Saturday 17 October 2009

இலண்டன் ஆர்ப்பாட்ட பேரணி - படங்கள்

வன்னை வதை முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரி இலண்டன் நகரில் மாபெரு பேர்ணி 17-10-2009 இலன்று நடைபெற்றது. எண்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.















GSP+ இற்கும் இந்திய எம்.பிக்கள் வருகைக்கும் தொடர்பு.


இந்திய உளவுத்துறையின் முன்னாள் நிபுணர் கேணல் ஹரிகரன் GSP+ இலங்கைக்குக் கிடைக்காது என்று இம்மாதம் ஏழாம் திகதி எழுதிய ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருந்தார். இவர் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கம் தொடர்பாகக் கட்டுரைகளை எழுதுபவர். பொருளாதார நிபுணர் அல்லர். ஆனாலும் GSP+ என்னும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியவர்த்தகச் சலுகையைப் பற்றி கேணல் ஹரிகரன் இவ்வளவு அக்கறை எடுத்தது ஏன்?
GSP+ பற்றி அறிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்.

இப்போது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகையை நிறுத்தப் போவதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வர்த்தகச் சலுகைக்கும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இலங்கை இச்சலுகை இழப்பால் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் நேக்கவிருக்கிறது. இந்நெருக்கடியைத் தவிர்க்க இலங்கை தனது நட்பு நாடுகளின் பொருளாதார உதவியை நாடப் போகிறது. இலங்கையின் முதல் தெரிவு சீனாவாகும். சீனா இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்யும் போது இந்தியாவும் அதற்குப் போட்டியாக இலங்கைக்குப் பணத்தை வாரி இறைக்க வேண்டும். அப்போதுதான் இலங்கைமீதான தன் பிடியைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும். இதுவே இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் GSP+வரிச்சலுகையில் அக்கறை காட்டுவது. இலங்கைக்கு இச்சலுகை கிடைப்பது கடினம் என்பது சென்ற மாதமே The Economist சஞ்சிகை மூலமாக வெளிவந்து விட்டது. அதனால் இலங்கைக்கு பணம் இறைக்க இந்தியா தயாராகி விட்டது. ஆனால் வன்னி முகாம்களில் மூன்று இலட்சம் தமிழர்கள் வதை பட்டுக் கொண்டிருக்கையில் இலங்கைக்குப் பணம் கொடுப்பது தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதைச் சமாளிப்பதற்கு முன்னேற்பாடாக மத்திய அமைச்சர் சிதம்பரம் ஊடாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். சிதம்பரமும் கருணாநிதியைச் சந்தித்து நாடகதிற்கான திரைக் கதையை எழுதினார்கள். இந்திய ஆளும் கூட்டணியின் பாராளமன்ற உறுப்பினர்கள் வன்னி சென்று முகாம்களைப் பார்வையிடுவதுதான் அந்த நாடகம். சாட்டுக்கு இலங்கை சில அகதிகளை மீள் குடியேற்றம் செய்யும். ஆனால் அகதிகளை தமிழ்த்தேசிய போராட்டம் மீண்டும் தலை தூக்காது என்ற உறுதி நிலை தோன்றும் வரை அடைத்து வைத்திருப்பது இந்தியப் பிராந்திய ஆதிக்கத்திற்கு உகந்தது என்றே இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் நம்புவது போலத் தெரிகிறது.

தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் வந்து சென்றவுடனேயே இந்திய துணை அமைச்சர் பிரணீத் கவுர் அவர்கள் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து இந்தியா இலங்கைக்குப் பண உதவி செய்வதாக உறுதி வழங்கி விட்டார். அவற்றில் ஒன்று யாழ்ப்பாணதில் உள்ள விளையாட்டு அரங்கை அபிவிருத்தி செய்வது. விளையாட்டரங்கு இப்போது அங்கு வாழ் மக்களின் அவசியத் தேவையல்ல. இருந்தும் அங்கு இந்திய உளவுத்துறை அபிவிருத்து செய்ய வந்த ஊழியரகள் என்ற போர்வையில் இருந்து நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று அறியப் படுகிறது. அவர்களின் முக்கிய நோக்கம் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்ற அபிப்பிராயத்தை தமிழர்களிடையே வேரூன்றச் செய்வதும் சிங்களவனுக்கு அடிமையாக இருப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு தெரிவில்லை என்பதை தமிழர்களிடை பரப்புவதும் என்று கூறப் படுகிறது.

Friday 16 October 2009

இந்தியாவிற்கு ஒரு தமிழன் விடுக்கும் சவால்.

நேரு இலங்கை வாழ் தமிழர்களைப் பிரித்தது. சாஸ்திரி 150,000 தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கியது. இந்திரா போட்டி ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. போபஸ் புகழ் ராஜீவ் காந்தி கூலிப் படையாக அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பியது. கடைசியாக 20,000 ஆரியப்பிணந் தின்னி நாய்கள் ஈழத்திற்க்கு பின்கதவால் நுழைந்து தமிழினக் கொலைக்கு உதவியது. இப்படி இந்தியா தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 2009 ஜூலை மாத நடுப் பகுதியில் எகிப்து சென்ற இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் அங்கு இலங்கை அதிபர் ராஜ பக்சேயைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து மாநிலங்கள் அவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா கேள்வி எழுப்பினார். அதற்கு மன்மோஹன் சிங் அளித்த பதில்: 
  •   "ராஜபக்ஷவுடனான சந்திப்பில் அதிகமான நேரம் தமிழர்கள் மறுவாழ்வு குறித்தே பேசப்பட்டது. தமிழர்களின் நிலையில் இந்தியாவுக்கு இருக்கும் அக்கறை குறித்து அவரிடம் வலியுறுத்தி எடுத்துக்கூறினேன். அதிகாரப்பகிர்வு திட்டத்தின் கீழ் தமிழர்களின் சமூக வாழ்வையும் அரசியல் பங்களிப்பையும் உறுதிப்படுத்தும் சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என்று வலிறுத்தினேன். தமிழர்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சார்ந்தே இலங்கையுடனான இந்திய உறவு அமையும் என்பதை அவரிடம் விளக்கிக் கூறியுள்ளேன்" 

இப்போது என்ன நடக்கிறது? என்று இந்த எகிப்துச் சந்திப்பு நடந்ததோ அன்றிலிருந்து அதிகாரப் பரவலாக்கம் பற்றிய பேச்சே இல்லை. உண்மையில் ராஜபக்சே சிங்கிடம் இனி அதிகாரப் பரவலாக்கல் பற்றி வாயே திறக்க வேண்டாம் என்று மிரட்டிவிட்டாராம். மீள் குடியேற்றம் தொடர்பாக இலங்கை அரசு தனது செயற்திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. ஆனால் இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இந்தியா தான் இலங்கையுடன் நட்புறவைப் வளர்ப்பதாகவும் இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுப்பதாகவும் அதற்கான சகல் உதவிகளையும் செய்வதாகவும் அதைப் பேண உறுதி பூண்டுள்ளதாகவும் அடிக்கடி தெரிவித்து வருகிறது. 

இப்போது இந்தியாவின் பிராந்திய ஒருமைப் பாட்டுக்கு சீனாவிடமிருந்து அச்சுறுத்தல். அருணாச்சலப் பிரதேசம் தன்னுடையது என்று சீனா தெரிவிக்கிறது. ஒரு ஈழத் தமிழன் இந்தியாவிற்கு சவால் விடுகிறான்:

  •  இந்தியாவே உன்னால் முடியுமானால் உனது நண்பன் சிறிலங்காவை அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவினுடையது என்று ஒரு அறிக்கை வெளியிடச் செய்.

Thursday 15 October 2009

பிரபாகரன் 64 படகுகளுடன் தப்பினாரா?






விடுதலைப் புலிகளின் கடற்படையிடம் அவர்களால் வடிவமைக்கப் பட்ட மிக வேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரகப் படகுகள் பல இருந்தன. இவை 23 மணித்துளிகளில் பாக்கு நீரிணையக் கடக்கக்கூடியன. அத்துடன் இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து கைப் பற்றப் பட்ட படகுகளும் இருந்தன. இவற்றை இலங்க அரச படைகள் கைப் பற்றியதாக காட்சிப் படுத்தவில்லை. இப்படகுகளுக்கு என்ன நடந்தது? இலங்கையில் இருந்து கசிந்த தகவல்களின் படி மே மாததின் இரண்டாம் வாரத்தில் வன்னியில் இருந்து 64 படகுகள் தப்பிச் சென்றதாக செய்மதிப் படப் பதிவுகள் கிடைத்துள்ளனவாம். இப் படகுகளின் மூலம் விடுதலை புலிகளின் முழுத்தலைமையும் தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எஞ்சிய விடுதலைப் புலிகள் பெருமளவு பணத்துடனும் நகைகளுடனும் குடும்பத்தினருடன் மக்களோடு மக்களாக அரச கட்டுப் பாட்டுக்குள் வந்து ஒருவருக்கு பத்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வரை செலவழித்து தமது உறவினர் அல்லது நண்பர்களாக உள்ளஅரச சார்புத் தமிழ்க் குழுக்களின் உதவியுடன் தப்பிச் சென்று விட்டனர். இறுதிவரை களத்தில் நின்றவர்களில் முக்கியமானவர்கள் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியும் மகளிர் அணித் தலைவி தமிழினியும் மற்றும் அரசியற் துறையினருமே.

அண்மையில் இறுதிக் கட்டப் போரில் பத்மநாதனுடன் படைத் துறையைச் சார்ந்தவர்களில் சாள்ஸ் அன்ரனி மட்டுமே தொடர்பில் இருந்ததாக அயல் நாட்டு உளவுத்துறையின் ஒட்டுக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி நேரத்தில் பிரபாகரனோ பொட்டு அம்மானோ ஏன் பத்மநாதனுடன் தொடர்பு கொள்ளவில்லை?
இன்றுவரை பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் எதிரான ராஜீவ் காந்தி கொலை வழக்கு இந்தியாவில் நிலுவையில் ஏன் உள்ளது?

  • இறக்காத ஒரு கரந்தடிப் படைத்(கொரில்லா இயக்கம்) தலைவனை இறந்துவிட்டான் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தல் எளிது.
  • இறந்த ஒரு கரந்தடிப் படைத்(கொரில்லா இயக்கம்) தலைவனை இறக்கவில்லை என்றும் சாதிக்கலாம்.
இதுவரை இலங்கை அரசு வெளியிட்ட இறந்த பிரபாகரனின் உடலின் படங்கள் நம்ப முடியாதன. இதுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு உறுதியான சாட்சியங்கள் கிடைக்கப் பெறவில்லை.

Wednesday 14 October 2009

அழுகிய கனிமொழியா?


எம் தாய் மண்ணைப் பிணவாடையால்
நிறைத்த பன்றிப் பன்னாடைக்கு
தாயகத்து உடன் பிறப்புக்கள்
உடன் வந்து பொன்னாடை போர்த்த
பார்த்துப் புன்னகைக்கும் கனிமொழியே
நீ அழகிய கனிமொழியா?
இல்லை அழுகிய கனிமொழியா?

அன்னை இந்திரா அனுப்பிய தூதர்
பொன்னாடை போர்த்தவில்லை
சிங்களவனை மிரட்டிச் சென்றார்
சில்லறைகள் சுருட்டிச் செல்லவில்லை.

சிங்களவனின் சில்லறைக் கூலிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.
சரத் பொன்சேகாவின் கோமாளிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.

திருமா: தன்னைத் தானே தாழ்த்தினாரா?



தோழர் திருமாவளவனைச் சுட்டிக் காட்டி இலங்கைக் குடியரசுத் தலைவர் இவர் பிரபாகரனின் நண்பன். இவரின் நல்லகாலம் இவர் பிரபாகரனுடன் இருக்கவில்லை இருந்திருந்தால் இவரையும் போட்டுத் தள்ளியிருப்போம் என்று கிண்டலடித்தார்.
தோழர் திருமாவும் வேறு வழியின்றி அதைச் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே மேதகு பிரபாகரனுடன் இருந்த தோழர் திருமாவளவனை சந்தேகிப்பது தமிழினத்தின் சாபக்கேடு என்று அவரது இணையத் தளம் கூறுகிறது. நல்ல நண்பனைச் சந்தேகிக்கக் கூடாது என்பதை யாம் அனைவரும் அறிவோம்.

திருமாவை தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் உற்ற நண்பனாகவே பார்க்கின்றனர். ஆனால் திருமாவை தமிழினக் கொலையாளிகளுடனும் எதிரிகளுடனும் துரோகிகளுடனும் படம் எடுத்துக் கொள்வதை தமிழ்த் தேசிய வாதிகள் விரும்புவார்களா? இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ பண்டார நாயக்க இந்தியாவிற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டபோது அவருடன் இணைந்து புகைப் படம் எடுத்துக் கொள்ள அப்போதைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரி மறுத்துவிட்டார். பின்னர் அது பற்றி அவரிடம் வினவியபோது "அந்த அம்ம தமிழர்கள் விஷ்யத்தில் நல்லமாதிரியாக நடந்து கொள்வதில்லை" என்றார். இத்தனைக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கொன்றதில்லை. ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்து கொள்ளையடித்து கற்பழித்து வதை முகாம்களில் தள்ளியவர்களுடன் தோழர் திருமாவளவன் இணைந்து நிற்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்?

இந்தத்தூதுக் குழுவை தோழர் தவிர்த்திருந்திருக்க வேண்டும்.
முகாம்களின் நிலைமை பற்றி அறிய வேண்டுமானால் மெனிக் பாம் முகாம்கள் மட்டுமல்ல மற்ற எந்த முகாமிலுள்ள நிலைமைகள் பற்றி தோழர் திருமாவளவனுக்கு நெருக்கமான தமிழ்தேசியவாதிகள் எடுத்துரைத்திருப்பார்கள். தோழர் திருமாவளவனை இலங்கையில் தமிழர்களைச் சந்திக்க இராணுவம் மறுத்து விட்டது. அவர் இலங்கைக்கு மேற்கொண்டது ஒரு இலங்கை அரசால் நெறிப்படுத்தப் பட்ட பயணம்தான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இப்பயணத்தால் தோழர் திருமாவளவன் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டாரா என்ற கேள்விக்கான விடை அவர் தமிழ் நாடு சென்று வெளிவிடும் பகிரங்க அறிக்கையில்தான் இருக்கும்.

இந்தியத் தூதுக் குழுவின் குட்டு வெளிப்பட்டது.


வன்னியில் உள்ள வதை முகாம்கள் தொடர்பான நெருக்கடி நாளுக்கு நாள் இலங்கை அரசிற்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. மேற்கு நாடுகளிலிருந்தும் மனித நேய அமைப்புக்களிடம் இருந்தும் பல அழுத்தங்கள் இலங்கைமீது அதிகரித்தே வருகின்றது. இதிலிருந்து ஒரு தற்க்காலிக நிவாரணமாவது இலங்கை அரசிற்குத் தேவைப் படுகிறது.

இலங்கை அரசைப் பொறுத்தவரை தமிழர் பிரதேசங்களை சிங்களவர்களைக் குடியேற்றிய பின்னரே அங்கு முகாம்களில் இருக்கும் மக்களை சிங்களவர்களின் கொத்தடிமைகளாக குடியேற்ற வேண்டும்.
இந்தியவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளை இனி தலையெடுக்க முடியாதவாறு அழிக்கவேண்டும். எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் அழித்தொழிக்க வேண்டும். இதற்கு இன்னும் சிலமாதங்கள் வன்னி முகாம்கள் நீடிக்க வேண்டும்.
இதற்கு டெல்லியில் "ரூம்" போட்டு யோசித்தார்கள். விளைவு ஒரு தூதுக் குழு. பல கட்சிகள் கொண்ட தூதுக் குழுவாயின் அது இலங்கைக்கு சார்பாக நடக்கும் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதற்காக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அமைக்கப் பட்டது. இது நடுநிலையானது எனக் காட்ட அகப் பட்டவர்கள் கனிமொழியும் திருமாவளவனும்.

இந்தக் குழு தொடர்பாக கலைஞர் தெரிவித்தது: ''இது அரசு சார்பாகச் செல்லும் குழுவல்ல... தி.மு.க. கூட்டணியின் சார்பாக சென் றிருக்கும் குழு. அக்கறையிருந்தால் எதிர்க்கட்சி எம்.பி-க்களும் செல்லலாம்!''

ஆனால் இந்தக் குழுவின் மீது பல தரப் பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றன:
  • ஜூனியர் விகடன்: மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள் என திருமண விழாவுக்கு வருப வர்களைப் போல தமிழக எம்.பி-க்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து அழைத்தது சிங்கள அரசு. 'எங்கள் மக்கள் துக்கத்தில் தவிக்கும் நிலையில் ஏன் இத்தனை ஆடம்பர வரவேற்பு?' எனக் கேட்டு தமிழக எம்.பி-க்கள் அதனைத் தவிர்த்திருக்கலாம். அவர்களோ புன்முறுவல் பூத்தபடி... சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந் தார்கள்.
  • உதயன்(யாழ்ப்பாணப் பத்திரிகை):பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா? இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள் மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே! "இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார்.


கொழும்பில் இருந்து வரும் செய்திகள்:
  • சந்திப்பின்போது இடம்பெயர்ந்தோர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. வடக்கின் நிலைமையை பார்வையிடுவதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இதன்போது இந்திய எம்.பி. க்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியவை என்றும் இந்திய எம்.பி. க்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக கூறினார்.
  • இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயத்துக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி இதன்மூலம் தவறான பிரசாரங்கள் குறித்து தெளிவடைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்து "இதன்மூலம் தவறான பிரசாரங்கள் குறித்து தெளிவடைய முடியும்" இந்தியத் தூதுக் குழுவின் குட்டை உடைத்துவிட்டது. இதற்க்காகத் தானே இலங்கை ஜனாதிபதியின் "அழைப்பின் பேரில்" இந்தக் குழு இலங்கை சென்றது.

கனிமொழி இதுவரை பகிரங்கக் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. தோழர் திருமா மக்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர் என்றார். தங்கபாலுவும் வந்தாரா? சுதர்சன நாச்சியப்பன் "மொக்கைத்தனமாக" முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கிறது என்றார். இலங்கையில் மெனிக் பாம் மட்டும் முகாம் என்பது மாதிரி இலங்கையும் இந்தத் தூதுக் குழுவும் நடந்து கொள்கின்றன.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தூதுக் குழுவைச் சந்தித்ததின் காணொளியைக் காண இங்கு சொடுக்கவும்: Daily Mirror

Tuesday 13 October 2009

இந்தியா நாகரீக வளர்ச்சியடையவில்லையா?.


இலங்கை அரசின் தமிழ் விரோதப் போக்கையும் அட்டூழியங்களையும் உலகநாடுகள் இப்போது உணரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஒரு அரசியல்வாதிகள் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது.

இலங்கை அரசு இடைத் தங்கல் முகாம்கள் என்ற போர்வையில் வதை முகாம்களில் தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பதாக தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

அனர்த்தம் காரணமாக ஒரு நாட்டில் வீடிழந்தவர்களுக்கு அரசு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அவர்களை முட்கம்பிகளுக்குள் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருக்க முடியாது. அவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் இருக்கவேண்டும். இதைத்தான் சகல மனிதாபிமானமுடையோரும் மனிதாபிமான அமைப்புக்களும் நாகரிக வளர்ச்சியடைந்தவர்களும் எடுத்துக் கூறுகின்றனர். ஆனால் காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் கருத்து வேறுவிதமாக இருக்கிறது: சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

இப்ப்டிச் சொல்பவர் ஒரு சாதாரண ஆள் இல்லை பாராளமன்ற உறுப்பினர். வன்னியிலுள்ள பலமுகாம்களில் மெனிக்பாம் முகாமில் மட்டும் ஒருசில மணித்தியாலங்கள் செலவழித்து விட்டு இக்கருத்தை சொல்லியுள்ளார்.

ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாறாக நீதிமன்ற உத்தரவின்றி தடுத்து வைத்திருப்பது ஒரு குற்றச் செயலாகும். இலங்கையின் பிரதம நீதியரசரே வன்னி முகாம் பற்றிக் குறிப்பிடுகையில் இதைத் தெரிவித்தார். இப்படி இருக்கையில் இந்தியாவின் பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படிக் கூறுவது இந்தியா இன்னும் நாகரீக வளர்ச்சியடைய வில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

Monday 12 October 2009

தமிழ்மக்களின் அசட்டை: அதிர்ச்சியடைந்த இந்திய அதிகாரிகள்.


இந்திய வெளியுறவுத் துறையின் பணிகளில் ஒன்று இலங்கைத் தமிழர்களை தமக்குச் சார்பாகத் திருப்புவது. இதன் நோக்கம் இலங்கையின் சிங்களப் பகுதிகளைச் சீனா சாப்பிட அதன் எச்சமான தமிழ்ப் பகுதிகளை இந்தியா தன் வசமாக்குதல் என்பதே. இதற்காகத் தமிழ் மக்களை ஏமாற்றி சிங்களமக்கள் கோபப்படாமல் தமிழ் மக்களை இந்தியாவின் வசமாக்கும் முயற்ச்சியில் இந்தியா பலமுனைகளில் காய் நகர்த்தி வருகிறது.

தமிழ் மக்களைத் தம் வசமாக்கும் ஒரு முயற்ச்சியாக டி. ஆர். பாலு தலைமையிலான ஒரு குழுவை இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இந்த குழுவின் பயணத்தை தமிழர்கள் சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர். பல நடுநிலை தமழ் ஊடகங்கள் இக்குழுவின் பயணத்தை தாக்கியே எழுதுகின்றன. தமிழ் மக்கள் இந்தக் குழுவின் பயணத்தை அசட்டை செய்தது கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரக அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ் மக்களைக் கவர்வதெற்கென்று உள்ளடக்கப் பட்ட கனிமொழியும் திருமாவளவனும் தமிழர்களை கவரத் தவறி விட்டனர்.

பரம எதிரி இந்திரா காங்கிரசு
தமிழ் மக்கள் தமது பரம் எதிரியாக ஆளும் இந்திரா காங்கிரசையும் அதன் பார்ப்பன அதிகாரிகளையும் பார்க்கத் தொடங்கி பல காலம் ஆகி விட்டது. இதை இந்திய ஆட்சியாளர்கள் ஏன் உணர மறுக்கின்றனர்?

உண்மை அறியாத டி. ஆர். பாலு
இலங்கை அரசு தமக்கு முகாம் மக்களை சந்திக்க எந்தத் தடையும் விதிக்கவில்லை என டி. ஆர் பாலு கூறினார். ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே என்ன கூற வேண்டும் என்று இலங்கை அரசு உத்தரவு இட்டிருக்க மாட்டாதா? அப்படி மீறி ஏதாவது கதைத்திருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை பாலு அறியார் ஆனால் நாம் அறிவோம்.

டி. ஆர் பாலு சார் கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடுங்களேன்!


இலங்கை வந்துள்ள இந்திய ஆளும் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் குழுவின் நோக்கம் தொடர்பாக தமிழ் மக்கள் மிகவும் குழம்பிக் காணப்படுகின்றனர். இவர்கள் வரவால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் வேறு எதற்கு வந்தார்கள் என்ற கேள்விக்கு விடை காண்பதில் உள்ளகுழப்பம் இன்னும் தெளிந்த பாடில்லை.
ஆனால் டி. ஆர். பாலு சார் பழைய பல்லவியைப் பாடினார்: "இலங்கையில் தமிழர்கள் கௌரவமாக வாழ இந்தியா வகை செய்யும்". இப்படி இந்திராகாந்தியின் காலத்திலிருந்தே சொல்லிச் சொல்லி 150,000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் பட்டு விட்டாரகள்.

புறக்கணித்த யாழ் மக்கள்
1987இல் இந்தியப் படை வந்த போதி சுமார் 30கிலோமீற்றர் நீள காங்கேசன் துறை வீதியின் இருமருங்கும் சிற்றுண்டிகளுடனும் குளிர் பானங்களுடனும் பெருந்தொகையான மக்கள் வரவேற்றனர். ஆனால் டி. ஆர். பாலு சார் தலைமையிலன குழு யாழ்ப்பாணம் சென்றபோது பெரும்பாலான மக்கள் அவர்களைப் புறக்கணித்தார்கள். பெரும்பாலும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களே இவர்களின் வருகையின் போது சமூகமளித்திருந்தனர்.

போட்டானய்யா ஒரு போடு
டி. ஆர். பாலு சார் யாழ்ப்பாணத்தில் மக்களைச் சந்தித்த போது ஒரு பல்கலைகழக மாணவன் ராஜீவ் காந்தி கொலையைச் சாட்டி இன்னும் எத்தனை பேர்களைக் கொல்லப் போகிறீர்கள் என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மனதிலும் உள்ள கேள்வி. இதற்கு விடை தேவை. அத்துடன் அந்த மாணவன் உயிருக்கு இனி உத்தரவாதம் இலங்கையில் இல்லை.

சிடு மூஞ்சி சனீஸ்வரன் டி. ஆர். பாலு.
டி. ஆர். பாலு சார் மிகவும் கடுகடுப் பாகநடந்து கொண்டதாலும் மக்களைச் ச்ந்திக்க முயன்ற கனிமொழியையும் திருமாவளவனையும் தன் பார்வையால் மிரட்டியதாலும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகையான வலம்புரி அவரை சனீஸ்வரன் என்று விமர்சித்துள்ளது.

அதிர்ச்சியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பாராளமன்ற உறுப்பினர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் பின்வருவனவற்றால் அதிர்ச்சியடைந்துள்ளனர்:
  • அவர்களுடனான சந்திப்பு அவசரப் பட்டு ஒழுங்கு செய்யப் பட்டது.
  • அவர்களுடனான சந்திப்பு பூரணமடையாமல் இடையில் நிறுத்தப் பட்டது.
  • முகாமில் உள்ள மக்களை விடுவித்தால் மஹிந்தவிற்கு எதிராக இராணுவம் கிளர்ந்த்து எழும் என்று அவர்களை டி. ஆர். பாலு சார் தலைமையிலான குழு மிரட்டியது.

வீரம் பேசிய கனிமொழிக்கு என்ன நடந்தது.
இது ஒரு Guided tour அல்ல என்று தனது இலங்கைப் பயணத்தைப் பற்றி கனிமொழி கூறியிருந்தார். ஆனால் அவர்கள் இலங்கை அரசின் காட்சி முகாம்களாகிய மெனிக் பாம் முகாம்களை மட்டும் பார்வையிட அனுமதிக்கப் பட்டார். மிக மிக மிக......மோசமான நிலையில் உள்ள மற்ற முகாம்களை ஏன் பார்வையிடவில்லை.

பணம் கொடுக்க ஏற்ப்பாடு செய்யப் பட்ட பயணம்.
டி. ஆர். பாலு சார் தலைமையில் வந்த குழுவின் நோக்கம் இலங்கைக்கு நிதி உதவி செய்ய இந்தியா ஆடும் நாடகம் என்று ஏற்கனவே இங்கு தெரிவிக்கப் பட்டது. அதை காண இங்கு சொடுக்கவும்.
மெனிக் பாமிற்கு செல்லுபவர்களிடம் அரசாங்கம் ஏற்கனவே கூறியிருந்ததை மட்டுமே தம் குறைபாடுகளாக அங்கு தடுத்து வைத்திருக்கப் பட்டிருக்கும் மக்கள் தெரிவிப்பர். டி. ஆர். பாலு சார் தலைமையில் வந்த குழுவினரிடம் மக்கள் தெரிவித்த குறைபாடுகள்:
"கழிவு நீர் வசதி இல்லை, சுகாதாரமான குடிநீர் கிடையாது, ஒரு நாளைக்கு ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 லிட்டர் குடிநீர்தான் தருகிறார்கள்.

ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீரும், குளிக்கும் நீரும் தரப்படுகிறது.முகாம்களுக்கு குடிநீர் தர உதவி வரும் ஆறு வறண்டு போய்க் கிடக்கிறது. அரிசி மட்டும் அரசு தருகிறது.

ஆனால், எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களை அரசு தருவதில்லை.

மழைக்காலம் நெருங்கி வருகிறது. ஆனால் இங்கு துப்புரவு சுத்தமாக இல்லை. மழைக்காலத்தில் இந்தப் பகுதி பெரும் நரகமாகி விடும் அபாயம் உள்ளது. நோய்கள் பரவும் ஆபத்தும் அதிகமாக உள்ளது".

இவற்றைக் கூறும்படி இலங்கை அரசு முகாமிலுள்ள மக்களிடம் கூறியதா? இதை நிவர்த்தி செய்வது என்ற போர்வையில் இந்தியா இலங்கைக்கு சீனாவிற்குப் போட்டியாக நிதி உதவி செய்யப் போகிறதா?

விடுதலைப் புலிகளுக்கான எதிரான போரின் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்து அகதிகள் எதுவும் கூறாதது ஏன்?

ஏன் கிழக்கு மாகாணம் செல்லவில்லை?
டி. ஆர். பாலு சார் தலைமையில் வந்த குழு வவுனியா சென்று அங்கு அரச அதிபர்(கலெக்டர்) மேல் சீறிப்பாய்ந்தார் பாலு; யாழ்சென்று சிடுமூஞ்சித்தனத்தைக் காட்டினார்; மலையகம் சென்று கலைஞர் வாழ்க என்ற மக்கள் ஆரவாரம் பெற்றனர்; ஏன் கிழக்கு மாகாணம் செல்லவில்லை? கருணா-பிள்ளையான் போட்டி காரணமாகவா?

Sunday 11 October 2009

இந்தியா ஆடும் நாடகம்: இலங்கைக்கு நிதி வழங்க.


இலங்கைக்கு வன்னி முகாம்களை பராமரிக்க நிதி உதவி செய்து வந்த பிரித்தானியா தனது நிதி உதவியை நிறுத்திவிட்டது. சட்ட விரோதமாக நாடாத்தும் முகாம்களுக்கு யாரும் உதவி செய்ய மாட்டாரகள். வன்னி முகாம்களுக்கு சென்று பார்வையிட்ட பிரித்தானியக் குழு அவை இடைத்தங்கல் முகாம்கள் அல்ல மக்களை பாரிய அளவில் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருக்கும் முகாம்கள் என்று உணர்ந்து கொண்டது. ஏற்கனவே நிதி நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கும் இலங்கை இதனால் மேலும் நிதிச் சிக்கல்களை எதிர் கொள்ளவிருக்கிறது. அமெரிக்காவுடனான இலங்கையின் உறவோ மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.

கற்பழிப்புக்கும் கள்ளக் காதலுக்கும்
வித்தியாசம் தெரியாத இலங்கைப் பிரதமர்.

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறையும் ஒரு போர் ஆயுதமாகப் பாவிக்கப்பட்டது என்ற அமெரிக்க அரசுச் செயலர் ஹிலரி கிளிண்டன் அறிக்கை இலங்கையை ஆத்திரமடையச் செய்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம் நாயக்க ஹிலரியின் தனது வீட்டைச் முதலில் சுத்தப் படுத்த வேண்டும் என்றும் மொனிக்கா லுவின்ஸ்கிக்கு நடந்ததையும் சம்பந்தப் படுத்திப் பேசினார். இது அமெரிக்காவை ஆத்திரப் படுத்தியது. அமெரிக்கா இலங்கைத் தூதுவரை அழைத்து இலங்கைப் பிரதமரின் கருத்துத் தொடர்பாக தனது கடுமையான விசனத்தை தெரிவித்தது.

மேற்கு நாடுகளுடனான உறவுகள் மோசமடைந்த நிலையில் இலங்கை தனது நிதித்தேவையைப் பூர்த்தி செய்ய கிழக்குப் பக்கமாகத் திரும்ப வேண்டும். ஜப்பானும் பிரித்தானியப் பாணியில் தனது நிதி உதவியை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இப்போது இலங்கைக்கு உள்ள அடுத்த தெரிவு சீனாவும் இந்தியாவும். இதில் சீனாவிற்கு போட்டியாக இலங்கையை "தாஜா" செய்ய வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. இலங்கையின் நிதி நெருக்கடியைத் தீர்க்க சீனாவிற்குப் போட்டியாக இந்தியா இலங்கைக்கு உதவி செய்தே தீர வேண்டிய பரிதாபகரமான நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவின் தமிழ்த் தேசிய ஒழிப்புத் திட்டத்திற்கு வன்னித் தடைமுகாம் மிக முக்கியம். அங்கு மீதமுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை இனம் கண்டு அழித்தொழிக்க வேண்டும் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை மிக முக்கியமாகும். இதனால் தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் முகாம்களில் உள்ளவர்களை உடன் வெளியிடுவது சாத்தியமற்றது என்றும் காலம் எடுக்கும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு கண்ணிவெடிகளைக் காரணமாகவும் காட்டியிருந்தார். முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியேற்றுவதற்கு கண்ணிவெடிகளைக் காரணம் காட்டுதன் சிறு பிள்ளைத்தனமானது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் சாட்சியமளித்த நெருக்கடிகளுக்கான சர்வதேசக் குழு தெரிவித்திருந்தது. உறவினர்களுடன் சென்று வசிக்கும் வசதி உள்ளவர்களைக்கூட இலங்கை அரசு வெளியேற அனுமதிக்கவில்லை.

நிதிநெருக்கடிக்குள்ளான இலங்கை அரசு தனது இடைத்தங்கல் முகாம்கள் எனப் படும் வதை முகாம்களை பராமரிக்க நிதி உதவிசெய்யும் படி இலங்கை அரசு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அவ் வேண்டு கோளில் நிதிமட்டும் வழங்கவும் பொருட்கள் வேண்டாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது இலங்கை அரசின் நிதி நெருக்கடி எந்த அளவு மோசமாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

ஆக மொத்தத்தில் இலங்கைக்கு வன்னி முகாம்களை பராமரிக்க என்ற போர்வையில் இந்தியா இலங்கைக்கு பாரிய நிதி உதவி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு நாடகமாகவே இந்திய ஆளும் கட்சிகளான காங்கிரஸ் திமுக விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றைச் சார்ந்த சிலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் வன்னி சென்று பார்வையிட்டுவிட்டு தாம் தமிழர்களின் நிலை கண்டு கண்ணீர் வடித்து அவர்களுக்கு உதவி செய்யும்படி ஒரு அறிக்கையை விடுவர். அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு பெரும் நிதி உதவியை இலங்கைக்கு செய்யும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...