Saturday 19 September 2009

கடவுச் சீட்டு பறிக்கப் பட்டவர்கள் இந்திய உளவாளிகளா?


தமிழ்த்தேசிய வாதத்தின் ஆயுதப் போராட்டதின் வீழ்ச்சிக்கு இந்திய உளவுத்தகவல் பேருதவி புரிந்ததை பாக்குநீரிணைக்கு இரு புறமும் உள்ளவர்கள் நன்கறிவர். இலங்கையில் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சமாதன உடன்படிக்கை கைச்சாத்தானதிலிருந்தே இலங்கையின் தமிழ்ப்பகுதிகளின் இந்திய புடைவை வியாபாரிகள் நடமாடத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இந்திய உளவாளிகள் எனப் பலரும் பேசிக் கொண்டனர். இப்போது வந்துள்ள செய்தி:
கல்முனை பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்களை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்வியாபாரிகள் சுற்றுலா விசா பெற்று நாட்டில் பரவலாக வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து கொழும்பிலிருந்து கல்முனை பிரதேசத்திற்குச் சென்றிருந்த குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று இவர்களுடைய கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளது.


இதுவரை இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத இலங்கை அரசு இப்போது ஏன் எடுக்கிறது?

இவர்களை இலங்கை அரசு உடனடியாக வெளியேற்றாமல் கடவுச் சீட்டை பறிமுதல் செய்தது ஏன்?

உல்லாசப் பிரயாணிகளாக வருபவர்கள் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது! இவர்கள் மேல் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?

இவர்கள் சாதாரண வியாபாரிகளாக இருந்தால் இப்படி நடந்திருக்காது! இவர்கள் இந்திய உளவாளிகளா?

பிள்ளைகளைக் கண்காணிக்க கூகிள் கருவி



பிள்ளைகளைத் தவறவிட்டது சில கணங்கள்களாக இருந்தாலும் அச்சிறிய இடைவெளிக்குள் பெற்றோர்படும் தவிப்பு கொடூரமானது. இதைத் தவிர்க்க num8 என்னும் கைகடிகாரம் கண்டு பிடிக்கப் பட்டுள்ள்து. கூகிளின் Global Positioning System (GPS) இன் வரைபடம் மூலம் தொலைந்த பிள்ளைகளின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கலாம். பிள்ளைகளின் கைகளில் இருந்து இது பலாத்காரமாகக் கழற்றப்பட்டால் இது பெற்றொருக்கு சமிக்ஞைகளை அனுப்பும். இக்கருவியின் விலை £149.99


Latitude tool
Latitude toolஎன்னும் கூகிளின் இன்னொரு கருவி பெற்றோர் தமது வளர்ந்த பிள்ளைகளின் இருப்பிடத்தை அறிய உதவி செய்கிறது

பிரபா இறந்ததாகக் கூறியவரின் நேர்மைக்கு இன்னொரு எடுத்துக் காட்டு.


குட்டிமணி ஜெகன் தங்கத்துரை போன்றோர் குற்றவாளிகள் எனத் தண்டித்தது இலங்கையின் நீதித் துறை. ஆனால் அவர்கள் நூற்றுக் கணக்கானவர்களோடு சிறையில் கொடூரமாகக் கொல்லப் பட்டதற்கு இலங்கையின் நீதித் துறை எவரையும் தண்டிக்கவில்லை.

அண்மையில் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றில் தலைவர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக தெரிவித்தது அதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கான மரண சான்றிதழ் இன்னும் வழங்கப் படவில்லை. சட்டமா அதிபரின் நேர்மைக்கு எடுத்துக் காட்டாக இன்னோரு சம்பவம் அண்மையில் இலங்கையில் நடந்துள்ளது. கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் அதிபர் பி. ஏ அபேவர்த்தன என்பவர் இலங்கைக் காவற் துறைக்கு போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக 2008-ம் ஆண்டு அவர் மீது நீதி மன்றில் குற்றம் சுமத்தப் பட்டு அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இப்போது பொதுமக்கள் என்று சிலர் பி. ஏ அபேவர்த்தனவை வழக்கிலிருந்து விடுவிக்கும் படி மனுக் கொடுத்தனர். அத்துடன் குற்றம் சாட்டப் பட்ட பி. ஏ அபேவர்த்தன தான் வருத்தம் தெரிவிப்பதாக ஒரு சத்தியக் கடுதாசியையும் சமர்ப்பித்தார். அதை வைத்துக் கொண்டு பி. ஏ அபேவர்த்தனவை வழக்கிலிருந்து விடுவிக்கும் படி சட்டமா அதிபர் நிதிமன்றத்திற்க்கு வேண்டுகோள் விடுத்து இலங்கையின் சட்டம் மற்றும் நீதித் துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். உலகின் எந்தப் பகுதியிலும் குற்றம் சுமத்தப் பட்டவரின் வருத்தம் தெரிவிக்கும் சத்தியக் கடுதாசியை வைத்துக் கொண்டு எவரும் அவரைத் தண்டனையில் இருந்து விடுவிப்பதாகச் சொல்லுவதில்லை. சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

தலை கீழாக நிற்கும் இலங்கையின் சட்டத் துறை.
ஆசிய மனித் உரிமைக் கழகத்தின் இயக்குனர் பசில் பெர்ணாண்டோ இலங்கைச் சட்டமா அதிபரிர் மோஹன் பீரிஸ் அவர்களின் செயல் பற்றிக் கடுமையாகச் சாடியுள்ளார். இலங்கையின் சட்டவிரோதச் சட்டம் என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் இலங்கையின் குற்றவியல் நீதித் துறை தலைகீழாக நிற்கிறது என்றார்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமனா?
சட்டமா அதிபர் மோஹன் பீரிஸ் அவர்களின் செயல் தமிழ் மக்கள் காலம் காலமாக த் தெரிவித்து வந்த கருத்தான இலங்கையில் சட்டத்தின் முன் எல்லோரும் சமன் அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Friday 18 September 2009

பாலித கொஹென்னேவின் - Here is the Party; என் Ofiiceஇல் பார்ட்டி



கொலை கொலையாப் பண்ணலாம்
கொடுமைகள செய்யலாம்
மூணு லட்சம் பேரை
மூச்சடக்க வைக்கலாம்


ஆல்ரெடி இரு லட்சம் சாகடிச்சாச்சு
பலர் கதாவ இவறவுனா(பலர் கதை முடிந்தது)

Here இஸ் தி பார்ட்டி
என் office இல் பார்டி

வேர் இஸ் தி பார்ட்டி

அரச செலவில் பார்டி


சிறிலங்கா சிங்களவன் நாடுதானே
தமிழனங்கு அடிமைதானே
அதுதானே இந்தியாவும்
ஏற்றுக்கொண்ட உண்மைதானே

Here இஸ் தி பார்ட்டி
என் office இல் பார்டி

How இஸ் my பார்ட்டி

All of you enjoy my பார்டி

தமிழனுக்கு இப்பொது யாருமே இல்லியே
பக்கத்து வூட்டுக்காரன் நம்மட பக்கம் தானே
எங்களுது லைப்பு (life)
இது என்சாய் பண்ற ரைம்மு

Here இஸ் தி பார்ட்டி
என் office இல் பார்டி

நாம ரெம்ப naughty

அடிப்போம் இங்கு லூட்டி


முன்னல்லாம் காசு எமக்கு வேனுமின்னா
யூஎஸ்ஸுக்கும் ரசியாவுக்கும்போனமுங்க
இப்பல்லாம் ஒரு தொகை வேனுமுன்னா
சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுத் தாரனுக

Here இஸ் தி பார்ட்டி
என் office இல் பார்டி

இன்னும் பல வாட்டி

தண்ணி தண்ணியா காட்டி


பலஸ்த்தீனத்தில் சனத்தை கொன்னாலே
நாடுகள் எல்லாம் சேர்ந்து குரைப்பீங்க
எம்மைக் குத்தம் சொல்லாமலேயே
எல்லாத்ததையும் மறச்சேமுங்க.

Here இஸ் தி பார்ட்டி
என் office இல் பார்டி

வேர் இஸ் தி பார்ட்டி

அரச செலவில் பார்டி


இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவியேற்ற பாலித கொஹென்ன அவர்கள் ஐநாவில் ஒரு விருந்துபசாரம் வைத்தார். அதைப்பற்றி Inner City: It was a night of fish balls and denials, high above the UN. In a 38th floor that the government of Sri Lanka has rented for seven years now, the country's new Ambassador to the UN Palitha Kohona invited and greeted members of the UN press corps, urging them to eat his chips and fish balls, drink wine red or white or orange juice.
அவர் அங்கு பாடியிருந்தால் இப்படித்தான் பாடியிருப்பாரோ.

கலைஞரைப் பின்பற்றுகிறார் ஐநாவின் பான் கீ மூன்


ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் ஓரிருதொலை பேசி அழைப்புக்கள் விடுவதோ அல்லது கூட்டறிக்கை விடுவதோ இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என இலங்கையின் மாற்றுக் கொள்கைக்கான் நிலையத்தைச் சேர்ந்த கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் அண்மையில் தெரிவித்தார்.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு தான் இலங்கையில் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானோர் பற்றிய சர்வதேசத்தின் கரிசனையை ஒரு கடிதம் அனுப்பித் தெரிவித்துள்ளதாக உலகின் மிகப் பயங்கரமான கொரிய நாட்டவர் என்று வர்ணிக்கப்படும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் பத்திரிகையாளர் மாநாட்டில் நேற்றுப் பெருமையடித்துக் கொண்டார். பல்லாயிரக் கணக்கான அப்பாவைத் தமிழர்களின் கொலையை தடுத்திருக்க வேண்டிய இவர் இப்போது இப்படிக் கூறுகிறார். இப்பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு தயார் செய்து வைத்திருந்த அறிக்கையை பான் கீமூன் வாசித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். எந்தவிதமான பாத்திரிகையாளர் கேள்விகளுக்கும் அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. இவரைத் தொடர்ந்து வந்த இவரது உதவியாளரும் இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு அனுமதி மறுத்தார். ஏன் இந்த மூடி மறைப்பு?

கடிதம் எழுதவும் தந்தி அடிக்கவும் கலைஞரால் மட்டும் முடியுமா?

இதேவேளை இலங்கை வந்துள்ள ஐ.நா.சபையின் விசேட பிரதிநிதி லின் பாஸ்கோ சில உன்னதமான கண்டு பிடிப்புகளை செய்துள்ளார்:
  • வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் பொறுமையிழந்த நிலையிலும் விரக்தியடைந்த நிலையிலும் காணப்படுகின்றனர்.
  • முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை இயன்றவரை விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல வழிசெய்ய வேண்டும்.
  • முகாம் வாழ்க்கை என்பது என்றுமே நல்லதொரு உணர்வை தரமாட்டாது.
இவற்றைக் கண்டு பிடிப்பதற்கு ஒருவர் அமெரிக்காவிலிருந்து இலங்கை வரவேண்டுமா?

தொடர்ந்தும் பொய் அறிக்கை விடுகிறது இந்தியா.


இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை அரசியல் தீர்வே அவசியம் என்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த இந்தியா திரைமறைவில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்ச்சி வழங்கியது; ஆயுதம் வழங்கியது; ஆயுதம் வாங்கப் பணம் வழங்கியது; செய்மதி மூலமான் உளவுத் தகவல் வழங்கியது; புடைவை வியாபாரிகள் என்ற போர்வையில் தமிழர் பிரதேசங்களில் தனது உளவாளிகளை சேவையில் ஈடுபடுத்தியது.

போர் உக்கிரமாக நடந்து கொண்டுருந்த வேளையில் போரை நிறுத்தும் படி வலியுறுதுவதாக இந்தியா பல தடவை அறிக்கை விட்டது. ஆனால் களத்தில் இலங்கைப் படைக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை ஈடு செய்ய இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஆரிய பிணந்தின்னி நாய்கள் போரில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய அரசில் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க இந்தியா ஆவன செய்யும் என்று சேலை அணிந்த முசோலினி சொன்னார். நடக்குமா?

இப்போது இந்தியப் பிரதமர் சொல்கிறார்: India is committed to working on a 'priority basis' for the relief and rehabilitation of internally displaced Tamils in Sri Lanka and New Delhi has conveyed its concerns on the issue to the island government in "no uncertain terms."
இதுவும் பொய்தானே?

சனல்-4 இல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள்
இலங்கையின் இனக் கொலை பற்றி சனல்-4 இல் காணொளி காட்சிகள் காண்பிக்கப் பட்டவுடன் அவசரப் பட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது இந்தியா. இப்போது அது போலியானது என்று இலங்கையும், அதை ஆராய்ந்து போலி என்று அறிக்கைவிட்டவர்கள் போலி அற்றவர்கள் அல்ல என்று ஐக்கிய நாடுகளும் சொல்கின்றன. ஆராய உத்தரவிட்ட இந்தியா மௌனமாக இருக்கிறது. இந்தியா இலங்கையின் இனக் கொலையில் தனது பங்கை அம்பலப் படுத்தக் கூடிய காணொளிக் காட்சிகள் ஏதாவது உள்ளதா என்பதை ஆராயத்தான் இந்தியா உத்தரவிட்டதா?

Thursday 17 September 2009

பிரபா மரணம்: இலங்கை நீதிமன்றில் பொய் கூறப்பட்டதா?


1. பிரபாகரன் இறந்து விட்டதாக சரத் பொன்சேகா முதலில் அறிவித்தார்.

2. பிரபாகரனின் மரணச் சான்றிதழை இந்தியா வேண்டுவதாகத் தெரிவிக்கப் பட்டது.

3. பிரபாகரன் இறந்தது தொடர்பாகக் கேட்ட போது இலங்கை கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

4. பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரிக்க இந்தியாவிலிருந்து குழு ஒன்று இலங்கை செல்வதாக இந்தியா அறிவித்தது.

5. பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தரப்பில் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் இலங்கை நீதி மன்றில் கதிர்காமர் கொலை வழக்கில்தெரிவித்தது. அதை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கிலிருந்து பிரபாகரனை விடுவித்தார். பிரபாகரன் இறந்து விட்டதை நீதிபதி ஏற்றுக் கொண்ட படியால் அவரது மரணம் சட்டபூர்வமானது என்றும் அதற்கான மரணச் சான்றிதழ் தேவையில்லை என்றும் இலங்கையின் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

6. ..............நீங்கள் இங்கு நிரப்பிக் கொள்ளுங்கள்.

7. இலங்கைச் சட்டமா அதிபர் இப்போது அரச செலவில் ஐரோப்பிய பயணம் ஒன்றை மேற் கொண்டுள்ளார்.

ஐந்தாவதையும் ஏழாவதையும் வாசித்து விட்டு ஆறாவதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஐநாவில் பாலித கொஹென்ன - மொக்கத கரன்னே!


பிரித்தானியாவால் பயண அனுமதி மறுக்கப் பட்டவருமான அவுஸ்ரெலிய மனித உரிமை அமைப்புக்களால் கடுமையாகச் சாடப் பட்டவருமான பாலித கொஹென்ன ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதே வேளை இலங்கையின் நிலைப்பாட்டால் தாம் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப் பட்டுள்ளதாக ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

விலக்கப் பட்ட வில்லங்கமான வில்லன் விஜய் நம்பியார்.
இம்முறை இலங்கைக்கு தூதுவராக சென்றமுறை அடாவடித்தனம் புரிந்த விஜய் நம்பியாரை ஐநா அனுப்பவில்லை. அரசியல் விவகாரங்களுக்கான பிரத் செய்லாளர் Lynn Pascoe அவர்களை அனுப்பியுள்ளது.

Wednesday 16 September 2009

பொது இடத்தில் உடலுறவு செய்யப் போதித்தவர் நிர்வாணமாகத் தப்பி ஓட்டம்.


பொது இடத்தில் உடலுறவு செய்தால் வாழைப் பழ உற்பத்தி பெருகும் என்று போதித்தவர் காவல்துறை அங்கு வந்ததைத் தொடர்ந்து நிர்வாணமாகத் தப்பி ஓடினார்.

பப்புவா நியூகினியில் யாமினா என்னும் இடத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது. மக்களைப் பொது இடத்தில் உடலுறவு செய்யும் படி நிர்பந்தித்தார் என்ற குற்றச் சாட்டின் பெயரில் இவரை விசாரிக்கச் சென்ற காவல் துறையினரைக் கண்டதும் இவர் நிர்வாணமாக தனது இரு மனைவிகளுடனும் ஏழு சீடர்களுடனும் காட்டுக்குள் ஓடித் தப்பித்துக் கொண்டார்.

இவரின் நிர்பந்தத்தின் பேரில் மூன்று மாதமாக இவரது அடியார்கள் பொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்டனராம்.

GSP+ ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டுகிறது இலங்கை.


இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தகச் சலுகையான GSP+ ரத்துச் செய்யப் படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் நடப்பவற்றைப் பார்த்தால் இலங்கை அதிபர் ராஜபக்சே அமைத்துள்ள இணைத்தலைமை அமைச்சர்கள் குழு நேர்வழியில் தமது நிலைமையை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு விளக்காமல் வேறு வழிகளைக் கையாள்கிறது போலிருக்கிறது. பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகை இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலை உயரும் என்று தெரிவித்துள்ளது. பின்னர் பிரித்தானிய வரத்தகர்களின் அமைப்பு ஒன்றும் இலங்கைகான GSP+ வர்த்தகச் சலுகை இரத்துச் செய்யப் பட்டால் பிரித்தானியாவில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.

Marks & Spencer, Tesco, Next ஆகிய பிரபல வர்த்தக நிறுவனங்கள் தமது ஆடைகளை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்கின்றன. இவை இலங்கையை சுரண்டும் வேலையை முறையாகவே செய்கின்றன. இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் மிக மிகக் குறைந்த இலாபத்துடனேயே தமது ஏற்றுமதிகளைச் செய்கின்றன இந்த GSP+ வர்த்தகச் சலுகை நிறுத்தப் பட்டால் இவ் ஆடை உற்பத்தி நிறுவனங்களால் சமாளிக்க முடியாமல் போய் விடும். ஒன்றில் Marks & Spencer, Tesco, Next போன்றவை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் அல்லது தமது இறக்குமதியை பங்களா தேசம் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் GSP+ வர்த்தகச் சலுகையை இலங்கையின் மனித உரிமைகளுடனும் முகாம்களில் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்திருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களுடனும் தொடர்பு படுத்திப் பார்க்கிறது. ரைம்ஸ் பத்திரிகையின் தகவலின் படி இந்த GSP+ வர்த்தகச் சலுகை நீக்கப் பட்டால் நேரடியாகவும் அதனுடன் தொடர்பு பட்டதாகவும் இருக்கும் 250,000 இலங்கையர் வேலை இழப்பர் என்று தெரிவிக்கப் படுகிறது. குடும்பங்களோடு தொடர்பு படுத்தி கணக்குப்பார்த்தால் இலங்கையில் ஐந்தில் ஒருவர் இதனால் பாதிக்கப் படுவார்களாம்.

இந்த வியாழக்கிழமைக்குள் இலங்கை தனது பதிலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்க வேண்டும். இலங்கை பணிந்து போகும் நிலையில் இல்லை. ஆனால் இதில் சம்பந்தப் பட்ட வர்த்தக நிறுவனங்களின் பிரச்சாரத்தில்(lobbying) நம்பிக்கை வைத்துள்ளது போல் தெரிகிறது. GSP+ வர்த்தகச் சலுகை சம்பந்தமாக அடுத்தமாதம் ஐரோப்பிய ஒன்றியம் முடிவை எடுக்கும். அது அடுத்த வருட நடுப் பகுதியில் இருந்து அமூலுக்கு வரும்.

Tuesday 15 September 2009

புலம் பெயர்ந்த தமிழர்களைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது




இந்தியாவின் பெரும்பகுதியில் நக்சலைட்டுகள் பயமுறுத்தி வரும் வகையில் நாட்டின் பாதுகாப்பை வைத்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணன் என்னும் மலையாளப் பார்பனன் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பயங்கரவாதத்திற்கு உதவுகிறாரகள் என்று உ(கு)ரைத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா நக்சலைட்டுகளிடம் தோல்வி கண்டுவருகிறது என்று ஒரு புறம் அழுது கொண்டிருக்கையில் பாதுகாப்பு ஆலோசகர் இப்படி புலம் பெயர் தமிழர்களைப் பற்றி உ(கு)ரைத்துள்ளார்.

இலங்கைக் கடற்படை ஒருபுறம் மானங்கெட்ட இந்தியாவின் மீனவர்களைத் தொடர்ந்து தாக்கிவரும் வேளையிலேயே நாராயணன் இப்படிக் உ(கு)ரைத்துள்ளார்.

புதுடில்லியில் காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாட்டிலேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே நாராயணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை அழித்து(?)விட்டாலும் அதனால் உள்ள ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை என்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கான நிதிவழக்கும் வழி இப்போதும் பாதுகாப்பாக இருக்கிறது என்று அவர் புலம்பியுள்ளார்.

ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் ஒற்றர்களும் அடிவருடி நாய்களும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு கொடுக்கும் தொல்லைகளை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நன்கு அறிவர். அவை வெளிநாடுகளில் கடன் அட்டை மோசடி கொலை கொள்ளை காடைத்தனத்தைப் புரிந்து விட்டு அவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அவர்களினது ஆதரவாளர்கள் மீதும் சாதுரிய மாகச் சுமத்திவிடுவதை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் நன்கு அறிவர்.

நாராயணின் புலம்பல் அவர் இலங்கைத் தமிழ்தேசியவாதம் தனது சாதி மோலாதிக்கத்திற்கு சவாலாக இருப்பதையிட்டு இன்றும் பயப்படுகிறார் என்றே எடுத்துக் காட்டுகிறது. தமிழ்த் தேசியவாதத்தின் ஆதரவுக் களமான புலம் பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் இருப்பதை அவர் இப்போது நன்கு உணர்ந்துள்ளார் என்றும் கவலை கொண்டுள்ளார் என்றும் எடுத்துக் காட்டுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசின் கையேடு பதிப்புடன் தொடர்பு.
நாடுகடந்த அரசை நிறுவும் முயற்ச்சியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில் நாயாயணன் புதுடெல்லியில் இப்படிக் உ(கு)ரைத்துள்ளார். நாடு கடந்த அரசு தொடர்பான கையேடு ஒன்றை புலம் பெயர் தமிழர்கள் வெளியிட்ட வேளையிலேயே நாராயணன் இப்படிப் உ(கு)ரைத்துள்ளார். இந்திய ஆளும் வர்க்கம் தமிழ்த்தேசியத்தை தொடர்ந்து அவதானித்து வருகிறது என்பதையும் அதை தொடர்ந்தும் ஒடுக்கும் என்றும் இதிலிருந்து தெரிகிறத்து.

எங்கெங்கு என்றென்று
தமிழ்த் தேசியம்
தலை எடுக்கிறதோ
அங்கங்கு அன்றன்று
ஆரியப் பேய்கள் அங்கு
தலையிட்டு அநியாயம் செய்து
தமிழ்த்தேசியத்தை ஒடுக்கும்.

ஈழத் தமிழர்: அறிஞர் அண்ணா அன்று சொன்னது இன்றும் உண்மையே.


தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரத்தை ஒரு புரட்சி படைப்பு என்று கூறுவாரகள். தமிழில் சிலப்பதிகாரத்திற்கு முந்திய படைப்புக்கள் எல்லாம் மன்னர்களைப் பற்றியது. ஆனால் சிலப்பதிகாரம் ஒரு குடிமகன் ஆகிய கோவலனைப் பற்றியது. அதனால் தமிழில் தோன்றிய முதல் குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம். ஆனால் கோவலன் மிகப் பெரிய தனவந்தன். ஒரு சாதாரணகுடிமகன் அல்ல. சிலப்பதிகாரத்திற்கு பிறகு தோன்றிய குடிமக்கள் பற்றிய படைப்புக்கள் யாவும் செல்வந்தர்கள் சம்பந்தமாகவே இருந்தது. முதலில் ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வை மையப்படுத்தி படைக்கப் பட்ட தமிழ்ப் படைப்பு வேலைக்காரி என்ற திரைப்படமாகும். இதற்கான கதை வசனத்தை எழுதியவர் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள்.

இன்று 16-06-2009 அறிஞர் அண்ணாத்துரை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாள்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1956இல் நடந்த இனக் கலவரத்தின் போது இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோது அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் சொன்னது: எமது கையில் அதிகாரம் இல்லை. நாம் இருக்கும் நிலையில் எம்மால் எதுவும் செய்ய முடியாது. எம்மால் இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்க மட்டுமே முடியும். இது இன்றும் உண்மையாகும். தமிழ்நாட்டில் தமிழர்களின் கையில் அதிகாரம் இல்லை. அவர்கள் அவர்களால் ஈழத் தமிழர்களுக்காக கூட்டங்கள் போடவும் உண்ணாவிரதம் இருக்கவும் தான் முடியும். ஆனால் அண்ணா அன்று தம்மால் எதையும் செய்யமுடியாது என்று உண்மையைச் சொன்னார்.

கவிழ்ந்தார் மஹிந்த ராஜபக்சே


மே மாதம் 17ந்திகதிக்கு முன்னர் இரு மலையாளிகள் இலங்கைக்கு அடிக்கடி வந்து போயினர். அவர்கள் மஹிந்த ராஜபக்சேவிற்கு தமிழர்களைக் கொன்றொளிப்பது பற்றி ஆலோசனை வழங்கிவிட்டு பின்னர் அறிக்கை விடுவார்கள் இலங்கைப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுதான் இராணுவத் தீர்வு அல்ல என்று. இப்போதும் வேறு சில மலையாளிகள் இலங்கைக்கு வந்து போகிறார்கள். இவர்கள் வருவது ராஜபக்சேவிற்கு நடக்கவிருக்கும் சனிப் பெயர்ச்சி பற்றி அறிவுரை வழங்குவதற்கு.

சனிப்பெயர்ச்சியை இட்டு மஹிந்த ராஜபக்சே பயந்து குழம்பியிருக்கும் வேளையில் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவரது செயலகமான அலரி மாளிகையில் இன்று நடந்த தேசிய சாகித்திய விழாவில் அவர் குத்து விளக்கேற்றிய பின்னர் தனது இருக்கையில் அமரச்சென்ற வேளை அவரது நாற்காலி கவிழ்ந்ததால் அவர் வீழ்ந்தார். ஊடகச் சுதந்திரம் நிறந்த இலங்கையில் இக்காட்சியை பதிவு செய்த அனைவரது ஒளிப்பதிவுக் கருவிகளும் பறிமுதல் செய்யப் பட்டதாம். இது தொடர்பான செய்திகள் பல கொழும்பு ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்யப் பட்டுள்ளன.

Monday 14 September 2009

சட்டத்தின் பிடியில் என் காதல்.


பார்வைகளின் “என்கவுண்டரில்”
போட்டுத்தள்ளினாள்
என்னை ஒருத்தி.

தொலைத்தேன் என்னை
அவள் நினைவில்
தேவை ஒரு ஆட்கொணர்வு மனு.

அவள் இதயத்தில் நான் உள்ளேனா
என்றறிய உதவி செய்யட்டும் எனக்கு
தகவலறியும் உரிமைச் சட்டம்.

தவிக்கும் தாபத்திற்கு
தேவை இங்கொரு
அவசர நிலைப் பிரகடனம்.

ஐநாவின் பொய் நா மாறுகிறதா?


சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இலங்கையில் மூடிய திரைகளுக்குப் பின்னால் நடந்த போரில் இலங்கை அரசு:

1. போர்க் குற்றம் புரிந்துள்ளது
2. இனக் கொலை புரிந்துள்ளது
என்ற குற்றச் சாட்டுக்கள் பலமாக எழுந்துள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்கின்றனர்.

இவை இரண்டையும் ஐக்கிய நாடுகள் சபை தடுக்க முயற்ச்சிக்கவுமில்லை இது பற்றி விசாரிக்கவுமில்லை. விஜய் நம்பியாரின் அடாவடித்தனமும் ஐநா அதிபரின் மௌனமும் ஐநாமீது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தேகங்கள் ஏற்படுமிடத்து ஊகங்கள் வந்தந்திகள் பரவுவது இயல்பு. அவை உண்மைகளாகவும் இருக்கலாம். இப்போது ஐநாவைப் பற்றிய ஊகம் அல்லது வதந்தி இரண்டு பரவுகிறது:
1. இலங்கைக்கு ஐநா எதைச் செய்தாவது போரை முடி உன்மீது போர்க்குற்றம் சுமத்தப் படாமல் நாம் பார்த்துக் கொள்கிறோம் என்று ஐநா தரப்பிலிருந்து கூறப்பட்டதாம்.

2. ஐநா அதிபர் பான் கீமூனின் இரண்டாவது பதவிக்காலம் நீடிப்புக்கு அவர் எதையாவது சாதிக்க வேண்டும். அதற்கு அவர் இலங்கையுடன் ஒரு உடன்பாடு ஏற்படுத்த முயன்றாராம். அதன்படி அவரின் வேண்டுதலின் பேரில் வன்னி முகாம்களில் உள்ள மக்களை இலங்கை விடுவிக்கும் நாடகம் ஒன்றை அரங்கேற்றி அதன் மூலம் ஐநா அதிபர் பான் கீ மூனிற்கு புகழ் சேர்ப்பது.

இலங்கையில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது ஐநா அதிபர் இலங்கை சென்று போர் நிறுத்த வற்புறுத்தும் படியும் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருக்கும் மக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும் படியும் ஐநா அதிபர் பான் கீ மூனிடம் வற்புறுத்தப் பட்டது. அப்போது இலங்கை அரசு இரு பொய்களைச் சொன்னது முதலாவது பாதுகாப்பு வலயத்துள் எழுபதினாயிரம் மக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பது. இரண்டாவது அவர்களை வெளியேற விடாமல் ஐநூறுவரையிலான விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கின்றனர் என்பது. ஐநாஅங்கு இரண்டு இலட்சம் மக்கள் இருப்பதாகக் கூறியது. இருந்தும் அவர்களைப் பாதுகாக்க ஐநா அதிபர் இலங்கை செல்வதைத் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். பின் வேறு வழியில்லாமல் விஜய் நம்பியாரைத் தூதுவராக இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு பேசிவிட்டு உடனடியாக ஐநா சென்று உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தியா சென்றார். அவர் இந்தியா சென்றது இந்தியாவின் தமிழ்த்தேசியத்தின் எதிரிகளான சிவ் சங்கர மேனன் நாராயணன் ஆகியோருடன் எப்படி இலங்கையில் இனக்கொலையை அரங்கேற்றுவது பின்னர் அதை எப்படி மூடி மறைப்பது என்பது பற்றியா என்ற சந்தேகத்தை பலருக்கும் ஏற்படுத்தியது. அவர் இலங்கையில் என்ன பேசினார் என்பது பற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்க முதலில் மறுதார். பிரித்தானியா அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாம மிரட்டியதாம். அதன்பின்னர் நேரத்தை இழுத்தடித்து விட்டு மூடிய நிலக்கீழறைக்குள் தனது இலங்கப் பயணம் பற்றி கூறினார். அவர் என்ன இலங்கையில் பேசினார் என்பது இதுவரை வெளிவரவில்லை.

இப்போது புதிய ஒரு தகவல் கசிந்துள்ளது: ஐநா விலிருந்து இலங்கைகு போர் குற்றங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் படி ஒரு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாம். இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் இப்படி ஒருதகவல் வந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐநாவின் நிலைப்பாடு மாறுகிறதா?

Sunday 13 September 2009

வீராப்புப் பேசிய இலங்கை வீழ்ந்து வணங்கப் போகிறதா?


GSP+ எனப்படும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய வர்த்தகச் சலுகையை இரத்துச் செய்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். ஒரு இலட்சம் பேர்வரை இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகை இரத்தை தவிர்ப்பதற்கு அவர் "இணைத் தலைமை அமைச்சர் குழு" ஒன்றை உருவாக்கியுள்ளார். ஏற்றிமதி மற்றும் பன்னாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இடர் முகாமைத்துறை மற்றும் மனித உரிமைத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட, வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகொல்லாகம ஆகிய நான்கு அமைச்சர்களும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

GSP+ என்பது என்ன என்று அறிய இங்கு சொடுக்கவும்

ஏற்றுமதி அபிவிருத்தித் துறை அமைச்சின் செயலாளர் ரணுகே என்பவர் ராயட்டருக்கு வழங்கிய செவ்வியில் இலங்கைக்கு வரிச்சலுகை கிடைப்பது சந்தேகம் என்று கூறியது இலங்கை அதிபர் ராஜபக்சேயை ஆத்திரப் படுத்தியுள்ளது என்று அறியப் படுகிறது.

சென்ற வாரம் கா(ர்)டியன் பத்திரிகைக்கு இலங்கையின் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி ஏற்கவிருப்பவருமான பாலித கொஹென்ன ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாகச் சாடி பேட்டியளித்திருந்தார். பாலித மேலும் தெரிவிக்கையில் இப்போது பொருளாதார வல்லமை மேற்கிலிருந்து கிழக்கிறகு மாறிவிட்டது என்று கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையால் ஏற்படும் இழப்பீட்டை கிழக்குலக நாடுகளுடன் ஏற்படுத்தும் வர்த்தக உறவால் ஈடு செய்ய முடியும் என்று வீராப்புப் பேசினார். அவருக்கு பிரித்தானிய நுழைவு அனுமதி கிடைக்காத ஆத்திரத்தையும் சேர்த்து அவர் தனது பேட்டியில் ஐரோப்பிய ஒன்றியத்தை வாங்கு வாங்கு என்று வாங்கிக் கட்டினார். மஹிந்த ராஜபக்சேயும் தனது பொருளாதாரக் கொள்கை மேற்கு நாடுகளைச் சார்ந்ததாக இருக்காது என்று பலதடவை கூறியிருந்தார். இந்நிலையில் ராஜபக்சே ஐரோப்பிய ஒன்றியத்தின் முவர் அடங்கிய நிபுணர் குழு இலங்கக்கு GSP+ வர்த்தகச் சலுகை வழங்கக் கூடாது என்று வழங்கிய அறிக்கைக்கு பதிலளிக்கவும் மறுதலிக்கவும் இந்த "இணைத் தலைமை அமைச்சர் குழு" வை அமைத்துள்ளார்.

தன்னால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இழப்பீட்டை ஈடு செய்ய முடியுமென்றால் இலங்கைக்கு ஏன் இந்த "இணைத் தலைமை அமைச்சர் குழு" ?

இலங்கைமீது போர்க் குற்றம் சுமத்த அமெரிக்கா தயாராகிறது.


இலங்கை அரசியல் தலைவர்கள் மீதும் படையினர் மீதும் போர்க் குற்றங்களைச் சுமத்துவதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் இலங்கைத் தூதுவரும் தற்போது அமெரிக்க அரச திணக்களகத்தில் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பாக இருப்பவருமான றோபே(ர்)ட் பிளேக் அவர்களின் பொறுப்பில் இலங்கை மீதான போர்க் குற்றங்கள் சுமத்தும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

அண்மையில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களான தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேராவையும் இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவையும் அமெரிக்கா வாசிங்டனுக்கு அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடியதாக இலங்கை இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் ஜெஹான் பெரேரா தான் அமெரிக்கா செல்வதற்கு பலநாட்களுக்கு முன்னதாகவே இலங்கையின் மீதான போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயற்குழு பரிந்துரை செய்துவிட்டது என்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தாம் இருவரும் அமெரிக்க சமாதானச் சபையின் அழைப்பின் பேரிலேயே சென்றதாகவும் தமது பயணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.

இலங்கை மீதான போர்க் குற்ற சுமத்தல் அமெரிக்காவின் பல தரப்பில் இருந்தும் வெளிவரத் தொடங்கி விட்டது. இரு தினங்களுக்கு முன் அமெரிக்க மூதவையிலும் இது தெரிவிக்கப் பட்டது.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய பாக்கியசோதி சரவணமுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப் பட்டார். இது தொடர்பாக அது தெரிவிக்கையில் அமெரிக்கா செள்றிருந்த நான் இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தபோது என்னை விமான நிலையததில் தடுத்து நிறுத்திய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் என்னை விமான நிலையத்திலுள்ள குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்போது என்னை இவ்வாறு தடுத்து வைப்பதற்கான காரணம் என்னவென்று நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு பதிலளித்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலிட உத்தரவுக்கமையவே தடுத்து வைத்துள்ளோம் என்றும் இந்த உத்தரவு கடந்த பெப்ரவரி மாதம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

அத்துடன் இது தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் தேவைப்படும் பட்சத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸுக்குச் சென்று அறிந்துகொள்ளுமாறும் அவர்கள் அறிவித்தனர்.

இது மட்டுமல்ல பா. சரவணமுத்து அவர்களுக்கு அனாமதேயக் கொலை மிரட்டலும் இலங்கையில் விடுக்கப் பட்டது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...