Saturday 21 February 2009

Tamil Youths at U. N. O Geneva


















More pictures from Geneva.

காணொளி - 50,000தமிழர்கள் முன் ஐநா வளாகத்துள் பறந்த புலிக்கொடி

தமிழீழத் தேசியக் கொடி
இருபதாம் திகதி(20-02-2009) ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் ஐரோப்பியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஈகப்பேரொளி முருகதாசனின் மரணத்திற்கு நீதிகேட்டு நடத்திய பேரணியின்போது பலுானில் பறக்கவிடப்பட்ட தமிழீழக் கொடி, மட்டு மைந்தன் தயானந்தமூர்த்தி வான்புலிகளின் தாக்குதலை அறிவித்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தபோது எழுந்த அதிர்வலை காரணமாக அசைந்து ஐநா வளாகத்துள் புகுந்து அங்கிருந்த பன்னாட்டுக் கொடித்தம்பங்களுக்குள் இணைந்து மற்றநாட்டுக் கொடிகளுக்கு மேல் பட்டொளி விசிப்பறந்தது. ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இதைக் கண்டு ஆர்ப்பரித்தனர்.
Click on the vedio below:

ஐநா வளாகத்துள் பறந்த புலிக்கொடி




இருபதாம் திகதி(20-02-2009) ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன் ஐரோப்பியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஈகப்பேரொளி முருகதாசனின் மரணத்திற்கு நீதிகேட்டு நடத்திய பேரணியின்போது பலுானில் பறக்கவிடப்பட்ட தமிழீழக் கொடி, மட்டு மைந்தன் தயானந்தமூர்த்தி வான்புலிகளின் தாக்குதலை அறிவித்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தபோது எழுந்த அதிர்வலை காரணமாக அசைந்து ஐநா வளாகத்துள் புகுந்து அங்கிருந்த பன்னாட்டுக் கொடித்தம்பங்களுக்குள் இணைந்து மற்றநாட்டுக் கொடிகளுக்கு மேல் பட்டொளி விசிப்பறந்தது.





Thursday 19 February 2009

எங்கு போய் முடியும் ஈழப் போர்

அடிக்கிறாங்கள் இடம் பிடிக்கிறாங்கள்
பின்வாங்குகிறாங்கள்
எல்லாம் விட்டிட்டாங்கள்
இனி ஒண்டும் சரிவராது
எல்லாம் முடிஞ்சுது
முப்பதாண்டுக்காலப் போராட்டம் துலைஞ்சுது
நாளும் கேட்கிறோம் இப்புலம்பல்களை
வாரமொன்றிற்கு முப்பது போராளிகளும்
ஆயிரம் சிங்களவரும் இறப்பதை யாரறிவார்
தற்கொடையாளிகள் இன்னும் இரண்டாயிரமாம்
ஒன்றிற்கு இருபத்தைந்து உயிரிழக்கும்
மேலும் இருபந்தைந்து அவயமிழக்கும்
எங்கு போய் முடியும் ஈழப் போர்

Wednesday 18 February 2009

இந்தியா உதவத் தயார்! ஆரியப் பேய்களுக்கு அரிப்பெடுத்து விட்டனவா?


இந்தியா உதவத் தயாராம்
சிங்களவரின் கொடுங்
கொலை வெறிக்குள்
சிக்கி நிற்கும் தமிழர்களை
பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு.
எண்பத்தேழிலும் இதைத்தான்
சொல்லி வந்தனர் ஈழத்திற்கு.
பெண்களைக் கற்பழித்துக்
கொன்று மார்புகளை அறுத்தனர்.
பாவித்த உள்ளாடைகளையும்
கொள்ளையடித்துச் சென்ற
ஆரியப் பேய்களுக்கு மீண்டும்
அரிப்பெடுத்து விட்டனவா?

பிரபா ஓடிவிட்டான் பொட்டு சரணடைந்தான்

பிரபாகரன் ஓடிவிட்டான்
சூசை செத்துவிட்டான்
பொட்டு சரணடைந்தான்
இன்னும் இருப்பது
இரண்டாயிரம் புலிகள்
இன்னும் ஆறு மாதத்தில்
எல்லாம் முடியும்
எத்தனை கேட்டோம்
இன்னும் கேட்போம்
சொல்ல நீங்களுண்டு
பிரசுரிக்க ஊடகங்களுண்டு
மறுத்துரைத்தால் மாள்வார்கள்

கையாலாகாத தமிழ்நாடு


கூட்டங்கள் போடலாம்
கோஷங்கள் எழுப்பலாம்
பேரணியும் நடத்தலாம்
பலமணி நேரம் உண்ணாமல் இருக்கலாம்
நீள்துார மனிதசங்கிலி செய்யலாம்
டெல்லிக்கும் காவடியும் எடுக்கலாம்
ஈழத்தமிழர் இன்னலை இம்மியளவும்
மாற்றுமா இவையெல்லாம்.
உங்கள் கை வெறும் கை
ஆட்சி வைத்திருப்து
சிவசங்கர மேனன் கை
மேனனோ பார்ப்பனர் கையில்
இணைந்து நிற்பது
பார்ப்பன சிங்கள கைகள்
சுயநிர்ணய உரிமை இல்லாதவரால்
இன்னொருவர் சுயநிர்ணய
போராட்டத்திற்கு உதவ முடியுமா,?

Tuesday 17 February 2009

கண்டிக்கிறேன் தமிழ்நாடு சட்டத்துறையினரை

கண்டிக்கிறேன் தமிழ்நாடு சட்டத்துறையினரை
சுப்ரமணிய சுவாமிமீது முட்டை அடித்தற்கு
நீதிமன்றத்திற்குள் ஏன் முட்டை கொண்டு வரவேண்டும்.
அங்குதான் நல்ல நாற்காலிகள் இருந்தனவே

இந்திய உதவியுடன் மஹிந்த சிந்தனை



வெள்ளை வானில் போனவன்
கறுப்பு வானில் வந்தான்
கருத்துத் தெரிவித்தவன்
காணாமற் போனோர் பட்டியலில்
பாதுகாப்பு வலயத்தில்
யுத்த வலயத்தைவிட
அதிக கொலைகள்
இந்திய உதவியுடன்
மஹிந்த சிந்தனை
புரிகிறதா உங்களுக்கு

Monday 16 February 2009

தனியான தமயந்திகள்


உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் அடிமைகள்

ஈழ விடுதலைப் போர்
கண்ணீர் விட்டு வளர்க்கவில்லை
உயிர் நீர் விட்டு வளரும் பயிர்
தியாகங்களால் ஒளிரும் சுடர்
துரோகங்களால் பட்டது இடர்

இந்தியச் சதிகள் பலவற்றால்
மோதின போராளிக் குழுக்கள்
இந்திய அடி வருடிகளின்
போட்டிக்குப் பலியானவர்
அமிர்தலிங்கம் என்பவர்.

உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின்
கொத்தடிமைக் கூட்டம் உளறுகிறது
உருட்டுகிறது புரட்டுகிறது
உளறுகிறார் ஒரு சிதம்பரம்

இந்தியா உதவுகிறது
ஆயுதம் தருகிறது
கொக்கரிக்கிறது சிங்களப் பேய்கள்
நன்றி கூறுகிறது இந்தியாவிற்கு
பொய் கூறுகிறார் ஒரு தங்கபாலு
இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லையாம்.

Disgrace to helping India

Combustible bombs
Cluster bombs
Endless list of weapons
Disgrace to Buddhism

Come to the safety zone
We will kill you there
Endless list of duplicity
Disgrace to human race


Bombs the hospitals
Kill the babies
Endless list of murders
Disgrace to helping India

Wiping out terrorism
Finishing within six months
Endless list of deceit
Disgrace to diplomacy

Pottu surrendered
Soosai was killed
Endless list of lies
Disgrace to government

இந்திய பலமும் மஹிந்த சிந்தனையும்


வெள்ளை வானில் போனவன்
கறுப்பு வானில் வந்தான்
கருத்துத் தெரிவித்தவன்
காணாமற் போனோர் பட்டியலில்
பாதுகாப்பு வலயத்தில்
யுத்த வலயத்தைவிட
அதிக கொலைகள்
இந்திய பலம் இணைந்த
மஹிந்த சிந்தனை
புரிகிறதா உங்களுக்கு

Sunday 15 February 2009

பிரிவோம் சந்திக்க வேண்டாம்


அற்ற குளத்து அறுநீர்ப்பறவைகள் நாம்
உற்ற நேரத்தில் உறவுகளைப் பிரிந்தோம்
தக்க தருணத்தில் ஆயுதம் ஏந்தவில்லை
தாய்மண்ணைக் காக்க முனையவில்லை
வெளிநாடு வந்தோம் தப்பிப் பிழைத்தோம்
நீயும் நானும் காதல் வசப் பட்டோம்
ஆனாலும் எமக்குள் கருத்து வேறுபாடு
ஈழ விடுதலை தொடர்பாக.
எந்நேரமும் என் சிந்தனையில்
ஈழத்தோர் படும் துயர்
நீ வெளி நாட்டு மோகத்தில்
தாயகப் போராட்டத்திற்கு
நீ நிதியுதவி செய்யவில்லை
பாராளமன்றத்தின் முன்
கோஷம் போட நீ வரவில்லை
எதிர்ப்பு ஊர்வலங்களிற்கும் வரவில்லை
தாயகத்து உணரவின்றி வாழ
என்னால் முடியாது பெண்ணெ.
சரிவராது உனக்கும் எனக்கும்
பிரிவோம் சந்திக்க வேண்டாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...