Friday 18 December 2009

பிரபாகரனின் மகளின் உடல் - இலங்கை அரசு மறுப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடலை தாம் கண்டறியவில்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. சென்ற வாரம் துவரகாவின் கொடூரமாகக் கொல்லப் பட்ட உடல் என்று சொல்லி ஒரு படம் வெளிவிடப் பட்டிருந்தது. இப்படம் துவரகாவின் படம் என்று உறுதிசெய்யப் படவில்லை.

பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியின் உடலைத் தவிர பிரபாகரனின் வேறு எந்த குடும்ப உறுப்பினர்களின் உடலையும் தாம் கைப்பற்றவில்லை என்று இலங்கை படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்காரா டெய்லி மிரர் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

துவரகாவின் படம் வெளியிட்டது இலங்கைக் குடியரசுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிராக தமிழர்களின் அபிப்பிராயத்தை திருப்பவே என்று பேசப் பட்டது. அதைச் சீர் செய்ய அரசு இந்த மறுப்பறிக்கை வெளியிட்டிருக்கலாம்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி மகள் துவராகா இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் 2008 அக்டோபர் மாதமே வன்னியில் இருந்து வெளியேறி வேறு நாடு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

மேற்படி படம் இசைப் பிரியா என்னும் நிதர்சனம் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருடையது என்று சிலர் அடையாளம் கண்டுள்ளனர். இசைப் பிரியா ஒரு விடுதலைப் புலிகளின் கடற்படைப் போராளியின் துணைவியாவார்.

ஏற்கனவே துவரகாவைக் கைது செய்ததாகவும் இலங்கை அரசு செய்தி வெளியிட்டிருந்தது. அப்பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: துவாரகா
===========================================

3 comments:

Anonymous said...

சில தமிழ் இணையத் தளங்கள் உண்மையை அறியாமல் பிரசுரம் செய்கின்றன...

Anonymous said...

தமிழ்வின் இணையம் இறந்தது துவாரகாதான் என்று பொருள்பட எழுதி இருந்தது..

Anonymous said...

இங்கு ஒரு பெண் தமிழச்சி என்பதால் கொடூர்மாகக் கொல்லப் பட்டிருக்கிறாள்.
இதற்குப் பொறுப்பு யார்? இதற்கு உதவி செய்த நாடுகள் எத்தனை?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...