Sunday 20 December 2009

ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நன்மை தருமா?


எதிர்வரும் இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இழக்கப் போவது எதுவுமில்லை
என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களிடம் இழக்க இப்போது ஒன்றும் இல்லை. தமிழர்களிடம் இருத்து யாவும் பறிக்கப் பட்டு விட்டது.

டக்ளஸ் தேவானந்தா இப்படிக் கூற மனோ கணேசன் அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
தென்னிலங்கையில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரவேண்டியது காலத்தின்கட்டாயம். இன்றைய நெருக்கடி மிகுந்த காலக்கட்டத்திலே இந்த காலத்தின் கட்டாயத்தை புரிந்துக்கொண்டு நாம் செயற்படாவிட்டால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் அரசியல் செயற்பாட்டை தமிழ் இனத்தின் தேசிய ஐக்கியத்தை சிதைத்து சின்னப்பின்னப்படுத்தாமல் நம்மால் கொண்டுவரமுடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழினத்தின் ஐக்கியத்தை தான் பிரித்ததாகப் பெருமையுடன் கூறிக் கொள்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அவருடன் கூடி இருந்து கொண்டு மனோ கணேசன் தமிழினத்தின் ஐக்கியம் பற்றிக் கூறுகிறார். அடுத்த வருடம் ரணில் சொல்லுவார் மனோகணேசனைப் மற்றத் தமிழர்களிடம் இருந்து பிரித்தது நானே என்று. மனோ கணேசன் மலையக மக்கள் முன்னணியின் கருத்தில் இருந்து வேறு படுகிறார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

இலங்கையில் பல ஆட்சி மாற்றங்களை நாம் கண்டுள்ளோம் எந்த ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு தந்தது?

யார் இந்த புது அரசியல்வாதி சரத் பொன்சேக்கா?
மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு சரத் பொன்சேக்காவை ஆட்சிக்கு கொண்டுவந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? யார் இந்த சரத் பொன்சேக்கா? தமிழர்களை போர் நியமங்களை மீறி கொன்று குவித்ததால் சிங்கள மக்களிடம் புகழ் பெற்றவர்.
இவர் இதுவரை சிங்கள மக்களுக்கு என்ன சேவை செய்தார்? இவர் அரசியலுக்கு வரக் காரணமே இவர் ஒரு தமிழ்த் தேசியத்தின் விரோதி என்பதாலேயே. இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித உரிமையும் கிடையாது அவர்கள் இங்கு வாழலாம் என்று "பெருந்தன்மையுடன்" கூறிய சரத் பொன்சேக்காவுடன்; சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றேன் என்று கூறிப் பெருமை தேடிக் கொண்டவருடன் கூட்டுச் சேர்ந்து இருந்து கொண்டு மனோ கணேசன் சொல்கிறார் ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு விடிவு கொண்டுவருமாம்.

வாக்குப் பலமும் சுயநிர்ணய உரிமையும்.
தமிழர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பதன் மூலம் தமது பிரச்சனையைத் தீர்க்கலாம் என்றால் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருக்கிறது என்றாகிவிடும். இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தமிழர்கள் வாக்களித்து எதைச் சாதித்தார்கள். அவர்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் அவர்களின் துரோகிகளாக மாறியதுதான் உண்மை. சுயநிர்ணய உரிமை இல்லாத ஒரு இனம் தந்து வாக்குப் பலத்தால் எதையும் செய்ய முடியாது. தமது வாக்குப் பலத்தால் எதையும் ஒரு இனம் சாதிக்க முடியாவிட்டால் அது சுயநிர்ணய உரிமை இல்லாத இனம்.


தமிழ் அரசியல் வாதிகள் சிலவற்றை மறந்து விட்டனர்:
  • தமிழர்களின் அதி தீவிர விரோதி யாரோ அவருக்குத்தான் சிங்களமக்கள் விரும்புவாரகள்.
  • இத் தேர்தலில் தமிழர்கள் வாக்குப் பலத்தை கருத்தில் கொள்ளாது பிரதம வேட்பாளர்கள் களத்தில் இறங்குவதையே சிங்களப் பேரினவாதிகள் விரும்புகிறார்கள்.
  • தேர்தல்களில் வாக்களிப்பதால் தமிழர்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை.



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...