Wednesday, 25 November 2009

இந்திய உளவும் விகடனின் அடுத்த சதிக் கட்டுரையும்


தொடர்ந்து பல புளுகுகளையும் பொய்களையும் அவிழ்த்து விடும் விகடன் குழுமத்து சஞ்சிகைகள் இப்போது ஒரு புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியாவின் துணையுடன் புலிகள் இனி போர்புரிவார்களாம். கட்டுரையைப் படிக்கும் போது இந்தியா இனித் தமிழர்கள் பக்கம். இனி புலிகளின் உற்ற நண்பர்கள் இந்தியாதான் என்ற எண்ணம் வருப்படி விகடன் தனது கட்டுரையை வரைந்துள்ளது.

ஜூனியர் விகடனில் வந்த இக்கட்டுரை இப்போதைய இலங்கை அரசியல் நிலைமைகளுக்கு இந்திய உளவுத் துறைக்கு என்ன தேவைப் படுகிறதோ அதைப் பிரதிபலிக்கிறது.

''போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது:
  1. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லை தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்.
  2. போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்.
  3. இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்.
  4. இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.
இந்த நாலு கோரிக்கைகளுக்கும் இப்போது இலங்கை மறுப்புத் தெரிவித்து விட்டதாம் அதனால் இந்தியா மீண்டும் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து போர் ஆரம்பிக்கிறதாம்.

இந்த நாலும் சாதாரண வர்த்தக நலன் சார்ந்த கோரிக்கைகள். இவற்றுக்காகவா இந்தியா 125,000 அப்பாவிகளைக் கொன்று குவித்து முன்று இலட்சம் பேரை முகாம்களில் அடைத்து படுபாதகம் செய்தது? இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏன் 5வது கோரிக்கையாகத் தன்னும் இடம் பெறவில்லை? இந்த நாலு கோரிக்கைகளுக்காகவும் ஒரு இனக் கொலை புரிந்த அரசிற்கு துணை போன் இந்தியாவை எந்தத் தமிழன் மன்னிப்பான்? இதை ஏன் விகடன் சுட்டிக் காட்டவில்லை.

ஆக மொத்தத்தில் இலங்கையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருப்பதை இந்தியா விரும்புகிறது.

அக்கட்டுரையில் மேலும் தெரிவிப்பது:

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டாலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டாலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு ராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு ராணுவத் தளத் தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப் பான 'ரா' மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான போர் முடியும் வரை தான் இலங்கை இந்தியாவுடன் நட்புப் பராட்டும் அதன் பின்பு இந்தியாவிற்கு "டாடா" காட்டிவிடும் என்பது எல்லோரும் உணர்ந்த உண்மை. இது எப்படி சிவ்சங்கர மேனனுக்கும் நாராயணனுக்கும் தெரியாமல் போனது. இந்திய வல்லாதிக்கம் சாதியக் கட்டமைப்பில் கட்டிய் எழுப்பப் பட்டு வருகிறது. இலங்கையில் சாதியத்தை ஒழித்து ஒரு தலைவன் உருவாகி விட்டதை விரும்பாததாலும் சோனியாகந்தியின் தனிப் பட்ட பழிவாங்கலுக்க்காகவும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்யது.

மேற்குறிப்பிட்ட நான்கு இந்திய சுயநலக் கோரிக்கைகளும் நிறைவேற்ற மறுப்பது ராஜபக்சே அரசு. இந்தியாவை ஏமாற்றியது ராஜபக்சே குடும்பம். ஆனால் இந்தியா வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேயைத்தானே ஆதரிக்க விருக்கிறது.

இந்தியாவிற்கு இலங்கையில் எந்தவிதமான பிடியும் இல்லை அதற்கு தமிழர்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் ஒன்று திரட்டி இந்தியா சொல்பவர்களுக்குத்தான் தமிழர்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற நிலைய ஏறபடுத்த இந்திய உளவுத்துறை முயல்கிறது. இந்திய உளவுத் துறையின் முயற்ச்சிக்கு இணங்கவே ஜூனியர் விகடன் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று நாம் நம்பலாம். இதற்குத்தான் இந்தியா மீண்டும் புலிகளுக்கு ஆயுதம் கொடுக்கப் போகிறது, இந்திய உதவியுடன் புலிகள் மீண்டும் எழுவார்கள் என்ற பொய்யை விகடன் அவிழ்த்து விடுகிறதா?

விகடனின் முந்திய சதிக்கட்டுரைகள் பற்றி எழுதியவை:

பொட்டு அம்மான் வருவாரா? அல்லது துட்டு அம்மன் வருவாளா?

விகடனுக்கும் இலங்கை அரசிற்கும் என்ன தொடர்பு?

Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...