Thursday, 26 November 2009

இந்தியாவின் களவு விரைவில் வெளிப்படும்.


கள்ளர்களுக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும். இலங்கையும் இந்தியாவும் இணைந்து போர் முனையில் நடப்பவற்றை வெளிவரவிடாமல் மறைத்து சகல மனிதாபிமான நியமங்களையும் சர்வதேச நியமங்களையும் மீறி போர் முனையில் அகப்பட்டவர்களுக்கு உணவு நீர் மற்றும் மருத்துவ வசதிகளை மறுத்து மருத்துவ மனைகள் மீது குண்டு மாரி பொழிந்து தமிழ் இனக் கொலை புரிந்தனர். இப்போது கள்ளர்கள் பிளவு பட்டு நிற்கிறார்கள். விரைவில் கள்ளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடையும். கள்ளர்கள் இரு பிரிவாகியதால் இந்திய உளவுதுறை என்ன செய்வதென்று தெரியாமல் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு தவிக்கிறது.

ஓட்டைவாய ராஜபக்சே
மஹிந்த ராஜபக்சேயின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சே தான் ஒரு ஓட்டை வாயன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளான். உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரனைக் கைது செய்து வைத்திருந்த வேளை அவருக்கு ஆதரவாக கதைப்பவர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் என்று கூறியவன். அது மட்டுமல்ல மருத்துவமனைகள் எல்லாம் குண்டு போட்டு அழிப்பதற்கான சட்டபூர்வமான இலக்குகள் என்று குரைத்தவன். இப்படிப் பட்ட ஆட்சியாளர்களுடந்தான் கேவலமான இந்தியா நட்புறவைப் பேணுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்கும் வேளையில் இந்த ஓட்டை வாயனிடம் இருந்து பல உண்மைகள் வெளிவரும். அங்கு இந்தியாவின் குட்டுக்கள் பல வெளிப்படும். எத்தனை இந்தியப் படையினர் இலங்கையில் போர்முனையில் இருந்து செயற்பட்டனர் போன்றவை எல்லாம் வெளிவரும்.

சரத் பொன்சேக்கா
இவன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் செய்தி விரைவில் வெளிவரும். தவளையும் தன் வாயால் கெடும் என்பது போல சரணடைய வந்தவர்களைத் தான் கொன்ற உண்மையைச் சொல்லி சிக்கலில் அண்மையில் மாட்டிக் கொண்டவன் இவன். தேர்தல் களம் சூடு பிடிக்கும் போது தான் செய்த வீரப் பிரதாபங்களை இவன் வெளியிட வேண்டி வரும். அப்போது இன்னும் பல குட்டுக்கள் வெளிவரும். இந்த சரத் பொன்சேக்கா அரசியல் ஆதிக்கம் பெறுவதை இந்தியா விரும்பவில்லை. இவனுக்கு எதிராக இந்திய உளவுத்துறை செயற்படும் போது இவன் ஆத்திரமடைந்து இந்தியா சம்பந்தப்பட்ட போர் உண்மைகளை இவன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடுவான். இந்தியாவின் குட்டு உடைபடும்.

இந்திய உளவுத் துறை
இந்தியாவில் ஒரு போத்தல் மதுபானத்துடன் பல உண்மைகளை விலைக்கு வாங்கலாம். பத்திரிகைகள் இந்திய உளவுத்துறையிடமிருந்து தமது வியாபாரத்தைப் பெருக்க பல உண்மைகளை வெளியிடலாம். இந்திய அமைதிப் படையின் பல அட்டூழியங்கள் வெளிவந்ததை நாம் அறிவோம்.

முதலாம் கட்டம் ஆரம்பம்.
ராஜபக்சேக்களுக்கும் பொன்சேக்காவிற்கும் இடையிலான குட்டு உடைக்கும் போட்டியின் முதலாம் கட்டம் ஆரம்பித்து விட்டது:
போர் முடிந்ததும், ஜனாதிபதி ராஜபக்ச கிளிநொச்சி போக விரும்பினாராம். அதை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிடமும் தெரிவித்தாராம்.

ஆனால் அந்த யோசனையை விட்டுவிடுமாறு ஜனாதிபதியிடம் கூறினாராம் பொன்சேகா. அதுமட்டுமல்ல கிளிநொச்சிக்கு ஜனாதிபதியுடன் வரவும் சரத் என்னும் "சூராயா"பயந்தாராம். போர் இன்னும் நடக்கிறது என்றும் கூறிததனது பயத்தை வெளிப்படுத்தினாராம் சரத் பொன்சேக்கா.

ஆனால் "வீரரான" ஜனாதிபதியோ, பொன்சேகாவுக்கு தைரியம் கூறினார். பயப்பட வேண்டாம். தைரியமாக என்னுடன் வாருங்கள் என்றும் கோரினார். இதையடுத்து வேறு வழியில்லாமல், தனது மனதில் இருந்த அச்சத்தை முழுமையாக விடாமல் அவர் அதிபருடன் செல்ல ஒப்புக் கொண்டார்.

இது ஆரம்பக் கட்டம் போகப் போக இன்னும் உள்ளது. காணத் தயாராகுங்கள்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...