Tuesday 22 December 2009

ஐநா மீண்டும் திருகு தாளம் செய்யும்.


ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளது சிலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதனால் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? இதுவரை நடந்து அநியாயங்கள் வெளிவருமா? யாராவது அதற்காக தண்டிக்கப் படுவார்களா?

சரணடைய வெள்ளைக் கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்தவர்களையும் சுட்டுக் கொல்லப் பட்டதாக சரத் பொன்சேக்கா தெரிவித்ததாக முதலில் செய்திகள் வந்தன. பின்னர் அது அவரால் மறுக்கப் பட்டது. வெள்ளை கொடியுடன் யாரும் சரணடைய வரவில்லை என்றும் கூறினார் சரத் பொன்சேக்கா. இதை வைத்துக் கொண்டு எந்த சட்ட நடவடிக்கையும் இலங்கை அரசிற்கு எதிராக எடுக்க முடியாது. பிலிப் அள்ஸ்டன் அவர்களே இதைக் தனது கடிதத்தில் இப்படித் தெரிவித்துள்ளார்:
  • இந்தக் குற்றச் சாட்டுக்கள் அப்போதைய படைத் தளபதியான சரத் பொன்சேக்காவினால் சண்டே லீடர் செய்தித்தாளிற்கு வழங்கிய பேட்டியில் மேற் கொள்ளப் பட்டிருந்தன.
  • இதன் உண்மைத் தன்மையைப் பற்றி முன்மதிப்பீடு செய்ய விரும்பாத வேளை ஆயுதப் போரின் போது கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகளைப் பற்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இலங்கை அரசிடம் இருந்து அவரது கடிதத்திற்கு என்ன பதில் வரும் என்பதை நாமும் அறிவோம் ஐக்கிய நாடுகள் சபையும் அறியும். இருந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்தது ஏன்? ஐநா இலங்கைப் போரில் நடந்த முறை பல ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அதைத் தவிர்க்கவே இப்படி ஒரு விளக்கம் கோரல் கடித நாடகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சார்ந்த நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சரணடையும் பேச்சு வார்த்தை முதலில் இந்தியாவுடன் நடை பெற்றது. இந்தியா கையை விரித்து விட்டது. பின்னர் ஒரு ஊடகவியலாள்ரூடாக பேச்சு வார்த்தை நடை பெற்றது அதில் ஐநாவின் விஜய் நம்பியார் நேர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் சம்பந்தப் பட்டிருந்தனர். இதை சாதுரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் தனது கடிதத்தில் மறைத்துள்ளார். கோத்தபாய ராஜபக்சே சரணடையாலாம் என்று கூறியதிற்கு உன்னத சாட்சியாக விஜய் நம்பியாரும் எரிக் சொல்ஹெய்மும் இருக்கிறார்கள். இந்த காத்திரமான உண்மையை தனது கடிதத்தில் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் மறைத்ததின் பின்னணி என்ன? இந்த சரணடைய வந்தவர்களைக் கொன்ற குற்றச் சாட்டை நிரந்தரமாக மறைக்க முன்னேற்பாடு நடக்கிறதா?

பிலிப் அள்ஸ்டன் அவர்கள் உண்மையில் இந்த விளக்கத்தை ஐநாவிடம், ஐநா அதிபரிடம், இதில் சம்பந்தப் பட்ட விஜய் நம்பியாரிடம்தான் கேட்டிருக்க வேண்டும் என்று இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல இந்த சரணடையும் பேச்சுவார்த்தைகளில் விஜய் நம்பியார் ஈடுபட்டிருந்த வேளை அவர் பான் கீமூனுடந்தான் இருந்தார் என்றும் கூறப் படுகிறது.

ஐநா ஏற்கனவே செய்த திருகுதாளங்களும்
வில்லங்கமான வில்லன் நம்பியாரும்.
இலங்கயில் கடுமையாகப் போர் நடந்து கொண்டிருட்ந்த வேளை போர் முனையில் 250,000 இற்கு மேற்பட்டவர்கள் அகப் பட்டிருந்தனர் என செய்மதிகள் மூலம் நிபுணர்கள் கணித்து ஐநாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால் தொடர்ந்து இலங்கை அரசு அங்கு 70,000 பேருக்குக் குறைவானவர்களே இருந்தனர் என்று தொடர்ந்து அடம் பிடித்தது. உண்மையில் மூன்று இலட்சம் பேர் போர் முனையில் பன்னாட்டுச் சட்டங்களுக்கு முரணாக உணவு, நீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தொடர் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர். இதற்கான சகல ஆதாரங்களும் இப்போது உண்டு. இலங்கைக்கு எதிராக ஐநா என்ன நடவடிக்கை எடுத்தது. இந்தியா சீனாவுடன் கைகோத்து ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்தது.

போர் நடந்து கொண்டிருந்த வேளை ஐநா அதிபர் இலங்கை செல்லும் படி கேட்கப் பட்டார் அதை அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி போர் முடிந்த பின் சென்றார். இதுபோன்ற வஞ்சக செயற்பாடுகளுக்காக ஐநா அதிபர் பான் கீ மூன் அவர்களை மிக ஆபத்தான் கொரிய நாட்டவர் (Ban Ki Moon, the msot dangerous Korean) என்று ஒரு ஊடகம் விமர்சித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதியது.


போர் நடந்து கொண்டிருந்த வேளை பிரித்தானியாவின் வற்புறுதலின் பேரில் ஐநாவின் விஜய் நம்பியார் என்னும் சீனாவின் நண்பர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்று உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி பணிக்கப் பட்டார். அவர் அங்கு சென்று உடன் ஐநா திரும்பாமல் இந்தியா சென்றார். அவர் அங்கு தமிழின விரோதிகளான சிவ் சங்கர மேனனுடனும் நாராயணுடனும் பேச்சு வார்த்தை செய்யவா சென்றார் என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. காலம் தாழ்த்தி ஐநா திரும்பிய வில்லங்கமான வில்லன் நம்பியார் முதலில் தனது அறிக்கையை சமர்பிக்காமல் காலம் தாழ்த்தினார். இதற்க்காக அவர் மீது ஒழுக்காற்று நடவைக்கை எடுக்கப்படும் என்று பிரித்தானியா மிரட்டிய பின் நிலத்திற்குக்கீழ் உள்ள மூடிய அறையில் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

ஐநா அதிபரைப் பற்றி அண்மையில் வந்த விமர்சனம்
...at a time when global leadership is urgently needed, when climate change and international terrorism and the biggest financial crisis in 60 years might seem to require some—any!—response, the former South Korean foreign minister has instead been trotting the globe collecting honorary degrees, issuing utterly forgettable statements, and generally frittering away any influence he might command. He has become a kind of accidental tourist, a dilettante on the international stage.

(Note: Dilettante means - an amateur who engages in an activity without serious intentions and who pretends to have knowledge)

Not for him bold speeches or attempts to mobilize public opinion behind what could be an organization that helps tackle nuclear proliferation or reconstruct Afghanistan. Not for him championing human rights, or even rallying in defense of beleaguered civilians. Visiting Malta in April for yet another honorary degree, he was evasive when asked about the island's penchant for sending illegal African immigrants packing off to Italy, saying, "I am not in a position to intervene." As tens of thousands of Tamil refugees lingered under fire on a narrow strip of beach in Sri Lanka, Ban and his advisors did little more than huddle in New York and wring their hands, only making a trip to the war zone after hostilities ended. Under his stewardship, the United Nations isn't merely an unhelpful place—it's a largely irrelevant one.

So far, Ban has no such successes to his credit. It's not as if there aren't enough crises around the globe for him to make his mark, whether in Sri Lanka or Sudan or the Middle East. But Ban hasn't given any indication that he's going to have an impact in any of these places—or even that he wants to.



மீண்டும் திருகு தாளமே.
ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கான பதிவாளர் பிலிப் அள்ஸ்டன் அவர்கள் இலங்கை அரசிற்கு அனுப்பிய கடிதமும் ஒரு திருகு தாளத்திலேயே முடியும்.

3 comments:

Anonymous said...

http://www.foreignpolicy.com/articles/2009/06/19/nowhere_man

Anonymous said...

Inner City Press also questioned the letter and say it should have been sent to Vijay Nambiar the villain..

Anonymous said...

தமிழனுக்கு என்றாவதோ எவரிடமிருந்தோ எங்காவதோ நீதி கிடைக்குமா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...