Saturday, 19 December 2009

துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கும் இந்தியா.


இலங்கையில் நடந்த இனக்கொலைக்கு இந்தியா செய்த உதவிகளை எந்த ஒரு தமிழனும் மறக்கவும் மாட்டான். மன்னிக்கவும் மாட்டான். சரணடைய வந்தவர்களைத் தட்டிக் கழித்து சிங்களவனிடம் சரணடையுங்கள் என்று கூறியது இந்தியா என்ற உண்மை வெளிவந்தது. வன்னிப் போர்களத்தில் இந்தி, தமிழ் ஆகியன பேசியபடி படிவீரர்கள் செயற்பட்டதை சிங்களத் தொலைக்காட்சிப் பதிவுகள் வெளிக்கொணர்ந்தன. இந்தியாவின் மீது தமிழர்களின் வெறுப்பு உச்சக் கட்டத்தை அடைந்து விட்டது. இதன் தாற்பரியத்தை உணர்ந்து கொண்ட இந்தியப் பேரினவாதிகள் தங்கள் தமிழ்நாட்டு முகவர்கள் மூலம் இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு உதவ வேறு ஒருவரும் இல்லை என்ற பொய்க் கருத்தைப் பரப்ப முற்பட்டது. ஆனால் இந்தியாவால்தான் தமிழர்களுக்கு உதவ வந்தவர்கள் தடுக்கப் பட்டனர் என்ற உண்மை பசில் ராஜபக்சேவால் போட்டு உடைக்கப் பட்டது. கோபாலபுரத்தார் தான் அழுவது யாருக்கும் தெரியாது என்று கூறிய போலிவார்த்தைகளும் எடுபடவில்லை.

சூரிச் சூழ்ச்சி படுதோல்வி.
சுவிஸ்லாந்து நகர் சூரிச்சில் செய்த சூழ்ச்சி இந்தியாவிற்கு படு தோல்வியைக் கொடுத்தது. இப்போது இந்தியப் பேரினவாதிகளுக்கு வேறு வழியில்லை. ஒரே வழி ராஜீவ் கொலை. அந்த துருப்பிடித்த ஆயுதத்தை மீண்டும் எடுத்துள்ளது. குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களிடம் உள்ள இந்திய வெறுப்பை சமாளிக்க அது உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

புதிய புத்தகம் பழைய ஆயுதம்
ராஜீவ் கொலைவழக்கில் சம்பந்தப் பட்ட முன்னள் சிபிஐ அதிகாரி கே.ரகோத்தமன் மூலம் ஒரு புத்தகத்தை வெளிவிட்டது இந்தியப்பேரினவாதம். 'ராஜீவ் காந்தி கொலைவழக்கு - மர்மம் விலகும் நேரம்' என்ற தலைப்பில் ராஜீவ் கொலை நடந்து 22 வருடங்களுக்குப் பின் வெளியிடப் பட்டுள்ளது. அதில் அவர் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்நாட்டு தமிழின உணர்வாளர்களுக்கும் ராஜீவ் கொலையில் சம்பந்தம் இருப்பதாக ஆதாரமின்றி ஊகங்களை வைத்து எழுதி இருக்கிறார்.

  • கே.ரகோத்தமனைப் பேட்டி கண்டு (இந்திய உளவுத்துறைக்கு பலவிதத்திலும் உதவிவருவதாக சந்தேகிக்கப்படும்) ஜுனியர் விகடன் சஞ்சிகை அவர் புத்தகத்திற்கு விளம்பரம் தேடிக் கொடுத்திருக்கிறது. விகடனுக்கு அவர் கூறியது: ''வைகோ மீது எனக்கு தனிப்பட்ட வருத்தம் ஏதுமில்லை. ஆனால், அவர் மீது எனக்கிருக்கும் சந்தேகங்கள் வலுவானவை. காயமடைந்த விடுதலைப் புலிகளை வைகோவின் தம்பி ரவிச்சந்திரன், அவரது வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அதன் மூலமாக ராஜீவ் கொலை குறித்து முன்கூட்டியே வைகோவுக்கும் அவர் தம்பிக்கும் தெரிந்திருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்றே நம்புகிறேன். இலங்கைக்கு சென்றிருந்தபோது வைகோ, ராஜீவ் குறித்து கடும் ஆவேசத்தோடு பேசிய பேச்சுகள் ஆதாரத்தோடு இருக்கின்றன. சிவராசனை சந்தித்து, ராஜீவ் கொலை குறித்தும், வைகோவை முதல்வராக்கும் திட்டம் குறித்தும் சீனிவாசய்யா என்பவர் பேசியதாக சின்ன சாந்தனின் ஸ்டேட்மென்ட்டிலேயே இருக்கிறது. அந்த சீனிவாசய்யா என்பவர் வைகோவின் தம்பியான ரவிச்சந்திரனாக இருக்க முடியும் என்பது எங்களின் யூகம்தான். மற்றபடி அது ரவிச்சந்திரன்தான் என நான் உறுதியாகச் சொல்லவில்லை. ஆனாலும், வைகோவை முதல்வராக்குவது குறித்து அந்த 'சீனிவாசய்யா' என்கிற மர்ம நபர் சொன்னதை யாராலும் மறுக்க முடியாது
இந்த ஊகங்களுக்கு கபட விகடன் கொடுத்த உப தலைப்பு: ''ஆதாரம் இருக்கிறது!'' அடித்துச் சொல்கிறார் ரகோத்தமன்!

இதில் சொல்லப் பட்ட எதுவும் உறுதியானவை அல்ல. எல்லாம் ஊகங்களும் நம்பிக்கைகளும். ஊகங்களையும் நம்பிக்கைகளையும் வைத்து உண்மையை வெளிக் கொண்டுவர முடியுமா? ராக்கோத்தமன் இந்திய உளவுத்துறையிடம் கூலி பெற்றுக் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார் என்பது எனது ஊகம்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...