Saturday 14 February 2009

ஆறுதலடைவது கோபாலபுரத்தார் மட்டுமே


திருப்பமா மீண்டும் திருகுதாளமா
அல்லது அம்மியின் நகர்ச்சியா
தீரர்தம் தீக்குளிப்புகளால்வந்த
மாற்றம் இது மட்டும்தானா?
நிலம் மடடும்தான் இழந்தார்கள்
பலம் இழக்கவில்லை என்றுணர்ந்ததாலா
தக்க தருணத்தில் தக்க அடிவிழும்
என்பதை அறிந்து கொண்டதாலா
தேர்தல் தந்திரமா ஆரியச் சூழ்ச்சியா
வார்த்தைகள்தான் மாறி நிற்கின்றனவா
கொள்கைளும் மாறுமா
மேனனின் மேலுமோர் தந்திரமா
நீங்கள் கொடுத்த பணத்திலும்
அளித்த ஆயுத பலத்திலும்
அனுப்பிய ஆறாயிரம் படையிலும்
வாழ்த்திக் கொடுத்த பயிற்ச்சியிலும்
சீறிப்பாயந்த சிங்களக் கொடியோர்
பொழிந்த குண்டு மழையில்
சிதறி செத்த பாலகர் உயிர்களை
குடியரசுத் தலைவியே உமது உரை
மீண்டும்தான் கொண்டு வருமா
ஆறுதலடைவது கோபாலபுரத்தார்தான்
கொதிக்கும் தமிழ் நெஞ்சங்கள்
குளிரும் தமிழீழத்தை
ஏற்று அங்கீகரித்தால்.
Based on news:
India changes language with measured ambiguityTamilNet, Friday, 13 February 2009, 01:30 GMT]Indian President Prathiba Patil in her address to the joint sitting of Indian Parliament on Thursday declared that India continued to support a negotiated political settlement in Sri Lanka within the framework of an undivided Sri Lanka acceptable to all the communities, including the Tamil community. Ms. Prathiba

நயன்தாரா நயம் தாராள்

நயன்தாரா போலென்று வர்ணித்ததெல்லாம்
நயம் தாராதென்று இன்றுணர்ந்தேன்.
வருவாய் நீயென்று காத்திருந்ததெல்லாம்
வருவாய் இலாததென்று இன்றுணர்ந்தேன்

பாவனை எல்லாம் பாவனா போலென்றேன்
சோதைனை சூழ் வாழ்வென்றானது
திரிஷா போல் திகட்டாத அழகென்றேன்
தரிசாய்ப் போனது என் இள வாழ்க்கை

நமீதா போல் கால்கள் இரண்டு மென்றேன்
தகதிமிதா எனத்தள்ளாடிப் போனதென் மனம்.
பிரியாமணியைப் போல் உன் உடலென்றேன்
தெரியாமணியாய் போய் மறைந்தாயே

மொத்தத்தில் நீயோர் ஐஸ்வர்யா என்றிருந்தேன்
சித்தத்தில் தெளிவின்றித் தினம் தவிக்கின்றேன்
எல்லாம் நீயென்று இருந்ததால் - இன்று
எல்லாம் இழந்து இருக்கின்றேன்

Friday 13 February 2009

சயனைட் குப்பி காதலிக்கு

என் காதலிக்கு
என் காதலர் தின வாழ்த்துக்கள்
அவள் உடலில் சுடிதார் இல்லை
வரிச்சட்டை மூடியிருக்கும்
கழுத்தில் சங்கிலியில்லை
சயனைட் குப்பி தொங்கும்
கனத்த துப்பாக்கியும் சன்னங்களும்
தொங்கும் அவள் தோளில்
களமுனையில் கட்டாந்தரையில்
அவள் பாதம் பட்ட
மண்ணைத்தொட்டு ஒரு முத்தமிட்டால்
என் பிறவிப் பெரும் பயன்எனக்குக் கிட்டும்

பிரிவோம் சந்திக்க வேண்டாம்.

அற்ற குளத்து அறுநீர்ப்பறவைகள் நாம்
உற்ற நேரத்தில் உறவுகளைப் பிரிந்தோம்
தக்க தருணத்தில் ஆயுதம் ஏந்தவில்லை
தாய்மண்ணைக் காக்க முனையவில்லை
வெளிநாடு வந்தோம் தப்பிப் பிழைத்தோம்
நீயும் நானும் காதல் வசப் பட்டோம்
ஆனாலும் எமக்குள் கருத்து வேறுபாடு
ஈழ விடுதலை தொடர்பாக
எந்நேரமும் என் சிந்தனையில்
ஈழத்தோர் படும் துயர்
நீ வெளி நாட்டு மோகத்தில்
தாயகப் போராட்டத்திற்கு
நீ நிதியுதவி செய்யவில்லை
பாராளமன்றத்தின் முன்
கோஷம் போட நீ வரவில்லை
எதிர்ப்பு ஊர்வலங்களிற்கும் வரவில்லை
தாயகத்து உணரவின்றி வாழ
என்னால் முடியாது பெண்ணெ.
சரிவராது உனக்கும் எனக்கும்
பிரிவோம் சந்திக்க வேண்டாம்.

Thursday 12 February 2009

நெஞ்சில் எழுதினேன் உன் பெயரை


இத்தாலிச் சனியா(ள்) கீதை


எந்த ஆயுதங்கள் உங்களுக்கு வேண்டுமோ
அந்த ஆயுதந்களை நன்றாகவே கொடுத்தோம்
எந்தப் பயிற்ச்சி உங்களுக்கு வேண்டுமோ
அனைத்தையும் நன்றாகவே கொடுத்தோம்
எவர் தாலிகள் அறுந்திட வேண்டுமோ
அவர் தாலிகள் நன்றாகவே அறுகின்றன
எவர் பெண்கள் கற்பு சூறையாடப்பட வேண்டுமோ
அவர் பெண்கள் கற்பு நன்றாகவே பறிக்கப்படுகின்றன
எவர் குழந்தைகள் உடல்கள்சிதற வேண்டுமோ
அவர் குழந்தைகள் நன்றாகவே இறக்கின்றன
எவர் மருத்துவ மனைகள் உடைபட வேண்டுமோ
அவர் மருத்துவ மனைகள நன்றாகவே சிதைகின்றன
எவர் சுதந்திரப் போர் நசுக்கப் பட வேண்டுமோ
அவர் சுதந்திரப் போர் இன்னும் ஒழிக்கப் படவில்லையே!

Wednesday 11 February 2009

இருந்தும் கொன்றாய் இறந்தும் கொல்கிறாய்

நீ முத்தமிட்ட உதடுகள்
தமிழ்க் குழந்தைகளின்
உயிர்களைக் குடிக்கின்றன

நீ அணைத்த உடல்
தமிழன் உதிரத்தில்
குளித்து மகிழ்கின்றது

நினைத் தழுவிய கைகள்
எம் ஈழ மாதாவின்
கழுத்தை நெரிக்கின்றன.

நீ இணைந்த கால்கள்
தமிழன் மானத்தை
எட்டி உதைக்கின்றன

ஐயோ ராஜீவ் காந்தியே நீ
இருந்தும் தமிழனைக் கொன்றாய்
இறந்தும் தமிழனைக் கொல்கிறாய்

பாரதமாதாவே நீ பாதகமாதாவா?


சிங்களப் பேரினவாத ஓநாய்கள் கொழும்பில் கூடி
சீறிப்பாய்ந்தன செஞ்சிலுவைச் சங்கத்தின் மேல்
யுத்த நிறுத்தம் கேட்கும் நாடெல்லாம் எதிரியாம்
என எக்காளமிட்டன கொக்கரித்தன கூக்குரலிட்டன
யுத்த நிறுத்தம் வேண்டும் நாடுகளை திட்டின
ஐநாவையும் விட்டுவைக்க வில்லை
அந்த வெறி நாய்க் கூட்டம்
நன்றி தெரிவித்துப் பாராட்டின இந்தியாவை
தமிழின அழிப்புக்கு இந்தியா உதவுகிறதே
மகாத்மாகாந்தி தேசம் இத்தாலியாள் தேசமானதே
பாரதமாதாவே நீ பாதகமாதாவாக மாறினாயே
கொலைவெறிநாயகள் உனக்கு விருதுகள் தருகின்றனவே

Tuesday 10 February 2009

எதுதான் சர்வதேச சமூகம்?



அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான்
சேர்ந்தால் சர்வதேச வியாபாரிகள் கூட்டம்
இவற்றோடு சீரழி சினாவும் ரசியாவும்
சேர்ந்தால் சர்வதேச சண்டியர் கூட்டம்
போதாக் குறைக்கு இந்தியாவையும்
சேர்த்தால் சர்வதேச சண்டாளர் கூட்டம்.
எதுதான் அந்த சர்வதேச சமூகமோ?
யார் குடி கெடுக்க யாரை ஏமாற்ற

எந்த இனங்களை அழித்தொழிக்க
எவங்கள் நாடகம் ஆடுகிறாங்கள்

Monday 9 February 2009

எந்தத் தமிழன் சொல்வான் இது என் தாய் நாடென்று

ஈழத் தமிழனைக் கொல்ல
ஈனச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்கும்
ஓநாய்த் தேசத்தை – எந்த
மானத் தமிழன் சொல்வான்
இது என் தாய் நாடென்று.

பெண் சிசு தன்னை
கருவில் கொல்லும்
ஆரியப் பேய்களின்
சுடுகாடு தன்னை
எந்தத் தமிழன் சொல்வான்
இது என் தாய் நாடென்று

நம்பி வந்த பெண்ணை
சீதனம் கேட்டு வதைத்து
உயிரோடு கொழுத்தும்
ஆரிய வெறி நாய்களின்
கொலைப் பட்டறையை
எந்தத் தமிழன் சொல்வான்
இது என் தாய் நாடென்று

Sunday 8 February 2009

கலையுங்கள் காங்கிரசை


காங்கிரசுக் கட்சியிலும் ஒரு தமிழன்
நல்ல தன்மானமுள்ள தமிழன்
சீர்காழியில் அந்தச் சீராளன்
தன்னுயிர் கொடுத்தான் ஈழத்துக்காக
இதையும் கொலையென்பாயாடா
கேடு கெட்ட சுவாமி நாயே
மெளனம் ஏனடா முட்டைக் கண்ணா
அரசியல் அறிவிலி ராஜீவ் காந்தி
சீரழித்த காங்கிரசுக் கட்சி
ஒரு தாலிக்கொடிக்கு பலதாலி பறிக்கும்
இத்தாலிக் கொடியாள் அரசோச்சும் கட்சி
காங்கிரசில் ரவிச்சந்திரன் மட்டும்தான் தமிழனா
இன்னும் காங்கிரசில் இருப்பவன் தமிழனா
காந்தி அன்று சொன்னதை
இன்று செய்வீர் தமிழ்நாட்டினரே
கலையுங்கள் காங்கிரசை

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...