Saturday 2 May 2009

கலைஞர் ஐயா, ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு உங்களை ஏமாற்றிவிட்டது.



கலைஞர் ஐயா, ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு உங்களை ஏமாற்றிவிட்டது.

இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை கண்டு தமிழக முதல்வர் கலைஞர் ஐயா குடும்பத்தினருக்கும் தெரியாமல் உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். இந்த விடுதலைத் தீ நாடுமுழுவதும் பரவுவதைத் தடுக்க ஆரியர்கள் சதி செய்து உங்களுக்கு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று பொய் சொல்லி ஏமாற்றி விட்டனர். ஆனால் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு முதலில் கனரக ஆயுதங்கள் பாவிக்கப் பாடாது என்று சொல்லி முழு உலகையும் ஏமாற்றி விட்டனர். இப்போது சகல பயங்கர ஆயுதங்களையும் பாவித்து தமிழர்களைக் கொன்று குவிக்கின்றனர்.
கலைஞர் ஐயா இந்த ஏமாற்றுக்கார காங்கிரசு கட்சியின் தோழமை உங்களுக்கு வேண்டாம். ஈழத் தமிழினக் கொலைக்கு துணை போகும் அப்பாதகர் உறவு கல்லக்குடி கொண்டானுக்கு உகந்ததல்ல. உதறுங்கள் காங்கிரசை. பதவி உங்களுக்கு துச்சம் இது உங்களுக்கு பிடித்த வாசகம். அத் திருவாசகத்தை பின்பற்றுங்கள்.
ராஜபக்சேயின் நண்பன் மணிசங்கர ஐயர் அருகில் நீங்கள் இருப்பது பன்றிக்கு பக்கத்தில் சிங்கம் இருப்பது போலல்லவா? தமிழர் இரத்தம் தோய்ந்த கைச்சின்னம் களங்கமற்ற சூரியனுக்கு அருகிலா? அசிங்கம் அசிங்கம் கலைஞர் ஐயா.
கைவிடுங்கள் கைச்சின்னத்துடன் உங்கள் உறவை. அப்போதுதான் தமிழின உணர்வாளர் ஆதரவு உங்களுக்கு உண்டு.
தமிழினத்துக்கு நீங்கள் தலவரா? இல்லைத் துரோகியா? முடிவு செய்யுங்கள் ஐயா.

இலண்டனில் மேதின ஊர்வலத்தில்

இருந்து விரட்டப் பட்ட சிங்களக் கட்சி.
இலண்டனில் உள்ள பல்லினத்தவரும் கலந்து கொண்ட மேதின ஊர்வலத்தில் கலந்து கொள்ளச் சென்ற சிங்களப் பேரினவதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனையை ஊர்வல ஏற்பாட்டாளர்கள் விரட்டினர். இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஆபிரிக்க சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினக் கொலை செய்யும் இலங்கை இராணுவத்திற்கு பேராதரவு தெரிவிக்கும் இவர்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்திய கால் மாக்ஸின் கொடிக்குக்கீழ் ஊர்வலம் போகும் தகுதி இல்லை என்று கூறினர். அது மட்டுமல்ல தமிழ்ப் புலிகளுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்றும் ஊர்வலத்தில் குரல் கொடுத்தனர்.

Friday 1 May 2009

சனியாள் பக்சராஜன் டூயட்டு - 3



சனியாள்
தலை கொடு தலை கொடு
பிரபா தலை கொடு

பக்சராஜன்
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
காசு கொடு ஆயுதம் கொடு
படை கொடு பயிற்சி கொடு
.
சனியாள்
தேர்தல் நடக்குது நடக்குது
முடிச்சிடு முடிச்சிடு
தேர்தலுக்கு முன் முடிச்சிடு
.
பக்சராஜன்
வாராங்க வாராங்க
மாறி மாறி வாராங்க
யுஎன்னும் வாரான்
யுகேயும் வாரான்
பிரெஞ்சும் சேர்ந்து வாரான்

சனியாள்
தலை கொடு தலை கொடு
பிரபா தலை கொடு
.
பக்சராஜன்
விடு விடு என்கிறாங்க
சண்டையை உடனே
விடு விடு என்கிறாங்க
.
சனியாள்
விடாதே விடாதே - பிரபாவைப்
பிடிக்கும் வரை விடதே
புலிகளை முடிக்கும் வரை
விடாதே விடாதே
.
பக்சராஜன்
விடமாட்டான் தம்பி
நான் விட்டாலும் விடான்
அவன் விடவே மாட்டன்
என் சிங்கக் குட்டி
.
சனியாள்
தேர்தலில் தோற்றால்
என் கதி என்ன
என் புள்ளைங்க கதி
என்னதான் ஆகும்.
அடி அடி முடி முடி
.
பக்சராஜன்
தலையிடி தலையிடி
நீயடி தலையிடி
தலையீடு தலையீடு
பல நாயும் தலையீடு.
.
சனியாள்
தலை கொடு தலை கொடு
பிரபா தலை கொடு
.
பக்சராஜன்
ஹரதர ஹரதர ஒயா
ஹரிமட்ட ஹரதர

மூன்று சகோதரர்க்ளும் ஒரு சனியாளும் போர் வெறியில்


இலங்கையை ஆட்டிப் படைக்கும் மூன்று சகோதரர்களும் தங்கள் அயல் நாட்டுச் சனியாளுடன் கூடி போர் வெறி பிடித்து அலைகின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை போர் நிறுத்தம் வேண்டி இரு தீர்மானங்கள் நிறைவேற்றியது நால் வரும் செவி சாய்க்கவில்லை.
விடுதலிப் புலிகள் ஒருதலைப் பட்சமான போர் நிறுத்தம் அறிவித்தனர். அது எள்ளி நகையாடப் பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை மூன்று முறை போர் நிறுத்தம் செய்யும்படி கேட்டது. மறுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை அப்பாவிப் பொது மக்களைப் பாதுகாக்க ஒரு வாரத்துக்கு போரை ஒத்திவைக்கும்படி கேட்டது. மறுக்கப் பட்டது.
பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவ சர்வ தேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுமது அளிக்கும் படி ஐ.நா விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டது.
நாட்டில் நடக்கும் உண்மை நிலையை அறிய நடுநிலைப் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது.
இலங்கப் பிரச்சனையைப் பற்றி நன்கு அறிந்த சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப் பட்டது.
போர் நிறுத்தம் வேண்டி அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டது.
பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் அவர்களுடன் கடுமையான வாய்த்தர்கத்தில் கோத்தபாய ஈடுப்ட்டார். அதி வேண்டுமென்றே தன் வீரத்தை வெளிப்படுத்து முகமாக பகிரங்கப் படுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு வலயம் என்று ஒன்று இலங்கையில் இல்லை என்று கூறியுள்ளார்.
ஐநாவின் ஒருமித்த குரல் வேண்டுமென்கிறார் - ஜோன் ஹொல்ம்ஸ் அவர்கள்.
இலங்கை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புச் சபை உறுப்பினர் ஒரு மித்து குரல் கொடுக்க வேண்டுமென்கிறார் ஐநாவின் மனிதாபிமானங்களுக்கான உயர் அதிகாரியான ஜோன் ஹொல்ம்ஸ் அவர்கள். இலங்கை சென்று திரும்பிய பின் மூடிய அறைக்குள் அவர் நடத்திய கூட்டத்தில் அவர் இதைக் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. இலங்கை தொடர்பான விடயங்களை ஐநா பகிரங்கமாக அறிவிக்காமல் இரகசியமாக வைத்திருந்து பின் கசிய விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. போரில் இறந்த அப்பாவிப் பொதுமக்கள் தொகை, போருக்குள் சிக்கியுள்ள மக்கள் தொகை, போரினால் எற்பட்டுள்ள அழிவுகள் போன்ற தகவல்களை பகிரங்கமாக அறிவிக்காமல் பின் கதவால் கசியவிடும் பணியை ஐநா செய்கிறது.

Thursday 30 April 2009

சிங்கள வதை முகாம்களில் தமிழர்கள் படும் வேதனை - அதிர்ச்சித் தகவல்கள்



இப்படங்களை இராணுவத்தினர் எடுத்து தமது நண்பர்களுக்கு அனுப்பினார்கள். அது இப்போது பகிரங்கமாகி விட்டது.....
சிங்களக் கொடுங்கோலரசு நடாத்தும் வதை முகாம்களிள் தமிழர்களுக்கு நடக்கும் அட்டூழியங்கள் அளப்பரியன. ஒரு சில முகாம்களை சர்வதேச தரத்திற்கு அமைய அமைத்து விட்டு வெளி நாட்டு இராச தந்திரிகளுக்கு அவற்றை காட்டிவிட்டு மற்றவற்றில் பெரும் கொடுமைகள் நடக்கின்றன. மிக நெருக்கமாக மக்களை அடைத்து வைத்து விட்டு அவர்களுக்கு ஒழுங்காக உடை உணவு கொடுப்பதில்லை. சாப்பாட்டை எறிந்து விட்டு அவற்றை சண்டட பிடித்து எடுக்கும் படி மக்கள் பணிக்கப் படுகிறார்கள். அவர்கள் சண்டை பிடிப்பதை சிங்களவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். சண்டை பிடிக்காதவர்களுக்கு அடி உதை. இதில் ஒருநாள் இரு சிறார்கள் கொல்லப் பட்டனர். பலர் நோய் வாய்ப்பட்டு இறக்கின்றனர். பட்டினிச் சாவும் நடப்பது உண்டு. இளம் ஆண்கள் நிர்வாணமாகக் கட்டி வைக்கப் படுகின்றனர். தப்பி ஓடாமல் இருக்க இந்த ஏற்பாடு.
..
தருணம் பார்த்து அறிக்கை விட்ட அசோக் மேத்தா.
பிரித்தானிய பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருவதற்கு முன்கூட்டியே புலிகளை ஒழிக்க இதுதான் தருணம் இதைத் தவற விட்டால் வேறு தருணம் கிடைக்காது என இந்திய அமைதிப் படை எனும் அட்டூழியப் படைய இலங்கையில் வழிநடாத்திய அசோக் மேத்தா அவர்கள் அறிக்கை விட்டார். இது உடனடியாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் வலயத் தளத்தில் பதியப் பட்டது. இரு வெளியுறவுத்துறை அமைச்சர்களினதும் போர் நிற்த்தக் கோரிக்கைய இலங்கையை நிராகரிக்க தூண்டுவதற்காக இந்திய உளவுத் துறையின் சதி இது என நம்பப் படுக்கிறது.

தடுப்பு முகாம்களில் தமிழ் இளைஞர்கள் கொலை.



இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இலங்கையின் பல வேறு பகுதிகளிலும் உள்ள தடுப்பு முகாம்களில் கொலை செய்யப் படுகின்றனர் என நம்பப் படுகிறது. கடந்த சில தினங்களில் இத்தடுப்பு முகாம்களில் இருந்து பல இளைஞர்கள் கொலைக்குப் பயந்து தப்பி ஒடியுள்ளனர். போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியோறுவோரில் இளஞர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு தனியான வதை முகாம்களில் வைககப் படுகின்றனர். இவர்கள் எங்கு வைக்கப் பட்டுள்ளனர் என்றவிபரம் யாருக்கும் வெளியிடப் படுவதில்லை. இளம் பெண்கள் படையினரின் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமெரிக்கா இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனை தாமதிக்கச் செய்கிறது. இந்தியா என்ன செய்யப் போகிறது?
தனது போர் நிறுத்தக் கோரிக்கையை உதாசீனம் செய்ததால் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி அமெரிக்கா இலங்கைகான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை தாமதிக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவும் தான் இலங்கையில் போர் நிறுத்தம் கோருவதாக அறிவித்தது. தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன. இலங்கை கேட்கவில்லை. தனது கோரிக்கைக்கு செவி மடுக்காத இலங்கைக்கு எதிராக இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இந்தியாவின் போர் நிறுத்தக் கோரிக்கை வெறும் பாசாங்கா?
முதல்வர் கலைஞரின் உண்ணா விரத நாடகத்தின் பின் 600இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் கொலை.
முதல்வர் கருணாநிதி அவர்கள் உண்ணா விரதம் செய்தபின் இலங்கை போரை நிறுத்தி விட்டதாக தமிழகத்தில் வெடி கொழுத்தப் பட்டது. பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் சில கலைஞரைப் புகழ்ந்து தள்ளின. ஆனால் போர் நிறுத்தம் என்பது கிடையவே கிடையாது என இலங்கை அரசு அறிவித்தது. கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படமாட்டாது என்று சும்மா சாக்குக்கு சொல்லிவிட்டு தொடர்ந்தும் அவற்றைப் பாவித்து அப்பாவிகளை கொன்று குவிக்கிறது.
பிரபா எங்கே?
பிரபாகரனைப் பிடிக்கும் வரை போர் தொடர்ந்து நடக்கும் என இலங்கை குடியரசுத் தலைவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் எங்கே என்ற கேள்விக்கு இப்பேது விடை காண யாராலும் முடியாதுள்ளது. யாருக்கும் தெரியாத இடத்தில் அவர் இருக்கிறார். புதிய வடிவ போர் உத்தியுடன் வருவார் என்பது மட்டும் நிச்சயம்.

Wednesday 29 April 2009

வலியுறுத்தினோம் வலியுறுத்தினோம் இலங்கை வளைந்து கொடுக்கவில்லை - பிரான்ஸ்

ன்

.
.
.
.
.
.
..
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி அங்கு சென்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். போர் நிறுத்தம் செய்ய வேண்டி இலங்கையில் கடுமையாக முயற்சித்தோம் வலியுறுத்தினோம் வலியுறுத்தினோம் ஆனால் இலங்கை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை என்றார் பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் கொளச்னர். போர் நிறுத்தம் நாம் வேண்டுவது பொது மக்களைக் காப்பபற்றவே புலிகளை அல்ல என்றும் எடுத்து உரைத்தோம் இலங்கை விட்டுக் கொடுக்கவில்லை. இது பற்றி இனி எம் நண்பர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
.
எமது இராணுவ வெற்றிக்கு இந்திய
பாக்கிஸ்தானின் உதவியே காரணம் - உதய நாணயக்காரா.
இலங்கை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரா தமது இராணுவ வெற்றிக்கு இந்தியா-பாக்கிஸ்த்தானின் இடையறாத ஒதுதுழைப்பும் உதவியுமே காரணம் என்று கூறியுள்ளார். இருநாடுகளும் எமக்கு அதி நவீன தொழில் நுட்பங்களை வழங்கின என்கிறார் அவர். மேனன்-நாராயணன் ஏன் அடிக்கடி கொழும்பு செல்கிறார்கள் என்று இப்போது புரிகிறது.
..
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
..
முல்லைத்தீவு கடற் பரப்பில் கடும் சமர்.
முல்லைத்தீவு கடற் பரப்பில் இலங்கைக் கடற் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடந்துள்ளது. 5 விடுதலைப் புலிகளின் படகுகள் அழிக்கப் பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்படைக்கு சொந்தமான இரு நவீன டோராப் படகுகள் அழிக்கப் பட்டதாக இன்னோரு செய்தி கூறுகிறது.

தமிழர் பிணங்களின் மேல் நாடகமாடாதீர்கள்


பிணங்கள் மேல் நாடகம்


உடன் பிறப்புக்களே
வாழை இலைக்கீழ் பணம் வைத்து
வாக்குகளைச் சேகரியுங்கள்
தமிழன் பிணங்களின் மேல்
உண்ணா விரத நாடகமாடி
வாக்கு வேட்டையாடாதீர்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

இலங்கைப் பிரச்சனை ஒருசாதாரண


விடயம் என்றார் ராகுல் காந்தி.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு
ஆயுதம் கொடுத்து தீமூட்டினாள் பேத்தி
அப்பன் அட்டூழியங்கள் பல செய்தான்
இத்தாலி ஆத்தாள் ஒருதாலி போனதிற்கு
பல தாலிகள் பலியெடுக்கிறாள்
ராகுலே இது சப்பை மட்டரா
போமானி நீ உருப்படுவியா?



XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX




புலிகள் ஆயுதங்களை வைத்துவிட்டு


சரணடைய வேண்டும் - ப. சிதம்பரம்.


எலிகளிடம் பூனைகள் சரணடையலாம்

புலிகள் சரணடையுமா?

சிங்கங்கள் கர்ஜிக்க

நரிகள் ஊளையிடுகின்றன

புலிகளின் நாட்களை

பன்றிகள் எண்ணுகின்றன.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
மாண்பு மிகு முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தின் பின் ஈழ்த்தில் நடப்பவை பற்றி அறிய:

Tuesday 28 April 2009

காணொளியில்கனிமொழியின் பொய் மொழி- இலங்கையில் போர் நின்று விட்டதாம்.


இலங்கையில் போர் நிறுத்தம் என்று இலங்கை அரசு சொன்னதாம் இது கனிமொழியின் கனி வாய் மொழி.
பேச்சுக்கு புது இலக்கணம் வகுத்தவரின் மடியில் வளர்ந்தவரது வாய் என் இப்படித்தடுமாறுகிறது? பொய் கூறுவதலா?


மேனன்-நாராயணன் சதியும் அமெரிக்க எச்சரிக்கையும்
உண்ணா விரத கபடமும்.
இந்தியாவின் சிவ் சங்கர மேனனும் நாராயணனும் கொழும்புக்கு செய்த பயணத்தில் ஒரு பயங்கரத் திட்டம் இருந்தது. இரண்டொரு நாட்களில் எஞ்சியிருக்கும் பிரதேசத்தையும் இலங்கை கைப்பற்ற வேண்டும் என்பதும் இதை பெரிய வெற்றியாக இந்தியா வட மாநிலங்களில் பறைசாற்றுவதும் தான் அத்திட்டம். இதற்கு முன்னோடியாக பல வட இந்திய ஊடகங்களில் விடுதலைப் புலிகளை மோசமான பயங்கரவாதிகளாக பறைசாற்றப் பட்டன. புலிகளைத் தோற்கடித்த பின் இலங்கை இந்தியா ஒரு கூட்டறிக்கையை விடும் திட்டமும் இதில் அடக்கம். இக்கூட்டறிக்கையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு தடையாக இருந்த விடுதலைப் புலிகள் ஒழிக்கப் பட்டு விட்டனர் என்று கூறப்படவிருந்தது, விரைவில் இனப் பிரச்சினை சுமூகமாகத் தீர்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு வாக்காளர்களையும் ஏமாற்றலாம் என்ற நம்பிக்கை!
.
இந்திய-இலங்கையின் இந்த இனக் கொலைத்திட்டம் பாரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என்று மேற்குலக நாடுகள் அஞ்சின. அத்துடன் அங்குள்ள தமிழர்கள் திரண்டெழுவது தமக்கு பல இடையூறுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்த்தன. இதனால் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு காட்டமான அறிக்கை இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்டது. இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா ஏற்கனவே பல திரைமறைவு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபை இலங்கையை போர்நிறுத்தம் செய்யும்படி மூன்று தடவைகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததைத் தொடரந்து சில வாரங்களுக்கு முன்னர் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்தும் படி வற்புறுத்தியிருந்தது. அமெரிக்கா இதே கனரக ஆயுதப் பாவிப்பு நிறுத்தக் கோரிக்கையை திரைமறைவாக இலங்கையிடம் பகிரங்கமாக விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்தபோது இலங்கையால் மறுக்க முடியவில்லை. உடன் இந்தியாவைத் தொடர்பு கொண்டது. இந்தியாவும் சம்மதித்து ஒரு நாள் கழித்து இதைச் செய்யும் படி இலங்கையைப் பணித்தது. இப்போது அரசியல் கட்சிகள் தமது வாக்கு வேட்டை நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கின. அதுதான் முதல்வர் கருணாநிதி, தங்கபாலு ஆகியோரின் உண்ணாவிரத நாடகம். கருணாநிதி அவர்களின் உண்ணாவிரதத்தின் பின் சிதம்பரம் அவர்கள் இலங்கையில் போர்நிறுத்தப் பட்டுவிட்டது என்று அறிவித்ததன் பின்னர் 272 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

ஈழத்தவர் -எப்போதும் இல்லாத கடும் கொதிப்பு கருணாநிதி மேல்




தமிழ்நாட்டுத் தலைவர்கள் மேல் ஈழத் தமிழர்களுக்கு பெருமதிப்பு உண்டு. ஒரு காலத்தில் அண்ணாவின் படம் பெரும்பாலான தமிழ் வீடுகளை அலங்கரித்ததுண்டு.

ஈழத்தமிழர் அல்லலுக்குள்ளான போது ஈழத்தந்தை செல்வநாயகம் அவர்கள் தந்தை பெரியாரிடம் உதவி கேட்டுச் சென்றார். பெரியார் கூறியது இதுதான்:

ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய முடியாது


இந்த உண்மை இன்றும் உண்மைதான். தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் ஆதரவை நாம் நன்கு அறிவோம். அவர்களால் எமது போராட்டம் வளர்ந்தது. ஆனால் அரசியல் ரீதியில் உதவிசெய்யக்கூடிய அதிகாரம் தமிழ்நாட்டிடம் இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனால் நேற்று மட்டும் சிங்களக் கொலை வெறியர்கள் 272 அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து பல நூற்றுக்கணக்கானோரை அவயங்கள் இழக்கச் செய்த வேளையில்ஆறு மணித்தியாலத்தில் போர் நிறுத்தம் செய்த மாவீரர் கருணாநிதி என்ற் பொய்ப் பிரசாரம் கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்தமை பல தமிழர்களையும் கொதிப்படையச் செய்துவிட்டது.

வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் மக்கள் ஐரோப்பியா அமெரிக்கா போன்ற நாடுகளில் கலைஞர் கருணாநிதியை எதிர்த்து கதைக்கத் தொடங்கி விட்டனர். வழமையாக இவற்றை அனுமதிக்காத ஊடகங்கள் இம்முறை இவற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன. சொல்லப் பட்ட சில கருத்துக்கள்:

நாடகத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் இன்று நடிகன் ஆகிவிட்டார்.

மற்றவர்களுக்கு திரைக்கதை எழுதியவர் இன்று பிரணாப் முகரிஜீ எழுதிய திரைக்கதைக்கு நடிக்கிறார்.

நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம்.

பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது.

எமது நாட்டில் போரை நீங்கள் நிறுத்தாவிட்டாலும் எம் மக்கள் உங்கள் நாடகங்களை பார்க்கும் நிலையில் இல்லை.நீங்கள் ஒரு கலை மேதை என்பதை மக்கள் அறிவார்கள். நாங்கள் நிம்மதியாக இருக்கும் போது சொல்லி அனுப்புகின்றோம் அப்ப வந்து எமக்கு நடித்து காட்டுங்கள்.எமக்கும் பொழுது போகும்.

Monday 27 April 2009

இலண்டனில் இந்தியத் தூதுவரகத்துள் நுழைந்த தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள்








இலண்டனில் உள்ள இந்தியத் தூதுவரக்த்தை தமிழ் ஆர்ப்பாட்டக் காரர்கள் முற்றுகையிட்டனர். நூற்றுக் கணக்கான தமிழர்கள் இந்திய எதிர்ப்பு வாசகங்களை எழுப்பியவாறு விசா வழங்கும் பிரிவினூடாக உயர் ஸ்தானியர் அகத்துள் நுழைந்தனர். பெரும் மனிதப் பேரழிவை உண்டுபண்ணும் இலங்கைப் போரை இந்தியா உடன் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். கண்ணாடிகள் கல்விச்சினால் உடைக்கப் பட்டன.

பின்னர் காவல்துறையிடர் தலையிட்டு அங்கிருந்து அவர்களை அப்புறப் படுத்தினர்.

இதேபோன்ற முற்றுகை இலண்டனில் உள்ள இலங்கைத் துாதுவரகத்திலும் நடாத்தப் பட்டது. அங்கும் கண்ணாடிகள் உடைக்ப் பட்டன.

கனடாவில் அமெரிக்கத் தூதுவரகம் முன் பெரும் ஆர்ப்பாட்டம்.

கனடா ரொறென்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் தமிழர்கள் பெருந்த்திரளாக அணிதிரண்டு தொடர் பேராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். நிலமையைகட்டுப்படுத்த முடியாமல் பிறபகுதிகளில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. பெரும் திரளாக மக்கள் கூடியதால் பல சாலைகள் மூடப்பட்டன. அண்மையில் இருக்கும் பல்கலைக் கழகமும் மூடப்பட்டது. இம் மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று நம்பப்படுகிறது.


போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை - கனரக ஆயுதங்கள் பாவிக்கப் படமாட்டாதாம்-ஆயுத நடவடிக்கை தொடரும்.

பிந்திக் கிடைத்த தகவல்:

Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.

Further the Defence Ministry in a statement on its web site called the misinterpretation a 'Media illusionists' twist of the government statement



போர் நிறுத்தம் தொடர்பாக இலங்கையில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் முரண்பட்ட செய்திகள் வருகின்றன:

இந்துஸ்தான் ரைம்ஸ்:
Sri Lankan Govt announces temporary ceasefire
The Sri Lankan Government has announced a temporary ceasefire against the LTTE. The Lankan Government said it is halting offensive for now.

இலங்கை இராணுவச் செய்திக்குறிப்பு:
'Combat operations reach conclusion, priority to rescue hostages' - SL Government
Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.
Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.
More information will follow.

இலங்கை அரச அதிபர் மாளிகை செய்திக் குறிப்பு:
Statement by the Sri Lankan Government on the Security situation
Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.
Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.
April 27, 2009
Presidential Secretariat

விடுதலைப் புலிகளின் செய்திக் குறிப்பு
Sri Lanka continues air strikes violating own announcement - Puleedevan[TamilNet, Monday, 27 April 2009, 07:45 GMT]Two Sri Lanka Air Force (SLAF) fighter bombers continued to bomb civilian targets in Mu'l'li-vaaykkaal after the announcement by the Sri Lankan forces that it would not deploy heavy weapons or carry out air attacks as pressure mounted from the International Community. LTTE's Director of Peace Seceratariat, S. Puleedevan, when contacted by TamilNet told that SLAF bombers were attacking civilian targets at Mu'l'li-vaaykkaal at 12:50 p.m. and again at 1:10 p.m. despite the announcement to cease such attacks. He blamed Colombo for "deceiving the International Community, including the people of Tamil Nadu," with the announcement. The SLA was also continuing to fire shells into the civilian zone while engaging the troops to continue to mount ground operations at Valaignar-madam, he charged.

ஆகமொத்தத்தில் போர் கனரக ஆயுத்ங்களைப் பாவிக்காமல் தொடரும்.

தமிழினக் கொலை - எல்லாவற்றையும் மேலிருந்து ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்

இலங்கையில் நடக்கும் சகல பயங்கரக் குண்டு வீச்சுக்களையும் இனக் கொலையையும் அமெரிக்க செய்மதிகள் நவீன பட்பிடிப்பு கருவிகள் மூலம் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இதில் இனக்கொலையில் ஆரியப் பேய்களினதும் இலங்கையினதும் போர்க் குற்றங்கள் பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருக்கப்படுகிறன என நம்பப்படுகிறது, இலங்கை பாவிக்கும் தடைசெய்யப் பட்ட ஆயுதங்கள் சம்பந்தமான சாட்சியங்கள் இதன் மூலம் பெறப்பட்டிருக்லாம்.
தருணம் வரும் சமயத்தில்இவை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்கப் படுகிறது.
இந்தப் படப்பிடிப்புக் கருவிகள் மிக நவீனமானவை. தரையில் ஒருவர் கையில் இருக்கும் பத்திரிகையின் தலையங்கத்தைக் கூட தெளிவாக வாசிக்கக் கூடிய அளவுக்கு நவீனமானது.



அமெரிக்கா தனது பதிவுகளை எப்படிப் பாவிக்கும்.
.
சர்வதேச நீதிமன்றில் இலங்கைக் எதிரான இனப் படுகொலைக் குற்றச்சாட்டிற்கு பயனபடுத்தப்படலாம்.
.
இப்படங்களை வைத்து இலங்கையை மிரட்டி தனது வழிக்கு கொண்டு வரலாம். இலங்கையைத் தன் பிடிக்குள் கொண்டு வரும் இந்தியக் கனவுகள் அம்போ!!!!!
.
இலங்கை அரசைக் கவிழ்க்க முயலலாம்.
.
ஐக்கிய நாடுகள் சபையில் இதை சமர்ப்பிக்கலாம்.
.
இலங்கைக்கான சர்வ தேச நாணய நிதித்தின் இலங்கைக்கான கடனுதவியை நிறுத்தலாம்.


Sunday 26 April 2009

இலண்டன் மரதன் ஓட்டமும் மரதன் ஆர்ப்பாட்டமும்














இலண்டனில் இன்று பிரபல மரதன் ஓட்டப் போட்டி நடந்தது. இந்த மரதன் ஓட்டப் பாதையில் தமிழர்கள் 20 நாட்களாக தொடர்ந்து பாராளமன்ற முன்றலில் நடாத்தும் சரித்திரம் படைக்கும் ஆர்ப்பாட்டமும் நடக்கின்றது. இதனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு பாரிய கவன ஈர்ப்பு கிடைக்கும் என்று தமிழர் தரப்பு மகிழ்ந்தது. இதை அறிந்து கொண்ட ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் அடிவருடிகள் பல வதந்திகளைக் கட்டிவிட்டனர்.
ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் முயற்ச்சி தோல்வி
ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் அடிவருடிகள் தமிழர்கள் இலண்டன் மரதனைக் குழப்பப் போகிறார்கள் என்று பரப்பி விட்ட வதந்தியால் மரதன் ஓட்டப்பாதை மாற்றும் திட்டம் அமைப்பாளர்களால் பரிசீலிக்கப் பட்ட வேளை தமிழர்தரப்பு தம்மால் மரதன் ஒட்டத்திற்கு எவ்வித இடையுறும் இருக்காது என்று உறுதி வழங்கியதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மரதன் ஓட்டப் போட்டி நடந்தது. தமிழர் போராட்டத்திற்கு நல்லபெயரும் ஆதரவும் கிடைத்தது.
மரதனில் ஈழக் கொடி
மரதன் ஓட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் ஈழக் கொடியான சிவப்பு மஞ்சள் கொடியுடன் பங்கு பற்றினார்.அவரின் உடையில் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவான வாசகங்கள் எழுதப் பட்டிருந்தன.

நேற்றைய பத்திரிகையில் வந்த செய்திக் குறிப்பு:

The organisers of tomorrow's London Marathon have made plans for a last-minute change of route in the final stages of the race in case any disruption is caused by Sri Lankan Tamils protesting outside the Houses of Parliament.

ஆனால் இன்று யாவும் சுமூகமாக நடந்தேறியது.

மாறி வரும் சூழலைப் பாவித்து பிரபா மீண்டெழுவார் - அனிதா பிரதாப்


பலருக்கும் பலவிதமாகத் தோற்றமளிப்பவரும் பலராலும் பலவிதமாக விமர்சிக்கப் படுபவருமான பிரபாகரன் மாறி வரும் சூழலைப் பாவித்து பிரபா மீண்டெழுவார் என்று பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் கூறியுள்ளார்.
.
பிரபாகரனை முதலில் பேட்டி யெடுத்தவரும் பிரபாகரனின் மேல் காதல் வசப்பட்டவருமெனக் கூறப்பட்டவருமான அனிதா பிரதாப் அவர்கள் பிரபாகரனைப் பற்றி தனது கருத்தைக் கூறியுள்ளார்.
.
அவர் கூறிய கருத்துக்கள்:
பிரபாகரன் பயந்த நிலையிலோ பரிதவிக்கும் நிலையிலோ இல்லை.
.
இராணுவ பின்னடைவுகள் அவரது தன் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது.
.
அரச பயங்கர வாதத்தை எதிர்த்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாத விடுதலை இயக்கங்கள் ஏதுவுமில்லை.
.
பலநாடுகள் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததன் மூலம் பேரழிவிற்கு காரணமாயிருந்தன.
.
பத்திரிகையாளர்களையும் அரச சார்பற்ற நற்பணி மன்றங்களையும் இலங்கை மட்டுமே போர் முனையில் செயற்படுவதை தடை செய்துள்ளது.
.
கண்ணும் இதயமுமற்றவர்களே பிரபாகரனின் ஆதரவாளர்களான தமிழர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்பார்கள்.
.
விடுதலைப் புலிகள் போர்க் காலத்தில் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் போர் இல்லாத காலத்தில் கட்டுப்பாடு நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
..
54 வயதிலும் பிரபாகரன் தோல்விகளைக் கண்டு துவள மாட்டார் இன்னும் 20 வருடங்கள் தொடர்ந்து போராடுவார்.
.
ஹிலரி கிளிண்டனது பயங்கரவாதம் தொடர்பன புது அணுகு முறைக்கும் இந்தியத் தேர்தல் முடிவிற்கும் அவர் காத்திருக்கிறார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...