Saturday 26 December 2009

ஒரு அரசமைப்பு நெருக்கடியை தமிழர்களால் ஏற்படுத்த முடியுமா?


இலங்கையின் அரசியல் அமைப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையில் ஒரு பலவீனம் உண்டு. அந்தப் பலவீனம் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தேர்தலில் இரு பெரும் புள்ளிகள் மட்டுமே மோதுவர், மற்றவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறமுடியாதவர்களாக இருப்பார்கள் என்று அனுமானித்ததால் ஏற்பட்டது.

இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமையை சுருங்கக்கூறுவதாயின் இப்படிச் சொல்லலாம்:
1. குடியரசுத் தேர்தலில் 50% மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவர்.
2. ஒவ்வோரு வாக்காளரும் இரு வாக்குகள் அளிக்கலாம். ஒன்று முதல் தெரிவு. மற்றது இரண்டாம் தெரிவு. இரண்டும் ஒருவருக்கு அளிக்க முடியாது.
3. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முதல் தெரிவை அடிப்படையாகக் கொண்டு எண்ணப் படும். இதில் 50%இற்கு மேற்பட்ட வாக்கை பெறுபவர் குடியரசுத் தலைவரா அறிவிக்கப் படுவர். இதுவரை நடந்த தேர்தல்களில் முதற்கட்ட எண்ணிக்கையில் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இரண்டாம் கட்டத்திற்கு போகத் தேவையில்லாத படி முதற்கட்டத்திலேயே 50% வாக்குகள் பெற்று வெற்றி நிர்ணயிக்கப் பட்டது.
4. முதற் கட்ட வாக்கு எண்ணிக்கையில் எவரும் 50% வாக்குகள் பெறாதவிடத்து அதிக வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியில் இருக்க மற்றவர்கள் போட்டியில் இருந்து விலக்கப் படுவர். இவ்விரு வேட்பாளர்களுக்கும் விழுந்த இரண்டாம் தெரிவு வாக்குக்கள் அவர்கள் ஏற்கனவே பெற்ற வாக்குக்களுடன் சேர்த்து மற்றவரிலும் பார்க்க அதிகமாகவும்50% இற்கு அதிகமாகவும் வாக்குப் பெற்றவர் குடியரசுத் தலைவராக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப் படுவர்.

இரண்டாம் கட்ட எண்ணிக்கையிலும் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி இலங்கை அரசியலமைப்பு வரையறை செய்யவில்லை. அதனால் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட் வாய்ப்புண்டு.

இம்மாதிரியான அரசியலமைப்பு நெருக்கடியை தமிழர்களால் உருவாக்க முடியும். அதற்கு மூன்று பெரும் புள்ளிகள் தேர்தலில் மோதவேண்டும். இம்முறை மூன்றாவது புள்ளியாக விக்கிரமபாகு கருணரட்ண களம் இறங்கியுள்ளார். அவருக்கு கணிசமான வாக்குக்கள் கிடைக்குமா என்பது சந்தேகம். பிரதான இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காமல் முன்றாவது ஒருவருக்கு எல்லாத் தமிழர்களும் முதல் தெரிவு வாக்கு மட்டும் அளித்து இரண்டாம் தெரிவு வாக்கை எவருக்கும் அளிக்காமல் விடவேண்டும். இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் எவரும் 50% இற்கு அதிகமான வாக்குக்கள் பெறாமல் போகலாம். ஆனால் இம்முறை அது சாத்தியமில்லை. இந்தியாவின் சொல்லுக்கு அடங்கி மலையகத் தமிழர்களின் பிரதான கட்சிகள் கொடியவன் ராஜபக்சேயிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்து விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த கொடியவன் சரத் பொன்சேக்காவுடன் அவரது பொய் வாக்குறுதிகளை நம்பி இணையவிருப்பதாக செய்திகள் வருகின்றன. போதாக் குறைக்கு சிவாஜிலிங்கம் வேறு ஒரு வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். இலங்கையின் அரசியல் அமைப்பை வரைந்தவர்கள் தமிழர்களின் ஒற்றுமை இன்மையை மந்தில் கொண்டு அதை வரைந்தார்களா?

8 comments:

மு. மயூரன் said...

குழப்பம் தீர்க்கும் ஒரு விளக்கமான பதிவு.

இடதுசாரிகள், சிறுபான்மைக் கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிக்கு விக்கிரமபாகு உடபட பலர் ஆதரவளிக்காத நிலையில் அம்முயற்சி தோல்வியைத் தழுவியது.

வாக்குச்சீட்டுக்களைப் பழுதாக்குவதன் மூலம் எதிர்ப்பைத்தெரிவிப்பதா அல்லது விக்ரமபாகு போன்ற ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து நிறைவு காண்பதா பொருத்தமானது என்று கருதுகிறீர்கள்?

என்.கே.அஷோக்பரன் said...

உங்கள் பதிவில் சில தகவற் பிழைகள் இருக்கிறது. முதலாவது ஒருவர் 2 விருப்பத் தெரிவுகள் அல்ல 3 விருப்பத் தெரிவுகள் வரை ஒழுங்குவரிசையில் வாக்களிக்கலாம் (அதாவது 3 பேருக்கு மேற்பட்டோர் போட்டியிடுமிடத்து)(கவனிக்க இலங்கை அரசியலமைப்பின் 94வது சரத்து)

மற்றையது இரண்டாம் விருப்பத்தெரிவு எண்ணிக்கையிலும் இருவரில் யாரும் 50வீதம் பெறாவிட்டால் மூன்றாம் விருப்பத்தெரிவு கணக்கெடுக்கப்படும், அதிலும் இருவரில் யாரும் 50வீதம் பெறாவிட்டால் திருவுளச்சீட்டின் மூலம் இருவரில் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். (கவனிக்க இலங்கை அரசியலமைப்பின் 94வது சரத்தின் 3வது பிரிவு).

இம்மாதிரியான நெருக்கடியை புள்ளிவிபர ரீதியாகத் தமிழர்கள் ஏற்படுத்துவத கடினம். ஏனென்றால் இலங்கை சனத்தொகையில் ஏறத்தாழ 12.6வீதம் இலங்கைத் தமிழரும் 1-5.2வீதம் இந்தியத் தமிழரும் உள்ளனர் - மொத்தமாகவே அவாகளது சனத்தொகை ஏறத்தாழ 18வீதம் இதிலும் எத்தனை வீதமானோர் வாக்களிக்கத் தகுதிபெற்றிரக்கிறார்கள் (பதிவு செய்திருக்கிறார்கள்) என்பது சந்தேகம். சிங்களவர்கள் 73.9வீதம் இருக்கிறார்கள் அவர்கள் அவர்கள் இரண்டாகப் பிரிந்தாலே ஒரு பகுதிக்கு ஏறத்தாழ 37வீத வாக்கு கிடைக்கும் - தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்தால் கூட 25வீத வாக்குகள் தான் பெறலாம் (இது முழுமையாக தமிழர்களும், முஸ்லிம்களும் சேர்ந்தால்) அப்படிப்பார்த்தால் கூட மூன்றாவது பெரும்பான்மையைத் தான் தமிழர்களும், முஸ்லிம்களும் வாக்களித்த வேட்பாளர் பெறமுடியும். ஆகவே அவர் முதல் இரண்டுக்குள் இல்லாததால் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். சிங்களவர்கள் பெரும்பாலும் பிரதான இரண்டு கட்சிகளிலொன்றுக்கே வாக்களிப்பார்களேயொழிய விக்ரமபாகு போன்ற ஒருவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றைப் பார்த்தீாகளேயானால் பிரதான இரண்டு வேட்பாளர்கள் தவிர்த்து 3வது வேட்பாளர் அதிகபட்சமாக 4வீத வாக்குகளையே பெற்றிருக்கின்றார். இந்த இடதுசாரிகளால் இலங்கைத் தேர்தல்களில் வெற்றிபெறவே முடியாது ஏனெனில் இந்த விக்ரமபாகுவைவிட இலங்கை வரலாற்றில் சிங்களவர்கள் பெரிதும் மதித்த மனிதர் - இலங்கை கண்ட சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவர் - இலங்கையின் முன்னணி இடதுசாரிகளில் ஒருவருமான கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வாவால் கூட 0.90வீத வாக்குகள்தான் பெறமுடிந்தது. சரி அப்படியானால் தீர்வு? - இருக்கிறது ஆனால் அதற்கு இலங்கை இன்னும் கல்வி, அரசியலறிவு ரீதியில் முன்னேற வேண்டும் - இனம் அடிப்படையிலான அரசியல் மாறி கொள்கை அடிப்படையிலான அரசியலுக்குள் இலங்கை பிரவேசிக்க வேண்டும் அது தான் ஒரே தீர்வு.

Unknown said...

I have seen your feed and others comment. I feel that i forget Constitutional laws.

First, first count. any one who obtain 50 percent wins. if not first two candadates go to the second round. now, rest of the candiates votes are counted and added to one of the two candidates in this way.
Among rest of the votes, Second prefernece votes are addeded to one of them if the rest of the voters voted for one of the two and if none of them voted for one of the two, third prefence votes are added to one of the two if third prefercne if one of them got it.

Now, Majority candidate wins and not 50 percent.
If both candidate obtain equal votes, it becomes lottery. Chances for lottery impossible.

Please read the constitution carefully,
Second count means majority and not 50 percent. There is no chance for 50 percent in the second count. if there is is all of the candidite must put either second or third choice to one of the leading two candidates which is unlikey.

என்.கே.அஷோக்பரன் said...

Kaddumaram - Yes you are right about the 2nd preference count. No 50%.

Unknown said...

Mr.Asokparan, please read constitution carefully.
Second and third choices are counted together and nnot after second chioice. The reason is that any candidte who put second preference is added and if not third prefereence and then total are caounted.

Second count is not 50 percent but majority

if you have some doubt read the constitution again

Unknown said...

thanks asok r u on line

Unknown said...

majuran, all the tamils should vote for onlt Tamil candidate who has the backing from Thesiathalivar. TNA will soon get the message and will support the Tamil candidate. if not and tamils vote for either of the leading candidate people who work for reasonable settlement will stop doing evrything straight away because those who work for naadu kadantha thamileelam become laughing stock and the people who were killed in mullivakka and the suffering of the vanni resident have no meaning

Vel Tharma said...

Thanx, Ashok & Kaddumaram

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...