Monday 23 November 2009

மாவீரர் தினம் இலங்கையின் பயமும் சதியும்


மாவீரர் தினத்திற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் சிங்களப் பேரினவாதிகளின் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற பயத்தில் இருக்கிறது. விடுதலைப் புலிகள் மிகப் பலமாக இருந்தநிலையில் சிங்களப் பேரினவாதிகள் மாவிரர் தினம் வருவதற்கு முன்னர் எவ்வளவு பயந்தார்களோ அதே அளவு பயம் அவர்களிடம் இன்றும் காணப் படுகிறது. மேலும், வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் காவல் துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஒருவேளை கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பயமும் சிங்களவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் 16-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, நார்வே, பெல்ஜியம், சுவீடன், கனடா, இத்தாலி, டோகா, பின்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடாத்தப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் பலம் மறைந்து விட்டதா?மறைந்திருக்கிறதா? விடுதலைப் புலிகளில் பலத்தில் எவ்வளவு எஞ்சி இருக்கிறது என்பது இன்னும் சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரை கேள்விக் குறியே! சிங்களப் பேரினவாதிகள் தாம் வெற்றி பெற்றதாக தம்பட்டம் அடித்து முடிந்து இப்போது வெற்றிக்கு யார் காரணம் என்பதை பங்கு போட்டுக் கொள்வதிலும் அதை தமது கட்சி அரசியல் வெற்றியாக மாற்றுவதிலும் சண்டையிட ஆரம்பித்திருக்கும் நிலையில் மாவீரர் தினம் அவர்களுக்கு தலையிடியைக் கொடுப்பதற்கான காரணங்கள்:
  • விடுதலைப் புலிகள் ஏதாவது தாக்குதல் நடத்தலாம்.
  • விடுதலைப் புலிகள் தமது பலத்தை ஏதாவது விதத்தில் வெளிப்படுத்தலாம்.
  • விடுதலைப் புலிகள் தமது தலைமையின் இருப்பை உறுதிப் படுத்த ஏதாவது செய்யலாம்.
சிங்களப் பேரினவாதிகளின் சதி
பெரிய பயத்தில் தவிக்கும் சிங்களப் பேரின வாதிகள் தாம் கைது செய்து வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் சில துரோகிகளையும் இணைத்து ஒரு போலி மாவிரர் தின உரையை செய்ய திட்டமிடுகின்றனர். இதனால் ஏற்கனவே குழம்பியிருக்கும் தமிழ்த் தேசிய ஆதரவுத் தளத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று சிங்களப் பேரினவாதிகள் எண்ணுகின்றனர். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களில் பொறுப்பானவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் சதியை உணர்ந்து இப்போதே நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர்.

விழிப்புடன் இருப்பது எம் பொறுப்பு.

1 comment:

Anonymous said...

ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உளவாளிகள் ஒரு போலி மாவீரர் அறிக்கை விடுவார்கள். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...