Tuesday, 24 November 2009

பிரபாகரன் வருவாரா இந்தியாவைக் காக்க?


இந்தியா இலங்கைக்கு தமிழ்த் தேசியத்தை பலவீனப் படுத்த பல உதவிகளுக் செய்தது. இந்தியா உதவியது சிங்களப் பேரின வாதிகளுக்கு. இதனால் சிங்களப் பேரினவாதிகள் இலங்கை அரசியலில் மாபெரும் சக்தியாக உருவாகிவிட்டனர். சிங்களப் பேரினவாதிகள் அடிப்படையில் இந்தியாவிற்கும் மேற்குலகிறகும் எதிரானவர்கள் என்பதோடு சீன சார்பானவர்கள். சிங்களப் பேரினவாதிகளை அமெரிக்கா சாதுரியமாக இரு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவைத் தன் வசமாக்கிவிட்டது. இதனால் இலங்கை அரசியலில் இந்தியாவிடம் எந்தத் துருப்புச் சீட்டும் இல்லை. ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவிற்கு அழைத்தும் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி மஹிந்த ராஜபக்சேயுடனும் பேச்சு வார்த்தை நடாத்திப் பார்த்தது. இந்தியாவிற்கு சாதகமாக எதுவும் இல்லை. இதனால் கடைசியாக மீண்டும் தமிழர்களின் துணையை இந்தியா நாடியது. தமிழ் அரசியல் கட்சிகள் அனைவற்றையும் இனப் பிரச்சனைக்கு ஒரு பொது நிலைப் பாடும் பொதுத் தீர்வை முன்வைப்பதற்கும் என்ற போர்வையில் சுவிற்சிலாந்தில் உள்ள சூரிச் நகருக்கு அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தியது. அங்கு சென்ற தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஏமாற்றம். கூட்டம் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்பதிலும் பார்க்க இலங்கையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லாத் தமிழ் பேசும் கட்சிகளும் யாரை ஆதரிப்பது என்பதில் இருந்தது. சிலர் இதனால் ஆத்திரமடைந்து கூட்ட நிகழ்ச்சி நிரலைக் கிழித்தெறிந்து கூச்சலிட்டனர். கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்து இந்தியா ஐயோ பாவம் என்ற நிலைக்குள்ளானது. இதனால் நாம் சொல்லுபவரைத் தான் தமிழர்கள் ஆதரிப்பார்கள் என்று சொல்லி இலங்கை அரசியலில் தானும் ஒரு சக்தி என்று காட்ட இந்தியா எடுத்த முயற்ச்சி படுதோல்வியில் முடிவடைந்தது. இலங்கையில் இறுகும் சீன அமெரிக்கப் பிடிகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் இந்தியா திணறுகிறது. இனக்கொலைப் போரில் தான் உதவுபவர்கள் தனது எதிரிகள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இந்தியா சிங்களப் பேரினவாதிகளுக்கு சகல உதவிகளையும் செய்தது. இனக் கொலைப் போரில் சிங்களவர்களுக்கு உதவி இந்தியா ஆப்பிழுத்த குரங்கானது.

தவிடு பொடியான் இந்தியாவின் மும்முனைப் போட்டிக் கனவுக் கோட்டை
இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியை ஏற்படுத்தி அதில் ரணிலைத் தன்பக்கம் இழுக்கலாம் என்று கனவு கண்ட து இந்தியா. ஆனால் இப்போது ரணில்-சரத கூட்டணியில் ஜேவிபியும் இணைந்ததால் பாவம் இந்தியாவின் கனவு தவிடு பொடியானது.

தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. கருணாவும் பிள்ளையானும் கிழக்கிற்கு என்ன செய்தனர்? ஆள்கடத்தலும் கொலையும்தான் அவர்கள் கணடது.

கோபாலபுரத்தில் நீலிக்கண்ணீர்.
ரணில் விக்கிரம சிங்கவும் சரத் பொன்சேக்காவும் இணைந்து மஹிந்தவுடன் போட்டியிடும் பட்சத்தில் இருவரில் யார் வென்றாலும் இந்தியாவிற்குத் தோல்விதான். ரணில்-சரத் கூட்டணி மஹிந்தவிற்குத் பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் அமையும். இது மஹிந்தவின் மனதில் இருவரும் இணைந்து தன்னை தோற்கடித்து விடுவார்களோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சம் இந்தியா தனக்குக் கிடைத்த ஒரு சிறு பிடியாக எண்ணி அதில் பெரும் அறுவடை செய்ய முயல்கிறது. அதற்கு இந்தியாவிற்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவு தேவைப் படுகிறது. அதைப் பெற இந்தியா பல சதிகளில் ஈடுபடுகிறது. அச்சதியில் கோபாலபுரத்தில் இருந்து வெளிவரும் நீலிக்கண்ணிர் அறிக்கைகளுக் அடங்கும்.

மீண்டும் வடக்குக் கிழக்கு இணைப்பு
இந்தியா தமிழர்களுக்குச் செய்த பற்பல துரோகங்களில் ஒன்று வடக்குக் கிழக்கை இணைத்து ஒருமாநிலமாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றியது. இந்தியா செய்த பல துரோகங்களால் பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவை சரியாக அடையாளம் கண்டு கொண்டு இந்தியா என்பது ஒரு தமிழின விரோதி நாடு என்ற உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டனர். இப்போது இலங்கை குடியரசுத் தேர்தலில் என்ன செய்வது என்று தெரியாமல் திரு திரு என விழிக்கும் இந்தியா வடக்குக் கிழக்கு இணைப்பு என்பதை முன்வைத்து தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறது. இலங்கையில் வடக்குக் கிழக்கு இணைப்பை மஹிந்த செய்வார் அதனால் அவரை ஆதரியுங்கள் என்று தமிழர்களுக்குச் சொல்லி அவர்களைத் மஹிந்த ராஜபக்சேயிற்கு வாக்களிக்க வைத்து அவரை வெற்றி பெறச் செய்து மஹிந்தவைத் தன் ஆள் ஆக்குவது இந்தியாவின் திட்டம். இத்திட்டத்தின் பின் உள்ள சதி தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதுதான். வடக்குக் கிழக்கை இணைத்து விட்டு பின் சிங்களவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மீண்டும் அதைப் பிரிப்பதுதான் ஆரியச் சதி. முன்பும் இந்தச் சதியைச் செய்துதான் அரசியல் கற்றுக் குட்டி ராஜீவ் காந்தி இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.

வடக்கு கிழக்கை இணைப்பதற்கு இணங்கினால் எதிர்வரும் தேர்தல்களில் இந்தியாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவிற்கு கிடைக்கும் என்று பிரணாப் முகர்ஜீ மஹிந்த ராஜபக்சேயிடம் எடுத்துக் கூறினாராம். வடக்கு கிழக்கை இணைப்பதன் மூலம் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளை திருப்திப்படுத்தி விட முடியும் என்பதால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புகிறதாம் என்பது பொய். வடக்குக் கிழக்கு என்ற மாயைக் காட்டி இந்தியா தமிழ் அரசியள் கட்சிய்களைத் தன்பக்கம் இழுக்கமுயல்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் மஹிந்த வடக்குக் கிழக்கு இணைப்பு செய்யப் போகிறார் என்று அறிந்தால் சிங்கள மக்கள் கொதித்து எழுந்து மஹிந்தவைத் தோற்கடிப்பர். இதுவும் இந்தியாவிற்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும். மொத்தத்தில் பாவம் இந்தியா இலங்கை அரசியலில் ஒரு பிடியின்றி துருப்புச் சீட்டின்றித் தவிக்கிறது. இதில் இருந்து மீள ஒரே வழி தமிழ்த் தேசியவாதம் தோற்கவில்லை சிங்களப் பேரின வாதம் வெற்றியடையவில்லை என்ற உண்மையை பகிரங்கப் படுத்துவதுதான். அப்போதுதான் சிங்களப் பேரினவாதிகள் இந்தியாவுடன் மீண்டும் தமிழ்த் தேசியவாதத்தை ஒடுக்க இணைந்து செயற்பட வருவார்கள். அதற்கு உரிய ஒரேவழி பிரபாகரன் மீண்டும் தோன்றுதல். அவர் மீண்டும் வருவாரா இந்தியாவை இரட்சிக்க?
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...