Thursday 17 December 2009

காசோலை காணமற் போகப் போகிறது


காசோலைக்கு என்று ஒரு தனிப்பட்ட வரலாறு உண்டு. அது பற்றிய தகவல்கள்:
  1. 16-02-1659 இலன்று முதலாவது காசோலை 400 சிலிங்குகளுக்கு எழுதப் பட்டது. எழுதியவர் நிக்கொலஸ் வான் அக்கர். பெற்றுக் கொண்டவர் டெல்போ என்பவர்.
  2. 1717-ம் ஆண்டு இங்கிலாந்து வங்கி அச்சடிக்கப்பட்ட காசோலைகளை வெளியிட்டது.
  3. 1833இல் முதலாவது காசோலை செலுத்தும் நிலையம் (cheque clearing house) இலண்டனில் ஆரப்பிக்கப் பட்டது.
  4. இன்று 38இலட்சம் காசோலைகள் பிரித்தானியாவில் தினந்தோறும் எழுதப்படுகின்றன.
  5. ஐக்கிய இராச்சியத்தில் ஒருவர் சராசரியாக நளொன்றிற்கு 5 காசோலகளைப் பெறுகிறார். (நான் மாதத்தில் ஒன்றுதான் பெறுகிறேன்)
  6. 1990-ம் ஆண்டு நாளொன்றிற்கு 40 கோடி காசோலைகள் எழுதப்பட்டன. 2008இல் அது 14 கோடியாகக் குறைந்தது.
  7. பொதுவாக ஒரு காசோலை எழுதப் பட்ட நாளில் இருந்து ஆறு மாதங்கள்வரை செல்லு படியாகும். அமெரிக்காவில் இது கட்டாயம்.
காணமல் போகவிருக்கும் காசோலை
பிரித்தானியாவில் 31-10-2018இற்குப் பிறகு காசோலை எழுதுவதை நிறுத்துவதாக வங்கிகள் ஒத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிறகு இலத்திரனியல் அட்டைகள் மூலமாகவும் இணைய வலை அமைப்பினுடாகவும் கொடுப்பனவுகள் மேற் கொள்ளப் படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...