Saturday 5 September 2009

படக் காலுமில்லை கெடக் குடியுமில்லை.


பட்ட காலிலே படுவதற்கு
கால்கள் எனக்கில்லை
கண்ணி வெடியில் போயின.
மீண்டும் கெட இங்கு குடியில்லை
இந்தியச் செய்மதி இடம் காட்ட
சீன விமானத்தில் இருந்து வீசிய
பாக்கிஸ்த்தானிய குண்டால்
அழிந்தது அடியோடு.

ஈழத் தமிழர் அவலம் - அன்றே பாடினார் பட்டினத்தார்


பட்டினத்தான் அன்று பாடிய அருட்புலம்பல் இன்று ஈழத் தமிழர்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்று பாருங்கள்:

சிவசங்கர மேனன் - நாராயணன்
கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம்
கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி
ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும்
சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் துரிசறவே
குருவாகி வந்தானோ? குலமறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உருவழிக்க வந்தானோ?

சிங்களப் படை:
இந்நிலமை கண்டாண்டி, எங்கு மிருந்தாண்டி !
கன்னி யழித்தாண்டி, கற்பைக் குலைத்தாண்டி.

கற்புக் குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும்
பொற்புக் குலைத்தமையும், போத மிழந்தமையும்.

என்ன வினைவருமோ? இன்னமெனக் கென்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் பலித்ததடி, சோர்வறவே


பழி வாங்கிய சோனியா:
முன்னை வினையெல்லா முழுது மறுத்தாண்டி
தன்னை யறியவே தானொருத்தி யானேண்டி.

தமிழினம்:
என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள்;
தன்னந் தனியே தனித்திருக்க மாட்டேண்டி.

எல்லாரும் பட்டகள மென்று தொலையுமடி
சொல்லி யழுதாற் றுயரமனெக் காறுமடி. 6

மண்முதலா மைம்பூத மாண்டுவிழக் கண்டேண்டி !
விண்முதலா மைம்பொறிகள் வெந்து விழக் கண்டேண்டி. 7

நீங்காப் புனல்களைந்து நீறாக வெந்ததடி
வாக்காதி ஐவரையும் மாண்டுவிழங் கண்டேண்டி. 8

மனக்கரண மத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரணத் தோடே யெரிந்துவிழக் கண்டேண்டி

நியாயங்கள் போரில் பொய்த்தன:
ஆத்துமத் தத்துவங்கள் அடுக்கழிய வெந்ததடி !
போற்றும்வகை யெப்படியோ போதமிழந் தானை.

வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி !
சுத்தவித்தை ஐந்தினையுஞ் சுட்டான் துரிசறவே.

தமிழர் படை வீழ்ச்சி:
உட்கோட்டைக் குள்ளிருந்தா ரொக்க மடிந்தார்கள்,
அக்கோட்டைக் குள்ளிருந்தா ரறுபதுபேர் பட்டார்கள்.

ஒக்க மடிந்ததடி ! ஊடுருவ வெந்ததடி !
கற்கோட்டை யெல்லாங் கரிக்கோட்டை யாச்சுதடி.

தொண்ணூற் றறுவரையுஞ் சுட்டான் துரிசறிவே
கண்ணேறு பட்டதடி கருவே ரறுத்தாண்டி.

தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி !
இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி.

தமிழர் இன்றைய நிலை:
வீட்டி லொருவரில்லை வெட்டவெளி யானேண்டி !
காட்டுக் கெறித்திநிலா கனவாச்சே கண்டதெல்லாம்.

நகையாரோ கண்டவர்கள்? நாட்டுக்குப் பாட்டலவோ?
பகையாரோ கண்டவர்கள்? பார்த்தாருக் கேச்சலவோ?

இந்நிலமை கண்டாண்டி, எங்கு மிருந்தாண்டி !
கன்னி யழித்தாண்டி, கற்பைக் குலைத்தாண்டி.

கற்புக் குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும்
பொற்புக் குலைத்தமையும், போத மிழந்தமையும்.

என்ன வினைவருமோ? இன்னமெனக் கென்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் பலித்ததடி, சோர்வறவே.

Friday 4 September 2009

விஞ்ஞானி: அழகிகளுடன் கதைக்கும் ஆண்களின் மூளைக்கு ஆபத்து.


காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே ..
இது பல நூறு ஆண்டுகளுக்கு முன் பட்டினத்தார் சொன்னது. இதை இப்போது ஒல்லாந்து தேசத்து விஞ்ஞானிகள் உண்மை என்று கண்டு பிடித்துள்ளனர்.

அழகிய பெண்களுடன் உரையாடும் போது உங்கள் மூளை வெகுவாகப் பாதிக்கப் படும் என்கிறார் ஒரு ஒல்லாந்து விஞ்ஞானி. அவரது முகவரியை ஒரு கவர்ச்சிகரமான அழகி கேட்டபோது அவருக்கு அவரது முகவரி ஞாபகத்தில் வரவில்லை. இது ஏன் என்று ஆராய்ந்தார் அவர். இதற்காக அவரது 40 மாணவர்களைப் பயன்படுத்தி ஒரு ஆய்வினை மேற் கொண்டார்.
அவரது முடிவு: அழகிய பெண்களுடன் கதைக்கும் போது ஆண்களின் மூளை பாதிப்படைகிறது. இந்த ஆய்வு வேலையிடங்களிலும் கல்லூரிகளிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துமாம். Dr George Fieldman of the British Psychological Society said: "When a man meets a pretty woman he is 'reproductively focused'. But a woman also looks for other signs such as wealth, youth and kindness. The look of a man alone would be unlikely to have the same effect."

பதவியைத் தக்க வைக்கத் துடிக்கும் பான் கீமூன்


மெனிக் பாம் முகாமைப் பார்வையிடும் பான்.


ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதவிக் காலம் இரண்டரை ஆண்டுகளைத் தாண்டி விட்டது. அவரின் மொத்த பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அது முடிய இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் அவர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்படலாம். அவர் இப்போது அவரது பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதற்கு இருவகையான சவால்களை எதிர் கொள்கின்றார். ஒன்று ஐ. நா ஊழியர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு மற்றது மேற்கு நாடுகளின் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு.

மோசமான முகாமைத்துவம்
பான் கீ மூன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்பதும் தனக்கு நெருக்கமான சில கொரிய ஆலோசகர்களுடன் மட்டும் நல்ல உறவு நிலையில் இருக்கிறார் என்பதும் அவருக்கு ஐநா ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இதனால் அவரது முகாமைத்துவத் திறனுக்கு பத்துக்கு இரு புள்ளிகளை மட்டும் வழங்கியது தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை. Joseph Nye from Harvard University suggests: "He might ask himself whether he's got the balance quite right on speaking up verses mediating.

"I think he might ask himself if he might do a little bit more on managing the institution."

சத்தமின்றிச் சாதிக்கிறாரா ஊமையாக இருக்கிறாரா?
பான் கி மூன் அமைதியாக இருந்து காரியத்தைச் சாதிக்கக் கூடியவர் என்று சிலர் அவரைப் பற்றி கருத்துத் தெரிவித்தனர். தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை என்பது மேற்குலக முதலாளித்துவப் பத்திரிகை என்று விட்டாலும். அல்ஜாசீரா அவர் ஊமையாக இருக்கிறார் என்று கருத்து வெளியிட்டது. அதன் கருத்து இப்படி வந்தது: "There's a difference between quiet diplomacy and non-existent diplomacy, or silent diplomacy, which is what we have at present."

இலங்கையில் விட்டது இமாலயத் தவறு.
போரை நிறுத்துவது, போரில் அகப்பட்ட பொது மக்களைப் பதுகாப்பது, போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்வது, போரினால் இடம் பெயர்ந்தோருக்கு உதவுவது இவற்றில் எந்த ஒன்றையும் ஐநாவோ அதன் உப அமைப்புக்களோ சரியாக எதையும் செய்யவில்லை. போர் நடக்கும் போது இலங்கைக்கு செல்ல நேரமில்லை என்று தட்டிக் கழித்தமை, அனுப்பிய தூதர் (வில்லன்) விஜய் நம்பியார்( இவரின் சகோதரர் இலங்கையின் இராணுவ ஆலோசகர்) இலங்கைக்கு சென்று அங்கு பேச்சு வார்த்தை நாடாத்திவிட்டு உடன் ஐநா திரும்பி உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தியா சென்று இலங்கைக்கு போரை முடிக்க கால அவகாசம் கொடுப்பது போல் நேரத்தை விணாக்கியமை. பின்னர் பாதுகாப்புச் சபைக்கு தனது பயணம் பற்றி அறிவிக்க நம்பியார் மறுத்தமை சரணடைய முயன்ற புலிகளின் அரசியல் துறையினரை பாது காக்கத் தவறியமை எல்லாமே இலங்கை விவகாரத்தில் பான் கீமூன் செய்த இமாலயத் தவறு.

நோர்வேயில் இருந்து வந்த குற்றச் சாட்டு.
சிறீலங்காவின் இராணுவ வெறியாட்டத்திற்கு அடிபணிந்தவர் ! பர்மீய இராணுவ ஆட்சியாளர் அடாவடித்தனத்தை அமைதியாகப் பார்த்தவர் ! பான் கி மூன் தனது பதவிக்குரிய ஆளுமை கொண்ட ஒருவரல்ல என்ற விமர்சனத்தை நோர்வேயின் ஐ.நா பிரதிநிதி முன்வைத்துள்ளார். பான் கி மூனின் பலத்த ஆளுமைக்குறைவை ஏற்கெனவே பலர் சுட்டிக்காட்டினாலும், இப்போது அது அம்பலமாகியுள்ளது. இதுவரை மௌனமாக இருந்த நோர்வே அவர் மீது விமர்சனத்தை முன் வைத்திருப்பது உலகின் கவனத்தைத் தொட்டுள்ளது. மேற்படி கடும் விமர்சனத்தை நோர்வேயின் ஐ.நா பிரதிநிதி மோனா யூல் தனது குறிப்புரையில் முன் வைத்திருந்ததாக நோர்வேயில் இருந்து வெளியாகும் ஆப்ரன் போஸ்டன் பத்திரிகை சுட்டிக்காட்டியது.

பா. சரவணமுத்து
ஐ.நா. செயற்படும் விதம் குறித்து இலங்கையில் பெரும்பாலான மக் கள் ஏமாற்ற மடைந்துள்ளனர் என கருத்துத் தெரி வித்த மாற்றுக் இலங்கையின் கொள்கைகளுக்கான நிலை யத்தின் நிறைவேற்றுப் பணிப்பா ளர் கலா நிதி பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை ஜனா திபதிக்குத் தொலைபேசி அழைப்பு களை விடுப்பது மற்றும் கூட்டறிக்கை களை வெளியிடுவது போன்ற ஐ.நாவின் நடவ டிக்கைகள் மாத்திரம் போதுமானவையல்ல எனத் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா.சபை யில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரி விக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர், இலங்கைக்கான விசேட பிரதி நிதி யொருவரை ஐ.நா. செயலர் பான் கீ மூன் நியமிக்கவேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்துள்ளார். பா. சரவணமுத்தின் நாகரீகமான கிண்டல் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது மட்டுமல்ல இலங்கை அரசையும் ஆத்திரமடையச் செய்தது.

மனம் மாறுகிறாரா பான் கீ மூன்
இலங்கை விவகாரம் தனது பதவி நீடிப்பிற்கு ஆபத்தாக முடியும் என்று பான் கீ மூன் இப்போது உணர்ந்துள்ளார். அவரது அண்மைக்கால அறிக்கைகள் இதை எடுத்துக் காட்டுகின்றன. தனது பதவி நீடிப்பிற்கு பான் கீ மூன் இப்போது இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு அவர் காத்திரமாக எதையாவது செய்து காட்ட வேண்டும். இலங்கை இந்திய சீனக் கூட்டுக்கு எதிராக அவர் இதைச் சாதிக்க வேண்டும்.

Thursday 3 September 2009

சைட் அடித்தல் பற்றிய புள்ளி விபரங்கள்


  • நாளொன்றுக்கு ஒரு ஆண் சராசரியாக பத்து பெண்களைச் சைட் அடிக்கிறார்.
  • நாளொன்றுக்கு ஒரு ஆண் சராசரியாக 43 நிமிடங்கள் சைட் அடிப்பதில் செலவழிக்கிறார்.
  • நாளொன்றுக்கு ஒரு பெண் சராசரியாக ஆறு ஆண்களைச் சைட் அடிக்கிறார்.
  • சூப்பர் மார்கெட் ஆண்களுக்கு பிடித்தமான சைட் அடிக்கும் இடம். மதுபானச்சாலை(pub) அதற்க்கு அடுத்த இடம்.
  • ஆண்கள் பெண்களின் உடலமைப்பாலும்(figure) பெண்கள் ஆண்களின் கண்களாலும் கவரப் படுகின்றனர்.
  • இருபாலரும் சைட் அடிக்கப் படுவதால் கவிழ்ந்து விடுகின்றனர். ஆனாலும் இருபது வீதமான பெண்கள் தாங்கள் சைட் அடிக்கப் படுவதால் அசௌகரியப் படுகின்றனர்.
  • சைட் அடிப்பவர்களில் 35 விழுக்காட்டினர் காதல் வசப் படுகின்றனர்.
இந்தப் புள்ளி விபரங்களைத் திரட்டியவர்கள் Kodak Lens Vision Centre.

இந்நிலையில் சைட் அடிப்பவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள ஆலோசனைகள்:

Here are five tips to increase your chances of meeting someone special...

FOR HIM

1. You're both listening to the same band, you ask for her favourite song, then cue it up in your I-pod and hand her an earpiece.
2. You wear a 'I'm single but not lovin' it' T-shirt and say 'But I might not be if you were around'.
3. You're both listening to the same music; you saunter over to her and say in your best rock star voice: 'I'll bet that you look good on the dance-floor!'
4. You attach a long tube to a bottle of alcoholic beverage which snakes out of your bag and up around your neck and say, 'hey you wanna suck on this?'
5. You say Women are From Mars, Men are Idiots but I'd still like to get to know you…

FOR HER

1. He's wearing a Kings of Leon t-shirt, you say 'OMG, I' love that band!' and take it from there.
2. You bump into him, spill your drink all over him and say, 'Why don't I buy us both a new one?'
3. You smile and say 'do you know what time the next band starts?'
4. You say: 'We're going dancing after the gig. You wanna come?'
5. You buy an ice-cream, take a big slurpy mouthful, and offer him one.

கேணல் கடாபியும் மஹிந்த ராஜபக்சேயும்


கடாபியையும் பயங்கர வாதி என்றனர்.
மண்டேலாவையும் பயங்கரவாதி என்றனர்.

Wednesday 2 September 2009

கணனி மொழிக் காதல்


பகற்குறியும் இரவுக்குறியும்
காட்டி வந்த நாயகன்
நகக்குறியும் பற்குறியும்
இட்டுச் சென்றான்
இது கன்னித் தமிழில்
அகத்திணைக் காதல்

கணனித் தமிழில்
வலயவுலகில்
ஆறாம் திணைக் காதல்
எப்படித்தானிருக்கும்

தட்டச்சு நீயாக தடவும் விரல் நானாக
சொடுக்குக்கு ஏங்கும் பணிப்பட்டை(task bar)
போலத் தவிக்குது என்மனம்.

மென்பொருள் நீயன்றோ(software)
பயனர் நானன்றோ
கிருமிகள் ஏன் இங்கே.

உன் இதயத்தில் எனைக்காண
தேவை ஒரு தேடு பொறி(search engine)

என் வன்பொருளின்(hardware)
ஒவ்வொரு எண்ணுண்மியும்(bytes)
வாடுது உனை எண்ணி

உன் மனக்கதவில்
என் இந்த மெல்லினப் பூட்டு(caps lock)

தரவிறக்கம் செய்யாயோ(download)
உன் இதயத்துள் என்னை

காலாச்சாரமும் கவர்ச்சியும் இணைந்த நொட்டிங் ஹில் களியாட்டம்















ஒவ்வோருவருடமும் பிரித்தானியா வாழ் திரிநாட் தேசத்து மக்கள் தமது விடுதலையையும் எழுச்சியையும் குறிக்கு முகமாக ஆகஸ்ட் மாதத்து கடைசி ஞயிற்றுக் கிழமை ஒரு களியாட்ட விழாவாகக் கொண்டாடுவர். இப்போது பல் இனத்தவரும் இணைந்து இன ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வாக இது அமைகிறது. மேலதிக தகவல் அறிய: இங்கு செல்லவும்.

இவ்வாண்டு நடந்த நிகழ்வின் படங்கள்:

இலங்கை: இந்தியா தனது உண்மையான கொள்கையை வெளியிட வேண்டும்.



.










ஜவகர்லால் நேரு இலங்கையில் தமிழர்களைப் பிரித்து வைத்தார்.

லால் பகதூர் சாஸ்த்திரி தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கினார்.

இந்திரா காந்தி தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து சிங்களவர்களுடன் சண்டையிட வைத்தார்.

ராஜீவ் காந்தி தமிழர்களை அழிக்க முற்பட்டார்.

இப்போது இந்தியாவின் அதிகாரத்திலுள்ளவர்கள் தமிழர்களை நிற்கதியாக்கினர்.

இந்தியா இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக என்ன நிலைப் பாட்டில் இருக்கிறது.

தமிழர்களைப் பொறுத்தவரை மிகத் துர்ப்பாக்கிய நிலை தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்கையோர் எல்லாம் இந்தியவின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் தமது சுதந்திர வேட்கையை இந்திய சுதந்ததிர போராட்ட வீரர்களிடமிருந்தே பெற்றனர்.

இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது இலங்கையின் பதின்மூன்றாம் அரசியலமைப்பு தொடர்பான தகவல்கள் டெல்லியில் இருந்து வந்தன. பதின்மூன்றாம் திருத்தத்திலும் மேலாக அதிகாரப் பரவலாக்கம் செய்யப் படும் என்று டெல்லியில் இருந்து தகவல்கள் வந்தன. இப்போது அதைப் பற்றிய பேச்சே இல்லை.

ராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தப் படி விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுத நடவடிக்கையில் இந்தியப் படையினர் ஈடுபட்டனர். அந்த ஒப்பந்தப் படி பதின்மூன்றாம் திருத்தம் நிறைவேற்றப் படாமைக்கு எதிராக இந்தியா என்ன நடவடிக்கை எடுககப் போகிறது? இந்தியாவின் கேணல் ஹரிகரன் இப்படிக் கூறுனார்:
இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா முன்னர் காத்திரமாகக் கருத்துத் தெரிவித்து வந்தது. பின்னர் 13 ஆவது சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புவதாக அது இறங்கி வந்தது.

அதுவாவது நடக்குமா என்ற சந்தேகம் வந்தபோது இந்தியா வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்துவிட்டது.

எகிப்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத் தொடரின்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேசிக்கொண்டதன் பின்னரே இந்தியா வாயை மூடி மௌனியானது.

தமிழர்களை கேவலப் படுத்திய கேணல் ஹரிஹரன்.
It is Hobson’s Choice for Tamils என்று ஒரு கட்டுரையை கேணல் ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார். ஹொப்சன் என்னும் குதிரை வாடகைக்கு விடும் ஆங்கிலேயர் தனது ஒரு குதிரையை மட்டும் எல்லோரும் வாடகைக்கு கேட்பதால் தான் கொடுக்கும் குதிரையை வாடகைக்கு பெறவேண்டும் அல்லது ஒரு குதிரையும் கிடைக்காது என்று நிபந்தனையை விதித்தாராம். ஆங்கிலத்தில் நடைமுறையில் இப்போது இல்லாத ஒரு சொற்தொடரை ஹரிஹரன் தேடி எடுத்து அதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் (என்னையும் அதன் தாற்பரியத்தை தேடி அலைய வைத்து) எழுதினார். அதாவது தமிழர்கள் முன் உள்ள ஒரே தெரிவு சிங்களவர்கள் கொடுப்பதைப் பெறுங்கள் அல்லது உங்களுக்கு எதுவுமில்லை என்று ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார்.

சோனியா காந்தி அம்மையார்
சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சோனியா அம்மையார் அங்கு சொன்னார் இலங்கையில் தமிழர்கள் கௌரமாகவும் சுதந்திரமாகவும் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்று!!!!
31-03-2009 இலன்று சோனியா அம்மையார் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு எழுதியகடிதத்தில் கூறியது:
As you are aware, the Congress Party has for nearly three decades espoused the cause of the Tamils in Sri Lanka and has urged successive Sri Lankan governments to ensure that all communities, particularly, the Tamil speaking people, are guaranteed and enjoy equal rights within the framework of a united Sri Lanka.

(கடந்த முப்பதாண்டு காலமாக காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகத் துணை நின்று வருவதை யும், ஒன்றுபட்ட இலங் கைக்கு உட்பட்டு அனைத்து சமுதாயத்தி னரும் குறிப்பாக இலங் கைத் தமிழர்களும் சம உரிமையோடு வாழ வேண் டும் என்பதைத் தொடர்ந்து வருகின்ற இலங்கை அரசுகளிடம் வலியுறுத்தி வருவதையும் தாங்கள் நன்கறிவீர்கள்)

இவை எதுவும் நடக்கவில்லை.
இந்தியா தமிழர்களைப் பொறுத்தவரை இரட்டை வேடம் போடுகிறது. பகிரங்கமாக அது தெரிவிப்பது வேறு திரைமறையில் அது சிங்களவர்களுக்கு தெரிவிப்பது வேறு என்பது இப்போது உறுதியாகிவிட்டது. தனது சிங்களவர்களுக்குச் சார்பானதும் தமிழர்களுக்கு எதிரானதுமான நிலைப் பாட்டை இந்தியா தனக்குத் திராணி இருந்தால் பகிரங்கப் படுத்தட்டும். அல்லது தமிழர்களுக்கு தான் வாக்குறுதியளித்தது போல் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நடக்கச் செய்யட்டும்.

Tuesday 1 September 2009

ஐநா அதிகாரி சனல்-4 ஒளிபரப்பிய காணொளியை தீவிர பரிசீனை.


ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்கு புறம்பான கொலைகளுக்கான சிறப்பு விசாரணை அதிகாரி பிலிப் அல்ஸ்டன் சனல்-4 தொலைக்கட்சி ஒளிபரப்பிய இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் கொடூரக் கொலைகள் பற்றிய காணொளிப் பதிவை தாம் அதி உச்ச அக்கறையுடன் பரிசீலிப்பதாகவும் அது உண்மையானால் அது பாரிய சர்வதேசச் சட்ட மீறல் எனவும் தெரிவித்தார். சனல்-4 தொலைக்காட்சிக்கு அவர் இன்று (01/09/2009)வழங்கிய நேர்காணலில் இதைத் தெரிவித்தார். பேட்டியின் காணொளி:

முப்பதினாயிரம் புலிகள் - ஆயுத விற்பனையாளர்களின் சதி!



இலங்கை அரசை அதிர்ச்சியளிக்க வைத்ததாம் அவர்களிடம் இருந்த நவீன சீன ஆயுதங்கள். இலங்கையின் நட்புறவு நாடான சீன விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதா? இலங்கைக்கு என்றும் நல்ல நண்பனாக இருக்கும் நாடு அப்படிச் செய்யவில்லை. ஆயுத வர்த்தகர்களே விடுதலைப் புலிகளுக்கு அந்த ஆயுதங்களை விற்றனர். இலங்கைப் போரில் பெரும் பொருளீட்டியவர்கள் ஆயுத வியாபாரிகளே. இவர்கள் இப்போது புதுக் கதை கட்டி விட்டுள்ளனர்.

http://www.strategypage.com என்ற இணையத்தளம் ஒரு புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளது:
இலங்கைப் படையினருடனான இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்கள் தமது இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பார்கள் என்றும், இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து அந்த இணையத்தளம் தெரிவிப்பது: இலங்கை இராணுவத்துடனான இறுதிக் கட்ட யுத்தத்தின்போது சுமார் 30 ஆயிரம் புலி உறுப்பினர்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றார்கள். அவர்கள் ஆயுதமற்ற புலிகள் ஆவர். ஆனால், மிகவும் ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்குபவர்கள். அவர்கள் தற்போது புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு முயற்சித்து வருகின்றார்கள்.

இவற்றை மட்டுமே பிரசுரித்த பல தமிழ் இணையத்தளங்கள் அந்த http://www.strategypage.com என்றஇணையத்தளத்தை சரியாக வாசிக்காமல் dailymirror இணையத்தளத்தில் இது தொடர்பாக வந்த செய்தியை மட்டுமே வாசித்துவிட்டு எழுதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை புலிகள் பலமுடன் இருக்கிறார்கள் என்று காட்டினால் மட்டும்போதும். துள்ளிக் குதிப்பார்கள். அந்த இணையத்தளம் ஏன் இப்படி ஒரு தகவலை வெளியிடுகிறது என்று பார்க்கத் தவறிவிட்டனர்.

இறுதிக் கட்டப் போரில் விடுதலைப் புலிகள் எப்படிச் சுற்றி வளைக்கப் பட்டனர் என்பதை மேலுள்ள படம் காட்டுகிறது. அதுவும் டெய்லிமிறர் பத்திரிகையிலேயே வெளிவிடப்பட்டது. அப்படத்தில் இல்லாததும் உண்டு. பக்கத்து நாட்டுக் கடற்படையிரனர் நீர்மூழ்கிக்கப்பல் உட்பட அணிவகுத்து நின்றது மேலுள்ள படத்தில் இல்லை. தாக்குதல் நடத்தக் கூடிய முப்பதினாயிரம் புலிகள் இருந்திருந்தால் அவர்கள் வலிந்த தாக்குதல் செய்திருப்பர். முப்பதினாயிரம் விடுதலைப் புலிகள் இருந்தனர் என்பது அப்பட்டமான பொய்.

http://www.strategypage.com இன் செய்தியின் விளைவிகள் என்ன?
  • முப்பதினாயிரம் தமிழர்களைக் கொல்லலாம்.
  • முப்பதினாயிரம் தமிழர்களை புலிகள் என ஒப்பு வாக்கு மூலம் கொடுக்கச் செய்து மரண தண்டனை வழங்கலாம்.
  • வன்னி வதை முகாம்களில் இருப்பவர்களில் முப்பதினாயிரம் பேரையும் கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லி அவர்களின் விடுதலையை மேலும் தாமதப் படுத்தலாம்.
  • பல்லாயிரம் தமிழர்களை சந்தேக நபர்கள் எனச் சொல்லி வடக்குக் கிழக்கில் கைது செய்து காலவரையின்றிச் சிறையில் அடைக்கலாம்.

http://www.strategypage.com இன்னும் என்ன சொல்கிறது?
The government is negotiating with Pathmanathan to find out where the remaining funds are, and what shape the offshore LTTE organization is in.
இலங்கை அரசு பத்மநாதனுடன் பேச்சுவார்த்தை நடாத்துகிறதாம்!!!!
கடத்திக் கொண்டுவந்து வன்முறை மூலம் தகவல்களை கறப்பது அந்த இணையத் தளத்தைப் பொறுத்தவரை பேச்சு வார்த்தை.

Meanwhile, some atrocities have taken place, but often against Sri Lankans who don't get along with the police. Over more than two decades of terrorism and violence, the national police have acquired an attitude that they are above the law.
இலங்கையில் சில கொடூரங்கள் நடந்தனவாம். 1956இல் குழந்தைகளை கொதி தாரில் போட்டதிலிருந்து நேற்று வன்னி முகாமில் இறந்த குழந்தைகள் வரை எத்தனை குழந்தைகள் இறந்தன என்று கணக்குண்டா? இவை சில கொடூரங்களா? இந்த இணையத்தளம் ஏன் இப்படிப் பொய் கூறுகிறது.

இலங்கையில் நடக்கும் மனித உரிமைமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஐரோப்பியர்களை அந்த இணையத்தளம் கண்டித்துள்ளது. அதுவே அதன் தலைப்பாகவும் அமைந்துள்ளது.
European Racists Close In என்பதுதான் கட்டுரைத் தலைப்பு. ஒரு இனக்கொலைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை இந்த இணையத்தளம் ஏன் இனவாதிகள் என குற்றம் சாட்டுகிறது.

இலங்கையில் இந்தமாதத்தில் கண்டெடுக்கப் பட்ட தற்கொலைதாரிகளின் பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.

வன்னிமுகாமில் உள்ள மக்களின் அவலம் பற்றியோ அல்லது அவர்கள் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்திருப்பது பற்றியோ குறிப்பிடாத
http://www.strategypage.com இணையத்தளம் அவர்கள் இப்போதைக்கு விடுவிக்கப் படமாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

http://www.strategypage.com இப்படிச் சொல்வது ஏன்?
மொத்தத்தில் இந்தக் கட்டுரை எழுதியவர் இலங்கைக்கு வக்காலத்து வாங்குகிறார் என்பதும் இலங்கையில் இன்னும் விடுதலைப் புலிகளால் பேராபத்து உண்டு என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். அதாவது இலங்கை இன்னும் ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் கட்டுரையின் உள் அர்த்தம் போலத்தான் தெரிகிறது. ஆயுத வியாபாரிகள் இப்படியும் சதி செய்வார்களா?


Monday 31 August 2009

ஈழத் தமிழர் கொலை:பான் கீ மூன் பதவி விலக வேண்டும்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் உள்ளிட்டோர் சரணடைவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் தலைமைச் செயலரான விஜய் நம்பியார் இலங்கையில் இருந்தபோது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியிருக்கிறார். இத்தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் மிச்சேல் மொன்டாஸ் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் அவர்களிடமும் இது தொடர்பாக புலித்தேவன் தெரிவித்தார். விஜய் நம்பியார் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக, சரணடைதல் தொடர்பான வேண்டுகோளுடன் பிரித்தானிய ஊடகவியலாளரான மேரி கொல்வின் அவரை முதலில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதி ஒருவரும் விஜய் நம்பியாரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். சரணடைவதாக இருந்தால் இலங்கை படையினரிடம்தான் சரணடைய வேண்டுமே தவிர மூன்றாவது தரப்பினரிடம் அல்ல என்பதை இலங்கை அரசு வலியுறுத்தி வருகிறது என்ற செய்தியை விஜய் நம்பியார் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார். சரணடைவதற்கு விரும்பிய நடேசனிடமும், புலித்தேவனிடமும் வெள்ளைக்கொடியை ஏந்தி இலங்கை படையினரிடம் காட்டினால் போதும், பாதுகாப்பாக சரணடையலாம் என்று விஜய் நம்பியார் கூறியிருக்கிறார். நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி வேண்டுகோள் ஊடகவியலாளர் மேரி கொல்வின் மூலமாக விஜய் நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உரிய முறையில் இலங்கை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினர் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்றபோது சுட்டுக் கொல்லப் பட்டனர். இதன் பின்னால் ஒரு சதி இருந்திருக்க வேண்டும். இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வேரோடு அழித்தொழிக்கும் எண்ணத்தையே கொண்டிருக்கிறது. அதன் இராணுவ ஆலோசகர் சதீஷ் நம்பியார் அவரின் சகோதரர் விஜய் நம்பியாரை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்குத் தூதுவராக அனுப்பியது ஒரு சதியன்றி வேறு எது? இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு செல்லும்படி அவரிடம் வலியுறுத்திய போது அவர் அதைத் தட்டிக் கழித்து விட்டு போர் முடிந்த பின் இலங்கை சென்றார். சம்பந்தமில்லாமல் கண்டி சென்றார். மிக உயரத்தில் இருந்து வன்னி முகாம்களை பார்வையிட்டுவிட்டு அறிக்கை விட்டார். இதனால்தால் Foreign Policy இணையத்தளம் மிக ஆபத்தான கொரியர் என்று விமர்சித்தது. The Economist சஞ்சிகை இலங்கை விவகாரத்தில் அவரது செயற்பாட்டை வைத்து அவருக்கு பத்துக்கு மூன்று புள்ளிகள் வழங்கியது. பான் கீ மூனுடன் பணியாற்ற முடியாதளவிற்கு அவர் அடிக்கடி ஆத்திரமடைகிறார் என்றும் தலைமைத்துவத்தைப் பேண முடியாமல் தத்தளிக்கிறார் என்றும் பொறுப்பற்றவராக காணப்படுகிறார் என்றும் ஐ.நா. வுக்கான நோர்வே தூதுவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்தரங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஒஸ்லோ தினசரி ஆவ்தென்போஸ்டன் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா. ஸ்தாபனமும் உலக நெருக்கடிகளுக்கு தீர்வும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அவசியப்படும் இந்தக் காலகட்டத்தில் பான் கீ மூனும் ஐ.நா. ஸ்தாபனமும் ஆச்சரியகரமான முறையில் மெளனம் சாதிப்பதாக ஜுலின் அறிக்கை கூறுகிறது.

இப்போது
The Economist சஞ்சிகை மீண்டும் பான் கீ மூன் அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என பிரபல தி எகனோமிஸ்ட் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் எதிர்நோக்கி வரும் அவலங்கள் தொடர்பில் பான் கீ மூன் வெறும் பார்வையாளராக செயற்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் பான் கீ மூனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, நோர்வேயின் சுழல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இப்படிப் பல முனைகளிலும் இருந்து விமர்சிக்கப் படும் பான் கீ மூன் தனது பதவியில் இருந்து விலக வேண்டும்.

Sunday 30 August 2009

கொல்லப் பட்ட தமிழர்களிடமிருந்து மனித உறுப்புக்கள் திருடப்பட்டனவா?


இலங்கையில் போர் மும்முரமாக நடந்து கொண்டு இருந்த வேளை இராணுவ முகாம் ஒன்றுக்குள் சென்ற பாதிரியார் ஒருவர் தற்செயலாக பல இறந்த உடல்கள் உள் உறுப்புக்கள் அகற்றப் பட்ட நிலையில் இருந்ததை காண்டு அதை தனது கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்து வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் பாரிய மனித உறுப்புகளுக்கான வைப்பகம் ஒன்று அமைக்கப் பட்டிருந்ததும் வெளிவந்ததோடு 10,000 சோடிக்கண்கள் ஏற்றுமதி செய்யப் படும் என இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும் நாடொன்றிற்கு வாக்குறுதி செய்யப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.

அயல் நாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் பார்க்க வந்த மருத்துவர்கள். படுகாயமடைந்த அப்பாவித்தமிழர்களை கொன்று அவர்களின் உறுப்புக்களைத் திருடியதாகவும் செய்திகள் வந்தன.

இலங்கை இராணுவத்தினர் வெளியிட்ட கொல்லப் பட்ட விடுதலைப் புலிகளின் படங்கள் பல கண்கள் மறைக்கப் பட்டு இருந்தன.

இப்போது அதிர்வு(www.athirvu.com) இணையத்தளம் இலங்கையில் கொல்லப் பட்ட தமிழர்களின் பல படங்களை வெளியிட்டுள்ளது. அவை மனதைக் கலங்கடிக்கும் தன்மையுள்ளன. அப்படங்களைப் பார்க்கும் போது மனித உறுப்புத் திருடப் பட்டு இருப்பது சில இறந்த உடல்களைப் பார்க்கும் போது தெரியவருகிறது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...