Monday 21 December 2009

ஐநா இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ளது: சரணடைய வந்தோர் கொலை.


தமிழர்களுக்கு எதிரான போரின் இறுதி நாளுக்கு முதல் நாளான 17-05-2009 இலன்று சரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொன்றமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளார்.

அக்கடிதத்தின் சாராம்சம்:
மேதகு தங்களது அரசிற்கு திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது மரணம் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

மேதகு தங்கள் அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்டதாகக் கூறிய நாளுக்கு முதல் நாளான 17ம் திகதி மே மாதம் 2009 இலன்று திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் ஒரு சிறிய இடத்தினுள் அகப்பட்டிருந்தனர். இடை ஆட்கள்மூலம் தாங்கள் எப்படி இலங்கை அரச படைகளிடம் சரணடையலாம் என்று அறிய மேதகு தங்கள் அரசுடன் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றனர். இதற்கான பதிலாக வெள்ளைக் கொடிகளுடனும் வெள்ளை ஆடைகளுடனும் இலங்கை அரச படைகளின் நிலைகளை நோக்கி நடந்து வரும்படி தங்கள் அரசின் பாதுகாப்புச் செய்லரும் தங்களது ஆலோசகரும் அப்போதைய பாராளமன்ற உறுப்பினருமானவரிடமிருந்து வந்தது. அப்படிச் சரணடைய வந்த திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லும்படி பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து தொலைபேசி மூலமான உத்தரவு 58வது படைத் தளபதி சென்றது.

இந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.

இதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆயுத மோதல் தொடர்பான 1949 ஜெனீவா உடன் படிக்கையின் பொது பந்தி 5 இன்படி ஆயுதத்தைக் கீழே வைத்தவர்கள் மனிதாபிமான ரீதியில் நடாத்தப் படவேண்டும்.

திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரும் அவர்களுடன் வந்தவர்களும் கொல்லப் பட்டது தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கும் வேளையில் தங்களது அரசின் ஒத்துழைப்பையும் அவதானத்தையும் இது தொடர்பாக செலுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன். அத்துடன் குறிப்பாக கீழுள்ள வினாக்கள் தொடர்பாகவும்:
  1. மேலுள்ள குற்றச் சாட்டுக்கள் சரியானதா? அப்படி இல்லையாயின் அது தொடர்பான தகவல்களையும் பத்திரங்களையும் தயவு கூர்ந்து (என்னுடன்) பகிர்ந்து கொள்ளவும்.
  2. 18-05-2009 இலன்று கொல்லப்பட்டதாக நம்பப்படும் திருவாளர்கள் நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரது குடும்பத்தினர் தொடர்பாக தங்கள் அரசிடம் உள்ள தகவல்கள் என்ன?
  3. மேலுள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ, காவற்துறை, நீதித்துறை போன்றவற்றின் விசாரணைகளைப் பார்க்கவும்.
தங்களது அரசின் பதில் மனித உரிமைக் கழகத்திடம் தெரிவிக்கப் படும்.

இப்படிக்கு
பிலிப் அள்ஸ்டன்

மேற்படி கடிதவிவகாரத்தை கவனமாக இலங்கைஅரசு கையாள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...