Tuesday 1 December 2009

சீனாவின் எச்சத்தை ருசிக்க இந்தியா தயாராகிறது.


1974-ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தைத் திறக்க அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் யாழ்ப்பாணம் சென்றபோது நமது அண்டை நாட்டுப் பிரதமர் வருகிறார் என்று தமிழரசுக் கட்சியின் பத்திரிகையான சுதந்திரன் பத்திரிகை எழுதியதாம். தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கை ஒரு நாடு அல்ல. ஒரு நாடாக ஐரோப்பியரால் இணைக்கப் பட்டுப் பின் சிங்களவரிடம் கையளிக்கப் பட்டநாடு.

சம்பந்தம் இல்லாமல் சம்பந்தன் ஐயா
இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய தகுதியான வேட்பாளர் இரா. சம்பந்தன் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் அச்செய்தியில் தெரிவிப்பது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தல் இலங்கையின் அரசியல் யாப்புக்கு அமைய நடை பெறுகிறது. இலங்கையின் அரசியல் யாப்பு தமிழர்களுக்கு உரிமையை மறுப்பது. இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இதில் தன்னை சம்பந்தர் ஐயா மூலம் சம்பந்தப் படுத்துகிறது?


இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சே அல்லது சரத் பொன்சேக்கா ஆகிய இருவரில் ஒருவர்தான் வெற்றி பெறமுடியும். இருவருமே தமிழின விரோதிகள். சம்பந்தன் ஐயா போட்டியிட்டு வெல்லப் போவது இல்லை. இருவரில் ஒருவரைக் கூட தமிழர் தெரிவு செய்து வாக்களிக்க முடியாது. அந்த இரு வேட்பாளர்களும் பல வாக்குறுதிகளை தமிழர்களுக்கு வழங்கலாம் ஆனால் அவை நிறைவேற்றப் படப் போவதில்லை என்பதை யாவரும் அறிவர்.


இந்தியாவில் இருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு மஹிந்த ராஜபக்சேயிற்கு வாக்களிக்கும் படி திரை மறைவில் அழுத்தங்கள் கொடுக்கப்படப் போகிறது அல்லது ஏற்கனவே கொடுக்கப் பட்டு விட்டது. இதைத் தவிர்க்கத்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்ததா? ஏற்கனவே மலையக் கட்சிகள் இந்தியாவின் உத்தரவிற்குப் பணிந்து மஹிந்த ராஜபக்சேயை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டன. மஹிந்த மலையகத் தலைவர்களுக்கு பதவிகள் வழங்கியதைத் தவிர மலையகத் தமிழர்களுக்கு எதுவும் செய்த்துமில்லை செய்யப் போவதுமில்லை.

இருவருக்கிடையில் மும்முனைப் போட்டி
இந்தியா தனக்கு சார்பான ஒருவர் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்பதற்காக மஹிந்தவை ஆதரிக்கிறது. இலங்கையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு போட்டி நடக்கிறது. சீனா திரை மறைவில் மஹிந்தவையும் சரத்தையும் ஆதரிக்கிறது. சீனா எப்போதும் இதையே செய்யும் இலங்கையில் யார் போட்டியிட்டாலும் யார் ஆட்சி செய்தாலும் சிங்களவர்களின் சிறந்த நண்பனாக சினாதிகழும். இந்தியா சீனா அமெரிக்கா ஆகிய நாடுகளிற்கு இடையிலான இந்த மும்முனைப் போட்டியில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? அமெரிக்காவிற்கு எதிரான அணியில் இந்தியா நிற்கிறது. மஹிந்தவும் அவரைச் சூழ்ந்தவர்களூம் தீவிர சீன ஆதரவாளர்கள் என்று அறிந்தும் மஹிந்தவிற்கு இந்தியா ஆதரவு கொடுப்பஹ்டு ஏன்? இந்தியாவின் நிலைப்பாடு சீனாவிற்கு மஹிந்த கொடுத்துபோக சீனாவின் எச்சத்தை ருசிக்க இந்தியா தயாராகிறது.

14 comments:

Unknown said...

Tamils may be forced to vote in the election and they should not vote for neither of them and only solution to place candidate if this is not correct they you must be a spy for india. please do not write rubbish because you can write

Anonymous said...

(பெயரற்றுப் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்க)

இந்த ஜனாதிபதித்தேர்தலில் மேலோட்டமாக அவதானிக்கும் போது ஒன்று புரிகிறது. அமெரிக்க உளவு பொன்சேக்காவை நிறுத்தி இருக்கிறது. இந்திய உளவுக்கு மகிந்த தேவைப்படுகிறார். இதில் சீனாவின் நிலை என்னவென்று ஊகிக்க ஆதாரமில்லாதிருக்கிறது. JVP சீனாவோடு நெருங்கியது என்ற வகையில் சீனாவின் தெரிவும் பொன்சேக்காவாக இருக்கலாம்.

இங்கே நான் சொன்னவை முற்றுமுழுதான ஊகமே.

சீனா அமெரிக்காவோடு கைகோர்க்காது என்றோ, சீனா இந்தியாவோடு கைகோர்க்காது என்றோ நாம் நம்பிக்கொண்டிருந்தால் இன்றைய பன்னாட்டு அரசியலில் குருடர்களாகவே இருப்போம்.

CIA இன் திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால் சிறுபான்மை வாக்குகளைத் துண்டாடவேண்டும்.

இந்திய அணிக்குத் தேவையானது இந்த துண்டாடுதலே. எனவே இங்கே தேர்தலில் களமிறக்கப்படும் ஏனைய வேட்பாளர்களான தமிழ் வேட்பாளர், இடதுசாரி வேட்பாளர் அனைவரும் இந்திய நிகழ்ச்சி நிரலுக்கமையவே களமிறக்கப்படுகின்றனர்.

மகிந்தவுக்கோ, தமிழ், இடதுசாரி வேட்பாளருக்கோ போட்டால் நாம் இந்தியாவுக்கு போடுகிறோம். பொன்சேகாவுக்கு போட்டால் நாம் அமெரிக்காவுக்கு போடுகிறோம்.

இரண்டு வல்லரசுகளுமே எமக்கு எதிரிகள்.

தமிழர்கள் தமது எதிரிகளுக்கு வாக்களிக்கத் தள்ளப்பட்டுள்ள அவல நிலை.

அதிகாலையில் சாவடிகளுக்குப்போய், வாக்குச்சீட்டைப் பழுதாக்கிவிட்டு வாருங்கள்.

Anonymous said...

இந்தியா ஏற்கனவே சீனாவின் எச்சத்தைத் தான் நக்கிக் கொண்டிருக்கிறது...

Anonymous said...

இந்தியா ஏற்கனவே சீனாவின் எச்சத்தைத்தான் இலங்கையில் நக்கிக் கொண்டிருக்கிறது.

Unknown said...

it does not matter how many tamils contest in the presdiential election tamils hsould make sure that their votes should not be cast for rajapkse or sarath. both killed tamils.

voting for single tamil candidate means voting for a tamil president winning is inmaterial

we should understand that india is also tamils first enemy and rajapkse second. it is simply that Tamils which is the olderst native's language in india is not official language but hindi which is immigrant's language is the official language. this is not acceptable when you look at Maleysia, indonesia, maurititus and fiji.

pandiyan said...

கவிஞர் வேல் தர்மா! நக்கி பிழைப்பது என்பது இந்தி யாவிற்கு பழக்கமில்லையா? முன்பு ரஸ்சுயாவை நக்கினார்கள்.. இப்போது அமெரிக்காவை நக்குகிறார்கள்.. இங்கு தமிழ் நாட்டில் இலவசங்களுக்காக தமிழ்நாட்டு தமிழரை நக்கவைத்து இருக்கிறார்கள்... ஆக புது துணிவோடு ஈழதமிழன் இனி அடுத்தவர் காலில் நக்க மாட்டோம் என்று ஆயுதம் கட்டி போராடினால் விடுவார்களா? இங்கிலாந்து பக்கத்தில் பிரான்சு வல்லரசாக இருக்கிறது .. டென்மார்க் இருக்கிறது.. ஆனால் இந்த சந்தியாவை சுற்றி எவனும் ஏன் வல்லரசாக முடியவில்லை?.. நக்கி பிழைத்தால் முன்னேறலாம்.. என்பதே சந்தியாவின் வேத வாக்கு!....

pandiyan said...

கவிஞர் வேல் தர்மா! நக்கி பிழைப்பது என்பது இந்தி யாவிற்கு பழக்கமில்லையா? முன்பு ரஸ்சுயாவை நக்கினார்கள்.. இப்போது அமெரிக்காவை நக்குகிறார்கள்.. இங்கு தமிழ் நாட்டில் இலவசங்களுக்காக தமிழ்நாட்டு தமிழரை நக்கவைத்து இருக்கிறார்கள்... ஆக புது துணிவோடு ஈழதமிழன் இனி அடுத்தவர் காலில் நக்க மாட்டோம் என்று ஆயுதம் கட்டி போராடினால் விடுவார்களா? இங்கிலாந்து பக்கத்தில் பிரான்சு வல்லரசாக இருக்கிறது .. டென்மார்க் இருக்கிறது.. ஆனால் இந்த சந்தியாவை சுற்றி எவனும் ஏன் வல்லரசாக முடியவில்லை?.. நக்கி பிழைத்தால் முன்னேறலாம்.. என்பதே சந்தியாவின் வேத வாக்கு!....

புரட்சிகர தமிழ்தேசியன் said...

கவிஞர் வேல் தர்மா! நக்கி பிழைப்பது என்பது இந்தி யாவிற்கு பழக்கமில்லையா? முன்பு ரஸ்சுயாவை நக்கினார்கள்.. இப்போது அமெரிக்காவை நக்குகிறார்கள்.. இங்கு தமிழ் நாட்டில் இலவசங்களுக்காக தமிழ்நாட்டு தமிழரை நக்கவைத்து இருக்கிறார்கள்... ஆக புது துணிவோடு ஈழதமிழன் இனி அடுத்தவர் காலில் நக்க மாட்டோம் என்று ஆயுதம் கட்டி போராடினால் விடுவார்களா? இங்கிலாந்து பக்கத்தில் பிரான்சு வல்லரசாக இருக்கிறது .. டென்மார்க் இருக்கிறது.. ஆனால் இந்த சந்தியாவை சுற்றி எவனும் ஏன் வல்லரசாக முடியவில்லை?.. நக்கி பிழைத்தால் முன்னேறலாம்.. என்பதே சந்தியாவின் வேத வாக்கு!....

Anonymous said...

Tamils should vote against Mahindha since he was supported by India.
India is our worst enemy

Anonymous said...

சம்பந்தன் ஐயா போட்டியிடுவது நல்லது. அப்படி போட்டியிட்டு தமிழர் வாக்குகளை அவர் பெற்றால் மற்றைய எவருக்குமே 50 % வாக்குகளை பெற முடியாது. எனவே இருவருக்கும் ஜனாதிபதியாக முடியாது. எனவே அவர் நின்று தமிழர் அனைவரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

Anonymous said...

வெற்றிவாய்ப்பு இல்லாதிருந்தாலும் தமிழர்களின் ஓட்டை பொறுக்க சிங்களர்களுக்கு உரிமை/தகுதியில்லை என்ற உண்மையை எடுத்துக்காட்ட சம்பந்தன் ஐயா நிச்சயம் போட்டியிடவேண்டும்!

Anonymous said...

தமிழர் வாக்குகள் ரணில்-சரத் கூட்டணிக்குப் போகாமல் இருக்கவே இந்தியா கள்ளத்தனமாக சம்பந்தனைப் போட்டியிடும்படி பணித்துள்ளது.

Anonymous said...

One of Sarath Fonseka's election promise: We are not following Indian cultures and our next generation will have less Indian attraction and no more Indian dictations on our own business.

Anonymous said...

we have to give our vote to sarath it ll lead an army government in srilanka its good for tamil

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...