Friday 23 January 2009

தொ(ல்)லைக் காட்சித் தொடர் நாடகம்


கதாநாயகன் பாடு படு திண்டாட்டம்
தாய்க்கும் தாரத்திற்கும் நடுவில் தவிப்பான்
ஒருத்திக்கு அவன் கணவன்தான் ஆனாலும்
இன்னொருத்திக்கு அவன் காதலன்
இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்க்குச் செய்ததுபோல
கதாநாயகிக்கு எல்லோரும் துரோகங்கள் செய்வர்
ஆனாலும் அவள் எல்லோர்க்கும் நல்லது செய்வாள்
வில்லியாக வருவாள் ஒரு பெரு விழித் தையல்
மாற்றாள் கணவன் மேல் கொள்வாள் மையல்
தொடரும் அங்கு ஆட்கடத்தல் கொலைகள் பல
கொழும்பு அரசு போல் பல வன்முறைகள் நடக்கும்
சாமியார் ஒருவர் அதில் கட்டாயம் இருப்பார்
வருவதெல்லாம் முன்கூட்டியே சொல்வார்
தமிழா உன் கலாச்சாரம் தெலையுதடா
மூட நம்பிக்கைகள்தான் வளருதடா

Thursday 22 January 2009

கடாட்சம்



துயிலெழுந்து சுப்ரபாதம்போல்
நினைப்பது உன் பாதம்.
சந்தியா வந்தனம் போல்
மும்முறை தரிசிப்பது உன் முகம்.
காயத்திரி மந்திரம் போல்
ஆயிரத்தெட்டுத் தடவை
உச்சாடனம் செய்வது
உன் இனிய பெயர்.
உன் நினைவே
என் கணபதி ஹோமம்
உன் உரசல்தான்
இலட்சுமி பூசை
என்று கிடைக்கும்
உன் கடாட்சம்

Wednesday 21 January 2009

பக்சராஜா

வன்னிக்கள முனையில் பக்சராஜா
பெளத்தம் தலை குனியுதடா பக்சராஜா

பறப்பது விமானமல்லடா பக்சராஜா
புத்தன் தம்ம போதனைகளடா பக்சராஜா
விழுவது குண்டுகளல்லடா பக்சராஜா
தேரவாதம் தானடா பக்சராஜா

துற்பாக்கிகள் தரும் துப்பாக்கிகள் பக்சராஜா
எம்போக்கைத் தகர்க்குமோடா பக்சராஜா
மேனனை நம்பும் மோடா பக்சராஜா
தேர்தலொன்று மாற்றுமடா பக்சராஜா

ஐம்பதில் குண்டாந்தடியடா பக்சராஜா
அறுபதில் துப்பாக்கிளடா பக்சராஜா
எழுபதில் ஹெலிகளடா பக்சராஜா
எண்பதில் விமானங்களடா பக்சராஜா

இஸ்ரேலியரும் வந்தாரடா பக்சராஜா
அமெரிக்கர் பல தந்தாரடா பக்சராஜா
சீனரும் உன்னோடுதான் பக்சராஜா
இந்தியரும் வந்து நிற்கிறாரடா பக்சராஜா

எது வந்தாலும் என்னடா பக்சராஜா
எவர் வந்தாலம் என்னடா பக்சராஜா
வேழம்தான் விழலாமடா பக்சராஜா – நம்
ஈழமது விழுமோடா பக்சராஜா

Monday 19 January 2009

காட்டு நாடகம்


சிங்கத் தோலோடு
கழுதை ஒன்று
பல காலமாகச்
சீறிப் பாய்கிறது

நரிகளும் பன்றிகளும்
இணைந்து நிற்கின்றன
கோட்டான்களும் கழுதைகளும்
துணைக்கு நிற்கின்றன

இரைக்கு இரந்து அழ
பசுக்களுமல்ல
விழுந்து எழாமலிருக்க
யானைகளுமல்ல

சரிந்து நிமிராமலிருக்க
மட் சுவர்களுமல்ல
பதுங்கிப் பயந்தோட
கோழைகளுமல்ல

கரு முகிலிடை
ஒரு மின்னல் வெடிக்கும்
பேரிடி பல முழங்கும்
கீழத் திசையில்
ஒரு கதிர் உதிக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...