மட்டுமல்ல நாலு தமிழ்த் தேசியக் கூட்டமப்புப் பாராளமன்ற உறுப்பினர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த உள் முரண்பாட்டை உருவாக்கியது யார்? கூட்டமைப்பின் தலைமை இந்தப் பிளவை சாதுரியமாக கையாண்டு வருகிறது.

நான்கு தெரிவுகள்
கூட்டமைப்பைப் பொறுத்தவரை இலங்கைக் குடியரசுத் தேர்தலில் நான்கு தெரிவுகள் இருந்தன:
  1. தேர்தலைப் புறக்கணித்தல்
  2. கூட்டமைப்பு சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்துதல்.
  3. மஹிந்த ராஜபக்சவை ஆதரித்தல்
  4. சரத் பொன்சேக்காவை ஆதரித்தல்.
சென்றமுறை தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்தது தவறு என இ. சம்பந்தன் அவர்கள் தெரிவித்து முதலாவதை நிராகரித்து விட்டார்.

கூட்டமைப்பின் சார்பாக ஒருவரை நிறுத்துவதால் தமிழர்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அது மட்டுமல்ல அப்படி ஒரு முடிவு எடுத்தால் அவர்கள்மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படும். தொடர்ந்து ஒரு அரசியல் கட்சியாகச் செயற்பட முடியாமல் போகலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆட்சி மாற்றம் ஒன்று தேவை மஹிந்தவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சரத் பொன்சேக்காவுடன் பேச்சு வார்த்தை நடாத்தி சில வெளியில் சொல்லப் படாத உடன்பாடுகளை ஏற்படுத்தி சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது.

சரத் பொன்சேக்கா இந்திய விரோதி, பாக்கிஸ்த்தானுடனும் சீனாவுடனும் இலங்கை நல்ல உறவைப் பேண வேண்டும் என்று விரும்புகிறவர். அதனால் அவர் வெற்றி பெறுவதை இந்தியா விரும்பவில்லை.

மஹிந்த ராஜபக்சேயும் இந்திய விரோதி, பாக்கிஸ்த்தானுடனும் சீனாவுடனும் இலங்கை நல்ல உறவைப் பேண வேண்டும் என்று விரும்புகிறவர். ஆனாலும் அவர் தோற்று சரத் பொன்சேக்கா வெற்றி பெற்றால் இலங்கை இனக்கொலை சம்பந்தமான பல உண்மைகள் வெளிவரும். இலங்கை இனக்கொலையில் இந்தியாவின் பங்கும் வெளிவரும். என்பதால் இந்தியா மஹிந்தவை வெற்றி பெற வைக்க முயல்கிறது. இதனால் இந்தியா தமிழர்கள் யாவரும் மஹிந்தவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று திரை மறைவில் வற்புறுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதைத் தவிர வேறு எந்த முடிவு எடுத்தாலும் அவர்களுக்குப் போட்டியாக இன்னொரு அரசியல் சக்தி உருவாகி இருக்கும்.

இந்தியாவின் வற்புறுதலுக்கு கூட்டமைப்பு மறுத்தமைக்கான காரணங்கள்:
  • இந்தியாவின்சொல்லைக் கேட்க வேண்டிய எந்தக் கடப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. பொறுத்த நேரத்தில் அவர்களை சந்திக்க மறுத்து மானபங்கப் படுத்தியது இந்தியா.
  • தமிழர்களுக்கு முழுவிரோதியான இந்தியாவின் சொல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்க முடியாது.
  • மஹிந்த வெற்றி பெற்றால் ராஜபக்சே குடும்பம் தமிழ்த் தேசிய வாதம் இன்னும் 10 தலைமுறைக்கு தலையெடுக்க முடியாமல் வேரோடு அறுக்க வேண்டும் என்ற செயல் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளும். இந்தியாவின் விருப்பமும் அதுவே.
தமிழ் மக்கள் இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான சதியை உணர்ந்து இந்தியாவை தங்கள் மோசமான எதிரியாக கருதுகின்றனர். இந்நிலையில் தமிழர்களின் பகைமையை மேலும் சம்பாதிக்க விரும்பாத இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தனது அழுத்தத்தை தீவிரப் படுத்தவில்லை.

4 comments:

Yoga said...

ஆனால் செல்லாக் காசுகளை தூண்டி விட்டு இன்னமும்,தமிழர் பிரச்சினையில் குளிர் காயவே விரும்புகிறார்கள்!சாத்தான் ஒன்று வேதம் ஓதியிருக்கிறது!!(சுப்பிரமணிய சுவாமி)சாத்தானின் கட்சி லெட்டர் பேட் கட்சி என்று தமிழ் நாட்டில் சொல்வார்கள்.தலைவர்,செயலாளர்,பொருளாளர் எல்லாமே அவர் தான்!!!

எல்லாளன் said...

////நாளைய தினம் நாடு திரும்பும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான பரப்புரை நடவடிக்கைகளை முழு வீச்சுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் பரப்புரைகளின் போது இந்தியாவிற்கோ தமிழக அரசிற்கோ நெருக்கடி ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை கூட்டமைப்பு வெளியிடக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு இந்திய தரப்பால் வழங்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னணியில் இந்தியா இருந்துள்ளமை குறித்தோ தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை இந்தியா பெற்று தர தவறியுள்ளதாகவோ கூட்டமைப்பினர் பரப்புரைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.////

காலத்தின் தேவையறிந்த யதார்த்த ஆய்வு

Anonymous said...

இந்தியாவின் சதிகள் துரோகச் செய்கைகள் துட்டத் தனங்கள் அனைத்தையும் வெளிக் கொண்டுவரவேண்டும்.

pmelanco said...

இந்தியாவின் துரோகத்தை தமிழன் மறப்பானா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...