Saturday 28 February 2009

போர் முனையில் ஒரு வகுப்பறை


நாங்கள் படித்த அந்த முன் பள்ளி
கூரையின்றிக் கிடக்கின்றது
எண்பத்து நான்கில் விழுந்த
எறிகணையில் சிதைந்து போனது

எண்பத் தெட்டில் அமைதிப் படை
எனும் பெயரில் வந்திறங்கிய
இந்திய ஆட்கொல்லிப்படையின்
டாங்கி சுவரை தகர்த்தது

எங்கள் ஆசிரியை தவமலர்
குடும்பத்தொடு அழிந்தா
இரவோடு இரவாக
விமானக் குண்டு வீச்சால்

பின் வாங்குக் குளப்படிகாரர்
சுகந்தனும் குண்டுக் காந்தனும்
வாக்குக் கண் வாமனும்
காணாமற் போனோர் பட்டியலில்

சும்மா இருந்த சுமதியையும்
கமலினியையும் சுந்தரியையும்
அமைதிப் படையினர் அநியாயமாய்
கெடுத்துக் கொன்றனர்

சந்தியில் நின்று வெட்டியாக
சைக்கிளோடு கதைத்துக் கொண்டிருந்த
சந்திரனும் சாந்தனும் கட்டைக் கதிரும்
ஆமிக்காரங்களால் சுடப்பட்டாங்கள்

ஆமிக்காரங்கடை பிரச்சினைக்கு
பயந்தொழிச்சோடி மட்டக்கிள்ப்பில்
மாமியாரோடை இருந்த மனோவை
சுனாமி கொண்டு போயிட்டுது

ஓமானுக்கு போன ஓணான் தலையன்
அவுணேஷன் சாலை விபத்தில்
அங்கு மண்டையைப் போட்டான்
பிரேதம் வரவில்லை

கறுப்பியென்று நாங்கள் நக்கலடிக்கும்
செம கட்டை சொரூபி கல்யாணம் கட்டி
கனடா போனவள் கள்ளரால்
கத்திக் குத்தில் மாண்டாள்

ரஜனி ஸ்ரைல் விட்டுக்கொண்டு
திரிஞ்ச கரியன் சுரேஷ்
தூள் வித்துப் பிடிபட்டு
இந்தியாவில் சிறையிலை இருக்கிறான்

பயந்தாங் கொள்ளி நிமலும்
ஒல்லி கமலும் இம்ரான்-பாண்டியன்
படையணியில் இணைந்து
மாவிரராய்ப் போனாங்கள்

டெண்டுல்கர் என நாம் கிண்டலடிக்கும்
கிரிக்கெட் பைத்தியம் கிரிசாந்தனின்
பரிதாபக் கதை சொல்ல ஏலாது
உயிரோடு புதையுண்டான் பாவம்

தினமும் பிந்தி வரும்
திக்குவாய்த் தீபா
கடற்கரும் புலியாகி
டோராவோடு சிதறினாள்

தெத்திப் பல் அபியும்
சொத்திவாய் ஹேமாவும்
சப்பட்டை சியாமாவும்
எங்கு போச்சினம் என்னாச்சினம்
எண்டு யாருக்கும் தெரியாது

எப்பவும் முதலாம் பிள்ளையாய்
வரும் அப்பாவி ரமணன்
விரிவுரையாளாயிருந்தவனை
கடத்திக் கப்பம் கேட்ட ஒட்டுக் குழு
சுட்டுப் போட்டு கடலுக்கை போட்டாங்கள்

வெளிநாட்டுக் கென்று காணி ஈடுவைத்து
பை நிறையப் பத்து லட்சம் பணத்தோடு
போன குரு போனது போனதுதான்
பாரக்கப் போனால்எஞ்சியது நீயும் நானும் தான்.

தவித்து நிற்கும் தமிழ்நாட்டு உறவுகள்

தமிழநாட்டு உறவுகள் எம இரத்தப் பிணைப்புக்கள்
ஈழத்தோர் துயர்கண்டு துடிக்கின்றன துவள்கின்றன
சிதறும் சிறார்களைக் கண்டால் கல்லும் உருகும்
தமிழன் நெஞ்சு தவிக்கும் துடிதுடிக்கும்
உண்ணா விரதம் இருக்கின்றனர்
கொட்டும் மழையில் கைகோத்து நிற்கின்றனர்.
தீக்குளித்து இறந்தும் மடிகின்றனர்.
யாது பயன் இதனால்? என்னதான் நடக்கும்,?
உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளும்
சிங்களப் பேரினவாதிகளும் இணைந்து நிற்கின்றனர்.
தமிழ்த் தேசியத்தை அழிக்க! கருவறுக்க!
பார்பனசக்திகள் தூபம் போடுகின்றன
பொய்ப் பரப்புரை பல செய்கின்றன.
தமிழநாட்டு உறவுகள் தவித்து நிற்கின்றன
செய்வதறியாமல் திகைக்கின்றன.
இதனால் அடி சிங்களவனை என்று
ஒரு தடியைத் தன்னும் தூக்கிக்
கொடுக்க முடியுமா ஈழத்தவனுக்கு?
முடியாதே தேச விரோமானதே!
ஆரியப் பேய்கள் தடுத்திடுமே
சிறையில் தள்ளிடுமே!
சுயநிர்ணய உரிமை தேவை தமிழனுக்கு

Friday 27 February 2009

இந்தியா மீண்டும் இலங்கைக்கு பணத்தை வாரி இறைக்குமா?

இந்தியா மீண்டும் பணத்தை வாரி இறைக்க வேண்டிய சூழ்நிலை இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது. தனது அந்நியச் செலவாணியில் பாதியை ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசத்தை சமன் செய்யும் பணியில் விழுங்கிவிட்ட நிலையிலும் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பட முடியாத் நிலையிலும், இனக் கொலை யுத்தத்தை தொடர இலங்கை சீனாவை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதாயின் அதன் முக்கிய நிபந்த்தனைகளான நாணய பெறுமதிக் குறைப்பும் பதீட்டுப் பற்றாக் குறை குறைப்பும் செய்யப்பட வேண்டும். இது யுத்த முனைப்புக்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா இலங்கை சீனாவின் பக்கம் சார்வதையோ அல்லது தமிழின அழிப்பு யுத்தம் தொய்வு நிலையை அடைவதையோ விரும்பாது. இதன் காரணமாக இந்தியா பாரிய தொகையை இலங்கைக்கு மீண்டும் குறைந்த வட்டிக் கடனாகக் கொடுத்து பாக்கிஸ்த்தானிடம் ஆயுதங்களை வாங்கிக் குவித்து இனக்கொலை யுத்தத்தை தொடர வழி செய்யவேண்டும்.

மோசமான நிலைக்குச் சென்ற இலங்கைப் பொருளாதாரம்

இலங்கையின் பொருளாதாரம் திடத்தன்மையில் சுழியத்திற்கு கீழ் சென்று தளும்பல் நிலையை அடைந்துள்ளது என்று Fitch Rating என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகரித்த இறக்குமதியும் குறைவடைந்த ஏற்றுமதியும் இதற்குக் காரணமென்று செல்லப்பட்டுள்ளது.

Fitch Rating அறிக்கையின் விளைவுகள் என்ன?
இலங்கை இனி வெளிநாட்டுக் கடன் பெறுவது சிரமமாக இருக்கும் அல்லது அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். இலங்கையின் நாணயமாற்று வீதம் மோசமடையலாம்.

வெளிநாடுகளில் வாழ் தமிழர்கள்
வெளிநாடுகளில் வாழ் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் இலங்கைப் பொருட்களைப் புறக்கணித்தால் நிலமை மேலும் மோச மடையும். இப் புறக்கணிப்பு இயக்கம் அண்மையில்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாரிசில் அண்மையில் கடைகளில் இருந்த இலங்கை உற்பத்திப் பொருட்கள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டுள்ளன.

போரைப் பாதிக்குமா?
பொருளாதார நெருக்கடி தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரைப் பாதிக்காமல் இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று எதிர்பார்கப் படுகிறது. ஏற்கனவே செய்ததுபோல் பெரிய தொகையை குறைந்த வட்டிக் கடனாகக் கொடுத்து பாக்கிஸ்தானிடமிருந்து ஆயுதங்களை வாங்கும்படி இந்தியா இலங்கை்கு சொல்லலாம்

Thursday 26 February 2009

கடத்தப்பட்ட பத்திரிகையாளர் விடுவிப்பு - நோபல் பரிசு கொடுக்கலாம்!


வந்தது முதல் ஒரு செய்தி
நடுநிலைப் பத்திரிகையாளர்
வித்தியாதரன் கடத்தப் பட்டார்.
மரணச் சடங்கில் இருந்து
வெள்ளை வாகனத்தில்
இழுத்துச் செல்லப்பட்டார்.
இலங்கையில் வெள்ளை வாகனத்தில்
போனோர் கறுத்த வாகனத்தில்தான் வருவதுண்டு.
பத்திரிகையாளர் கொல்லப் படுவது
மாதாந்த நிகழ்வுகளில் ஒன்று
தவித்துக் கொண்டிருந்தனர் உறவினர்
திகைத்து நின்றது பத்திரிகை உலகு
இன்னோரு சிவராமா ஏங்கி நின்றோம்
வந்தது ஒரு செய்தி கடத்தவில்லை கைது!
ஒரு பத்திரிகையாளரை் இழுத்துச் சென்று
கண்ணைக் கட்டி கண்டபடி தாக்கினார்கள்.
முதல் தடவையாக கொல்லாமல் விட்டார்கள்
கொடுக்க வேண்டும் அவர்களுக்கு நோபல் பரிசு

இந்தியாவின் இன்னுமொரு கபட நாடகம் - மருத்துவக்குழு

போர் முனையில் பல்லாயிரக் கணக்கான சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் காயப்பட்டுள்ளனர். வரும் தினங்களில் இது பல மடங்காக அதிகரிக்கலாம். பல அமைப்புக்களிடமிருந்தும் நாடுகளிடமிருந்தும் வரும் யுத்த நிறுத்தக் கோரிக்கைகள் இனி வரும் வாரங்களில் இன்னும் தீவிரமடையலாம். அதற்கு முன் யுத்தத்தில் முன்னேறுவதற்கு பல படையினரை சிங்கள அரசு களமுனைக்கு அனுப்ப வேண்டும். இதனால் ஏற்படும் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்க ஏற்கனவே பெருமளவில் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு அனுப்பி காயப்பட்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு சிகிச்சை அளிக்க உதவியுள்ளது. தமிழர் படையினரின் தீவிர தாக்குதலால் பல படையினர் காயமடைந்து வருவதால் ஏற்பட்டுள்ள மருத்துவர்களுக்கான தட்டுப்பாட்டை சீர் செய்யு முகமாக இந்தியா பல மருத்துவர்களை காயப்பட்ட தமிழர்களுக்க உதவுவது என்ற போர்வையில் இலங்கைக்கு அனுப்பவுள்ளது.

சாம்பல் மேட்டில் ஒரு தோட்டம் செய்ய முனைகிறோம்




சாம்பல் மேட்டில் ஒரு தோட்டம் செய்ய முனைகிறோம்
உள்ளே இருப்பது எதிர்கால விருட்சங்களின் வித்துக்களா?
அல்லது நீறுபூத்த நெருப்புக்களா?
பூகம்பத்தில் பூப்பறித்து பூமாலைகள் செய்கிறோம்
சமாதான தேவதைக்கு சாத்திரப்படி ஒரு சாத்துப்டியாக்க
சென்று சேர்வது தேவதைக்கா?

சூறாவளியில் சுடர் ஒன்று ஏற்றுகிறோம்
அமைதிச் சூரியன் அஸ்தமித்தால்
இது ஒரு அணையாச் சுடரா?
வேற்றுமைத் தீயணைக்க வெதும்பி நிற்கிறோம்
ஒற்றுமை மேகங்கள் மழை தருமா
கிழக்கில் தெரிவது தொடுவானமா?

Wednesday 25 February 2009

பிரபாவை பிடிச்சுத்தா பிடிச்சுத்தா


சனியாள்:
இனக்கொலையினில் ஏனிந்த தாமதம்
தமிழின அழிப்பினில் ஏனித்த சொதப்பல்
மொள்ளமாரியே முடிச்சவிக்கியே.
மொள்ளமாரியே முடிச்சவிக்கியே.

பக்சன்:
உன்னைவிட்டால் இருக்குதடி சைனா
பக்கத்தில் இருக்குதடி பாக்கிஸ்த்தான்
குண்டுதாடி துட்டுத்தாடி
குண்டுதாடி துட்டுத்தாடி

சனியாள்:
என் மனதினில் பெரும் தவிப்பு
நெடுநாளாய் பெரும் கொதிப்பு
பிரபாவை பிடிச்சுத்தா பிடிச்சுத்தா
ஜல்திக் கரே ஜல்திக் கரே

பக்சன்:
தொண்ணுாற்றொம்பது முடிஞ்சுது
பொன்சேகா எல்லாம் தொலைச்சிட்டான்
கொட்டியா எல்லாம் முடிஞ்சுது
தவ டிக்காக் தியனவா! தவ டிக்காக் தியனவா!

புலிகள் புதிய ஆயுதங்களை வாங்கமுனைகிறார்கள்?





தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய ஆயுதங்களை வாங்கமுனைகிறார்கள் என்று பலித் கோகென்ன குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய எரி குண்டுகளையும் வங்க முயல்வதாக அவர்களின் உரையாடல்களை ஒற்றுக் கேட்டதின் மூலம் தாம் அறிந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பரவல் குண்டுகள் எரி குண்டுகள் (thermobaric munitions ) போன்றவற்றை இலங்கை அரசு பாவித்து வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோகென்னவின் இக் குற்றச்சாட்டு வந்துள்ளது.


What is Thermobaric Explosive?
Volumetric weapons include thermobaric and fuel-air explosives (FAE). Both thermobaric and FAE operate on similar technical principles. In the case of FAE, when a shell or projectile containing a fuel in the form of gas, liquid or dustexplodes, the fuel or dust like material is introduced into the air to form acloud. This cloud is then detonated to create a shock wave of extended duration that produces overpressure and expands in all directions. In a thermobaric weapon, the fuel consists of a monopropellant and energetic particles. The monopropellant detonates in a manner simular to TNT while the particles burn rapidly in the surrounding air later in time, resulting an intense fireball and high blast overpressure. The term "thermobaric" is derived from the effects of temperature (the Greek word "therme" means "heat") and pressure (the Greek word "baros" means "pressure") on the target.


இலங்கைமீது இனப்படுகொலைக் குற்றம் சுமத்தாதையிட்டு ஏளனம் செய்யும் ஆபிரிக்க ஒன்றியம்.

தமிழ் மக்களை இந்திய சீன பாக்கிஸ்தானிய உதவிகளுடன் இனப்படு கொலை செய்து வரும் இலங்கைமீது இனப்படுகொலைக் குற்றம் சுமத்தாதையிட்டு ஆபிரிக்க ஒன்றியம் ஏளனம் செய்துள்ளது. இப்படியான மோசமான இனப்படுகொலை ஆபிரிக்க நாடொன்றில் நடக்குமானால் மேற்கு நாடுகள் இதில் முழு மூச்சாகத் தலையிட்டிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை தென் ஆபிரிக்காவிற்கு வரவிருக்கும் ஐநா அதிபரிடம் இலங்கை நிலமை தொடர்பாக தென் ஆபிரிக்க அதிபர் Kgalema Motlanthe எடுத்துரைக்கவுள்ளார். இது தென் ஆபிரிக்காவில் வாழும் தமிழர்களின் மன உணர்வை கருத்தில் கொண்டே தென் ஆபிரிக்க அதிபர் இதைச் செய்யவுள்ளார்.

Tuesday 24 February 2009

எம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.


எண்பத்தெட்டில் அமைதிப்படை நாட்களில்
தெரு முனையில் ஒரு கண்ணி வெடி
சிக்கியது ஒரு சீக்கியப் படையணி
கண்டபடி சுட்டனர் கண்டவரையும் கொன்றனர்

தப்பித்து நான் தலை தெறிக்க
ஓடி சரண் புகுந்தது உன் வீடு
நின் முக தரிசனம் முதல் தரிசனம்
சரளி வரிசையாய் ஆரம்பித்தது எம் காதல்

உள்ளஙகள் இணைந்தன ஒன்றோடு ஒன்றாயின
இரு மன இணைப்பு ஜண்டை வரிசைகளாயின
உன்வீட்டின் முன் தெருவில் அங்கும் இங்கும்
தாண்டி வருவேன் நான் தாட்டு வரிசைகளாக.

உன் அழகு முகத்து ஒளியும் உதட்டுச் சிரிப்பும்
என்னை இட்டுச் செல்லும் மேல் ஸ்தாயி வரிசைக்கு
என் முகம் என் பார்வைக்கே அழகானது
எல்லாம் எனக்கு அலங்கார வரிசையானது
உன்னுள் நானாக என்னுள் நீயாக இனிய உறவாக
எனக்குள் இசைக்கத் தொடங்கியது ஓர் இனிய கீதம்.
இதயங்கள் ஒன்றாக இதமாக இளமை இனியதாக
ஸ்வரம் நீயாக ஜதி நானாக ஸ்வரஜதியானோம்


இரவுகள் நீண்டிருக்க எண்ணங்கள் எங்கோ இருக்க
கனவுகளில் கலந்திருக்க நினைவுகள் வர்ணங்களானது
பார்வைகள் பல்லவியாக சிரிப்புக்கள் அனுபல்லவியாக
நெருக்கங்கள் சரணங்களாக எம் உறவு கீர்த்தனமானது

பிறவிகள் பல தோறும் தொடரும் பிணைப்பாக
திருமண மேடையில் அரங்கேறியது எம் சங்கீதம்.

செந்நீர் பாய்ச்சி உயிர்பல உரமிட்டு வளர்த்த பயிர்.

கொல்லக் கொடுவாள் கொடுப்பார்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்.

செந்நீர் பாய்ச்சிஉயிர்பல உரமிட்டு
துயர்மிக சுமந்துஇடர்பல பட்டு
நாம் வளர்த்தவிடுதலைப் பயிர் பற்றி
கண்ணீர் விட்டுசுதந்திரப் போர்ப் பயிர்
வளரத்தோர்க்குபுரியாமல் போனதென்ன.

(அ)தர்ம கர்த்தாக்கள்

பொத்தடா வாயை என்றான் ஒருத்தன்
பல்லை உடைப்போன் என்றான் இன்னொருத்தன்
காறி உமிழ்ந்தாள் பெண் ஒருத்தி
......மகனே என்றான் ஒரு இளைஞன்
இது நடந்தது எங்கே? எப்போது?
கோயம்பேடு சந்தையிலா?
அல்லது கொத்வால் சாவடியிலா
இல்லை இல்லை இல்லவே இல்லை
இலண்டனில் ஒரு ஆலயத்தின்
தர்ம கர்த்தாக்கள் சபைக் கூட்டத்தில்
கேட்ட வாசங்கள்தான் இவை

Monday 23 February 2009

இந்தியா=பகடைக்காய்+கூலிப்படை

பன்னாட்டு அரசியலில்
சிங்களவனின் பகடைக்காய்
ஈழ விடுதலைப் போரினிலே
சிங்களவனின் கூலிப்படை
தமிழின ஒழிப்பினிலே
பாக்கிஸ்தானின் கூட்டாளி
இன ஒழிப்பு நாட்டியத்தில்
பக்சேயின் காற்சலங்கை

மானம் கெட்ட காங்கிரசிலிருந்து வெளியேறுங்கள் தன்மானத் தமிழர்களே



ஈழத்தமிழர்க்ளை கொல்லும்
படுபாவிச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்கும்
காங்கிரசிலிருந்து
வெளியேறுங்கள்.
மானத் தமிழர்களே

தன் மானமுள்ள
தமிழ்நாட்டுத் தமிழர்களே
மானங் கெட்ட
காங்கிரசிலிருந்து
வெளியேறுங்கள்

சாதி வெறியன்
சத்திய மூர்த்தியின்
பெயரின் கட்டிடத்தில்
இயங்கும் பேய்க்
காங்கிரசிலிருந்து
வெளியேறுங்கள்
மானத் தமிழர்களே

இத்தாலிச் சனியாளின்
கேவலமான பாவாடைக்குள்
அடக்கப் பட்டிருக்கும்
காங்கிரசிலிருந்து
தன்மானத் தமிழர்களே
வெளியேறுங்கள்

Sunday 22 February 2009

மானம் கெட்ட இந்தியா - ஐநா முன் முழக்கம்

ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on play sign.

50 அடி உயரக் கதிரையில் பறந்த ஈழக்கொடி


ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தின் முன் கண்ணிவெடிகளால்உள்ள பாதிப்புக்களை விளக்கு முகமாக காலுடைந்த பாரிய நாற்க்காலியொன்று அமைக்கப் பட்டுள்ளது. 20-02-2009 வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐரோப்பியத் தமிழ் இளைஞர் அமைப்பு நடாத்திய பேரணியின்போது ஒரு இளைஞன் இதில் ஏறி தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றினான்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...