Sunday 10 January 2010

இலங்கைத் தேர்தலில் கிழக்கு மஹிந்தவை வெளுத்து வாங்குமா?


வடக்கில் அடக்கு கிழக்கில் விரட்டு.
சிங்களப் பேரினவாதிகளின் பெருந்தன்மையான கொள்கை தமிழர்களை இலங்கையில் இருந்து விரட்டியடிக்கவோ அல்லது கொன்றொழிக்கவோ தேவையில்லை அவர்களை இலங்கயின் கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் வடக்கு மாகாணத்தில் அடக்கி வைத்திருக்க வேண்டும். இந்த சிங்களப் பேரினவாதிகளின் "தாராண்மை" கொள்கையால் பெரிதும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பவர்கள் கிழக்கில் வாழும் தமிழர்களே. தரிசாகாக் இருந்த காணிகளைக் துப்பரவாக்கி பண்படுத்தி விதைத்து பராமரித்து பயிர் செய்து அறுவடைக்கு தயாராக இருக்கும் வேளைகளில் அங்கிருந்து அவர்கள் அடித்து விரட்டப்பட்டு சிங்களவர்களைக் குடியேற்றுவார்கள். பல விவசாயத் திட்டங்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே தமிழர்களை அகற்றி சிங்களவர்களக் குடியேற்றும் நோக்கத்தைக் கொண்டன. குடியேற்றப் படும் சிங்களவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். சிறைகளில் இருக்கும் குற்றவாளிகள் மன்னிப்பு வழங்கப் பட்டு கிழக்கில் குடியேறும் நிபந்தனையுடன் விடுவிக்கப் படுவர்.

தமிழர்களை மீண்டும் பிரிக்கும் இந்தியா
தமிழர்களின் வாக்கு இந்த மாதம் 26ம் திகதி நடைபெறவிருக்கும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் முடிவைத் தீர்மானிக்கும் காரணியாக அமையவிருக்கிறது. தமிழத் தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று பட்டு நின்று செயற்பட்டால் பலவற்றைச் சாதிக்க முடியும். மலைய அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்காமல் இந்தியாவின் வற்புறுத்தலின் பேரில் மஹிந்தவை நிபந்தனையின்றி ஆதரிப்பதாக முடிவெடுத்தன. இதனால் அவற்றிடை இப்போது பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பல கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கட்சிமாறிக்கொண்டிருக்கின்றனர்.

கிழக்கில் மஹிந்த ராஜபக்ச வென்றுவிட்டார் என்று ஒரு தமிழினத் துரோகி முன்கூட்டியே அறிவித்து விட்டார். அவர் அப்படி அறிவித்து சில தினங்களுக்குள் மட்டக்களப்பு மாநாகர சபை முதல்வர் கட்சி மாறினார்.

கிழக்கில் அண்மையில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளைச் சிங்களவர்கள் அபகரித்துக் கொண்டனர். இந்தச் செய்தி அங்கு வாழும் முஸ்லிம்களின் வாக்களிக்கும் தீர்மானத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

கிழக்கின் தலைகளாக தம்மைத் தாமே கருதிக்கொள்ளும் கருணாவும் பிள்ளையானும் இப்போது தமது கட்சி உறுப்பினர்கள் தமது சொற்படி வாக்களிப்பார்களா என்ற பயத்தில் இருக்கிறார்கள். திருமலை மாவட்டத்தில் மஹிந்தவைத் தோற்கடிப்பதாகவே பெரும்பாலான தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர். தேர்தல் நெருங்க பல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தம்முடிவை சரியாக எடுப்பர். கருணா பிள்ளையான் அணிகளில் உள்ளவர்கள் மஹிந்தவிற்குப் பாடம் புகட்டுவர். அதுமட்டுமல்ல பிள்ளையான கடைசி நேரத்தில் முடிவை மாற்றினாலும் ஆச்சரியமில்லை.

3 comments:

Yoga said...

மதில் மேல் பூனையாகத் தான் பிள்ளையான் இருக்கிறார்.உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டிருப்பதால் கடைசி விரை,அதாவது ,ஜனவரி இருபத்து நாலு வரை மகிந்தர் பின்னால் அலையக்கூடும்.சிவகீதா பிரபாகரனே சரத்தின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருப்பதாக கேள்வி?

Yoga said...

மதில் மேல் பூனையாகத் தான் பிள்ளையான் இருக்கிறார்.உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டிருப்பதால் கடைசி வரை,அதாவது,ஜனவரி இருபத்து நாலு வரை மகிந்தருடன் ஒட்டியிருக்கக் கூடும்.மட்டு.மா நகர மேயரே சரத்தின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருப்பதாக கேள்வி?

Anonymous said...

கிழக்கில் மஹிந்த பாரிய தோல்விகாண்பார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...